Saturday, August 23, 2014

நீரிழிவு நோய் குறித்த கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!

நீரிழிவு என்பது ஒரு தொற்று நோய்... அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் இவ்வியாதி வரும்... இந்த நோய் வந்தால் சர்க்கரையே சாப்பிடக் கூடாது... இது ஒரு பரம்பரை வியாதி, பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது... இந்த நோய் வந்தவர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரம் அது ஆறாது... நீரிழிவைக் குணப்படுத்த வல்லது இன்சுலின்...

இப்படி நீரிழிவு நோய் குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசுவதுண்டு. ஆனால், இவற்றில் எது உண்மை? எது கட்டுக் கதை? இது குறித்து நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில மருத்துவர்கள் கூட நீரிழிவு என்பது ஒரு நோயே கிடையாது என்று கூறுவார்கள். இன்சுலின் பற்றாக்குறையால் தான் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரித்து இருக்கும். இந்த அதிகப்படியான சர்க்கரையைக் குறைக்கவே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வார்கள்.

இனி, நீரிழிவு குறித்த சில கட்டுக் கதைகளையும், உண்மைகளையும் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுக் கதை: அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு ஏற்படும்.

உண்மை: இன்சுலின் பற்றாக்குறையால் மட்டுமே நீரிழிவு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இன்சுலின் குறைவதால் டைப்-1 நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலினை நம் உடல் பொதுவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதற்குப் பெயர் தான் டைப்-2 நீரிழிவு. பெரும்பாலும், டைப்-2 நீரிழிவு பரம்பரை பரம்பரையாகத் தான் ஏற்படும். உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவுகள் மூலம் நீரிழிவை சரிக்கட்டலாம். இனிப்புகளைக் குறைவாக உண்பது நலம்.

கட்டுக் கதை: நீரிழிவு ஒரு தொற்று வியாதி ஆகும்.

உண்மை: கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறைவால் மட்டுமே நீரிழிவு ஏற்படுகிறது. இதை ஒரு நாளமில்லா நோய் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கட்டுக் கதை: நீரிழிவு ஏற்பட்டால், இனி வாழ்க்கையில் சர்க்கரையே சாப்பிடக் கூடாது.

உண்மை: நீரிழிவு உள்ளவர்கள் தாராளமாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அளவோடு மட்டுமே. சர்க்கரை மட்டுமல்ல, கார்போஹைட்ரேட் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமப்படும்.

கட்டுக் கதை: நீரிழிவு வந்துள்ள குழந்தைகள் இனிப்பே சாப்பிடக் கூடாது.

உண்மை: குழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்பட்டால், அவர்களுடைய கட்டுப்பாடான உணவில் குறிப்பிட்ட அளவு சர்க்கரை கலந்த உணவையும் சேர்த்துக் கொள்ளலாம். முழுவதும் இனிப்பே சாப்பிடக் கூடாது என்ற கட்டாயம் கிடையாது.

கட்டுக் கதை: இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாக உள்ளது என்று உங்களுக்குத் தோன்றினால், டாக்டரிடம் செக்கப் செய்ய போக வேண்டியதில்லை.

உண்மை: நீரிழிவை ஒரு நோயாக எடுத்துக் கொள்ளக் கூடாதே தவிர, அதை நாம் கண்டிப்பாக சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும். அடிக்கடி டாக்டரிடம் சென்று செக்கப் செய்து கொள்ள வேண்டும். வழக்கமான உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் கண்டிப்பாகத் தொடர வேண்டும்.

கட்டுக் கதை: நீரிழிவு உள்ளவர்களால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கூடியுள்ளதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

உண்மை: சர்க்கரையின் அளவை சும்மா ஃபீல் பண்ணி நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தாகம், உடல் சோர்வு ஆகியவற்றின் மூலம் சிலர் இதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பலருக்கு இதுப்போன்ற அறிகுறிகள் தோன்றுவதில்லை. எனவே, கண்டிப்பாக இது குறித்து பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுக் கதை: சிலருக்கு இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பது இயல்பு தான். அதுவே நீரிழிவுக்கான அறிகுறி அல்ல.

உண்மை: இரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருப்பது சாதாரண விஷயமில்லை. நீரிழிவு இல்லாதவர்களுக்கு சில நேரங்களில் தற்காலிகமாக அதிக சர்க்கரை இரத்தத்தில் தோன்றும். ஆனாலும், நீரிழிவு உள்ளதா இல்லையா என்பதைப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

கட்டுக் கதை: சிறிதளவு மட்டுமே நீரிழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வாய்ப்புள்ளது.

உண்மை: அப்படி சிறிது, பெரிது என்றெல்லாம் கிடையவே கிடையாது. ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா, அது டைப்-1 அல்லது டைப்-2 என்பதுதான் முக்கியம்.

