Sunday, October 6, 2013

நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை!!





காய்கறி சாகுபடி என்றாலலே மூட்டைக் கணக்கில் ரசாயன உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் கிடைக்கும் என்று விவசாயிகள் பலரும் எண்ணி வருகின்றனர். அதிலும் பந்தல் காய்கறிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ‘அதுக்கெல்லாம் யாரு பண்டுதம்  பார்க்கறது”  என்று ஒதுங்கிப் போகும் விவசாயிகள்தான் அதிகம்.


இந்நிலையில் இயற்கை இடுபொருட்களைக்கூட தயாரித்து உபயோகப்படுத்தாமல் எரு, கடலைக்கொடி, கொளுஞ்சி ஆகியவற்றை மட்டுமெ பயன்படுத்தி புடலை சாகுபடி செய்து மனம் நிறைவான மகசூலை எடுத்து வருகிறார். மயிலாடு துறைக்கு அருகே உள்ள சிங்கான் ஒடையைச் சேர்ந்த பாஸ்கரன்.


“ ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட் ) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஒரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு, குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.


நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இரக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்தக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசலனு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில் காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்” என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன் பத்து சென்ட் நிலத்தில்புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.


பொதுவாக, நீளப்புடலையின் வயது ஏழு மாதம். சில இடங்களில் மண் வாகைப் பொறுத்து வயது மாறுபடலாம். உப்பு மற்றும் காரத்தன்மை அதிகமில்லாத, தண்ணீர் வளம் உள்ள எல்லா நிலமும் புடலைக்கு ஏற்றது. புடலையை சித்திரை மற்றம் தை பட்டம் இரண்டிலும் நடவு செய்யலாம். பத்து சென்ட் நிலத்தையும் களைகள் நீங்கும்படி ஒரு அடி ஆழத்துக்கு கொத்திவிட்டு, 21 அடி நீளம் 7 அடி அகலத்தில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்தியை ஒட்டி நீளவாக்கில் ஒன்றரை அடி அகலத்தில் வாய்க்கால் எடுக்க வேண்டும்.



ஒவ்வொரு பாத்தியின் மையத்திலும் நேர் வரிசையில் மூன்று மூன்று குழிகள் எடுக்க வேண்டும். நீளவாக்கில் குழிக்கு குழி 7 அடி இடைவெளி விட்டு எடுத்தால் சரியாக அமையும். குழியின் அளவு ஒன்றரை அடி சதுரம் ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும். பத்து சென்டில் நிலத்தின் வாகைப் பொறுத்து அறுபது குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு, அரைக் கூடை மேல் மண் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். பின், அதில் தண்ணீர்விட்டு ஒரு நாள் முழுவதும் ஆற வைக்க வேண்டும்.



மறுநாள், குழியின் மையத்தில் ஒரு அங்குல ஆழத்தில் ஒரு விதையை விதைத்து, அந்த விதைக்கு நான்கு பக்கமும் அரையடி இடைவெளியில் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு விதைகளையும் விதைக்க வேண்டும். அதாவது ஒரு குழிக்கு ஐந்து விதை என்ற கணக்கில் விதைக்க வேண்டும். பின் வாழைச் சருகு அல்லது தென்னை மட்டையால் குழியை மூடி வைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் பூவாளியால் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூவாளியால் தண்ணீர் ஊற்றுவது சாத்தியப்படா விட்டால், விதைகள் முளைத்து வரும் வரை, கொஞ்சமாகத் தண்ணீர் கட்டிக் கொள்ளலாம்.


விதைத்த 8-ம் நாள் முளைத்து வரும். அந்த சமயத்தில் மூடாக்கை அகற்றிவிட்டு, ஒரு தண்ணீர் கட்ட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 25-ம் நாளுக்கு மேல் கொடி படரத் தொடங்கும். அந்த சமயத்தில் கொடிக்கு இடையூறு இல்லாமல் ஒவ்வொரு குழியிலும் பத்தடி உயரமுள்ள மூன்று சவுக்குக் குச்சிகளை ஊன்றி கொடிகளை இதில் இழுத்துச் சுற்றிவிட வேண்டும். இது கொடி படர்வதற்காக. பிறகு பத்தடி நீளம் உள்ள ஒதியன் மர போத்துக்களை ஏழடிக்கு ஏழடி இடைவெளியில் இரண்டடி ஆழத்துக்கு குழியெடுத்து ஊன்ற வேண்டும். இது பந்தல்காலுக்காக என்பதால் உறுதியாக இருக்க வேண்டும். ஒதியன் மரங்களின் மேல்பக்கத்தை சவுக்குக் குச்சிகளால் குறுக்கும் நெடுக்கமாக இணைத்து, கயிறு அல்லது பனை நார் மூலம் கட்ட வேண்டும். அவற்றின் மேல், ஆற்றில் மண்டிக் கிடக்கும் கட்டுக் கொடியைச் சேகரித்து இரண்டாகப் பிளந்து காய வைத்து, தண்ணீரில் நனைத்து பந்தல் பின்ன வேண்டும். இந்தப் பந்தல் ஒரு வருடம் வரை அப்படியே இருக்கும். இது கிடைக்காதவர்கள், வழக்கமான முறையில் கல்தூண், கம்பிகளை வைத்து பந்தல் போட்டுக் கொள்ளலாம்.


30 ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பித்த உடன், பக்கவாட்டில் கிளை அடிக்கும் தேவையற்றக் கொடிகளைக் கிள்ளிவிட வேண்டும். 55-ம் நாளில் வேரைச் சுற்றி உள்ள களைகளை அகற்றி, கொடியின் அடிபாகத்தில் இருந்து ஒன்றரை அடி இடைவெளியில் கொடியைச் சுற்றி உரக்குழிக்காக கொஞ்சம் பள்ளம் பறிக்க வேண்டும். அதில் ஒரு குழிக்கு மூன்று கூடை எரு, பத்து கிலோ காய்ந்த கடலைக் கொடி, 10 கிலோ காய்நத கொளுஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு மூட வேண்டும். வேறு உரம் எதுவுமே தேவையில்லை. 60-ம் நாளுக்கு மேல் பிஞ்சு எடுக்கும். பிஞ்சு எடுத்த ஐந்தாவது நாளுக்கு மேல் சுருளும் காய்களுக்கு மட்டும் அடியில் கல்லைக் கட்டிவிட வேண்டும். நீளப்புடலையில் பெரிய அளவில் நோய், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியே வந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 70-ம் நாளுக்கு மேல் காய்கள் பெரிதாகி அறுவடைக்குத் தயாராகிவிடும்.


சாகுபடி பாடத்தை முடித்த பாஸ்கரன், வருமானத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.


“பறிக்க ஆரம்பிச்சுதுல இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு எழுபது தடவை காய் பறிக்கலாம். அதாவது, 140 நாட்கள் வரை பறிக்கலாம். ஆரம்பத்துல ஒரு பறிப்புக்கு 40-ல் இருந்து 50 காய்கள் வரை கிடைக்கும். அதுக்கப்புறம் படிப்படியா அதிகரிச்சு, அஞ்சாவது பறிப்புக்கு மேல ஒரு பறிப்புக்கு 150 காய்கள் வரை கிடைக்க ஆரம்பிச்சுடும். ஒவ்வொரு காயும் ஏழிலிருந்து பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் இருக்கும். சராசரியா ஒரு பறிப்புக்கு 70 காய்னு வெச்சுக்கிட்டாலே, மொத்தமாக 4,900 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் ஆறு ரூபாய் வரை விலை போகுது. சராசரியாக அஞ்சு ரூபாய்ன வெச்சுக்கிட்டா 24,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். செலவெல்லாம் போகபத்து சென்ட் நிலத்துல 17 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் “. என்றார், மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு
பாஸ்கரன் 
மயிலாடு துறை 
சிங்கான் ஒடை, அலைபேசி: 93645-29720

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி!




We used to fry the cabbage plays an important role. We realize that a lot of cabbage, one of the benefits of knowing.



நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி  நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும்  ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.  குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது.  ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை  ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்  என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில்  குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.



இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.  முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப்  வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.



பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.  நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில்  போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!


    ஆனந்த ரயில்கள்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
ஆனந்த ரயில்கள்
 
ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை.
 
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
 
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
 
குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில் சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில்).
 
