Saturday, December 14, 2013

காதல் மனைவியைப் பிரிகிறார் ஹ்ரித்திக் ரோஷன்!





பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ஹ்ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம்.


நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ல் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.


''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர்(சுசன்னே) தீர்மானித்துவிட்டார், இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதனால் என்  ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது. இதிலிருந்து நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்''  என்று ஹ்ரித்திக் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சுசன்னேவின் தந்தை நடிகர் சஞ்சய்கான் ''இதை முடிவு என்று கருதுவது தவறு.  அவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரியவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?





ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.

இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

தேன்: தொண்டை வலி


 தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

 காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி


 காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி


 சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு


 உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

உப்பு: பாத வலி
 நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

 முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

 மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால் வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி


 மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

தக்காளி: கால் பிடிப்பு

 இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி


 மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி


 மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை


 வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

புதினா: தசைப்புண்


 அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி!





பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் ...என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .

உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன் காரணமாகவே தாக்காளர்களாலும் நடுவே இதனை கண்டறிந்து உடைக்க முடியாது.

இந்த எழுத்து வரிசையை பார்க்கும் போது முதலில் உங்களுக்கே தலை சுற்றும். இத்தனை கடினமானதை எப்படி நினைவில் கொள்வது என மலைப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை உருவாக்க பயன்படுத்திய அடிப்படை வாக்கியத்தை நினைவில் வைத்திருந்தால் போதுமானது, அதிலிருந்து பாஸ்வேர்டை உருவாக்க பயன்படுத்திய யுக்தியை கொண்டே அதை மீண்டும் எழுதிவிடலாம்.. இதற்கான குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.

பாஸ்வேர்டை உருவாக்க பெரும்பாலலும் எல்லோரும் பொதுவான வழிமுறைகல்ளையே கையால்கின்ற்னர். இவற்றை கொண்டே தாக்காளர்கள் பாஸ்வேர்டை யூகித்து விடுகின்றனர். ஆனால் வாக்கியங்கள் கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கும் போது மற்றவர்கள் அதை யூகிப்பது கடினம். அடிப்படை வார்த்தை தெரிந்தால் கூட அதில் செய்த மாற்றங்களை அப்படியே செய்வது கடிமானது.

எனவே தான் பாஸ்பேரேசை பயனப்டுத்துங்கள் என்கின்றனர்.

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி!





 எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?


இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம்.


பெரும்பாலான நேரங்களில் இன்ஸ்டால் செய்யப்படும் போதே , இவை தேவையா என கேட்கப்பட்டிருக்கலாம். அவற்றை நீங்கள் கவனிக்கமாலும் இருந்திருக்கலாம். எது எப்படியோ, புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் போது அந்த சாப்ட்வேர் தவிர வேறு எந்த தேவையில்லாத சாப்ட்வேர் பயன்பாடுகளும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்படாமல் பாதுகாத்து கொள்ள விரும்பினால் அன்செக்கி சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.


சாப்டேவேர்டன் நேரடியாக அல்லது மறைமுகமாக நிறுவப்படும் தேவையில்லாத பயன்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதாக அன்செக்கி உறுதி அளிக்கிறது. அதே போல ஏதேனும் உபரி சாப்ட்வேர் நிறுவப்படுவதாக் இருந்தால் அது பற்றி எச்சரிக்கையும் செய்வதாக சொல்கிறது. ஆக புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செயவதாக இருந்தால் அதற்கு முன்னர் அன்செக்கியை நிறுவிக்கொள்ளலாம். ( அன்செக்கி வேறு எதையும் நிறுவாது என நம்புவோம்).



இப்படியாக அன்செக்கி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது பாதுகாப்பு அளிப்பதோடு , குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படும் போது தானாகவே அந்த மேம்பாடுகளையும் செயலுக்கு கொண்டு வருகிறது.


இணையதள முகவரி:   http://unchecky.com/

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.!



லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .


எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முகவரியை கிளிக் செய்தால் நண்பர்கள் கிளிக் செய்தவுடன் அசந்து போவார்கள்.


காரணம் நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை அவர்களால் பார்க்க முடியும் என்பது மட்டும் அல்ல: அந்த படங்களின் பின்னே உள்ள கதைகளை நீங்கள் விவரிப்பதை அவர்கள் கேட்கலாம் என்பதால் தான் இந்த அசரல். ஆம் , புகைப்படங்களை கிளிக் செய்ததுமே இந்த சேவை ஒரு தனி அரட்டை அறையை உருவாக்கி கொடுக்கும். இம்ங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு புகைப்படம் எடுக்கப்பட இடம் பற்றி வரணனை செய்ய நண்பர்கள் கேட்டு ரசிக்கலாம்.


எங்காவது விடுமுறைக்கு போய்வந்ந்தால் விட்டுக்கு வந்த நண்பர்களிடம் ஆல்பத்தை காட்டி சுற்றுலா அனுபவத்தை விவரிப்பது போல , இந்த சேவை ஆன்லைனில் நண்பர்களிடம் புகைப்படம் பின்னே உள்ள கதைகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.


இப்போது சொல்லுங்கள் , புதுமையான புகைப்பட பகிர்வு சேவை தானே.

இணையதள முகவரி: http://live.pics.io/

Xolo Opus Q1000 பேப்லட் ரூ.9,999 விலையில் ஆன்லைனில் கிடைக்கும்!




Xolo- வின் சமீபத்திய பேப்லட்டானா, Opus Q1000, இந்திய சந்தையில் இப்போது கிடைக்கிறது. Xolo Opus Q1000 இ-காமர்ஸ் இணையதளத்தில் ப்ரீ ஆர்டர்கள் மூலம் ரூ.9,999 விலையில் கிடைக்கும். Xolo Opus Q1000 ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும்.

அது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே. பேப்லட்டில் ரேம் 1GB உடன் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு எல்இடி ப்ளாஷ் இணைந்துள்ள 5 மெகாபிக்சல் Autofocus பின் கேமரா உள்ளது, மேலும் ஒரு VGA முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

Xolo Opus Q1000 microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. இது ஒரு 2000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. பேப்லட் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi,, ஜிபிஆர்எஸ், எட்ஜ், ஜிபிஎஸ் / எஜிபிஎஸ் மற்றும் 3G ஆகியவை அடங்கும். Xolo Opus Q1000 measures 143.3x72.9x8.95mm. மேலும் இந்த பேப்லட் பற்றி Flipkart தளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள Xolo Q500, Xolo Q600, Xolo Q700, Xolo Q800, Xolo Q900, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q2000 போன்றே நிறுவனத்தின் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி புதிய Xolo பேப்லட்டை போன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

Xolo Opus Q1000 பேப்லட் குறிப்புக:


480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
ரேம் 1GB,
5 மெகாபிக்சல் Autofocus பின் கேமரா உள்ளது,
VGA முன் எதிர்கொள்ளும் கேமரா,
microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு,
இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்,
2000mAh பேட்டரி.

லெனோவா S650, லெனோவா S930 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!




லெனோவா அதன் S தொடரை விரிவுபடுத்தி புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான, லெனோவா S650 மற்றும் லெனோவா S930 அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புதிய S தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிவித்துள்ளனர், மற்றும் இந்த புதிய போன்களின் விலையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

லெனோவா S650 மற்றும் லெனோவா S930 ஸ்மார்ட்போன்கள்  உலகளவில் கிடைப்பது பற்றி விரிவாக கொடுக்கப்படவில்லை. லெனோவா S650 11.990 ரஷியன் ரூபிள் (சுமார் ரூ 22,600) கிடைக்கும், லெனோவா S930 13990 ரஷியன் ரூபிள் (ரூ. 26,500 தோராயமாக) கிடைக்கும்.

லெனோவா S650:

ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கும் மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது 4.7இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே வருகிறது. இது 1GB ரேம் உடன் 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் MT6582 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு உள்ளது, அதிகபட்ச சேமிப்பு ஆதரவு பற்றி விரிவாக கொடுக்கப்படவில்லை. 2000mAh பேட்டரி மற்றும் 126 கிராம் எடை, 138x69.8x8.7mm measures. ஆனால் முக்கிய கேமரா மற்றும் முன் கேமரா பற்றி குறிப்பிடவில்லை.

லெனோவா S930:

ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கும் மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும். இது 6 இன்ச் HD (720x1280) டிஸ்ப்ளே வருகிறது. மாலி-400 எம்.பி. உடன் 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் MT6582 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 1GB ரேம் கொண்டுள்ளது.