கட்டுக் கதை: இது ஒரு பரம்பரை வியாதி, உங்கள் பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது.

உண்மை: உங்கள் பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புக்கள் மற்றவர்களை விட அதிகம். பரம்பரையாக நீரிழிவு இல்லாத சிலர் கூட இந்தக் காலத்தில் இந்தக் குறைபாட்டால் அவதிப்படுவதை நாம் காண முடியும். உடல் எடை மற்றும் வாழ்க்கை முறைகள் தான் பெரும்பாலும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கட்டுக் கதை: நீரிழிவை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது.

உண்மை: நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்றக் குறைபாடு என்பதால் அதைக் கட்டுப்படுத்த நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. முறையான உடற்பயிற்சிகள், கட்டுப்பாடான உணவுகள், சரியான மருத்துவம்... இம்மூன்றையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து, நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் நிறைய உண்டு.

கட்டுக் கதை: நீரிழிவை இன்சுலின் குணப்படுத்துகிறது.

உண்மை: நீரிழிவு ஒரு வளர்சிதை மாற்றக் குறைபாடு என்பதால், அது ஒரு குணப்படுத்தக்கூடிய நோயல்ல. தொடர்ந்து இன்சுலினை எடுப்பதால், அதைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை இன்சுலின் ஊசி கட்டுப்படுத்துகிறது, அவ்வளவே. இன்சுலின் குறைபாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.

கட்டுக் கதை: நீரிழிவு உள்ள அனைவரும் இன்சுலின் எடுத்துக் கொள்வது அவசியம்.

உண்மை: இன்சுலினை கணையம் சுரக்காததால், டைப்-1 நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் சில டைப்-2 நீரிழிவு கொண்டவர்கள், இன்சுலினுடன் சில மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்.

கட்டுக் கதை: நீரிழிவுக்கான இன்சுலினை மாத்திரைகள் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை: இன்சுலினை மாத்திரைகளாகப் போட்டுக் கொள்ள முடியாது. இன்சுலின் என்பது ஒரு புரதம். அதை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளவே முடியாது. அது இன்சுலினை சுரக்க உதவாது. ஊசிகள், இன்ஹேலர்கள் மூலம் மட்டுமே இன்சுலினை இரத்தத்தில் சுரக்க வைக்க முடியும்.

கட்டுக் கதை: இன்சுலினை அதிக அளவு எடுத்துக் கொண்டால், நீரிழிவு இன்னும் மோசமாகி விடும்.

உண்மை: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கும் வகையில், இன்சுலினை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு டோஸ் என்பதை உங்கள் டாக்டர் கூறுவார்.

கட்டுக் கதை: குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு விரைவில் சரியாகும்.

உண்மை: ஒருபோதும் இல்லை. இன்சுலின் அளவு குறையும் போது, டைப்-1 நீரிழிவு உள்ள குழந்தைகளுக்கு, குணமாகும் வரை எப்போதும் இன்சுலினைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேப்போல், டைப்-2 நீரிழிவுக் குழந்தைளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்துக் கொண்டே போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். எனவே, அதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல!

இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

அனைவரது மனதிலும் வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. அதுமட்டுமல்லாமல் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன.

இத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால் தான், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, வெள்ளை முடி வருவதைத் தடுங்கள்.

பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடி சிறு வயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால், அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல், அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடிகள் வந்துவிடும்.

பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே முடிகள், அதிக மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகின்றன. இதனை அனைத்து அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கியமான, மனஅழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால், வெள்ளை முடிகள் வருவதைத் தடுக்கலாம்.

வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின் மீது மேற்கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியை விட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப்போடலாம் என்றும் கூறுகின்றனர்.

உடல் இளைக்க மகளுக்கு நாடாப்புழுவைக் கொடுத்த தாய்: அழகிப் போட்டியால் விளைந்த விபரீதம்..!

அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு இளம்பெண் தீவிர வயிற்றுவலி அறிகுறியுடன் புளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் அவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவு எதிர்மறையாக வந்தது. இருப்பினும் அவரது குடல்கள் தொடர்ந்து வீங்கி காணப்பட்டதால் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறினர்.