* நீலகிரி மலைரயில்:
 
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
 
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
 
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
* கல்கா- சிம்லா ரயில்:
 
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
 
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான சூப்பரான அனுபவம்.
 
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 

ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?

சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)




ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

மோடி vs ராகுல்!





பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், திக்விஜய் சிங் உட்பட காங்கிரசின் மூத்த தலைவர்கள் ராகுலின் தலைமையில் பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பற்றிய அலசல்

க்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கட்சிகளும் அதற்குள் வரிந்து கட்டிக்கொண்டு தயாராகத் தொடங்கி விட்டன.  பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட்டது.  அத்வானி உட்பட சில பா.ஜ.க. தலைவர்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது பகிரங்கமாகவே மோடியை ஆதரித்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியோ, ‘தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் தங்கள் கட்சிக்கு இல்லை’ என்று சொன்னாலும், அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஊகிப்பது அத்தனை கடினமானதல்ல.

மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கும் முன்பே, கடந்த ஆண்டு (2012) டிசம்பர் 10-ஆம் தேதியன்றே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை ராகுல் வழி நடத்துவார், ‘அவருக்கு வெகு விரைவில் ஒரு முக்கியப் பதவி காத்திருக்கிறது’ என காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அந்த அறிவிப்பிலேயே  2014 வரை மன்மோகன் பிரதமராகத் தொடர்வார் எனச் சொன்னதன் மூலம் அடுத்த பிரதமராக மன்மோகன் நீடிக்க வாய்ப்பில்லை எனவும் சூசகமாக உணர்த்தியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் ‘பிரதமர் பதவிக்குப் பொருத்தமான நபர் ராகுல்காந்தி, அவர் தலைமையின் கீழ் பணி செய்ய நான் தயாராகவே உள்ளேன்’ என்று அண்மையில் செப்டம்பர் 8-ஆம் தேதி ரஷ்யாவில் ஜி-2 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். செப்டம்பர் 13-ஆம் தேதி சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோர் அடுத்த பிரதமர் ராகுல் என்பதைப்போல பேசியிருக்கிறார்கள்.
சுசில்குமார் ஷிண்டே, திக்விஜ சிங் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுல் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். எனவே பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது சொல்லாமலே உணர்த்தப்பட்டு விட்டது.

சரி, பிரதமர் பதவிக்குப் போடியிடவுள்ள நரேந்திர மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பிரதமர் ஆவதற்கான தகுதி, பிரதமராவதற்குத் தடையாக உள்ளவை எவை?

நரேந்திர மோடி

கல்வித் தகுதி : அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம்.

பலம் : டீக்கடை பணியாளராக வாழ்க்கையைத் துவக்கியவர் என்பதால் அடித்தள மக்களின் வாழ்க்கையை அனுபவப் பூர்வமாக அறிந்தவர். இளம் வயதிலிருந்தே அமைப்பு சார்ந்து செயல்பட்டு வருவதால், ஒர் அமைப்பைக் கட்டுவது, வளர்ப்பது, வலுப்படுத்துவது போன்ற நுட்பங்களை அறிந்தவர்.  தொடர்ந்து 4 முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய நிர்வாக அனுபவம். ஊழல் குற்றச் சாட்டுகளுக் குள்ளாகாதது.  மாநில அரசியலில் வளர்ந்ததால் இந்திய அரசமைப்பில் மாநிலங் களுக்குள்ள முக்கியத்துவம் பற்றிய உணர்வு, விரைவாக முடிவெடுக்கும் திறன், மேடைப் பேச்சுக்களால் கூட்டத்தை வசீகரிக்கும் தன்மை, சமூக வலைத்தளங்கள், இணையம், லேசர் காட்சிகள் என நவீனத் தொழில்நுட்பத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர், அரசியலில் வளர்த்தெடுக்க குடும்பம்/வாரிசு இல்லாதிருப்பது.

பலவீனம் : தன்னிச்சையாக முடிவெடுக்கும் autocratic leader  என வர்ணிக்கப்படுபவர். மத்திய அரசில் இதுவரை ஒரு எம்.பி.யாகக்கூட பதவி வகித்த அனுபவம் இல்லை. ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதுபோல, பல்வேறு மொழிகள், பொருளாதார வேறுபாடு கொண்ட மாநிலங்கள், ஜாதி, மதம் கொண்ட நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம், தீவிரமான கருத்துக்கள்/செயல்களால் நாட்டில் உணர்வு ரீதியான பிளவை ஏற்படுத்தக் கூடியவர் (Poloariser) திருமணம், குடும்பம் போன்ற விஷயங்கள் மூடுமந்திரமாக இருக்கும் ரகசியம்.

வாய்ப்புகள் : வர்த்தகம், தொழில், ஊடகம், இந்துத்துவா அமைப்புகள் என்று பல்வேறு தரப்பிலும் இருக்கும் ஏகோபித்த ஆதரவு. சமூக வலைத்தளங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதால் இளைஞர்கள் மத்தியில் உள்ள பிரபலம், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு, விலையேற்றம், பெருகியுள்ள ஊழல்கள், பரவிவரும் வன்முறை, அயலுறவுகளில் நடந்த சோதப்பல்கள் ஆகியவை காரணமாக ஆளும் கட்சி மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அந்நிய முதலீட்டை ஈர்க்கும் சக்தி கொண்டவர் என்பதால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை.

தடைகள்: தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் என்பதால் கூட்டணியை அனுசரித்துப் போவதில் இருக்கும் சிக்கல்; ஒரு மாநிலத்தை திறமையாக நிர்வகிப்பதைப்போல இந்தியா போன்ற பல்வேறு மொழி, இன, கலாச்சாரம் கொண்ட நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம்,  குஜராத் அன்னிய முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருந்தாலும் மனித வளர்ச்சிக் குறியீடுகளில் (HDI) மற்ற சில மாநிலங்களைவிட பின்தங்கியே இருப்பதால் நிர்வாகத் திறமை மீது ஏற்பட்டுள்ள சந்தேகம். 2002 குஜராத் கலவரம் எழுப்பியுள்ள கேள்விகள், அச்சம், சர்ச்சைகளுக்குள்ளான ஆர்.எஸ்.எஸ்சின் வெளிப்படையான ஆதரவு.

ராகுல் காந்தி

கல்வித் தகுதி : எம்.பில் (M.Phil)

பலம் :  வலுவான, பிரபலமான குடும்பப் பின்னணி, கட்சியினரின் ஏகோபித்த, ஆதரவு,  நாடாளுமன்ற அனுபவம், காங்கிரசின் புதிய முகம் என்பதால் ஏற்படும் வசீகரம்.

பலவீனம் : இதுவரையில் மத்திய அரசில் எந்தப் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டது இல்லை. எனவே ராகுலின் செயல்திறன் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. உத்தரப்பிரதேசம், பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் இரண்டு மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இவரது குடும்பத்து முன்னோர்களைப்போல இவருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்றெழுந்துள்ள கேள்வி.

வாய்ப்புகள்: நாடு முழுவதும் அமைப்பு பலம் கொண்ட கட்சியின் ஆதரவு, மோடிக்கு எதிரான மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களின் வாக்குகள்,  செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தள மக்கள் மீது அக்கறை காட்டி அவர்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருவதால் ஏற்பட்டுள்ள நன்மதிப்பு, உள்கட்சித் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்தக் காண்பித்த ஆர்வம் தந்துள்ள நம்பிக்கை.

தடைகள்: ஆட்சியின் மீ தேற்பட்டுள்ள அதிருப்தி, எம்.பி.யாக இருந்தாலும் நாடாளுமன்ற விவாதங்களில் பெருமளவில் பங்கேற்காதது, தொழில் கூட்டமைப்பினர் முன் பேசிய போது அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசாதது, ஊடகங்களின் ஆதரவைப் பெற முயற்சிக்காதது, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் வாக்காளர்கள், திருமணம் பற்றிய ரகசியங்கள்.


நரேந்திர மோடி  ஏன் பிரதமர் ஆகவேண்டும்?
பத்ரி சேஷாத்ரி

(1) நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அவற்றைக் கூர்மையாக மக்கள் முன்பு வைத்தல்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைத் தெளிவான குறிக்கோளாக்கி, அதை அடைவதற்கான  செயல்திட்டங்களை வகுத்து, அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இரண்டாம் கட்டத் தலைவர்களையும் உருவாக்கினார். மக்கள் திரண்டெழுந்து  அவர்பின் சென்றனர். ஆனால் சுதந்தரத்துக்குப்பின் அம்மாதிரியான ஒரு திரண்டெழல் இந்தியாவில் நடைபெறவில்லை.

