உலக வரலாற்றிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்: ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ.18.3 கோடி:-
ஐஎஸ்ஐஎஸ் தான் மிகவும் பணக்கார தீவிரவாத அமைப்பாம். அதன் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690 ஆகும்.
ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இருப்பதிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு என்பதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த அமைப்பு ஒரு நாளில் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690க்கும் அதிகமாக சம்பாதிக்கிறதாம்.
எண்ணெய் கடத்தல், மனிதர்களை கடத்தி பணம் பறித்தல், திருட்டு ஆகியவை மூலம் தான் தீவிரவாதிகள் ஒரு நாளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பெர்சிய வளைகுடா நாடுகளில் இருந்து தான் பணம் வந்துள்ளது. அது தான் அவர்களின் முக்கிய பண வரவாக இருந்திருக்கிறது.
உலக வரலாற்றிலேயே ஐஎஸ்ஐஎஸ் தான் அதிக சொத்துக்கள் வைத்துள்ள பணக்கார தீவிரவாத அமைப்பு என்று கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் மட்டும் 11 எண்ணெய் வயல்கள் உள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்ததாலும், அங்குள்ள அரசுகள் வலுவாக இல்லாததாலும் தான் ஐஎஸ்ஐஎஸ் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது.
பழமை வாய்ந்த விலை மதிப்பற்ற பொருட்களை விற்பதன் மூலமும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பணம் வருகிறது. சில பொருட்கள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாம்.
ஈராக்கின் முக்கிய நகரான மொசுலை கைப்பற்றும் முன்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சொத்து மதிப்பு 875 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதன் பிறது அது வங்கிகளை கொள்ளையடித்தும், ராணுவ பொருட்களை கொள்ளயடித்தும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது. தற்போது அந்த அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலராகும்.