அதன்பின்னர் அந்தப் பெண் கழிப்பறைக்குச் சென்றுவந்தபின்னரே அவர்களால் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடிந்தது. அந்தக் கழிப்பறையின் கிண்ணம் முழுவதும் நாடாப்புழுக்கள் நிறைந்திருந்ததாகவும் அவற்றுள் சில நன்கு வளர்ந்து காணப்பட்டதாகவும் அவருக்கு பணி புரிந்துவந்த மரிக்கர் கப்ரால் ஓசொரியோ என்ற செவிலியர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்தபோது அழகிப்போட்டி அணிவகுப்பு ஒன்றில் தனது மகள் பங்கு பெற இருந்ததால் ஒல்லியாக மாறவேண்டும் என்பதற்காக நாடாப்புழுக்களின் முட்டைகளை அவளுக்கு அளித்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். இந்த முட்டைகளை மெக்சிகோவில் வாங்கியதாகக் கூறிய அவர், தனது தவறுக்காக மகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

விராட் கோலியை மணந்து கொள்ளும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா சர்மா

இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா என்ற செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றது என்று அனுஷ்கா சர்மாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா சென்று தங்க பிசிசிஐ அனுமதி அளித்தது என்றும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் இனி வீரர்களுடன் பெண் தோழி அல்லது அவர்களின் மனைவி ஆகியோர் செல்ல அனுமதி அளிக்காது என்ற செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தது.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவின் பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஆன்லைனில் அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி நிறைய செய்திகள் உலாவருகின்றன. நான் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இந்தச் செய்திகள் வெறும் வதந்திகளே. அதில் உண்மையில்லை. ஆகவே இது போன்ற விஷயங்களை இனி எழுதவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது கோலியுடன் அனுஷ்கா சர்மாவைப் பார்த்த தருணத்திலிருந்து இருவர் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இப்போது அனுஷ்கா சர்மா பிரதிநிதி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா..? இதோ சில வழிகள்..!

தற்போது பெரும்பாலானோர் தூக்கத்தை தொலைத்து தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தூக்கத்தை தொலைத்து தேடுவதற்கு முக்கிய காரணம், மன அழுத்தம் தான். இன்றைய அவசர காலக்கட்டத்தில் அதிகப்படியான வேலைப்பளுவினால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் இரவில் கூட நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லை.

இப்படி ஒரு பக்கம் வேலைப்பளு இருக்க, மற்றொரு பக்கம் மன அழுத்தத்தினால் பிடித்தவர்களிடம் சண்டைகள் போட்டு பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறே வாழ்க்கையானது தூக்கமின்றி மன அழுத்ததுடன் சென்றால், பின் உடல் நலமானது பாதிக்கப்பட்டுவிடும். எனவே மன அழுத்தத்தைப் போக்கி, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். இங்கு ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இரவு தூங்கும் முன் சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் ஒரு குளியல் போடுங்கள். இதனால் மனம் அமைதியடைந்து, உடலுக்கு மசாஜ் செய்தது போல் இருக்கும். இதன் மூலம் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

மன அழுத்தத்தில் இருக்கும் போது இரவில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடுங்கள். ஏனெனில் தூங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சாப்பிடுவதாக இருந்தால், அவசரமாக சாப்பிடுவோம். இதனால் உணவானது செரிமானமடையாமல், தூக்கத்தைக் கெடுக்கும். எனவே முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.

மன அழுத்தத்தில் இருக்கும் போது டிவி பார்த்தால் மட்டும் குறைந்துவிடப் போவதில்லை. ஒருவேளை பார்த்தால் சரியாவது போல் இருந்தால், அது தற்காலிகமாக தான் இருக்குமே தவிர, டிவியை அணைத்த பின்னர் மீண்டும் மனம் அழுத்தத்திற்கு உள்ளாகும். எனவே மன அழுத்தத்தில் இருக்கும் போது தூங்குவதற்கு முயலுங்கள்.

மனம் கஷ்டமாக ஒருவித அழுத்தத்தில் இருக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் மனம் விட்டு பேசுங்கள். இதனால் உங்களின் மனம் இதமாகி, பின் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

எப்போதும் ஏசி அறையிலேயே இல்லாமல், சற்று காற்றோட்டமாக வெளியே சிறிது தூரம் நடந்து வாருங்கள். இதனால் நல்ல சுத்தமான காற்றினை சுவாசிப்பதுடன், அந்த சுத்தமான காற்றானது மூளையை அமைதிப்படுத்தும்.

தற்போது பலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அப்படி ஈடுபட்டிருக்கும் போது பிடித்த உணவை சாப்பிட முடியாமல் இருப்போம். பிடித்த உணவை சாப்பிட முடியாமல் இருப்பது கூட, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதாவது ஒருமுறை பிடித்த உணவை உண்பதில் தவறில்லை.

பெரும்பாலான பெண்கள் இரவில் சருமத்தை பராமரிப்பார்கள். இப்படி அழகை அதிகரிக்க முயற்சித்தாலும், அது மன அழுத்தத்தை குறைத்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஆண்கள் கூட இந்த மாதிரி அழகை அதிகரிக்க முயற்சியை மேற்கொள்ளலாம்.