ஒப்பீட்டில், லீ குவான் யூவின் கீழ் சிங்கப்பூர் என்னும் சிறு நாடும் டெங் சியோபிங் தலைமையில் சீனா என்னும் பெரும் நாடும், பொருளாதார அடிப்படையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தி இந்தியாவை வெகுவாகத் தாண்டிச் சென்றுவிட்டன.

அடுத்தடுத்து வந்த இந்தியத் தலைவர்கள் மக்களைத் திரட்டி, பொருளாதாரத்தை வளர்த்து, ஏழைமையைப் போக்கி, வளமான ஒரு நாட்டைக் கட்டியமைக்க வழி காட்டவில்லை. நரசிம்மராவ் காலத்தில் நிகழ்ந்த பொருளாதாரச் சீர்திருத்தத்தின்போதுகூட, அரசுத் தரப்பிலிருந்து சில மாற்றங்கள் நிகழ்ந்தனவே ஒழிய, மக்களுடன் எவ்வித உரையாடலும் இருக்கவில்லை.

ஆனால் நரேந்திர மோடி பொதுமக்களுடன் பேசி, எம்மாதிரியான அரசு வேண்டும், எம்மாதிரியான பொருளாதாரம் வேண்டும் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுக்கிறார். அதனை இளைய சமுதாயம் வெகுவாகப் பின்பற்ற விரும்புகிறது. இந்த மனநிலை மாற்றம், இந்தியாவை மேலே செலுத்தும் உந்துசக்தியாக இருக்கும்.

(2) உள்கட்சி ஜனநாயகம்

இதுநாள்வரை இந்தியக் கட்சிகளில் இல்லாத உள்கட்சி ஜனநாயகம் மோடியினால் மீண்டெழுந்துள்ளது. இந்தியக் கட்சிகள் அனைத்தும் குடும்ப நிறுவனங்கள் அல்லது சீனியாரிட்டியை மட்டுமே முரட்டுத்தனமாக முன்வைக்கும் அமைப்புகள்.

பாரதிய ஜனதாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் மட்டும்தான் தலைவர் பதவிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். பாரதிய ஜனதாவில் கடந்த இரண்டாண்டுகளில் மோடி மேலெழுந்து வந்தது முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வு. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தொண்டரின் ஆதரவையும் பெற்று, பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்களின் ஆதரவைப் பெற்று, கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்களின் ஆதரவையும் பெற்று, கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக முதலில் நியமனம் பெற்று, அதன்பின் அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் எதிர்ப்பை லாவகமாகக் கையாண்டு, தற்போது கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற இடத்தை மோடி கைப்பற்றியுள்ளார்.

இதற்கு இந்திய அரசியலில் முன்னுதாரணமே கிடையாது.

மோடி, ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் புகுத்தப்பட்டவர் என்பது நியாயமற்ற கூற்று. ஆர்.எஸ்.எஸ். விரும்பாத ஒருவர் பாஜகவில் எளிதில் பிரதமர் வேட்பாளர் ஆகமுடியாது. ஆனால் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ்ஸையும் தன்னை ஏற்கும்படி மோடிதான் வலியுறுத்தினார் என்பதைக் கவனிக்க வேண்டும். தங்களுக்கு மிகவும் ஏற்புடைய நிதின் கட்கரி என்பவரை ஆர்.எஸ்.எஸ்ஸால் பாஜக  கட்சித் தலைவராகத் தக்கவைக்க முடியவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

மோடியின் இந்தச் சாதனை காரணமாக, குறைந்தபட்சம் பாஜகவிலாவது உள்கட்சி ஜனநாயகம் பெருகும் என்பது நம்பிக்கை.

(3) கவர்ச்சி அல்ல; வளர்ச்சிதான் பிரதானம்

இந்திய அரசியலில் பொதுவான அம்சம்,  கவர்ச்சிகரமான கோஷங்களையும் இலவசங்களையும் அள்ளி வீசுவதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது. ‘ஏழைமையைஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கூறினார். எப்படி ஒழிப்பீர்கள் என்று யாரும் கேட்கவில்லை; ஏன் ஒழிக்கவில்லை என்றும் யாரும் கேட்கவில்லை.

‘அளக்கக்கூடிய வெளிப்பாடு’ என்பது பற்றி நம் அரசியல் கட்சிகள் ஒருபோதும் பேசுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் வருமானத்தை இவ்வளவு பெருக்குவேன்; அரசின் நிதிப் பற்றாக்குறையை இந்த அளவுக்குக் குறைப்பேன்; மக்களின் சராசரி வருமானத்தை இந்த அளவுக்கு அதிகரிப்பேன்; நாட்டின் உற்பத்தியை இத்தனை சதவிகிதம் அதிகரிப்பேன்; உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவித்து வர்த்தக ஏற்றுமதி-இறக்குமதி வித்தியாசத்தை இந்த அளவுக்குக் குறைப்பேன்; கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை இந்த அளவுக்கு அதிகரிப்பேன் என்று தெளிவான கொள்கைகளை யாருமே முன்வைப்பதில்லை.

நரேந்திர மோடி ஒருவர் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பொதுமக்களிடம் பகிர ஆரம்பித்துள்ளார். இவை அனைத்தும் தெளிவான வகையில் தேர்தல் அறிக்கையில் வரும்போதுதான் ஒரு நாடே ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செல்ல முற்படும். இல்லாவிட்டால் திக்குத் தெரியாமல் அடர்கானகத்தில் அலைவது போலத்தான் ஆகிவிடும்.

(4) அனைவரும் சமம்

தமிழகமும் இந்தியாவும் பொதுவாகப் பார்த்துள்ள அரசியலில், குறிப்பிட்ட வாக்கு வங்கிகள் குறிவைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, அவர்களுடைய வாக்குகள் அனைத்தும் மொத்தமாக வேட்டையாடப்படுகின்றன.

இறுதியாக, கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா அல்லது தரப்பட்ட சலுகையால் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு நன்மை ஏற்பட்டதா என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆதாயத்தைப் பங்குபோட்டு அதில் அதிகப் பங்கை ஒரு சமூகத்துக்குத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர, ஒவ்வொருவருக்கும் நியாயமான பங்கு என்ற கருத்து முன்வைக்கப்படுவதே இல்லை. நாங்கள்தான் உங்களுக்கு அதிகம் செய்கிறோம், எனவே நீங்கள் எங்கள் பக்கம்தான் இருக்கவேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. தனக்கு ஒருவர் ஏன் அதிகம் தருவதாக ஆசை காட்டுகிறார் என்று அந்தச் சமூக மக்களும் கேட்பதில்லை. அதிகம் நிஜமாகவே கிடைத்துள்ளதா என்று ஆராய்வதும் இல்லை.

நரேந்திர மோடிதான் இந்திய அரசியலிலேயே முதல் முதலாக, இந்த ஆசை காட்டும் செயலை அறவே விட்டொழித்துள்ளார். அனைவருக்கும் வளர்ச்சி சமமாக வரும் என்று நியாயமான வார்த்தைகளை முன்வைக்கிறார்.

மற்ற எல்லாவற்றையும்விட, இவை காரணமாகவே நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்."