லெனோவா S930 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 1.6-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளன. இந்த பேப்லட்டில் 8GB உள்ளடிக்கிய சேமிப்பு, மற்றும் விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவு கொண்டுள்ளது. இது 000mAh பேட்டரி திறன் மற்றும் 170 கிராம் எடையுடையது. இது பரிமாணங்களை 170x86x8.65mm வருகிறது.

வீரம் படத்தின் இசை டிச.20 இல் வெளியீடு!




தல அஜீத்தின் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10 ஆம் வெளியாகும் வீரம் படத்தின் இசை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில்  சிவா இயக்கியுள்ள பிரமாண்டம்மாண படம் வீரம்.


தல ரசிகர்களை கவரும் வண்ணம் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பபில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது.


டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் ஜுங்கலீ மியூசிக் நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. அஜீத்துடன், தமன்னா, நாசர், அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒருமிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வீரம்  படம், பாடல்களில் மட்டுமின்றி, கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் இயக்குநர் சிவா கூறியுள்ளார்.

இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்!




இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.

மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த ஆண்டு, கடம் தயாரிக்கும் கலைஞரான மானா மதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது.

கலக்கும் கடம் 

மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் மீனாட்சி அம்மாளின் குடும்பம் தான். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களின் கைப்பக்குவத்தில் உரு வான ‘கடம்’கள் இந்தியாவில் மட்டு மின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஜப்பான், மலேசியா என சர்வதேச இசைக் கலைஞர்களின் கைகளிலும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது.

‘‘எங்களுக்கு இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இசைக்கருவி தயாரிக் கிறவங்களுக்கு விருது குடுத்திருப்பது இதுபோன்ற தொழிலில் இருக்கறவங் களை ஊக்கப்படுத்தும்’’ என்று தங்களின் மகிழ்ச்சியை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி அம்மாளின் மகன் ரமேஷ்.

“எங்க பாட்டனார் உலகநாத வேளார், தாத்தா வெள்ளைச்சாமி வேளார், அப்பா கேசவன் வேளார்.. அவங்களுக்கு அப்புறம் நானும் எங்கம்மாவும் இப்ப இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றோம். எங்க முன்னோர் கள் இசையிலும் நாடகத்திலும் நாட்டம் உள்ளவங்க. அதனால்தான் எங்களுக்கும் அந்த ஞானம் கொஞ்சம் தொத்திக்கிச்சு.

மூவாயிரம் தடவை தட்டணும் 

கடம் செய்யுறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைங்க. தட்டுனா ஸ்ருதி சுத்தமா வரணும். இதுக்காக கிராபைட், ஈய செந்தூரம் மாதிரியான பவுடர் களைப் போட்டு மண்ணைப் பக்குவப் படுத்தணும். ஒரு தடவ தட்டுனா சுமாரா 15, 20 நொடிகளாச்சும் அதிர்வு இருக் கணும். அப்படி இருந்தாத்தான் ஸ்ருதி சுத்தமா இருக்கும். அந்தளவுக்கு வரணும்னா, கொறைஞ்சது மூவாயிரம் தடவையாச்சும் மரப் பலகையால தட்டித் தட்டி கடத்தை உருவாக்கணும்.

மண்பாண்டம் செய்யுறது எங்க ளுக்கு குலத்தொழில். அப்பப்ப இடை யிலதான் கடம் செய்யுறோம். மூணு நாள் மெனக்கெட்டோம்னா இருபது கடம் வரைக்கும் செஞ்சு முடிச்சிரு வோம். அந்த இருபதும் சேல்ஸ் ஆன பின்னாடித்தான் அடுத்ததா கடம் செய் வோம். பெங்களூரில் இருக்கிற உ.வே. சாமிநாத அய்யரின் பேத்தி சுகன்யா ராம்கோபால்தான் முதல் பெண் கடம் வித்வான். ஜலதரங்கம் மாதிரி இப்ப அவங்க கடதரங்கம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க வாசிக்கிற கடம் அத்தனையுமே எங்க தயாரிப்புத்தான்.

டிரம்ஸ் சிவமணிக்கு… 

பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வெளிநாட்டுக்கு போயிருந் தப்ப உதூ, உத்தாங்கோ என்ற ரெண்டு இசைக் கருவிகளை வாங்கிட்டு வந்திருக்காரு. ஃபைபர்ல செஞ்சிருந்த அந்தக் கருவிகள் எப்படியோ உடைஞ்சி போச்சு. ‘இதே மாதிரி களிமண்ல செஞ்சுத் தரமுடியுமா?’ன்னு கேட்டாரு. பத்து பீஸ் செஞ்சுக் குடுத்தேன். அதை வெச்சு இப்பப் பட்டையை கெளப்பிக் கிட்டு இருக்காரு…” என்றார் ரமேஷ்.

புரஸ்கார் விருதுடன் ஒரு லட்சத்துக் கான பணமுடிப்பும் பாராட்டுப் பொன் னாடையும் மீனாட்சி அம்மாளுக்கு வழங்கப்படுகிறது. விருது கிடைத் திருப்பது குறித்து கேட்டபோது, ‘‘எங்க மாமனார், வீட்டுக்காரர் இவங்கெல் லாம் சொல்லிக் குடுத்துட்டுப் போன தைத்தான் நாங்க செஞ்சுட்டு இருக் கோம். அவங்களுக்கு கிடைக்காத பெருமை எனக்குக் கிடைச்சிருக்கு. மொத்தத்துல சந்தோஷம்யா’’ என்று சிரித்தார் மீனாட்சி அம்மாள்.

‘‘உங்களுக்குப் பின்னாடி உங்கள் வாரிசுகள் கடம் பண்ணுவார்களா?’’ என்று ரமேஷிடம் கேட்டபோது, ‘‘குலத் தொழில் என்பதால் எங்க குடும்பத்துல வர்ற எல்லாரும் கட்டாயம் மண்பாண் டம் செய்வாங்க. என்னோட மகளுக் கும் மண்பாண்டத் தொழில் தெரியும். கடம் செய்யுறதுக்கு என்னோட தங்கச்சி மகன் ஹரிஹரனை தயார்படுத் திட்டு இருக்கேன். அதுக்காகவே அவன் சங்கீதம் படிச்சிட்டு இருக்கான்’’ என உற்சாகமாகச் சொன்னார்.

டிசம்பர் 15 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!




தேதி : 15 Dec 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 am : A Long And Happy Life

ரஷ்யாவின் சிறிய கிராமம் ஒன்றில் வசிப்பவன் சாஷ்சா. அவனுக்கு கொஞ்சம் நிலம்.. கொஞ்ச ஒரு காதலி. இப்படி மிக எளிமையாகக் கழிகிற அவன் வாழ்க்கையில் திடீரென புயல். அரசாங்கம் அவன் நிலத்தைப் பறித்துக் கொள்கிறது. சாஷ்சாவுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. வேறெங்காவது போ.. கூலி வேலை செய் என்று விரட்டுகிறது அரசு, சாஷ்சா தன் நிலத்தை மீட்பதென முடிவெடுக்கிறான். ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒற்றை மனிதனின் போராட்டம். ரஷ்ய சினிமாவில் அன்று புடவ்கின், ஐசன்ஸ்டீன் காலத்தில் கம்யூனிச ஆதரவு பிரச்சாரம். இன்று அதே சினிமாவில் கம்யூனிச எதிர்ப்பு.

2:00 am : Puppy Love

மனதின் விசித்திரம்.. மாறும் அதன் நிறம், மணம், குணம். இருக்கும் செல்போனை தலையைச் சுற்றி தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்று வாங்கவே ஏங்கும். டயானாவும் அப்படித்தான். அவள் தூக்கி எறிந்தது செல்போனை அல்ல. இது வரை வாழ்ந்த வாழ்வை. அப்படி அவளை மாற்றியவள் ஜூலியா. ஜூலியா அடல்ட் விசயங்களில் அத்துபடி. இத்தனை காலம் உத்தமபுத்திரியான டயானா இப்போது ஜூலியாவால் பாதை மாறுகிறாள். அழகான ஆண்கள்.. ரசனையான இரவுகள். இயக்கம்: டெல்பீன் லேஹெரிசி.

4:30 pm : A Touch of Sin

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம். இயக்கம்: ஜியா சான்கே. வாழ்வில் விதி விளையாடினால் சரி.. சதி விளையாடினால்?. துரோகம் கழுத்தை நெரித்தால்.. அடுத்த நொடி திமிறி எழுந்தால்தான் வாழ்வு. இது நான்கு பேரின் திமிறல்கள். ஒரு நாடோடி, ஒரு சுரங்கத் தொழிலாளி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருத்தி, அடிக்கடி இடமாற்றப்படும் அலுவலக ஊழியன். நால்வரும் சமூகத்தின் கடைக்கோடி மக்கள். இவர்கள் கழுத்தை நெரிப்பதோ அதிகாரத்தின் கைகள். சுற்றும் வரை பூமி.. போராடும் வரை மனிதன்.