எக்காரணம் கொண்டும் படுக்கை அறை வரை வேலையை எடுத்து செல்ல வேண்டாம். படுக்கை அறையான ஓய்வு எடுப்பதற்காகவே தவிர வேலை செய்வதற்காக அல்ல. எனவே தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, படுக்கை அறையில் துணையுடன் சந்தோஷமாக ரொமான்ஸ் செய்யுங்கள். இப்படி ரொமான்ஸ் செய்தால் மனம் லேசாகிவிடும்.

இரவல் தூக்கம் எப்போது வந்தாலும், அப்போது உடனே தூங்கிவிடுங்கள். அதைவிட்டு நேரத்தை குறித்துக் கொண்டு தூங்கினால், அதுவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...!

நண்பர்களே! உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்கு ஆரோக்கியமான வழியை பின்பற்ற ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு டயட் முறையை உங்களுக்காக கொடுத்துள்ளது.

மேலும் இந்த முறையை படிக்கும் போது நீங்கள் இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளையும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் பொய். ஏனெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு வாரம் பின்பற்றி வந்தால், நிச்சயம் 7 நாட்களுக்கு பின்னர் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதை காண்பீர்கள்.

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை தவறாமல் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். இதனால் உங்களை 'குண்டுமணி' என்று கிண்டல் செய்தவர்கள், ஒரு வாரம் கழித்து கிண்டல் செய்யாத வகையில் மாற்றத்தைக் காணலாம்.

முதல் நாளில் சூப் டயட்டை பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த எந்த சூப்பை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அசைவ சூப் குடிக்கும் போது மட்டன் சூப் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக சூப்பில் உப்பை அதிகம் சேர்க்காமல், முடிந்தால் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இரண்டாம் நாளில் முட்டைக்கோஸை பலவாறு செய்து சாப்பிட வேண்டும். இதனால் முட்டைக்கோஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

கிரேப் ஃபுரூட்டில் கொழுப்புக்களை கரைக்கும் நொதிகள் அதிகம் இருப்பதால், மூன்றாம் நாளில் கிரேப் ஃபுரூட் டயட்டை பின்பற்றுங்கள். இதனை அப்படியே அல்லது ஜூஸ் என்று எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

ஆம், வெறும் பழங்களை சாப்பிட்டாலும் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதற்கு நான்காம் நாளில் விருப்பமான பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.

காய்கறிகளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே ஐந்தாம் நாளில் பசலைக்கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு என்று வெறும் காய்கறிகளை விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக அப்படி சமைத்து சாப்பிடும் போது உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். மேலும் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ தான் சாப்பிட வேண்டும்.

ஆறாம் நாளில் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். எனவே ஆறாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், சுடுநீரை குறைந்தது 6-8 லிட்டராவது குடித்து விட வேண்டும். இதனால் சுடுநீரானது கொழுப்புக்களை கரைத்துவிடும்.

ஏழாம் நாளில் நல்ல விருந்துணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக அப்படி விருப்பமான உணவுகளை உட்கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக வயிறு நிறைந்து வழியும் அளவு சாப்பிட வேண்டாம். மேலும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

மேற்கூறியவாறு ஒரு வாரம் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். ஆனால் எந்த ஒரு செயலை செய்யும் போது, நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், அந்த செயல் வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமட்டுமின்றி பலருக்கு இந்த டயட் ஒர்க் அவுட் ஆகாது, ஏனெனில் இதை மட்டும் எப்படி சாப்பிட்டால் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கக்கூடியவை. எனவே நம்பி மேற்கொள்ளலாம்.

தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க..!

சொன்னா நம்பமாட்டீங்க... திருமணமான புது தம்பதிகள் எவ்வளவு ஆரோக்கியமா இருப்பாங்கன்னு தெரியுமா? ஆம், அதற்கு காரணம் திருமணமான ஆரம்ப காலத்தில் தினமும் உடலுறவு கொள்வது தான். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அளவு உடலுறவானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இங்கு தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலைப் படித்த பின், இதுவரை வாரம் ஒருமுறை உறவு கொள்வதைத் தவிர்த்து, தினமும் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆய்வில் நாம் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும். இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.

சரி, இப்போது அன்றாடம் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் வெளியிடப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

உடலுறவில் ஈடுபடும் நேரம் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது வெளியிடப்படும் ஆக்ஸிடாஸின் என்னும் ஹார்மோன், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் சீராக இருக்க உடலுறவு பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாயின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கும்.

தினமும் உடலுறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாமல் இருக்கும்.

அன்றாடம் உடலுறவு கொண்டால், பெண்களின் இடுப்புத்தசைகளுக்கு உடற்பயிற்சி செய்தவாறு இருக்கும். இதனால் இடுப்புத்தசைகள் இறுக்கமடைந்து வலிமையாகி, கர்ப்ப காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும்.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் மற்றொரு நன்மை தான், அது முதுகிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக கீழ் முதுகிற்கு நல்லது.

வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாக உறவு கொள்பவரை விட, அதிகமாக உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பானது குறைவாக உள்ளது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

அதேப் போன்று பெண்கள் அன்றாடம் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், எலும்பின் அடர்த்தியானது அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை வருவது தடுக்கப்படும்.

முக்கியமாக உடலுறவு கொள்ளும் போது நல்ல தூக்கம் கிடைப்பதால், முகமானது பொலிவோடு பிரகாசமாக இருப்பதுடன், முதுமை தோற்றமானது தடுக்கப்படும்.

அன்றாடம் 30 நிமிடம் உடலுறவு கொண்டால், 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ததற்கு சமம். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.

ஆண்கள் அன்றாடம் உடலுறவில் ஈடுபடும் போது, விந்தணுவானது சீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேங்குவது தடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால், விந்தணுவானது தங்கி, விரைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

உடற்பயிற்சி செய்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது ஊக்குவிக்கப்பட்டு, அதன் சக்தியானது அதிகரிக்கும். உடலுறவு கொள்வதும் ஒரு உடற்பயிற்சி போன்றதாகும். எனவே தினமும் உடலுறவு கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

உடலுறவின் போது ஆண் மற்றும் பெண்களின் உடலில் இயற்கை வலி நிவாரணியான எண்டோர்பின் என்னும் ஹார்மோனானது சுரக்கப்படும்.

உடலுறவு கொள்ளும் போது டோபமைன் என்னும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்றாடம் உறவில் ஈடுபடும் போது, ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால், அங்குள்ள திசுக்கள் ஆரோக்கியமாக இருந்து, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

ஸ்டாமினாவை அதிகரிக்கும் உடலுறவானது ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும். அதற்கு தினமும் 15-30 நிமிடம் உறவில் ஈடுபட்டு, இரவில் நன்கு தூங்கினால், மறுநாள் காலையில் உடலில் ஸ்டாமினாவானது அதிகம் இருக்கும்.

அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியானல் உடலுறவு கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது உற்பத்தி செய்யப்படும் சேர்மங்களால், தலைவலியானது உடனே நீங்கிவிடும்.

உடலுறவிற்கு மற்றொரு சக்தியும் உள்ளது. அது என்னவென்றால், உடலுறவு கொண்டால், எந்தவிதமான நோய்களும் உடலை தாக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக காய்ச்சலைப் போக்க மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக உடலுறவு கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுறவு கொண்டால் உடனே குணமாகும். அதுமட்டுமின்றி, மனமும் ரிலாக்ஸ் ஆகி, புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.

வெள்ளி நகைகள் பாதுகாப்பும் பயன்களும்..! - இதோ உங்களுக்காக...


  • வெள்ளி நகைகள் பாதுகாப்பும் பயன்களும்
  • வெள்ளி நகைகள் வெப்பம் உண்டாக்கும் இயல்பு கொண்டவை.
  • உடலில் உண்டாகும் இசிவு எனும் நோயை அகற்றக்கூடியது.
  • மனதில் மிகுந்த குதூகலத்தை உண்டாக்கக் கூடியது.
  • மலச்சிக்கலை நீக்கும் ஆற்றல் பெற்றது.
  • உடலின் உள்ளே உள்ள கொதிப்பை அகற்றும் தன்மை கொண்டது.
  • மூளைக்கு மிகுந்த வலிமையை உண்டாக்கும் இயல்பு கொண்டது.
  • பெண்களுக்கு பெரும்பாலும் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளிலும் முழங்கை போன்ற மூட்டுப் பகுதிகளிலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு. இதற்கு ருமாட்டிக் “ஆர்த்தரைட்டிஸ்’ என்று ஆங்கிலத்தில் பெயர். இதனை அகற்ற பெண்கள் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளில் கால் விரல்களில் வெள்ளி நகை அணிய வேண்டும்.
  • காலில் அணியும் மெட்டியால் வலியில்லாமல் ஈஸியான சுகப் பிரசவம் ஏற்படும் என்பது ஒரு நம்பிக்கை.
  • காலில் அணியும் கொலுசு, தண்டையினால் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தியை மீட்டு ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி கூடும்.
  • தங்கம், வெள்ளி எந்த நகைகளாக இருந்தாலும் நெக்லஸ், செயின், கொலுசு, பிரேஸ்லெட், ஆரம் போன்றவற்றை வைக்கும்போது வளைத்துச் சுருட்டி வைக்கக்கூடாது. வளைத்தால் விரைவில் இணைப்பு விட்டு விடலாம். இதைத் தவிர்க்க நீளமான பெட்டியில் வைக்க வேண்டும்.
  • வெல்வெட் துணி, நல்ல வெள்ளைத் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் நகைகளை வைத்தால் நகைகள் புதிது போல் இருக்கும்.
  • உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்துக் கழுவித் துடைத்தால் பளிச்சென மின்னும்.
  • திருநீறு கொண்டு தேய்த்துக் கழுவினாலும் வெள்ளி நகைகள் கறுப்பு போய் மிளிரும்.