அறிந்தவர்கள் சொல்கிறார்கள்

கடந்த 2008-ஆம் ஆண்டு முதன்முறையாகவும் அதன்பின் கடந்த ஜூலையில் இரண்டாவது முறையும் குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த பத்திரிகையாளர் சந்திரமௌலி: 
நான் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டதில் முதன்மையான விஷயம், அரசின் எந்தத் திட்டமானாலும் அதன் பலன் அடிமட்டம் வரை சென்று சேர்வதற்கான எல்லா சாத்தியங்களையும் ஏற்படுத்தி இருப்பது (Efficient delivery) system. பூஜ் பகுதியில்  10 ஆண்டுகளுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டது. அந்தக் கட்ச் பகுதியில் மட்டும் 12 ஆயிரம் பேருக்குமேல் இறந்து போனார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாயின, இடிந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும்மேல். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் எல்லாம் தகர்ந்து போயின. இன்று பார்த்தால் அங்கு அந்தப் பூகம்பத்தின் சுவடே தெரியாத அளவிற்கு உள்கட்டமைப்பு உள்ளது. பூகம்பத்தின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்காக ஒரே ஓர் ஆயுர்வேத மருத்துவமனையை மட்டும் பூகம்பம் பாதித்த நிலையிலேயே விட்டு வைத்திருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர் மேலாண்மைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக உள்ளது. பூகம்ப  ஆராய்ச்சிக்காக உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

குஜராத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கட்ச் வளைகுடா ஆண்டிற்கு 400 மி.மீ. மட்டுமே மழை பெய்யும் வறட்சியான பகுதி. ஆனால் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ஆண்டிற்கு 1,500 மி.மீ. மழை பொழிகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி பாதிக்கும் பகுதிகளும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளும் சமமாக குஜராத்தில் உள்ளன. அதிகமாக வெள்ளப் பகுதியில் உள்ள நீரை வறட்சியான பகுதிகளுக்குக் கொண்டு செல்ல கால்வாய்கள், கிளைக் கால்வாய்களை ஏற்படுத்தி எல்லா இடங்களுக்கும் தேவையான நீர் கிடைக்கச் செய்திருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் பன்முகப் பயன்பாட்டிற்காகச் செய்வது மோடியின் பாணி."

ராகுல் காந்தி ஏன் பிரதமராக வேண்டும்?
பேராசிரியர் க. பழனித்துரை

இந்திய நாடு என்பது எத்தன்மையது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த நாட்டை வழிநடத்த எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்று நாம் எளிதாக தீர்மானம் செய்துவிடலாம். இந்தியா மொழியால், கலாச்சாரத்தால், இனத்தால், ஜாதியால், மதத்தால், பண்பாட்டால், எல்லை இல்லா வித்தியாசங்களைக் கொண்ட ஒரு நாடு. இதற்கு மேலாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிக அளவில் கொண்ட நாடு இந்தியா. இவ்வளவு வேறுபாடுகளையும்
வித்தியாசங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் மக்களாட்சி செயல்படுவது என்பதே பலருக்கு ஆச்சரியம். ஆகையால்தான், ‘இந்தியப் புதிர்’ என்று இந்தியாவை அழைப்பார்கள் மேற்கத்திய அறிஞர்கள். பிரதமர் பதவிக்கு இந்த வேறுபாடுகள், வித்தியாசங்கள் அனைத்தையும் கடந்து இந்திய நாட்டு ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் சகிப்புத்தன்மையையும் அனைவரையும் அரவணைத்து உள்வாங்கும் மனோபாவமும் கொண்ட ஒரு மனிதர் தேவை.

பரந்துபட்ட இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டுவர எல்லா நிலைகளிலும் தலைவர்கள் வேண்டும். கிராமப் பஞ்சாயத்திலிருந்து இந்தியக் குடியரசு வரை தலைவர்கள் வேண்டும். எல்லோரும் இணைந்து பணியாற்றித்தான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். நான் பிரதமரானால் அனைத்தும் மாறி விடும், மாற்றி விடுவேன். ஆகவே, என்னைப் பிரதமராக்குங்கள் என்று கூறுவது மக்களாட்சியில் மக்களை அரசிடமிருந்து வேறுபடுத்தி அரசு சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்குத்தான் பயன்படுமேயன்றி, ஒரு கூட்டுத் தலைமையை உருவாக்கி, அந்தக் கூட்டுத் தலைமையின் செயல்பாட்டில் நிறுவனங்களையும், அமைப்புகளையும் வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்யப் பயன்படாது.

மகாத்மா காந்தி நான் சுதந்திரம் வாங்கித் தருகிறேன், நான் இந்தியாவை மாற்றுகிறேன் என்று, என்றும் கூறியது கிடையாது. ஒரு நாட்டின் தலைவிதியை தலைவன்தான் நிர்ணயிக்க முடியும் என்று ஓர் அரசியல் கட்சித் தலைவர் நம்பினால் அது அவர் மக்கள்மேல் எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை என்பதைத்தான் காட்டும்.

மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில், நாட்டின் தலைவிதியை அந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். மக்களாட்சியில் மக்கள் மூலமாக மாற்றத்தையடைய நமக்குத் தேவை மக்கள் தலைவர்கள். அவர்கள் மக்களுடன் சேர்ந்து, மக்களுக்கு வழிகாட்டி செயல்படுவதுதான் ஒரு மக்களாட்சி நாட்டில் நடைபெற வேண்டிய பிரதானச் செயல்பாடு.

எந்த ஒரு தலைவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அந்தப் பார்வை என்பது ஏழைகளிலிருந்து துவங்க வேண்டும். இன்றையச் சூழலில் சந்தையும் தோற்றது, அரசும் தோற்றது என்ற நிலையில் ஏழைகளைக் காப்பதும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வதும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை சட்டத்தின் மூலம் உறுதி செய்வதையும் அவர்களை அதிகாரப்படுத்துவதையும் முன்னிலைப்படுத்தும் ஒரு தலைவர்தான் இன்று நமக்குத் தேவை. மக்களை மதத்திற்குள்ளும், ஜாதிக்குள்ளும் பிரித்தாள்வோர் வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது.

இந்தியா என்பது ஒரு சாதாரண நாடு அல்ல. தனது செயல்பாடுகளின் வழி, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரிய நாடு. இந்த நாட்டு அரசாங்கத்தின் தலைவர்  என்பவர் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் உலக நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அந்தத் தலைவருக்கு வயதோ, கல்வித் தகுதியோ தலைமையை நிர்ணயிக்காது. இந்த நாட்டில் வாழும் கோடான கோடி ஏழை மக்களுக்கு நம்பிக்கையைத் தரும் உள்ளம் கொண்டவராக இருப்பதே ஒப்பற்ற தகுதியாகும்.

இந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிப்பதற்கு நம் மக்களுக்கு வழிகாட்டி, மக்களுடன் போராடிய தலைவர்களின் அப்போதைய வயதை எண்ணிப் பார்த்தால் யாரும் வயதானவர்கள் கிடையாது, அனைவரும் இளைஞர்களே. ஆகவே வயதோ, கல்வித் தகுதியோ தலைமையை நிர்ணயிக்காது.

இந்திய நாட்டின் பிரதமராக வரக்கூடியவர் மக்களை இணைக்கக்கூடியவராக இருக்க வேண்டுமேயன்றி பிரிக்கக்கூடியவராக இருக்கக்கூடாது. மக்களை வாக்குக்காக வாக்காளராகப் பார்க்கும் தலைவராக இல்லாமல் மக்கள் இந்த நாட்டின் மதிப்புமிகு குடிமக்கள், பொறுப்புள்ளவர்கள் என்று எண்ணிச் செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டின் தலைவராக வருபவருக்கு மிக முக்கியமாக, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மற்றவர் கருத்துக்களை மதிக்கும் பக்குவமும் இருக்க வேண்டும். நான் சொல்வதுதான் இறுதியானது, உறுதியானது, முடிவானது, எனக்குத் தெரியும் என்ற மனோபாவம் கொண்டவராக இருக்கும் எந்தத் தலைவராலும் இந்தியாவை முன்னேற வைக்க முடியாது.

மக்களைக் கவர்வதற்காகவும் தன் புகழை வளர்ப்பதற்காகவும் பொதுத்தொடர்பு வியாபார நிறுவனங்கள் மூலம் விளம்பரம் தேடி, பதவியைப் பிடிக்க அலைகின்ற சூழலில் மக்களிடம் வேலை செய்து, மக்களிடம் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று பதவிகளுக்கு வருவதுதான் சிறந்தது எனக்கூறி, இதற்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஒருவர்தான் நமக்கு இன்று பிரதமராக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நான் பிரதமராவது கடினம் என்று பதவி வெறியுடன் அலையும் எவரும் அந்தப் பதவிக்கு வருவதற்குத் தகுதியற்றவர்கள்.

உலகமயமான பொருளாதாரச் சூழல் ஊழலை உலகமயமாக்கும்போது ஊழலை நியாயப்படுத்தாமல் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு ஊழல் நிரூபணமானால் தண்டிக்கப்படல் வேண்டும் என்று சொல்வதுடன் தன் கட்சியைச் சார்ந்த யாரையும் ஊழல் என்று குற்றம் சாற்றப்பட்டுவிட்டால் அவர்கள் வகித்த பதவியைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று சொல்லும் துணிச்சலும், அதன்மேல் நடவடிக்கை எடுக்கும் திடமும் வேண்டும்.