7:00pm : Young & Beautiful

Francois Ozon என்கிற பிரெஞ்சு இயக்குனரின் படம். இசபெல் என்கிற பெண்ணுக்கு கட்டுக்கடங்காத பாலியல் வேட்கை. அதற்காகவே வேசி ஆகிறாள். இது வீட்டுக்குத் தெரியாது. ஒரு நாள் பலான சமயத்தில் வாடிக்கையாளனாக வந்த ஜார்ஜ் இறந்து விட.. இசபெல் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். தடயங்களை வைத்து போலிஸ் அவளைத் தேடுகிறது. போலிஸ் அவளைப் பிடித்ததா? அவள் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததா?.

******************************

திரையரங்கம் : Woodlands Symphony

4:15 pm : RECLAMATION 

1979 விடுதலைக்குப் பிறகான ஈரானின் ஒரு மிலிட்டரி தலைவர் சஹாடி. அந்த சஹாடிக்கு ஒரு ஆசைக் கனவு. இரண்டாம் உலகப் போரின் சமயம். ரஷ்யாவுக்கு போன 16 டன் தங்கத்தை தாயகத்தின் கஜானாவுக்கு திரும்பக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பெரிய சாகசத்துக்கு கிளமபுகிறார் கேப்டன். ஈரானின் தங்கம் அந்த தங்கத்தை மீட்டதா?. ஈரானியப் படங்கள் என்றாலே பெண்ணியம்தானா? இப்படி 'பொன்'னியமும் உண்டு. இயக்கம்: அலி கஃபாரி.

6:45 pm : THE DOOR 

மாக்டா சாபோ என்கிற ஹங்கேரிய பெண் எழுத்தாளரின் வாழ்வின் ஒரு பகுதி படமாகியிருக்கின்றது. 1960ல் ஹங்கேரியை சேர்ந்த மிகப் பெரிய பங்களா ஒன்றின் கேர்டேக்கர், எம்ரன்ஸ் என்கிற மூதாட்டி. மாக்டாவும் அவள் கணவனும் அந்த வீட்டுக்கு வாடகைக்குக் குடி வருகின்றனர். வந்த நாள் முதல் மாக்டாவுக்கும் எம்ரன்ஸ்க்கும் ஒத்துப் போகவில்லை. இருவருக்கும் இருவேறு சித்தாந்தங்கள். ஒவ்வொரு விசயத்திலும் இருவருக்கும் முட்டிக் கொள்கிறது. அந்த வீட்டில் எம்ரன்ஸ்சின் ஒரு அறை எப்போதும் பூட்டிக் கிடக்கிறது. அந்த அறையில் யூதர்களிடமிருந்து திருடிய விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக மாக்டா சந்தேகப்படுகிறாள். அந்த அறையில் அப்படி என்னதான் இருந்தது?. மாக்டாவாக மார்டினா கெடக், எம்ரன்ஸ்சாக உலகப் புகழ் பெற்ற நடிகை ஹெலன் மிரண்.. இருவரும் நடிப்பில் மிரட்டி உள்ளனர்.

********************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI

11:00 am : Life Feels Good

It's a wonderful life, Wings of desire போலவே இதுவும் நம்பிக்கை டானிக் படம். சின்ன வயதில் நம்மைப் போல தான் மார்டியசும். ஒரு தவறான மருத்துவ சிகிச்சை அவன் தலைவிதியை மாற்றிவிடுகிறது. மார்டியசால் இன்று நடக்க முடியாது, பேச முடியாது. அவனை இந்த கதிக்கு ஆளாக்கிய மருத்துவமனைக்கோ அவன் மீது இரக்கம் இல்லை. டாக்டர்கள்.. நர்ஸ்கள்.. எவரிடமும் துளி கருணை இல்லை. அவனுக்கு ஆறுதல் அவன் அம்மாவும் குடும்பமும். கூடவே ஒரு ஜன்னலும். வீட்டு ஜன்னலுக்கு வெளியேதான் அவன் உலகம்.

அந்த உலகில் ஒரு புது வரவு. எதிர் வீட்டு அழகி. பார்க்கும் அத்தனை பேரையும் பைத்தியமடிக்கிற அழகு. ஆனால் அவளுக்கு மார்டியஸ் பைத்தியம் வருகிறது. அதுதான் மார்டியசின் சாமர்த்தியம். நம் போன்றவர்கள் தோற்ற போது மார்டியஸ் எப்படி ஜெயித்தான். 'உன்னால் ஜெயிக்க முடியாது.. ஜெயிக்க முடியும் என்று நீ நினைக்காத வரை' எனும் பாப் மார்லி வரிகளின் திரை வடிவம்.

2:00 pm : White Lie 

ரிச்சர்ட் நெம்பர் ஒன் எழுத்தாளன். அவனிடம் 8 வருடமாக வேலைபார்ப்பவள் சிட்னி. பூவோடு சேர்ந்த நாறும் மணக்குமே. அவளும் எதோ எழுதுவாள். தன் முதல் புத்தகத்தை எழுதி ரிச்சர்டிடம் காட்ட.. இதெல்லாம் ஒரு எழுத்தா என்று அவள் முகத்தில் தூக்கி எறிகிறான். உன் வேலையே வேண்டாம் என சிட்னி வெளியே வருகிறாள். கொஞ்ச நாளில் ரிச்சர்டின் அடுத்த புத்தகம் வந்து செமையாக போகிறது. புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என வாங்கிப் பார்க்கும் சிட்னிக்கு அதிர்ச்சி. அது அவள் எழுதிய நாவல். ரிச்சார்ட் விட்டெறிந்த அவளுடைய எழுத்து. சிட்னியின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?.. ஆனால் சிட்னி ஒரு காரியம் செய்தாள்?. இமா கார்டியர் எனும் பிரெஞ்சு பெண் இயக்குனரின் முதல் படம்.

4:30 pm : THE Wild Ones

நம் பெற்றோரை விட நம் மீது அன்பும் அக்கறையும் யாருக்கு உண்டு?. ஆனால் சில சமயம் நாம் அதிகம் வெறுப்பது நம் பெற்றோரைத்தான். பெற்றோருக்கு தம் குழந்தைகள் என்றும் குழந்தைகள்தான். வளர்ந்த பின்னும் அவர்களை குழந்தைகளாகவே பார்ப்பார்கள். அலெக்ஸ், கேபி, ஓஜி மூவரும் நண்பர்கள், இளைஞர்கள். எப்போதும் குடி, பெண்கள், ஊர்சுற்றித் திரிவது. பொதுவாக எல்லா இளைஞர்களும் செய்யும் காரியம்தான். ஆனால் மூவரின் பெற்றோரும் குமுறுவது.. 'நம் குழந்தை இப்படி செய்யலாமா?'. பெற்றோர்-பிள்ளை உறவின் உளவியல் சிக்கலை அலசும் ஸ்பெயின் நாட்டுப் படம்.

7:00 pm : The Amazing Catfish

கிளாடியா ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதி. ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக செல்பவள். பல நோயாளிகளைப் பார்ப்பவள். அன்று அவள் சந்தித்தது மார்த்தாவை. மார்த்தா மரணத்துக்கு காத்திருக்கிற ஒரு எய்ட்ஸ் நோயாளி. கிளாடியாவின் நடப்பால் ஏறக்குறைய செத்துவிட்ட மார்த்தாவுக்குள் உயிர் துளிர்க்கிறது. சக மனிதனிடம் குறிப்பாக ஒரு நோயாளியிடம் நாம் காட்ட வேண்டிய நேசத்தைப் பேசுகிற படம். டொரான்டோ திரைப்பட விழாவில் பாராட்டுக்களை அள்ளிய கிளாடியா லுஸ் என்கிற மெக்சிக பெண் இயக்குனரின் முதல் படம்

**************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

10:45 am : Don Jon 

டான் ஜுவான் பல பெண்களை மயக்கும் உமனைசர். ஒரு ஸ்பானிய புனைவு கதாபாத்திரம். இந்த டான் ஜூவான் மொசார்ட் முதல் பெர்னார்ட் ஷா வரை பாதித்திருக்கிறான். எல்லோரும் அவனைத் தழுவியிருக்கிறார்கள். அந்த டான் ஜுவானின் கலியுக அவதாரமே இந்த டான் ஜான். ஜான் அமெரிக்காவின் மன்மதன். அதனாலேயே அவனை டான் ஜான் என்று அவனது நண்பர்கள் செல்லமாக அழைக்கின்றனர். டான் ஜானுக்கு காதல் என்பது வெறும் ஒரு சொல்.. அவ்வளவுதான். அப்படிப்பட்டவனும் ஒரு பெண்ணுக்காக கடைசியில் மாய்ந்து மாய்ந்து உருகினான். காதல் என்கிற வார்த்தையின், முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோசப் கார்டன் லெவி இயக்கிய முதல் படம்.