உனுக்கு இன்னா பிரச்சன நைனா..? - சென்னைத் தமிழ் வண்ண மயமானது

சென்னைத் தமிழ் வண்ண மயமானது. பல மொழிகளால் வளமூட்டப்பட்டது

சென்னையின் வழக்கமான காட்சிகளில் ஒன்றுதான் அது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி. பெரிய வாகனங்கள் முன்புறமும் எதிரிலும் வழியை அடைத்துக்கொண்டு நிற்கின்றன. இடது புறம் சிறிய இடைவெளி உள்ளது. அதன் வழியே சென்றால் முன்னேறிவிடலாம். உங்கள் முன்னால் இருப்பவரிடம் அதை விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறீர்கள். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்: “லெப்ட்ல வாங்க்கினு போ சார்”.

மெட்ராஸ் பாஷை எனச் சொல்லப்படும் சென்னைத் தமிழ் என்னும் சென்னை வட்டார வழக்கின் சிறப்புகளில் ஒன்று இந்தக் கச்சிதம். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்’ என்ற புகழ்பெற்ற தொடர் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். எதிராளியிடம், “உன் பேச்சை நான் மதிக்கவில்லை; உன்னோடு பேசுவதால் நேரம்தான் வீணாகிறது; நீ இங்கே நிற்பதுகூடத் தொந்தரவாக இருக்கிறது; நீ நகர்ந்தால் குறைந்தபட்சம் எனக்குக் காற்றாவது வரும்” என்றெல்லாம் சொல்ல சில சமயம் நாம் விரும்பக்கூடும். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்' என்ற தொடர் இத்தனையையும் சிக்கனமாகச் சொல்லிவிடுகிறது.

தாராத்துட்டான்..! :- பீற்றிக்கொள்ளாதே, உணர்ச்சியை அதிகம் வெளியில் காட்டாதே, முழு உண்மையையும் வெளிப்படுத்திவிடாதே என்ற பொருள்களில் வழங்கிவரும் ‘அமுக்கி வாசி' என்னும் தொடர் இன்னொரு உதாரணம். இப்படி நிறையச் சொல்லலாம். தாராந்துட்டான், பூட்ட கேஸ், உடான்ஸு, மெர்சல், நாஸ்தி என சென்னைத் தமிழின் எந்தச் சொல் அல்லது தொடரை எடுத்துக்கொண்டாலும், சிக்கனம், உணர்ச்சியைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் பாங்கு, பிற மொழிகளைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை எனப் பல சிறப்பம்சங்களை உணரலாம்.

கஸ்மாலம் என்ற சென்னைத் தமிழ் வசைச் சொல்லின் வேர்ச் சொல், வடமொழியில் உள்ள ‘கஸ்மலம்'. இதன் பொருள் அழுக்கு. ஜபூர்/ஜபுரு என்ற சொல்லின் வேர்ச் சொல் ஜபுர் என்னும் உருதுச் சொல். பொருள் ஜால வித்தை. அதே பொருளின் அங்கத வடிவில் ஜபுரு காட்டாதே என்று சென்னைத் தமிழில் வழங்கிவருகிறது. சென்னைத் தமிழ் பிற மொழிகளை எப்படி நுட்பமாக உள்வாங்கியிருக்கிறது என்பதை இதுபோன்ற சொற் களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். பஜார், பேஜார், மஜா, கேடி, தௌலத், உல்ட்டா, உட்டாலக்கடி என உதாரணங்களை அடுக்கலாம்.

எதையாவது தொலைத்துவிட்டால் ‘தாராத்துட்டியா’ என்று சென்னைத் தமிழில் கேட்பார்கள். தன்னுடைய பொருளைத் தன்னுடையது அல்ல என்று முற்றாகத் துறந்து பிறருக்குத் தந்துவிடும் செயலே தாரை வார்த்தல். இந்தச் சொல்லின் பொருள் ஆழமாக உள்வாங்கப்பட்டுச் சற்றே அங்கதச் சுவையுடன் தாராத்துட்டியா எனத் தகவமைக்கப்பட்டிருக்கிறது.