மேற்கூறிய அடிப்படைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது ராகுல் காந்திக்கு மேற்சொன்ன அத்தனை தகுதிகளும் இருக்கின்றன. அவர் ஒரு ஜனநாயகவாதியாக, எதார்த்தத்தை ஒப்புக்கொள்பவராக, நான் என்று சொல்லாமல் நாம் என்று சொல்பவராக, உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக, மக்களை நினைப்பவராக, பதவி என்பதை செயலிலிருந்து பெறவேண்டுமேயல்லாமல் கம்பெனி விளம்பரத்தின் மூலம் பெறக்கூடாது என்பதில் திண்ணம் உள்ளவராக, உலக அரங்கில் கண்டனங்களைப் பெறாதவராக, ஜாதி, மதம், பிராந்தியம் என்பதைக் கடந்தவராக, தாழ்நிலை உணர்வுக்குத் தீனியிட்டுப் பகைமை அரசியலை வளர்க்காமல் அரசியல் பண்பாடு பேணும் தலைவராகத் தெரிகிறார்."

அறிந்தவர்கள் சொல்கிறார்கள்
தில்லியில் ராகுல் காந்தியின்கீழ் இளைஞர்  காங்கிரசில் பணியாற்றிய ஜோதிமணி:

குஜராத்தின் வளர்ச்சி குறித்து எவ்வளவுதான்  பேசினாலும் அவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட  பிரிவினர் மட்டுமே பயனடைவதாக உள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருந்தால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைய முடியும். அதற்கான தெளிவான பார்வை ராகுல் காந்தியிடம்தான் உள்ளது. உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்பதற்காக உழைப்பவர் ராகுல். மாற்றம் உடனடியாகத் தெரியாது. ஆனால் அவரின் அணுகுமுறை வலுவான அடித்தளத்தை நாட்டிற்கு ஏற்படுத்தித் தரும்". மேலும், ராகுல் அடித்தள மக்களிடம் குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களிடம் பேசும்போது அவர் முகத்தில் ஆர்வம் ஒளிரும். அவர்கள் முன்னேறினால்தான் இந்தியா முன்னேறும், அவர்கள் முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு ஒரு கனவு இருக்க வேண்டும், அந்தக் கனவை நாம் விதைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை."

பிரபலமான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பில்

நரேந்திர மோடியை 55 சதவிகிதம் பேரும் ராகுல் காந்தியை 18 சதவிகிதம் பேரும் தேர்வு செய்து உள்ளார்கள். மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக 39 சதவிகிதம் பேரும் சுஷ்மா ஸ்வராஜிற்கு 2 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated!!


 
 
 
 
வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.


  1.  தமிழ் மென்பொருள் கருவி.
இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது.  9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..)



     2. HEART 
இது ஒரு பயிற்சி இறுவட்டாகும். முதலுதவி சம்பந்தமானது.




    3. இலவச பைபிள் பாடம் 


   4.அணு ஆயுத தடுப்பு சம்பந்தமான விவரண படம் 


    5.உள நலம் சம்பந்தமானது ஆவணப்படம்
இலவசமாக பெற உள் நுழைக

   6. 30000 இலவச புத்தகங்கள் PDF
இலவசமாக பெற உள் நுழைக

  7.மனித உரிமை தொடர்பான ஆவண படம் உயர் தரம் (HD Video)
 இலவசமாக பெற உள் நுழைக

  8.குபுண்டு open source os
  இலவசமாக தபாலில் பெற முடியாது. முன்பு வாரி வழங்கினார்கள்.

  9.The Stories of School.
ஆவுஸ்ரேலியா இல் உள்ள கருப்பின மக்களின் வாழ்க்கை, பாடசாலை பற்றிய விவரண காணொளி.

 இலவசமாக பெற உள் நுழைக


இன்னும் இரு வாரங்களில் உங்கள் அஞ்சல் பெட்டி நிறைய போகிறது, இவை அனைத்தும் சட்ட பூர்வமானவை . பயப்பட தேவை இல்லை.

 இவற்றால் என்ன பயன்? ஒன்றும் இல்லை என்று இல்லை .
  1. HD video பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
  2. ஆங்கிலம் உச்சரிப்பை ஆங்கிலமாகவே  பழகலாம் 


வந்த பின் இங்கு சொல்லுங்கள்............................................
 
 

மின்னலில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் – பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை!


மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.



6 - cell lightning. mini


இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து கேட்ட போது,”நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம். முதலாவது மின்மாற்றியின் மூலமாக மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்த வேண்டும்.
அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம்.இதன் மூலமாக இயற்கை சக்திகளை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது: என்று பால்மர் தெரிவித்தார்.



இதற்கிடையில் இபபோதெல்லாம் எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?


***


பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.


***
`

புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.


***


தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.


***


`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.


***


பயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.


***


ம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.


***


தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!


***


வர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.


***


நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.


Now, Nokia lays Frankenstein to rest, says charge a cell phone via lightning

************************************* 


Thunder power! In a Frankensteinian breakthrough, powered by beleguered Nokia, scientists have for the first time charged a cell phone using lightning bolt.Famous English author Mary Shelley in her gothic novel ‘Frankenstein’ used lightning to breathe life into the Frankenstein monster, some 200 years ago.

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!


இப்போதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்

.
6 - JK-Enum-Nanbanin-Vaazhkai.j


இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில்,


ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது… எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்… 


தாங்கள் வாழும் நாடுகளில் இடங்களில் என்னுடைய படத்தை திரையிட விருப்பமுள்ள நண்பர்கள் எனக்கு தொடர்பு கொள்ளலாம்…

 இது வியாபாரமே… அதற்கான தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்… 


சில நாடுகளில் மட்டுமே இப்போது திரையிடப்படுகிறது…. 


இம்முயற்சியில் புதியவர்களையும் எதிர்பார்க்கிறேன்… 


படம் தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் திரைக்கு வரும்…


இதை படிக்கும் நண்பர்கள் மற்றவர்களும் உங்கள் நண்பர்களும் படிக்க இந்த செய்தியை பகிரவும்…… நன்றி…”


 என்று தெரிவித்துள்ளார்.

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.



பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து “உடையும் செய்தி’யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் பட்டியலை விரைவிலேயே வெளியிட்டு விட்டது.



5 - edit_crime.


மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற குற்றங்கள், சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் பட்டியல், காவல்துறை அவற்றை எவ்வாறு கையாண்டது என்பனவற்றை இதன் மூலம் நாம் அறியலாம். புள்ளிவிவரங்கள் இரு முனை கத்தி போன்று சாதகம், பாதகம் இரண்டும் பொருந்தியது. புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கணித்துவிட முடியாது என்றாலும், சில புள்ளிவிவரங்கள் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டும். அவை கற்பிக்கும் பாடம் வருங்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.


வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கூடிய வழக்குகள், விசாரிக்க முடியாத வழக்குகள் என்று குற்ற நிகழ்வுகள் பிரிக்கப்படுகிறது. 2012-ஆம் வருடம் நாட்டில் விசாரிக்கக்கூடிய வழக்குகள் 60,41,559 என்று காவல் துறை பதிவு செய்தது. இதில் இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் 23,87,188. இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் முக்கியமாக கருதப்படுகிறது, ஏனெனில் அவை உடல் மற்றும் சொத்து மீது இழைக்கப்படும் குற்றங்கள் சம்பந்தப்பட்டது. சிறப்பு சட்டங்கள், மற்ற பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,54,371, ஆக, மொத்த வழக்குகள் 60.41 லட்சம்.


இந்திய தண்டனைச் சட்டத்தில் முக்கியமாகக் கருதப்படுவது கொலை, ஆதாயக் கொலை, கொடிய காயம் விளைவித்தல், பொது இடங்களில் சண்டை சச்சரவு போன்றவை.


கொலை, காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் 5.6 லட்சம் நிகழ்ந்தன. இதில் நாட்டில் கொலை வழக்குகள் மட்டும் 34,434. தமிழ்நாட்டில் 1,949, உத்தரப் பிரதேசத்தில் 4,966, பிகாரில் 3,516, ஆந்திரத்தில் 2,717, கர்நாடகத்தில் 1,860 கொலைகள் பதிவு செய்யப்பட்டன.


இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் 2012-இல் நடந்த கொலைகள், தில்லியில் 408, மும்பையில் 215, பாட்னாவில் 224, பெங்களூரில் 266, சென்னையில் 180, மதுரையில் 39, கோவையில் 29. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் நமது நகரங்களில் குறைவு என்றாலும் எந்த ஒரு கொலையும் பீதியை கிளப்புகிறது.


பாலியல் பலாத்கார வழக்குகள், வன்புணர்ச்சி வழக்குகளின் விவரம் 1971 முதல்தான் சேகரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 24 வருடங்கள் பாலியல் வழக்குகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது விழிப்புணர்வு குறைவா, மெத்தனமா? நமது சமுதாய உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி சொல்வதற்கே அஞ்சுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவார்கள். புகார் செய்யப்படும் வழக்குகளைவிட நடந்த நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் என்ற வகையில்தான் புள்ளிவிவரங்களை ஆராய வேண்டும்.


தில்லியில்தான் அதிகமாக 585 வன்புணர்ச்சி வழக்குகள் 2012-இல் பதியப்பட்டன. மும்பையில் 232, சென்னையில் 94, பெங்களூரில் 90 வழக்குகள். 1971-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி நாட்டில் 2,487 ஆக இருந்த வன்புணர்ச்சி வழக்குகள் 2012-ஆம் ஆண்டு 24,923 வழக்குகளாக (90.2 சதவிகிதம்) உயர்ந்துள்ளது. இதர பாலியல் பலாத்கார வழக்குகளை எடுத்துக் கொண்டால் 2011-இல் 2.28 லட்சமாக இருந்த வழக்குகள் 2012-ஆம் ஆண்டில் 2.44 லட்சமாக உயர்ந்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகமாக 3,425 வன்புணர்ச்சி வழக்குகள் பதியப்பட்டன. தமிழ்நாட்டில் 737 வழக்குகள், சென்னையில் 94, சேலம் 51, திருநெல்வேலி 47, மதுரை 41, கோவை 29.


பாலியல் குற்ற ஒழிப்பு சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்ற சமுதாய நலன் கருதி இயற்றப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் அமலாக்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அதிக விழிப்புணர்வு. பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் 2,563 வழக்குள் பதியப்பட்டன தமிழகத்தில் 500 வழக்குகளும் ஆந்திரத்தில் 472 வழக்குகளும் பதியப்பட்டன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை குற்றவாளிகளாகக் கருதாமல் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் களையப்பட வேண்டும். 2012-ஆம் வருடம் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 38,172. 2011-இல் 33,098. 15.3 சதவீதம் உயர்ந்துள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. மொத்த இந்திய தண்டனை சட்ட வழக்குளில் 8.89 சதவிகிதம் 2012-இல் பதிவாகியுள்ளது. குழந்தைக் கடத்தல், வன்புணர்ச்சி, கொலை, பாலியலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளைக் கடத்துதல் போன்ற, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பரவலாக நாட்டில் நிகழ்கிறது. உத்தரப் பிரதேசம் 6,033, மத்தியப் பிரதேசம் 5,168, தில்லி 4,462, மகாராஷ்டிரம் 3,456, பிகார் 2,894, ஆந்திரம் 2,274. தமிழ்நாட்டில் 1,036 வழக்குகள். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவு.


ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளும் சமுதாய சீர்திருத்த சட்டங்களில் முக்கியமாகக் கருதப்படுகிறது. குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம், அரசியல் சாசனம் 17-இல் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரகடனப்படி 1955}இல் இயற்றப்பட்டது.


இச்சட்டத்தின்கீழ் 2012-ஆம் வருடம் 33,655 வழக்குகள் நாட்டில் பதியப்பட்டன. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் முறையே 6,303, 5,559, 4,821 அதிகமான வழக்குகள் கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டில் 1,647 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் முறையே 3,057, 2,685, 810 வழக்குகள். வழக்காடுதல் மட்டும் சீர்திருத்தத்தை வளர்க்காது என்பதை, அதிகரிக்கும் வழக்குகள் வெளிச்சமிடும்.
சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் முக்கிய பணி. தெருக்களில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், பூசல்கள், வன்முறைகள் சட்டம் ஒழுங்கு நிலையை பிரதிபலிக்கும். 2.75 லட்சம் வன்முறை சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. 2011-ஆம் வருடம் நிகழ்ந்த 2.56 லட்சம் வழக்குகளை ஒப்பிடுகையில் இது சற்று அதிகம்.


இது மொத்த இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளில் 11.5 சதவீதம். மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 33,824, பிகாரில் 29,842, மூன்றாவதாக மகாராஷ்டிரத்தில் 26,972 நிகழ்வுகள்.


மேற்படி வன்முறைப் பதிவுகளில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 86,469 சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது சங்கடப்படுத்தும் விவரம். இவற்றில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை மட்டும் 24,923 என்பது இந்தியாவிற்கு தலைகுனிவு. இதில் அதிகமாக பிகாரில் 11,670 வழக்குகள் பதிவாயின உத்தரப்பிரதேசத்தில் 6,003 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் 10,106, சிறிய மாநிலமான கேரளத்தில் மிக அதிகமாக 11,506 வழக்குகள் பதிவாயின. அவற்றில் சட்ட விரோதமாக தெருக்களில் ரகளை நிகழ்வுகள் 10,938.


படித்தவர்கள் அதிகமான கேரளத்தில் இந்த நிலை. படித்தவர்கள் ஏன் தெருக்களுக்கு வந்து சண்டையிடுகிறார்கள்? அறிவு புரிதல் அளிப்பதால் அநியாயங்களை கண்டு தட்டிக் கேட்க தெருக்களுக்கு வருகிறார்கள் என கொள்ள வேண்டும் ; நல்லவேளை தமிழ்நாட்டில் இத்தகைய பொது இட வன்முறைகள் 3,862 மட்டுமே.


திருட்டு வழக்குகள் கன்னக்களவு வழக்குகள் 4.3 லட்சம் பதிவாகியுள்ளது. இதில் கன்னக்களவு 92,892. தமிழ்நாட்டில் திருட்டு வழக்குகள் 18,467. இதில் கன்னக்களவு 4457. மராட்டிய மாநிலத்தில் அதிகமாக 71,188 வழக்குகள், ஆந்திரத்தில் 36,717 கர்நாடகத்தில் 27,164, கேரளத்தில் 7874. இந்தியாவில் திருட்டு வழக்குகளில் மொத்த இழப்பு ரூபாய் 21,071 கோடி. அதில் தமிழ்நாட்டில் ரூபாய் 137.44 கோடி. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 82.58 கோடி அதாவது 60 சதவிகிதம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது சிறப்பான நடவடிக்கை.


காவல்துறையின் செயல்பாடு திறமையான புலனாய்வில் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் 2012-ஆம் ஆண்டு 32.43 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 23.95 லட்சம் வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டன. 8.45 லட்சம் வழக்குகள் ஆறுமாதத்திற்கு மேல் விசாரணையில் உள்ளன.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் 78.8 லட்சம். தமிழ்நாட்டில் 3,08,578 வழக்குகள். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வழக்குகள் தமிழ்நாட்டில் 56.5 சதவிகிதம், அகில இந்திய அளவு 38.1 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.


காவல்துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. மொத்த ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கை 21.64 லட்சம். பணியில் இருப்பவர்கள் 16.74 லட்சம். மொத்த பெண் போலீசாரின் எண்ணிக்கை 85,462. மராட்டிய மாநிலத்தில் 17,134 பெண் போலீஸ் அதற்கு அடுத்தாக தமிழ்நாட்டில் 12,085.


இந்தியாவில் மொத்த காவல் நிலையங்கள் 14,155. தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள். சராசரி 1 லட்சம் பொதுமக்களுக்கு 138 காவலர்கள் பணியில் உள்ளனர். மேலை நாடுகளில் இது மூன்று மடங்கு அதிகம்.


2012-ஆம் வருடம் 77.5 லட்சம் நபர்கள் கைதாகியுள்ளனர் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம்.இந்தியாவில் குற்ற கடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 273 வழக்குகள் பதிவாகின்றன. பதிவாகாதவை, புகார் செய்யாதவை பல இருக்கலாம். 373 நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு கைதாகிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 வன்புணர்ச்சி வழக்கு பதிவாகிறது.


குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம். தாமதமாக ஓடச் செய்யலாம், நிற்காமல் நீராக ஓடும் குற்றங்களைத் தடுக்கலாம் – காவல்துறையினர் பொதுமக்களோடு ஒன்றிஉழைத்தால்.


ஆர். நடராஜ் (காவல்துறை முன்னாள் தலைவர்).

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவது 2 ஆண்டு தாமதம் ஆகும்!




 அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் நிதி நெருக்கடியால் செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ450 கோடி செலவில் நாசாவின் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதலின்படி  அக்டோபர் 28ம் தேதி மாலை 4.15 மணிக்கு விண்ணில் செவ்வாய்க்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில் அமெக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள நாசா ஊழியர்கள் 18 ஆயிரம் பேரில் 97 சதவீதம் பேர் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஏவுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இரண்டு ஆண்டுகள் தாமதமாகும்:  இஸ்ரோவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும் செயற்கைக்கோள் அக்டோபர் 28ம் தேதியில் இருந்து நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படவில்லை என்றால் அதன் பின்னர் விண்ணில் செலுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.



 நாசா மையத்தை தற்போது தொடர்புகொள்ள இயலாது என்ற பதிவு செய்யப்பட்ட தகவல் தான் ஒலிக்கிறது.


 இதுகுறித்து தேசிய நிபுணர் குழு தலைவர் யு.ஆர்.ராவ் கூறுகையில், முடிந்தவரை நவம்பர் 19ம் தேதிக்குள் செயற்கை கோளை விண்ணில் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய தருணத்தை தவறவிட்டால் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் செயற்கை கோள் ஏவப்படுவது தவிர்க்கப்படும். அந்த நேரத்தில் கடலில் புயல் அபாய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றார். 


இந்நிலையில் இஸ்ரோ அதிகாரி தேவி பிரசாத் கார்னிக், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  எவ்வித கால தாமதமும் இன்றி திட்ட மிட்டபடி அக்டோபர் 28ம் தேதி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? கருத்து தெரிவிக்க கமல் மறுப்பு!






ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்று கருத்து கூற நடிகர் கமல்ஹாசன் மறுத்து விட்டார். பெங்களூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த கூறியதாவது: கர்நாடகத்தில் சினிமா தயாரிப்பதற்கான அனைத்து அம்சங்களும் காணப்படுகின்றன. பெங்களூர், மைசூரில் இதற்கு ஏற்ற பல்வேறு இடங்கள் உள்ளன. எனவே, அடுத்து புதிய தமிழ் படத்தை கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது.



முழுக்க கர்நாடகாவில் ஷூட்டிங் செய்யப்பட உள்ள தமிழ் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நான் இதில் நடிக்க உள்ளேன். விஸ்வரூபம் படம் திரையிடும் போது மறக்க முடியாத அனுபவம் கிடைத்தது. விஸ்வரூபத்தின் 2,ம் பாகம் திரையிடும்போது, அதுபோல் ஏற்படாது என்று நினைக்கிறேன்.



விஸ்வரூபம் பட பிரச்னையால் நான் நாட்டைவிட்டே வெளியேறிவிடுவேன் என்று கூற வேண்டிவந்தது. இப்போதும் எனது வார்த்தைகளை திரும்ப பெறப்போவதில்லை. நான் மீண்டும் மிரட்டப்பட்டாலோ, தொல்லைக்கு உட்படுத்தப்பட்டாலோ ஒரு கலைஞனாக நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிவரும். ஆனால் இந்த நாடு என்னை விட்டுவிடுமா? அரசியலுக்கு ரஜினி வருவாரா? மாட்டாரா? என்பதை பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. வாக்குப்பதிவின் போது ஒரு விரல் நுனியில் கருப்பு மையை வைத்து கொள்ள விரும்புகிறேனே தவிர கை முழுவதையும் கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

காலணியும் ஒரு கருவிதான்! தொழில்நுட்பம்!



Shoe themselves at risk to save their school children have found a new technique.

ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் காலணியைக் கொண்டு தங்களை காத்துக்கொள்ளும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் பள்ளி  மாணவிகள். தானே மராத்தி மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் நால்வரின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த காலணி ஆயுதம். வழக்கமாக பெண்கள்  அணியும் காலணியின் அடிப்பாகத்தில் சில கருவிகளை இணைத்துள்ளனர்.


விஷம எண்ணத்துடன் அருகில் நெருங்கும் ஆண்களின் காலை இந்த காலணி அணிந்திருக்கும் பெண்கள் வேகமாக மிதித்தால் போதும்... அந்த நபர்  மயக்கமடையும் அளவுக்கு மின்சாரம் அவர் உடலில் பாய்ச்சப்படும். அல்லது ஆபத்து அருகே வரும் போது காலணியை வேகமாக தரையில்  மிதிக்கலாம்.



அதன்பிறகு பெண்ணின் கைப்பை அல்லது பர்ஸில் இணைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் அலாரம் ஒலி எழுப்பத் தொடங்கிவிடும். அத்துடன் ஏற்கனவே  பதிவு செய்யப்பட்டிருக்கும் சில செல்போன் எண்களுக்கு உடனே எஸ்.எம்.எஸ். சென்று விடும். ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாக்கும் இந்த  காலணிக்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது!


தீக்காயத்தின் முதலுதவி என்ன?


 Show wound in water for 10 minutes.


தீவிர காயம் : சிகிச்சை முறை

10 நிமிடங்களுக்கு நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள்.
நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.

சிறிய காயங்கள்: சிகிச்சை


பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.

துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் பதற்றப்பட்டு ஓட வேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும். தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும். சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளை கண்டிப்பாகப் பயன்படத்தக் கூடாது. பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம். அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் ஆயில்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது. பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது. கொப்புளங்களை உடைக்கக் கூடாது. 


மஞ்சள் காமாலை வருவது ஏன்?



About  jaundice array N. Laparoscopy and Endoscopy special administrator of the hospital and the doctor and physician.   Demonstrates Manoharan.


மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு  மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.

நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக  மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான  கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத்திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை  உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில்  இருக்கும்.

மஞ்சள் காமாலையின் வகைகள்?


வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவது : இது ஹெபடைடிஸ் ஏ.பி.சி என்று மூன்று வகைப்படும்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் :

பொதுவாக கல்லீரல் பித்தநீரை சுரந்து உணவு செரித்தலுக்கு பித்தநீரை அனுப்பும் வேலையைச் செய்கிறது. இவ்வாறு கல்லீரலில் சுரக்கும்  பித்தநீரானது செல்லும் பித்தநாளத்தில் சில சமயங்களில் பித்தக்கல்லால் அடைப்பு ஏற்பட்டாலோ, பித்தநாளம் சுருங்குவதாலோ அல்லது  பித்தநாளத்திற்கு வெளியில் கட்டி ஏற்பட்டு பித்தநாளத்தை நெருக்கினாலோ ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் என்று பெயர்.  அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் அடைப்பு என்று பெயர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் வெளுத்து காணப்படும். உடலில் அரிப்பு ஏற்படும். பசியின்மை, சோம்பல், களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் எடை குறைவு, உடல் அரிப்பு, சாதாரண காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல்  போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப்பகுதியில் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம்  மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்


ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்தல், கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், பித்தநீர் பை மற்றும் பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு, மது  அருந்துதல், மாசுபட்ட தண்ணீரில் காணப்படும் நோய் கிருமிகள் போன்றவை.

தடுப்பு முறைகள்


தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். துரித உணவை தவிர்க்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது முறையாக  பரிசோதனை செய்த பின் செலுத்த வேண்டும். மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்!

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்


உலகெங்கிலும் வீட்டு வைத்திய முறைகள் கையாளப்படுகின்றன. சில பகுதிகளில் மரபு வழி வைத்திய முறைகள் தலைமுறை தலைமுறையாகப் பலநூறு ஆண்டுகளாகப் புழகத்தில் இருந்து வந்திருக்கின்றன. வீட்டு வைத்திய முறைகளில் பல, அதிக அளவில் பலன் தருகின்றன; வேறு சில, குறைந்த அளவில் பலன் தருகின்றன.