1:45 pm : Strangers In the House

பால்ய வயதில் துள்ளி திரிந்த வீட்டைக் கடந்து செல்லும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருக்கும், உடனே உங்கள் மனைவியிடமோ அல்லது குழந்தைகளிடமோ அந்த வீடு பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள்தானே?. 70 வயது அகபிக்கும் தான் வாழ்ந்த வீட்டைப் பற்றி சொல்ல பல கதைகள் உள்ளன. ஆனால் அந்த வீட்டுக்கு சொந்தக்காரி இப்போது வேறு ஒருத்தி. அவள் வேறு யாரும் அல்ல.. சொந்தப் பேத்தி எல்பிடா. எவ்வளவோ கேட்டும் எல்பிடா கிழவிக்கு அந்த வீட்டைத் தர மறுக்கிறாள். அவளுக்கு அதை இடித்து ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அந்த வீடு என்ன ஆனது?. பாட்டி-பேத்தி வீட்டை விட்டுக் கொடுத்தது யார்?. உணர்ச்சிமிகு குடும்ப காவியம்.

4:15 pm : Hide Your Smiling faces

டாமி அண்ணன், எரிக் தம்பி. இந்த இரண்டு சிறுவர்களும் இப்போது வசிக்கும் இடம் ஜெர்சி நகரத்தின் ஒரு காட்டுப் பகுதி. பக்கத்து வீட்டு சிறுவனுக்கோ இவர்களுடன் எப்போதும் சண்டை. ஒரு நாள் காட்டுக்குள் ஏரிக்கரையில் அந்த பக்கத்து வீட்டுச் சிறுவன் செத்துப்போய் கிடக்கிறான். அருகிலே அவன் அப்பாவும் செத்துப் போய் கிடக்கிறார். அவர்களைக் கொன்றது காட்டுக்குள் இருக்கும் ஒரு அதிபயங்கர அரக்கன். அப்படித்தான் அண்ணனும் தம்பியும் நம்புகின்றனர். அந்த அரக்கன் தங்களையும் கொன்று விடுவானோ?. வீட்டை விட்டு வெளியே வரவே பயம். தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாம் போல் இருக்கிறது. சிறுவர்களின் கனவுலகம் எழில் மிகுந்ததும், வண்ணமயமானது மட்டும் அல்ல. சில நேரம் கலவரமானதும் கூட.

**************************************

திரையரங்கம் : Inox 2

4:15 pm : Floating Skyscrapers

கூபா ஒரு நீச்சல் வீரன். சில்வியா அவன் காதலி. எவ்வித சிக்கலும் இன்றி வானவில்லாய் கழியும் வாழ்க்கை. ஒரு ஓவியக் கண்காட்சியில் சிக்கல் வருகிறது, மிக்கேல் உருவில். மிக்கேலுக்கும் கூபா வயது அழகன். கூபா - மிக்கேல் நண்பர்கள் ஆகின்றனர். கொஞ்ச நாளில் அவர்கள் நட்பு அதையும் தாண்டி அபுனிதமாகிறது. இது சில்வியாவுக்கு தெரிய வருகிறது. இது முக்கோண காதல் கதையில் சேருமா? பார்த்துவிட்டு முடிவு சொல்லுங்கள்.

6:45 pm : The Tree and The Swing

லண்டன் காலேஜில் எலினா ஓர் ஆசிரியை. விடுமுறையில் ஊர் வருபவளுக்கு அதிர்ச்சி. அப்பாவின் அருகே ஒருத்தி. அவள் அப்பாவின் புது மனைவி. கொஞ்ச நாளில் தெரிந்து விடுகிறது. சித்திகாரி சூழ்ச்சிக்காரி என்று.. சித்தியின் நோக்கம் அப்பாவின் சொத்து. எலினா இப்போது சித்தியுடன் போராடத் தயார். அந்த கால மனோகரா.. இந்தக் கால மெகா சீரியல். இயக்கம்: மரியா டௌசா.

*********************************

திரையரங்கம் : INOX 3

11:00 am : SPECIAL TREATMENT

நம்மூர் மருத்துவமனைகள் போலத்தான் செர்பியாவிலும். சின்ன தலைவலிக்கே எக்ஸ்ரே, ஸ்கேன் வரை எடுத்து வரச் சொல்லி நம்மை 'ரமணா' விஜயகாந்த் ஆக்க அலைகழிப்பார்கள். வணிக மயமாகிவிட்ட செர்பியாவின் மருத்துவச் சூழலை நையாண்டி செய்யும் படம். BLACK HUMOUR GENREக்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம். குடிப் பழக்கத்திலிருந்து மீள ட்ரீட்மென்ட்க்கு வரும் 6 பேஷண்ட்களை ஆராய்ச்சி எலிகளாய் சாடிஸ்ட் டாக்டர் படுத்தி எடுப்பதைப் பார்க்க வேண்டுமா? இப்படம் பாருங்கள். இயக்கம்: Goran Paskaljevic.

2:00 pm : The Future

ஸ்ரோடின்கரின் பூனை: ஒரு சிறிய நிகழ்வு உங்கள் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் அல்லது போடாது. தாமசும் பியான்காவும் அண்ணன் தங்கை. வசதியான குடும்பம். ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போக.. எல்லாம் தலைகீழ் ஆகிறது. இருவரும் இப்போது நடுத்தெருவில். குடிகாரன் விழுந்தால் தடுமாறி எழுந்து விடுவான். தெளிவானவன் விழுந்தால்.. எழுந்தால்தான் உண்டு. இயக்கம்: ஆலிசியா ஷெர்சன்.

4:30 pm : Let Me Survive

தகுதியுள்ளதே உயிர்வாழும். இல்லாதது செத்துப் போகும். 'சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்' டார்வினின் பரிணாமக் கோட்பாடு. கூட்டிப் பெருக்கும் வேலையா? அதற்கும் தகுதி இல்லையா? பெருக்கித் தள்ளிவிடுவார்கள். இன்று வேலை என்பது உயிர் போல.. இந்தப் படத்தில் ஒரிஜினல் உயிர் பிரச்சினையே வருகிறது.

கேட் - அம்மா. அவளுக்கு 14 வயது மகள் எமிலி. அம்மாவுக்கு ஒரு புதுக் காதலன் கிடைக்க.. அம்மா, மகள், காதலன் மூவரும் பிக்னிக் போகின்றனர். பிக்னிக் கடலில். சொந்தப் படகில் பயணம். திடீரெனப் புயல். அலைகடல் நடுவே ஜீவமரணப் போராட்டம். படகிலோ கொஞ்சம் ரொட்டி, கொஞ்சம் தண்ணீர். தகுதியானதே உயிர் வாழும். பிரான்சில் நடந்த நெஞ்சை உறைய வைக்கும் உண்மைக் கதை.

**************************

திரையரங்கம் : CASINO

11:00 am : THE PHOTOGRAPH

ஆடம் வயது 16. அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வருகிறான். மகிழ்ச்சி ததும்பும் அவன் வாழ்வை ஒரு புகைப்படம் கெடுக்கிறது. அந்தப் படத்தில் அவன் அம்மா கர்ப்பமாக இருக்கிறாள். அவள் அருகே ஒரு ஆள் இருக்கிறான். யார் அந்த ஆள்?. அவன்தான் ஆடமின் உண்மையான அப்பாவா?. அந்த கேள்விக்கு விடை தேடி புறப்பட்ட ஆடமுக்கு கிடைக்கிறது ஒரு காதல், ஒரு நட்பு. அது சரி.. தேடிப்போன விடை கிடைத்ததா?.இயக்கம்: மைக்கிஜ் அடாமெக்.

2:00 pm : Northwest

கோபன்ஹேகன் குற்ற பூமி. மாஃபியா, கொலைகாரர்கள், புரோக்கர்கள் திரியும் அந்த அழுக்கு சாம்ராஜ்யத்தின் இளவரசன் 18 வயது கேஸ்பர். கொலை, கொள்ளை என கலவரக் கலவையாகக் கழியும் வாழ்க்கை. ஒரு நாள் கதை மாறுகிறது. சாம்ராஜ்யத்தின் துப்பாக்கி இளவரசன் தம்பியை குறி வைக்கிறது. இது வரை மற்றவர்களை துரத்திய கேஸ்பர். இப்போது ஓட ஆரம்பிக்கிறான். துடிப்பான திரில்லர் படம்.