பிற மொழிச் சொற்கள் சற்றே திரிந்த நிலையிலும் வித்தியாசமான பயன்பாட்டிலும் புழங்கிவருகின்றன. ‘அப்பீட்’ என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுகிறது. கீழே சுற்றும் பம்பரத்தைச் சாட்டையால் சுண்டித் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிப்பதுதான் அப்பீட். இது ‘அப் ஹெட்’ என்ற சொல்லிலிருந்து மருவி வந்தது என்ற தகவல், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்னும் நாவலில் கூறப்படுகிறது. அம்பேல் என்னும் சொல் ஐ-ஆம்-ஆன்-பெயில் என்னும் தொடரின் மரூஉ என்றும் அந்த நாவல் சொல்கிறது. இவை இரண்டுமே மூலப்பொருளுக்கு நெருக்கமான பொருளிலேயே பயன்பட்டாலும், மாறுபட்ட சூழல்களில் வேறு பொருள்களையும் கொள்கின்றன. கிளம்புகிறேன் (நான் அப்பீட்டு) என்றும் ஆளை விடுங்கள் (அம்பேல்) என்றும் வழங்கப்படுகின்றன. ஒரு சொல் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்கள் எடுப்பது மொழியின் அழகு அன்றி வேறென்ன?

மொழி கூறும் வரலாறு:- சென்னை மொழிக்கு வேறு எந்த வட்டார வழக்குக்கும் இல்லாத தனித்தன்மை - பல மொழிகள் கலந்த தன்மை - உள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் தாக்கத்தை நைனா, டப்பு, துட்டு போன்ற சொற்களிலும் (எனக்)கோசரம், (அதுக்)கோசரம் போன்ற வழக்குகளிலும் காணலாம். ஆங்கிலம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளின் கலப்பை ஆராய்ந்தால், பிற மொழி மக்களுடனான சென்னையின் தொடர்பையும் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளலாம்.

இந்த அளவுக்கு வண்ண மயமான, பல்வேறு மொழிகளால் வளமூட்டப்பட்ட இன்னொரு வழக்கை எந்த மொழியிலும் காண்பது அரிது. இத்தகைய வழக்கை மரியாதையுடன் ஆராய்வதற்குப் பதிலாக, இழிவுபடுத்தும் போக்கே பொதுவாக நிலவுகிறது. சென்னைத் தமிழின் கொச்சை வழக்கைக் கேட்ட மாத்திரத்தில் கூசிப்போகும் மேட்டுக்குடியினர் பலர் இருக்கிறார்கள். பலரும் இதைத் தமிழின் இழிவழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. கூவம் பாஷை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் போய்விடுகிறார்கள். நாற்றமெடுக்கும் கூவத்தோடு இம்மொழி ஒப்பிடப்படுவது தற்செயலானது அல்ல. தமிழ்ப் பரப்பின் பொதுப்புத்தியின் பார்வை இது.

வட்டார வழக்குகள் ஒரு மொழியின் உயிர்ப்பை உணர்த்தும் அடையாளங்கள். மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போல சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். எல்லா வட்டார வழக்குகளையும் போலவே பல்வேறு இயல்பான காரணிகளால் உருவாகி, தொடர்ந்த பயன்பாட்டினால் உருமாறிவரும் ஒரு வழக்கு அது.

களுத மட்டும் சரியா..? :- சென்னைத் தமிழை இழிவுபடுத்துபவர்கள் அதன் உச்சரிப்புத் திரிபுகளையும் (வலிச்சிக்குனு, இஸ்துகினு) கொச்சைகளையும் (துன்ட்டியா) சுட்டிக்காட்டுவார்கள். குறைகளும் திரிபுகளும் எல்லா வழக்குகளிலும் உள்ளன. வந்துகொண்டிருக்கிறேன் என்பதை வந்துட்ருக்கேன், வந்துக்கிருக்கேன், வந்துண்ட்ருக்கேன் என்றெல்லாம் சொல்வது வட்டார/சாதி வழக்காக அங்கீகாரம் பெறுகிறது. ஆனால், வந்துனுருக்கேன் என்றால் மட்டும் அது இழிவழக்காகக் கருதப்படுகிறது. கஷ்டம் என்பதை கஸ்டம் என்று சென்னைத் தமிழர் சொல்கிறார் என்றால் சிவாஜி என்பதை ஜிவாஜி என்று நெல்லைத் தமிழர்கள் சிலர் சொல்லத்தான் செய்கிறார்கள். கழுதையைக் கய்தே என்பது சென்னைத் தமிழ் வழக்கு. இதைக் களுத என்று சொல்லும் தமிழர்கள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால், சென்னைத் தமிழின் கொச்சை மட்டும் பரிகசிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படுகிறது.

வசைச் சொற்களை வைத்து சென்னைத் தமிழை இழிவாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. வசைச் சொற்கள் சென்னைத் தமிழின் தனிச் சொத்து அல்ல. எல்லா மொழிகளையும் போலவே தமிழிலும் வசைச் சொற்கள் நிறையவே உள்ளன. சென்னைத் தமிழைப் பேசுபவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதால் சென்னைத் தமிழே வசைத் தமிழ் ஆகிவிடாது. கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் பிற வட்டாரத்து மக்களின் வட்டார வழக்குகளுக்கும் இதே அளவுகோல் பின்பற்றப்படுவதில்லை என்பதைப் பார்க்கும்போது, சென்னைத் தமிழின் மீதுள்ள ஒவ்வாமைக்குப் பின் உள்ள மேட்டிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளலாம். சென்னைத் தமிழை ரசிக்கும் சிலரும் தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கோடுதான் அதை அணுகுகிறார்கள்.