வீட்டு வைத்திய முறைகளில் சில ஆபத் தான வையாகவும், தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். நவீன மருந்துகளைப் போலவே வீட்டு மருத்துகளையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

பலன் தரும் வீட்டு மருந்துகள்  :

பல நோய் களுக்குக் காலம் காலமாகப் பயன்படுத்திப் பலன் கண்ட வீட்டு மருந்துகள் நவீன மருந்துகளுக்கிணையாக அல்லது அவற்றுக்கும் மேலாகக்கூடப் பலன் தருகின்றன. பெரும்பாலானவை நவீன மருந்துகளைவிடச் சிக்கனமானவை.

மேலும் சில, நவீன மருந்துகளை விட அதிகப் பாதுகாப்பானவை. எடுத்துக்காட்டாக, இருமலுக்கும் சளிக்கும் பயன்படுத்தப்படும் மூலிகைக் கஷாயங்கள், நவீன மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் இருமல் இனிப்பு மருந்துகள், வீரியம் மிக்க மற்ற மருந்துகள் ஆகியவற்றை விடவும் நல்ல பலன் தருகின்றன.

இவற்றால் ஏற்படும் சிக்கல்கள் மிகவும் குறைவே. குழந்தைகளின் வயிற்றுப் போக்குக்குத் தாய்மார்கள் தருகிற கஷாயங்கள் அல்லது பானங்கள் வேறெந்த நவீன மருந்துகளை விடவும் சிறந்தவை; பாதுகாப்பானவை. வயிற்றுப்போக்கால் சிரமப்படும் குழந்தை அதிக அளவில் திரவத்தை உட்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

வீட்டு வைத்திய முறைகளின் வரம்பு  :

சில நோய்களுக்கே வீட்டு மருந்துகள் உதவுகின்றன. மற்ற நோய்களை நவீன மருத்துவ முறைகள் மூலம், மேலும் சிறப்பாகக் குணப்படுத்த முடியும். இது பெரும்பாலான தொற்றுகளுக்குப் பொருந்தும். நிமோனியா, தசைவிறைப்பு ஜன்னி, டைஃபாய்டு, காசநோய், குடல்வால் அழற்சி, பால் வினைத் தொற்றுகள், பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படுகிற காய்ச்சல் போன்றவற்றை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக நவீன மருத்துவ முறைகளைக் கொண்டு குணப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நோய்களை முதலில் வீட்டு மருந்துகள் மூலம் மாத்திரமே குணப்படுத்த முயன்று காலத்தை வீணாக்காதீர்கள். சில சமயங்களில் வீட்டு வைத்தியத்தில் எது நல்ல பலன் தரும், எது பலன் தராது என்பதை உறுதி செய்துகொள்வது கடினம். இது குறித்து அதிக கவனத் துடன்கூடிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

பழைய வழிமுறைகளும் புதிய வழிமுறைகளும்  :

சில நவீன சுகாதார வழிமுறைகள் பழங்கால முறை களைவிடச் சிறந்தவை. ஆனால் சில சூழ்நிலைகளில் மரபு வழிமுறைகளே நல்லது. எடுத்துக் காட்டாக, குழந்தை அல்லது முதியோர் பராமரிப்பில் மரபு வழிவந்த முறைகள் பெரும்பாலும் அன்பு கலந்த அக்கறை உடையனவாகவும், நவீன முறைகளைவிட உறவின் நெருக்கம் மிகுந்தவையாகவும் இருக்கின்றன.

தாய்ப்பால்தான் சிறு குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு என்ற சரியான நம்பிக்கை அண்மைக் காலம்வரை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் புதிதாக வளர்ச்சி பெற்ற புட்டிப்பால் தயாரிக்கும் பெரிய வணிக நிறுவனங்கள், தாய்ப்பாலைவிட புட்டிப்பால் சிறந்தது என்றன.

இது உண்மை இல்லையென்றாலும் பெரும்பாலான தாய்மார்கள் இதை நம்பித் தங்கள் குழந்தைகளுக்கும் புட்டிப்பால் கொடுக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் தேவையின்றித் தொற்றுகளுக்கும் பசிக்கும் இலக்காகி மடிந்தன.

குணமளிக்கும் நம்பிக்கைகள்  :

வீட்டு மருந்துகளில் சில, உண்மையாகவே குணமளிக்கின்றன; மற்றவை, குணமளிப்பதைப் போல் தோன்றுகின்றன. காரணம், மக்களுக்கு அவற்றின் மீதுள்ள நம்பிக்கைதான். குணப்படுத்து வதில் நம்பிக்கைக்குள்ள சக்தி மிகவும் வலுவானது.

எடுத்துக் காட்டாக, மிகக் கடுமையான தலைவலியால் அவதிப்படும் ஒருவருக்கு தலைவலியைப் போக்க, ஒரு பெண் சேனைக் கிழங்குத் துண்டு ஒன்றைக் கொடுத்து, அது சக்தி வாய்ந்த வலி நிவாரணி என்று சொன்னாள். அவள் சொன்னதை அவர் நம்பினார்.

தலைவலி விரைவில் மறைந்தது. இங்கே அவருக்குக் குணம் அளித்தது அந்தப் பெண் கொடுத்த கிழங்குத் துண்டால் அல்ல; அந்தப் பெண்ணின் வைத்தியத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கைத்தான். வீட்டு மருந்துகளில் பல இவ்வாறே வேலை செய்கின்றன. இவற்றால் பெரும்பாலும் குணம் தெரிவதற்குக் காரணம், மக்களுக்கு அவற்றில் உள்ள நம்பிக்கையே.

மக்களின் மனபிராந்தி தொடர்புடைய நோய்களையும், கவலை, பயம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களையும் ஓரளவு குணப்படுத்துவதில் இத்தகைய நம்பிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கின்றன. இவ்வகை நோய்கள் எல்லாவற்றுக்கும் வைத்தியம் செய்வோரின் குணப்படுத்தும் முறை அல்லது `கைராசி' மிகவும் முக்கியமானது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் நோயாளியிடம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை நோயாளி உணருமாறு செய்வதும், அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரிடம் ஏற்பட அல்லது அவர் அமைதியடைய உதவுவதும்தான்.

உட்கொள்ளும் மருந்தில் வைத்திருக்கிற நம்பிக்கை மாத்திரமே, சில சமயங்களில் முற்றிலும் உடல் தொடர்பான கோளாறு களைக்கூடக் குணப் படுத்திவிடுகிறது. எடுத்துக்காட்டாக, கிராம மக்கள் விஷப்பாம்புக் கடிக்குப் பயன்படுத்தும் வைத்திய முறைகள்:

1. பாம்புக் கல்லைப் பயன் படுத்துவது; ஒருவித வேர் பயன் படுத்தப்படுவது. 2. கையளவு மிளகாய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுவது.
3. வாழைத்தண்டுச் சாறு நிறையக் குடிப்பது.

பாம்புக்கடிக்கு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துக்கின்றனர். நாம் அறிந்த வரையில் இந்த வகையான வீட்டு மருந்து எதுவுமே பாம்பு விஷத்தை முறிப்பதில்லை. பாம்பு விஷத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியது வீட்டு மருந்துதான் என்று ஒருவர் சொன்னால் அவரைக் கடித்தது விஷப் பாம்பாக இருந்திருக்காது.

இருந்தாலும் இவ்வகை வீட்டு மருந்தை ஒருவர் நம்பும் பட்சத்தில் அது சில நன்மைகளைச் செய்யலாம். இந்த நம்பிக்கை அவருடைய பயத்தைக் குறைப்பதால் நாடித்துடிப்பின் வேகமும், பதற்றமும், உடல் நடுக்கமும் குறையும். இதன் காரணமாக விஷம் அவருடைய உடலில் மெதுவாகவே பரவும். ஆகையால் அபாயம் குறைகிறது.

ஆனால் இவ்வகை வீட்டு மருந்துகள் ஓரளவு பலனையே தருகின்றன. இம்மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் பாம்புக் கடியினால் இன்னமும் பெரும்பாலானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றனர் அல்லது இறந்து போகின்றனர். பொதுவாகப் பாம்புக்கடிக்கு நவீன மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது. `பாம்புக்கடி விஷமுறிகள்' அல்லது `நிணநீர் மருந்துகளை' தேவை ஏற்படுவதற்கு முன்னரே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

காப்பகம்