4:30 pm : ANOTHER HOUSE 

ஹென்றி 86 வயது கிழவன். அவன் முதுமையே அவன் நோய். அவனுக்கு எப்போதும் ஒரே கனவு வருகிறது. அந்தக் கனவில் ஒரே ஒரு வீடு. மிக அழகான வீடு. கிழவனுக்கு தினமும் இதே கனவு.. இதே வீடு, அந்த வீட்டைக் கண்டுபிடித்தே தீர்வேன் என அலைபவனை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்க்கின்றனர். ஹென்றிக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பத்திரிகையாளன், இன்னொருவன் ராணுவ வீரன். இருவரும் அப்பாவைப் பார்க்க வருகின்றனர். கிழவனின் ஒரே ஆசை அவன் கனவு வீட்டை பார்க்க வேண்டும். வீட்டைக் காட்டிவிடுவதென மகன்கள் முடிவெடுக்கின்றனர். உங்களுக்கு இப்படி எதாவது கனவு வருகிறதா?. இயக்கம்: மேத்திவ் ராய்.

7:00 pm : Thou Gild'st The Even

ஓனர் அனலு இயக்கிய துருக்கி ஃபாண்டஸிப் படம். கதை ஆனடோலியா நகரத்தில் நடக்கிறது. செமால் ஒரு கால்பந்தாட்ட ரெஃப்ரீ. யாசெமின் முட்டை பாக்டரியில் வேலை பார்ப்பவன். டெப்னீ புத்தகங்கள் விற்பவள். இர்பான் ஒரு டாகடர். இந்த நால்வரும் நம்மைப் போல் இல்லை; நமக்கும் மேல். வினோத விசித்திர சக்தி அவர்களுக்கு உண்டு. செமால் சுவற்றை துளைத்து நடப்பான். யாசமின் நினைத்தாலே பொருட்கள் நகரும். டெப்னீ காலத்தை நிறுத்துவாள். துருக்கியின் எக்ஸ் மென்.

****************************

திரையரங்கம் : RANI SEETHAI HALL

11:00 AM : காதல் மன்னன் (இயக்குநர் : அசோக் குமார்)

2:00 PM : தங்க மீன்கள்

4:00 PM : கும்கி

7:00PM : Spooks And Spirits

ஆனாவும் இங்கியும் காதலர்கள். ஆனாவுக்கு ஒரு பூர்வீக வீடு. அந்த வீட்டை விற்க வேண்டும். ஆனால் அதை யாரும் வாங்கத் தயாராக இல்லை. காரணம் ஆனாவின் அப்பா ஃபைக். குடிகாரன், சிடுமூஞ்சி & பெண்பித்தன். ஃபைக் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இப்போதும் ஃபைக் அதே வீட்டில் ஆவியாகத் திரிகிறான். பேயாகியும் பயல் திருந்தவில்லை. அதே கெட்ட ஃபைக்தான் இப்போதும்.

மகள் ஆனா முடிவெடுத்து விட்டாள்.இந்த பேயை ஓட்டினால்தான் வீட்டை விற்க முடியும். இப்போது புது சிக்கல் இப்போது ஃபைக்கோடு இன்னொரு பேயும் சேர்ந்து கொள்கிறது. அது ஃபைக்கின் முன்னாள் காதலி. பேய் கலாட்டா. சிரித்து ரசிக்க ஒரு பேய்ப் படம்.

முன்கூட்டியே வெளியாகும் ரம்மி!!




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரம்மி.


இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இனிகோ, சூரி ஆகியோரும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யாவும், இனிகோ ஜோடியாக காயத்ரியும் நடித்துள்ளனர்.


படத்தில் இனிகோவுக்கு விஜயசேதுபதியை விட முக்கியமான வேடம் என்கிறார்கள். சமீபத்தில் ரம்மி படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த விஜய் சேதுபதி மிகவும் திருப்தியடைந்தாராம். என்னுடன் நடித்துள்ள இனிகோ, சூரி ஆகிய இருவருமே நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.


அதனால், எங்கள் மூவர் கூட்டணிக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மேலும் படம் கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே அதாவது வரும் 2௦-ஆம் தேதி வெளியாகிறது என்கிறார்கள். படத்தை JSK பிலிம்ஸ் சார்பில் சதிஷ்குமார் வெளியிடுகிறார்.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???



1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன்
 குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

உண்மையான ஆணழகன்..


கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,

ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும்,

எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான்,

ஆண்மையின் வீரம் இருக்கிறது. உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம். அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன்..

ஜி மெயில் தரும் வசதிகள்...!




நாம் தினசரி பயன்படுத்தும் மெயிலான ஜி மெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.


நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது. இதற்கான பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe புரோகிராமினை http://www.gmail-backup.com/download  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம்.


இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில், மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.


அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம். பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம். மேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmail-backup.com/என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

மனம் மாறிய ஹீரோ!



சொந்த படம் தயாரிக்க பயந்த ஹீரோ, சினிமா அனுபவம் இல்லாதவர் படம் தயாரிப்பதை பார்த்து மனம் மாறினார். ராமன் அப்துல்லா, சூரி, வாணி மஹால், ஆச்சார்யா போன்ற படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். தற்போது புவனக்காடு படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் ரீ என்ட்ரிக்காக காத்திருந்தேன். அப்போது வி.எம்.மோகன் என்பவர் என்னை சந்தித்து புவனக்காடு படத்தில் நடிக்க கேட்டார். கதை கேட்டேன் பிடித்திருந்தது. யாரிடம் உதவி இயக்குனராக இருந்தீர்கள் என்றேன். யாரிடமும் உதவி இயக்குனராக இருந்ததில்லை, சினிமாவுக்கு நான் புதியவன் என்றார்.


முன்னதாக சொந்த படம் தயாரிக்க வேண்டும் என்று நான் எண்ணியபோது பயமாக இருந்தது. சினிமாவில் சம்பாதித்ததை அதிலேயே விட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பிறகு, சினிமா பற்றியே தெரியாதவர் சினிமா தயாரிக்க முன்வந்திருக்கிறாரே என்று எண்ணியபோது நானும் மாறினேன். பூனை புலியாகிறது என்ற சொந்த படத்தை தயாரித்து முடித்துவிட்டேன்.


சினிமா அனுபவமே இல்லாமல் படம் தயாரித்து இயக்கிய மோகனுக்கு தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. புவனக்காடு படத்தை பொறுத்தவரை அடர்ந்த காடுகளில் படமானது. திவ்யா நாகேஷ் ஹீரோயின். சரத்பிரியதேவ் இசை அமைக்க ரவிஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு விக்னேஷ் கூறினார்.

திருடவேண்டிய டாப் 10 சீனா படங்கள்!




ம்ஹும். அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். உலக நாடுகளின் மக்கள் தொகையில் எப்படி சீனா நம்பர் ஒன்னோ அதே போல் திரைத்துறையில் ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக சீனப் படங்களுக்கே உலகளவில் மார்க்கெட் இருக்கிறது. சீனா என்றால் வெறும் சீனா மட்டு
மல்ல, ஹாங்காங்கையும் சேர்த்து தான்.

இந்தப் படங்கள் நமக்கு புதியதும் அல்ல. இன்று சன் டி.வி. நீங்கலாக மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ஹாலிவுட்(!) டப்பிங் படங்கள், சீனப் படங்கள்தான். ஆக்ஷன்தான் இந்தப் படங்களின் அடிநாதம். குறிப்பாக மார்ஷியல் ஆர்ட்ஸை இவர்கள் அளவுக்கு படங்களிலும், காட்சிகளிலும் பயன்படுத்துபவர்கள் வேறு யாருமே அல்ல. அதனால்தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் கூட சீன ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்தே ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்கள்; ஷூட் செய்கிறார்கள்.

ரைட், இந்த ஆண்டு சீனப் படங்கள் எப்படி? ஏனெனில் இந்த வருடம்தான் டாலரின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இதனால் டிரவுசர் கழன்றது சீனாவுக்குத்தான். ஏற்றுமதி குறைய, இறக்குமதி மென்னியைப் பிடிக்க, தொழிலாளர் போராட்டங்கள் முன்னுக்கு வர, சரித்திரம் காணாத அளவுக்கு தற்கொலைகள் அதிகரிக்க, உழைப்பு நேரம் ஒரு நாளைக்கு 15 மணி நேரங்களாக அதிகரிக்க...