வாழும் மொழிக்கான பல்வேறு இலக்கணங்களையும் தேவைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னைத் தமிழ் என்னும் வட்டார வழக்கை மொழி மீது அக்கறை உள்ள யாரும் புறக்கணிக்கவோ இழிவுபடுத்தவோ மாட்டார்கள். மொழியின் தன்மைகள் இடம், தொழில், சாதி வரலாறு ஆகிய காரணங்களால் மாறுவது மிக இயல்பானது. வெகுமக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இதில் உயர்வு, தாழ்வு காண்பது மேட்டிமைவாதம். அந்த மேட்டிமைத்தனத்தைக் கைவிட்டு, சென்னைத் தமிழை முறையாக அணுகு வதற்கான பார்வையை வளர்த்துக்கொள்வதே மொழி யின் மீதுள்ள நம் அக்கறையை வெளிப்படுத்தும்.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 8 வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு அணிக்கு விளையாடாமல் தவிர்த்துள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்:- 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ராய்ப்பூர், மொகாலி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா, ஏ பிரிவு), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா), கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), பார்படோஸ் டிரைடென்ஸ் (வெஸ்ட் இண்டீஸ், பி பிரிவு) ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

அணிகள் அறிவிப்பு:- முன்னதாக தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்), மும்பை இந்தியன்ஸ்(இந்தியா), நார்த்தன் நைட்ஸ் (நியூசிலாந்து), சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை) அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றில் எஞ்சிய 8 அணிகளுடன் இணையும்.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் விளையாடும் அணிகளின் வீரர்கள் பட்டியலை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்துள்ளது. இந்த போட்டியில் 8 வீரர்கள் தங்கள் நாட்டின் உள்ளூர் கிளப் அணி தகுதி பெற்று இருந்தாலும் அதில் விளையாடுவதை தவிர்த்து, ஐ.பி.எல். அணிகளில் விளையாட முடிவு செய்துள்ளனர்.

சென்னை அணியில் சுமித்:- நியூசிலாந்து அதிரடி மன்னன் கோரி ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் பொல்லார்ட், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி, தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ஆகியோர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் காலிஸ் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் சுமித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தங்கள் சொந்த அணியை துறந்து ஐ.பி.எல். அணிக்காக ஆடுகிறார்கள்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருமாறு:-

டோனி (கேப்டன்), சுரேஷ்ரெய்னா, நெஹரா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ஈஸ்வர் பாண்டே, பவான் நெஜி, ரவீந்திர ஜடேஜா, மொகித் ஷர்மா, வெய்ன் சுமித், வெய்ன் பிராவோ, ஜான் ஹேஸ்டிங்ஸ், பிரன்டன் மெக்கல்லம், சாமுவேல் பத்ரீ, பாப் டுபிளிஸ்சிஸ்.

பெத்த புள்ளைக்கு கூட பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க.. - ஆனா..?

பெத்த புள்ளைக்கு கூட ஒரு பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க போலிருக்கு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே மாஸ் கிளப்ப போகும் ஒரு படத்திற்கு பெயர் வைக்க இவ்வளவா யோசிக்கணும்..?

சமீபத்தில் வருகிற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பெயர் வைக்கிற விவகாரத்தில் இப்படியெல்லாம் ரசிகர்களை புலம்ப வைப்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் வாடிக்கை! அஜீத் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே. என் புகழ் பாடுற மாதிரி தலைப்பு வேண்டாம். படத்தில் வரும் கேரக்டரின் பெயரையே தலைப்பாக வைக்கிற ஓல்டு ட்ரென்டும் வேண்டாம். அது வேண்டாம்… இது வேண்டாம் என்று ஏகப்பட்ட ‘…டாம்’கள்..!

தல 55 என்று அஜீத் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புதுப்படத்தின் தலைப்பு வைப்பதிலும் அநியாயத்துக்கு சிக்கல். கவுதமுக்கு பிடித்தால் அஜீத் நோ என்கிறார்.

 அஜீத்திற்கு பிடித்தால், கவுதம் இன்னும் கொஞ்சம் யோசிப்போமோ என்கிறார். இப்படியே போன தலைப்பு சம்பந்தமான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

ஆயிரம் தோட்டாக்கள் என்றொரு தலைப்பை சொன்னாராம் கவுதம். அஜீத் மனசில் பச்சை பல்பு எரிந்ததாக சொல்கிறார்கள். அது ரெட் கலருக்கு மாறுவதற்குள் ஒரே அமுக்..!

அறிவிச்சுருங்களேன் கவுதம் சார்….!

காப்பகம்