Wednesday, October 1, 2014

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...

காஜூ மர்சு...

ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.

ஹாட் டாக்ஸ்...



அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.


நம்மூரு கப்பக்கிழங்கு....


அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ருபார்ப் இலைகள்...



ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.

சன்னாக்‌ஷி...


அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.

குரங்கு மூளை..




நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.


புகு மீன்...


புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கி பழம்...


ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.

விஷக் காளான்...



ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி..?

தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள்...?


1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு – பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

ஆசிய விளையாட்டில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய வீராங்கனை அதிகாரிகள் மீது சரமாரியாக சாடல்

சர்ச்சைக்குரிய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மிகவும் வேதனை அடைந்து தனக்கு அளித்த வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின்

எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சரிதாதேவி ஆக்ரோஷம் காட்டினார். எதிராளி நிலைகுலையும் அளவுக்கு சரமாரி குத்துகளை விட்டார். சரிதாதேவியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை காண முடிந்தது. ஆனால் 3 பேர் கொண்ட நடுவர்கள் குழு 2-வது ரவுண்டில் மட்டுமே சரிதாதேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

மற்ற மூன்று ரவுண்டுகளிலும் நடுவர்களின் அதிகபட்ச கருணை என்னவோ ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா  தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. சரிதாதேவி தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், ஜினா பார்க்கின் கையை நடுவர் பிடித்து உயர்த்தியதை கண்டு வியப்படைந்தனர். நடுவர்களுக்கு எதிராக அங்கிருந்த நமது நாட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினார்கள். சிலர் தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி எறிந்தனர். ‘நீங்கள்  குத்துச்சண்டையை கொன்று விட்டீர்கள்’ என்று சரிதாவின் கணவர் கோஷமிட்டார்.

இந்திய குத்துச்சண்டை குழுவினரும் கடும் அதிருப்திக்குள்ளானர்கள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதாதேவி கண்ணீர் விட்டு அழுதார். முன்னாள் ஆசிய சாம்பியனான 32 வயதான சரிதாதேவி மணிப்பூரைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளும் நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய செய்வதில் தோல்வி அடைந்துவிட்டனர். என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தொடந்து மனம் கலங்கிய நிலையிலே சரிதா தேவி காணப்பட்டார். போட்டி முடிந்த பின்னர் பரிசு அளிக்கப்பட்டது. பரிசு அளிக்கப்பட்ட இருந்த அரங்கிற்கு வந்த சரிதா தேவிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கத்தை கழுத்தில் அணியவும் மறுத்துவிட்டார். பின்னர் பதக்கத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். இது அங்கு இருந்தவர்கள் மனதை கலங்க செய்தது.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்கால குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் போட்டியிட போகிறேன். இது ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சரிதா கூறினார். மேலும் அவர் இந்திய அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார். "இச்சம்பவம் நடந்து 24 மணிநேரம் நடந்தும் எந்த ஒரு அதிகாரியும் என்னுடன் பேசவரவில்லை. நன்றாக இருக்கிறேனா என்று கூட கேட்கவில்லை. இந்திய அதிகாரிகள் பதக்கம் பெறுபவர்களுடன் போட்டோ எடுக்க மட்டும் அருகே வருகிறார்கள். வேறு எதுவும் செய்வது இல்லை." என்று சரமாரியாக தனது குற்றச்சாட்டை சரிதா தேவி முன்வைத்துள்ளார்.

காப்பகம்