புறச் சூழல் எந்த வகையிலும் சீனாவுக்கு சாதகமாக இல்லை. ஆனால், திரைத்துறையோ வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு படங்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் டாப் 10 படங்களை பொறுக்கி எடுப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

இந்த ஆண்டு பிப்ரவரி 10 அன்று வெளியான ‘Journey to the West: Conquering the Demons’ சீன இலக்கியத்தின் க்ளாசிக் ஆக அறியப்படும் ‘ஜர்னி டூ த வெஸ்ட்’ நாவலின் பாதிப்பில் உருவான படம்தான். தாவோ - பவுத்த - ஜென் தத்துவத்தில் அமைந்த இந்தப் படத்தை ஒருவகையில் ஆக்ஷன் காமெடி வகையறாவாக கொள்ளலாம். பாக்ஸ் ஆபீஸில் பல ரிக்கார்டுகளை முறியடித்த இந்தப் படத்தின் அடுத்தப் பாகம், விரைவில் தயாராக இருக்கிறது.

இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட ‘ஸோ யங்’, ஒட்டு மொத்த சீனாவையும் வசூலில் குலுக்கியிருக்கிறது. ‘To Our Youth that is Fading Away’ என்ற தலைப்பில் வெளியான நாவலின் திரைவடிவம்தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் பாதிப்பையும், கதையையும், காட்சிகளையும் நிச்சயம் அடுத்த ஆண்டு இந்தியில் வெளியாகவிருக்கும் ஏதேனும் ஒரு படத்தில் பார்க்கலாம். அந்தளவுக்கு வலுவான, நெகிழ்ச்சியான சப்ஜெக்ட்.

2010ல் வெளியான படத்தின் முந்தைய பாகமாக வெளியான ‘Young Detective Dee: Rise of the Sea Dragon’, க்ரைம் - ஆக்ஷன் ஜானரில் புதிய சகாப்தத்தை படைத்திருக்கிறது.

டொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பாராட்டுப் பெற்ற ‘American Dreams in China’, உள்நாட்டிலும் கல்லாவை நிரப்பியிருக்கிறது. அமெரிக்க - சீன உறவின் ஓர் அங்கத்தை - மறுபக்கத்தை இந்தப் படம் ஓரளவு வெளிச்சமிட்டு காண்பித்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள சகல மொழிகளிலும் எத்தனை முறை கொத்து பரோட்டா போடப்படப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், ‘Finding Mr. Right’. ரொமான்ஸ் காமெடி படம். சொல்லி அடிக்கும் கில்லி. முந்திக் கொள்பவர்கள் 2014ல் இந்தியாவில் மெகா ஹிட் பட இயக்குநராக கொண்டாடப்படுவார்!

ஒருவகையில் முந்தைய பத்திக்கு சொல்லப்பட்டதேதான் ‘Tiny Times’ படத்துக்கும் பொருந்தும். இதுவும் ரொமான்ஸ் காமெடி படம்தான். இதே பெயரில் வெளியாகி பெஸ்ட் செல்லர் பட்டியலில் இணைந்த நாவலின் திரைவடிவம்தான். காதல், நட்பு, உறவு ஆகிய வற்றை சுற்றி பிணைக்கப்பட்ட படம். விமர்சகர்கள் காறி துப்பிவிட்டார்கள். ஆனால், ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். உலகம் முழுக்கவே ரசிகர்களிடமிருந்து சற்றுத் தள்ளித்தான் விமர்சகர்கள் இருக்கிறார்கள் போல. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் - அதாவது, நாவலின் செகண்ட் ஆஃப் - ஆண்டு இறுதியில் வெளியாகியிருக்கிறது. ஸோ, டி.வி.டி. தேடி படம் பார்க்க நினைப்பவர்கள் இரு பாகங்க ளையும் கேட்டு வாங்கி பார்ப்பது நல்லது. ஏனெனில் இரண்டுமே மெகா ஹிட் படங்கள்.

ஆக்ஷன் பட ஜானரில் அதிரிபுதிரியாக ஜெயித்தப் படம், ‘Switch’. பாரம்பரியமிக்க ஓவியத்தை ஒரு பிசினஸ்மேன் ஆள் வைத்து திருடுகிறார். கள்ள மார்க்கெட்டில் அதை அதிக தொகைக்கு விற்கிறார். விற்கப்பட்ட ஓவியத்தை கைப்பற்றி எப்படி மீண்டும் மியூசியத்தில் வைக்கிறார்கள் என்பதுதான் படம்.

‘த ஒன் டிடெக்டிவ்’ என்ற பெயரில் பூஜை போடப்பட்டு ‘Badges of Fury’ என்ற பெயரில் வெளியான ஆக்ஷன் காமெடி படம், சீனாவில் வெற்றிப் பெற்றிருப்பது நமக்கு ரொம்பவே முக்கியம். ஏனெனில் தமிழில் பல விதங்களில் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் ‘ஓஷன் ஹெவன்’ படத்தின் இயக்குநர்தான், இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

லட்டு இல்லாமல் திருப்பதியா, பஞ்சாமிர்தம் இல்லாமல் பழநியா என்பது போல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் இல்லாமல் டாப் 10 சீனப் படங்கள் எப்படி நிறைவு பெறும்?

இருக்கிறது. இந்த ஆண்டுக்கும் ஒரு கோட்டாவை எடுத்து பிரபஞ்சத்தின் முன்பு சமர்ப்பித்திருக்கிறார்கள். அதுதான்,‘The Grandmaster’. பெர்லின் ஃபிலிம் ஃபெஸ்டிவல் உட்பட பல விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிய இந்தப் படம், கமர்ஷியலாகவும் க்ராண்ட் சக்சஸ்.

மொத்தத்தில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் சீனப் படங்களில் பெரிய வித்தியாசமில்லை. அதே களன். அதே கதைகள். அதே வசூல்கள்.

விழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு!




ஜில்லா பட ஆடியோவை விழா எதுவும் இல்லாமல் நேரடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். துப்பாக்கி, தலைவா படங்களையடுத்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஹீரோயின். விஜய் தந்தையாக மோகன்லால் நடிக்கிறார்.


டி.இமான் இசை. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியிட விழாக்கள் நடத்தப்படும்.


இப்படத்தை பொறுத்தவரை பாடல் வெளியீடு என்பது மிக எளிமையாக நடந்தால் போதும் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து தயாரிப்பாளர் சவுத்ரி விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வரும் 22ம்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளில் நேரடியாக ஜில்லா ஆடியோ விற்பனைக்கு வரவுள்ளது.


 இதற்கிடையில் இப்படத்துக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் அமைத்து அதில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து 40 ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதிய ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது.


இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

மசால் தோசை - சமையல்!






தேவையானவை:


தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.


துவையலுக்கு:


தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை:


 ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.


வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.


துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

உடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்!




உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.

ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.
கால்சியம்

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள்கள்

தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

வால்நட்

வால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

இஞ்சி

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

மிளகு

மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

தண்ணீர்

இது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

முட்டை
முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.

தடைகளே ஓடி வா!




1.எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?.வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது,நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர்பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது.தடைகளை கண்டு அணைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம்.அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?

2.தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமானதல்ல,தடைகள் தான் வாழ்க்கை,அந்த தடைகளை நாம் எதி நோக்கவில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்றுதான் பொருள்.நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த காலகட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று அதனை எதிர் நோக்கியிருந்தோமோ, அந்த கால கட்டங்கள் மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் .


3.நாம் இன்பமான காலங்கள் என்று நினைத்த கால கட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் மறந்து போகும் .வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பது நம் அணைவருக்கும் தெரியும் .அந்த அனுபவங்களில் எஞ்சி இருப்பது நாம் போராடிய காலங்கள் தான்.சரி இந்த அனுபங்களை எப்படி பெறுவது?தடைகளை எப்படி எதிர் நோக்குவது.

4.நாம் தடைகள் என்று எதை நினைக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி புதையல் இருக்கின்றது என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும் ,ஏன் என்றால் இது தான் உறுதியான பிரபஞ்சவிதி.தடைகள் ஒரு விசயத்தில் இருக்கின்றது என்றால் ,தடைகளுக்கு அப்பால் உள்ள வெற்றி புதயலை அடைய நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முதல் பாடம்.சரி தகுதி என்றால் என்ன ?தடைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வது தான் முதல் தகுதி,நாம் தடைகளை கண்டு அஞ்சுவதோ,அதனிடம் இருந்து ஓடி விடுவதோ கூடாது.

5.தைரியமாக தடைகளை அது எப்படி இருந்தாலும் ,நம்மிடம் அதனை எதிர் கொள்ளும் தகுதி இல்லாவிட்டாலும் கூட நாம் எதி கொள்ள கொள்ள அந்த தடைகள் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் அந்த ரகசிய வழிகளை நமக்கு உணர்த்தியேதீரும் .எந்த விசயத்திலும் தோல்வியடைந்தவர்கள் தடைகள் உணர்த்தும் பாடங்களை அறியும் முன்பே அதனை விட்டு வெளியேறி விட்டவர்கள்தான்.

6.ஒருவர் நினைக்கிறார் எனக்கு என் வாழ்வில் எந்த தடைகளும் இல்லை என்றால் ,இது தவறு உடனே நீங்கள் உங்களால் முடிந்த வரை நீங்களாகவே சவாலான சூழ்நிலைகள் என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள் ,அவைகளை எதிர் கொள்ளுங்கள் வாழ்க்கையை வாழுங்கள் ,இல்லையென்றால் உங்களுக்கு நினைத்துப் பார்க்க கடைசி காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் வாழ்க்கை என்று ஒன்று இருக்காது.

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல!



பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு "மர்லின் மன்றோ" என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

"மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

"ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ஒரு செய்தித்தாளில் "கார்ட்டூனிஸ்டா"கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் "உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை" அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் - மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?

எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத, அல்லது நேர்மறையான துறைகளே. அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம். இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனிதராக உலகம் ஒரே ஒருவரைத் தவிர வேறொருவரை இதுவரை கண்டதில்லை. அவர் தான் பெஞ்சமின் ·ப்ராங்க்ளின்.

அவர் - அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் அமையக் காரணமாய் இருந்தவர், வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர் - இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார். இதை விடப் பெரிய வெற்றி வாழ்க்கை இருக்க முடியுமா?

அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-

1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.

2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.

3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.

4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.

5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.

6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.

7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.

நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.

9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.

10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.

11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.

12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.

13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.

பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.

அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். "நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது"

பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?

ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள்!



அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர். உச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார். அவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்ப்போமா?

முதல் நிகழ்வு/பாடம்:

17 ஆவது வயதில் கல்லூரிக்குச் சென்ற அவருடைய படிப்புக்கு அவர் வளர்ப்புக் பெற்றோர் செலவழிக்க நேர்ந்த தொகை மிகப் பெரியது. கிட்டத்தட்ட தங்கள் சேமிப்பு முழுவதையுமே அவர்கள் செலவழிக்க வேண்டி இருந்தது. பணவசதி அதிகம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு இத்தனை செலவழித்து படித்து எதை சாதிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி ஆறு மாதம் அலைக்கழித்தது. எந்த விதத்தில் அந்தக் கல்வி அவர் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கல்லூரியில் ஒரு பட்டம் பெற வேண்டி பிடித்ததை விடவும் பிடிக்காததை அதிகமாகப் படித்து கல்வியையும் வாழ்க்கையையும் அவர் சுமையாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

கல்லூரிப் படிப்பை விட்ட அவர் பெற்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களின் அறைகளில் தரையில் படுக்க நேர்ந்ததையும், கோகோ பாட்டில்களை சேகரித்து திருப்பித்தந்து கிடைத்த பணத்தில் உணவுக்கு செலவு செய்ததையும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஏழு மைல் தூரம் நடந்ததையும் நினைவு கூர்ந்த அவர் அத்தனையையும் மீறி அந்தத் தீர்மானம் தனக்கு எப்படி நன்மை செய்தது என்பதைச் சொன்னார். பிறகு பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை (calligraphy) வகுப்புகளுக்குச் சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.

அது பிற்காலத்தில் அவர் வடிவமைத்த முதல் மேசிண்டோஷ் (Macintosh) கம்ப்யூட்டருக்கு பலவித எழுத்துக்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியது. அந்தக மேசிண்டோஷ் கம்ப்யூட்டர் எழுத்துக்களையே விண்டோஸ் அப்படியே பின்னர் எடுத்துக் கொண்டதால் இப்போதுள்ள கம்ப்யூட்டர்கள் அழகான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸின் அன்றைய எழுத்து வகைகள் தான் உதவியது. மேலும் அவர் தனக்குப் பிடிக்காத கல்லூரிப் படிப்பிலேயே தங்கி இருந்தால் ஒரு ஊழியராக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து அடையாளம் இல்லாமல் போயிருந்திருப்பார் என்பதும் உண்மையே.

மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால் அது கண்டிப்பாக அவன் வாழ்க்கைக்கும் உறுதுணையாகவும் மிகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பது அவர் முதல் அறிவுரை. அது ஆரம்ப கட்டத்தில் புரியா விட்டாலும் பிற்காலத்தில் கண்டிப்பாகப் புரிய வரும் என்பது அவர் முதல் அனுபவ அறிவுரை.

(படிக்கிற படிப்பை நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல பாடம். திறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கையில் அதற்கு சம்பந்தமில்லாத படிப்பைத் தொடர்வது வெற்றிக்கு எதிரானது என்பதை அவர் சொல்வதாக எடுத்துக் கொள்வது முக்கியம்.)

இரண்டாம் நிகழ்வு/பாடம்


தன் 20வது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை பெற்றோரின் கிடங்கில் ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பத்து வருடங்களில் நூறு கோடி ரூபாய் மதிப்பும், 4000 ஊழியர்களும் கொண்ட நிறுவனமாக உயர்த்தி மாபெரும் வெற்றி கண்டார். ஆனால் அவர் தான் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் திறமையாளர் என்று எண்ணி நிர்வாகத்தில் சேர்த்த ஒரு நபர் அவருக்கு எதிராக செயல்பட்டு, கம்பெனி டைரகடர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸை வெளியேற்றி விட்டார். எது அவர் வாழ்வின் எல்லாமாக இருந்ததோ எதை அவர் மிக மிக நேசித்தாரோ அது அவர் வாழ்வில் இருந்து பறிக்கப்பட்டது. சில மாதங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் விதியையும், வெளியேற்றிய நபரையும் நொந்து கொண்டு முடங்கி விடாமல் இனி என்ன மிஞ்சி இருக்கிறது என்று யோசித்தார். ஆப்பிள் நிறுவனம் கை விட்டுப் போனாலும் தன் திறமையும், ஆர்வமும் தன்னிடம் இன்னமும் மிஞ்சி உள்ளது என்று தெளிந்த அவர் அதை வைத்துக் கொண்டு மறுபடி நெக்ஸ்ட் (NeXT) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதையும் பின்னர் (Pixar) என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்த அவர் அந்த இரு நிறுவனங்களையும் திறம்பட நடத்திய பின் இரண்டாம் நிறுவனத்தின் மூலமாக டாய்ஸ் ஸ்டோரி என்ற ’கம்ப்யூட்டர் அனிமேஷன்’ திரைப்படம் எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது.

ஒரு கால கட்டத்தில் அவருடைய நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனமே வாங்கி விட ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடி ஆப்பிள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கி இருந்த மிக முக்கிய தொழில் நுட்ப மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொண்டு புதிய பரிமாணம் பெற்றது. ஸ்டீவ் ஜாப்ஸ் படிப்படியாக உயர்வையும், உலகப் புகழையும் சந்தித்தார்.

ஆப்பிளில் இருந்து முதல் முறை வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அது பல விதங்களில் நல்லதாகவே முடிந்தது என்று சொன்னார். எத்தனையோ முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஆரம்பத்தில் இருந்து அங்கேயே இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என்கிறார். தான் காதலித்து மணம் புரிந்த மனைவியின் சந்திப்பு முதல், திரைப்படத் துறை பிரவேசம் வரை பல நன்மைகளை அதன் மூலம் சந்தித்ததை அவர் தெரிவித்தார்.

மாற்றங்களும், இழப்புக்களும் நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை கசப்பாக இருந்தாலும் கூட மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய இரண்டாவது அனுபவ அறிவுரை. அதனால் எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம் என்றும் எதை நேசிக்கிறோம் என்று தெரியா விட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும் என்றும் அந்த சாதனை மனிதர் கூறுகிறார்.

மூன்றாவது நிகழ்வு/பாடம்


2004 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு வித கொடிய கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருக்கும் குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும் அவர் முன்பு போலவே அதையும் நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ள முடிந்தது பெரும் வியப்பே. தன் சிறு வயதில் படித்த ஒரு வாசகம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் வாழ். ஒரு நாள் நீ நினைத்த மாதிரியே அதுவே கடைசி நாளாக அமைந்து விடும்”. அதன் பின் ஒவ்வொரு நாள் காலையிலும் இது என் கடைசி நாளாக இருந்தால் இதை நான் செய்வேனா என்பதே எனது கேள்வியாக அமைந்து விட்டது என்கிறார். பல நல்ல மாறுதல்களுக்கு அந்த கான்சரும் வழிவகுத்து விட்டதாக அவர் சொல்கிறார்.

மரணம் அருகில் இருக்கிறது என்று தெரியும் போது வாழ்க்கையின் அனாவசியங்களில் ஈடுபடாமல் ஒதுக்கி விடுவதும் எது முக்கியம் என்று உணர்கிறோமோ அதில் முழு மனதுடன் ஈடுபடுவதும் சுலபமாகிறது என்பது அவர் சொன்ன மூன்றாவது பாடம். மரணம் நிச்சயமானது, வாழ்க்கை குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் அவர் கூறுகிறார்.
(2005ல் இதை அவர் குறிப்பிட்டாலும் அக்டோபர் 2011 வரை அவர் உயிர் வாழ்ந்தார். கடைசி நாட்களில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்புக் குடும்பத்துடன் கழித்து அமைதியாக உயிர் விட்டார்.)

வெற்றியை பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது முட்டாள்தனம். மனம் விரும்பிய வாழ்க்கையுடன், பணத்தையும், வெற்றியையும் சேர்த்தே ஒருவன் பெற முடியும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு மிக நல்ல உதாரணம். அப்படிப்பட்ட மனிதர் அன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களுக்கு சொன்ன இந்த முப்பெரும் அறிவுரைகள் எக்காலத்திலும் எவருக்கும் ஏற்றுக் கொண்டு வாழத்தக்க அறிவுரைகள். அதை நம் இதயத்திலும், கருத்திலும் ஏற்றுக் கொண்டு பலனடைவோமே!

அர்த்தமுள்ள அதிருப்தி

திருப்தியை விடச் சிறந்த செல்வம் இல்லை. அதிருப்தியை விடப் பெரிய வறுமையும் இல்லை. எத்தனை குறைவாகப் பெற்றிருந்தாலும் திருப்தியுடன் வாழ்கின்ற செல்வந்தர்கள் உண்டு. ஏராளமாக வைத்திருந்தாலும் அதிருப்தி கொண்டு வாழ்கின்ற ஏழைகள் உண்டு.

ஆனால் திருப்தியும், அதிருப்தியும் சிலநேரங்களில் எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்துகின்றன என்பது அனுபவ உண்மை. எந்த ஒரு மாற்றத்திற்கும் விதை அதிருப்தியே. சரியில்லாத சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொண்டு திருப்தியுடன் இருக்கும் போது மாற்றம் நிகழ்வதில்லை. அதில் அதிருப்தி ஏற்படும் போது தான் இதை அகற்ற அல்லது மேம்படுத்த என்ன செய்வது என்று மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அதனால் எந்தவொரு அர்த்தமுள்ள மாற்றத்திற்கும் காரணகர்த்தா அதிருப்தியே.

ஆதிமனிதன் வெட்ட வெளியிலும் மரநிழலிலும் வாழ்வதிலேயே திருப்தியடைந்திருந்தால் குடிசைகள் தோன்றியிருக்காது. குடிசைகளிலேயே மனிதன் திருப்தி அடைந்திருந்தால் வசதியான வீடுகள் தோன்றியிருக்காது. இப்படி எல்லா விதங்களிலும் இன்றைய அனைத்து உயர்வான நிலைகளுக்கும் முந்தைய மனிதர்கள் அன்றைய நிலைகளில் கண்ட அதிருப்தியே பிள்ளையார் சுழியாக இருந்திருக்கிறது. அதிருப்தியுடன் முணுமுணுப்பதிலும், புலம்புவதிலும் பலர் நின்று விட்டாலும், அதை மாற்ற என்ன செய்யலாம் என்று ஒரு படி அதிகம் எடுத்து வைத்த சிலருக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம். அந்த சிலருடைய அதிருப்தியே அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிறது. அதுவே இத்தனை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எல்லாப் புரட்சிகளுக்கும் விதையாக இருந்தது இந்த அர்த்தமுள்ள அதிருப்தியே. பலரும் விதி என்று ஒத்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாலும், அப்படி அடிமைப்பட்டு வாழ்வதில் அதிருப்தியடைந்து இந்தத் தளைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்று சிலர் சிந்தித்து செயல்பட்டதால் மட்டுமே விடுதலையும், மறுமலர்ச்சியும் வரலாற்றுப் பக்கங்களில் சாத்தியமாகி இருக்கிறது. பிரஞ்சுப்புரட்சி ரஷ்யப்புரட்சி போன்ற பெரும்புரட்சிகளும் சரி, இந்தியாவைப் போன்ற பல நாடுகளின் விடுதலையும் சரி இதற்கு உதாரணங்கள்.

ராஜபோக வாழ்க்கையில் சித்தார்த்தன் திருப்தியடைந்திருந்தால் ஒரு கௌதமபுத்தர் இந்த உலகிற்குக் கிடைத்திருக்க மாட்டார். போதுமான சம்பளத்துடன் இருந்த வேலையில் நாராயணமூர்த்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு இன்·போசிஸ் நிறுவனம் பிறந்திருக்காது. தன் ஆரம்ப கால குணாதிசயங்களில் மோகந்தாஸ்கரம்சந்த் காந்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு மகாத்மாவைக் காணும் பாக்கியத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.

இப்படி தனிமனிதனானாலும் சரி சமுதாயமானாலும் சரி, நாடானாலும் சரி அர்த்தமுள்ள அதிருப்தி தான் அழகான மாற்றங்களை உலகில் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆன்மீகமானாலும் சரி, அரசியலானாலும் சரி, லௌகீகமானாலும் சரி அர்த்தமுள்ள அதிருப்தியே திருப்புமுனைகளாக இருந்திருக்கின்றன.

எனவே உங்களையும், உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் புதிய பார்வையோடு பாருங்கள். இருப்பதெல்லாம் சரி தானா? காண்கின்ற காட்சி உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறதா? இல்லையென்றால் அவற்றை மாற்ற வேண்டாமா?

முதலில் பாரதி சொன்னது போல்,

'தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே' -


வாழும் வாழ்க்கையில் அதிருப்தி கொள்ளுங்கள் நண்பர்களே. அது அர்த்தமில்லாத புலம்பலாக இருந்து விடாமல் அர்த்தமுள்ள அதிருப்தியாக உங்களை மாற்றக்கூடிய உந்துதலாக இருக்கட்டும். உங்கள் அதிருப்தி மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மாற ஆரம்பிப்பீர்கள். உங்கள் மாற்றம் உன்னதமாக இருந்தால் அது உங்களை சந்திப்பவர்களையெல்லாம் அலைகளாகத் தொடும். அவர்களில் பக்குவப்பட்டவர்கள் தாங்களும் மாற ஆரம்பிக்கலாம். அப்படியே தொடர்ந்து நீங்கள் ஆரம்பித்து வைத்த அலை பேரலையாக உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் கூட மாற்றலாம். காரணம் எல்லா மாற்றங்களும் இப்படி எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பித்தவை தானே.

அப்படியொரு அலை உங்களிடமிருந்து ஆரம்பிக்குமா?


காலத்தை வென்று பிரகாசியுங்கள்

ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?

இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.

ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.

சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."

தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.

அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.

அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.

ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பலன் என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?

உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.

பிரகாசிப்பீர்களா?

ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.

ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.

இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.

நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.

இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?

நியூட்டனும் ஆப்பிளும்

மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்.

மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அசாதாரணமான ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது?

இந்தக் கேள்விக்கு தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்பதை பதிலாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான பதில் நியூட்டன் தயாரான மனநிலையில் இருந்தார் என்பது தான். அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.

ஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பெற முடியும். அதனால் பயனடைய முடியும். இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். காரணம் அவையெல்லாம் தயார்நிலையில் இருப்பவன் கண்களுக்கு மட்டுமே அவை தென்படும்.

சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. தெரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.

எனவே ஏதாவது ஒன்றில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள். வெற்றி தேவதை சந்தர்ப்பம் என்ற மாலையுடன் வருவாள். நிச்சயமாகத் தங்கள் கரம் பிடிப்பாள்.

பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.

பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.

எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.

ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.

எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.

காப்பகம்