Sunday, September 21, 2014

அரண்மனை (2014) - திரைவிமர்சனம்

ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.

அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் ராய் லட்சுமி ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.

இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை காமெடி கலந்து திரில்லராக மீதிக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சுந்தர்.சி அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் வினய். இரண்டு கதாநாயகன்கள் இருந்தாலும் நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை. ராய் லட்சுமி கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ஹன்சிகா.

சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்கிறது. மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இதுவரை காமெடி படங்களில் வெற்றி கண்டு வந்த இயக்குனர் சுந்தர்.சி, இப்படத்தில் காமெடியுடன் திரில்லரையும் சேர்த்து வெற்றி கண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் திரைக்கதை அமைத்து காமெடி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். அரண்மனை செட்டை அருமையாக அமைத்த கலை இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘அரண்மனை’ கலகலப்பான திகில் வீடு.

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூர் வடக்கு டி.தாசரஹள்ளி புவனேஸ்வரி நகரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தவர் லல்லன்குமார் (வயது 28). பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தும்கூர் ரோடு சோழதேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதே போல இவரது சகோதரி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் லதாகுமாரி(31). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால், லல்லன்குமாருக்கும், லதாகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17–ந் தேதி லல்லன்குமார் கல்லூரி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். தேர்வு நேரத்தில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என லல்லன்குமார், அவரிடம் கூறியுள்ளார்.

இருப்பினும் மீண்டும் மீண்டும் லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்த உறவு பற்றி உன் சகோதரியிடம் கூறிவிடுவேன் என்றும், மேலும் என்னை கற்பழித்ததாக போலீசில் புகார் தெரிவிப்பேன் எனவும் லல்லன்குமாரை, லதாகுமாரி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லல்லன்குமார், லதாகுமாரியை சமாதானப்படுத்தி அவருடன் உல்லாசம் அனுபவிப்பது போல நடித்து துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழதேவனஹள்ளி போலீசார் லல்லன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு விசாரணை பெங்களூர் முதன்மை சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொலை வழக்கில் நீதிபதி விஸ்வநாத் வி.அங்காடி தீர்ப்பு கூறினார். அதில், உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற லல்லன்குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆள் (2014) - திரைவிமர்சனம்

ஆமீர். சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல... அவருடைய காதலி.

சிக்கிமில் தனியாக வசித்து வரும் ஆமீருக்கு எப்படியாவது தனது குடும்பத்தை சிக்கிமிற்கு கொண்டு வந்து செட்டிலாகி விடவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பணியாற்றி வரும் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கிடையே சண்டை வருகிறது. முஸ்லீம் மாணவனான ரிஸ்வானை சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவன், தான் முஸ்லீம் என்பதால்தான் தன்னை சக மாணவர்கள் கேலியாகவும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள் என்று ஆமீரிடம் கூறுகிறான்.

இதனால் அவன்மீது இரக்கம் காட்டும் ஆமீர், அவனை தன்னுடன் வந்து தங்குமாறு கூறுகிறார். ரிஸ்வானும் அவருடன் வந்து தங்குகிறான். இருவரும் ஆசிரியர்-மாணவன் பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆமீர்-மீனாட்சியின் காதல் மீனாட்சியின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. அவர்கள் ஆமீரை சென்னை வந்து தங்களை சந்திக்குமாறு அழைக்கின்றனர். அதன்படி, ஆமீர் சென்னை போக ஆயத்தமாகிறான். தன்னுடைய காதலி பரிசாக அளித்த கோட்-சூட்டுடன் சென்னை புறப்பட்டு வருகிறான்.

சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கும் ஆமீருடைய செல்போன் சார்ஜ் இல்லாததால் தன்னை வரவேற்க வந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது, ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்து ஒரு செல்போனை இவரிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

அப்போது, அந்த செல்போனுக்கு ஒரு நம்பர் தெரியாத போனில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்து பேசும் ஆமீருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியான செய்தி என்ன? அந்த செல்போனால் அவன் என்னென்ன அவதிப்பட்டான்? என்பதே மீதிக்கதை.

ஆமீர் கதாபாத்திரத்தில் விதார்த், வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார். இதுவரை விதார்த்தை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கோர்ட்டும் சூட்டும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. கோபம், சோகம், அழுகை என இவரது முகத்தில் எல்லாமே சரளமாக வருகிறது.

ஆனால், தனக்கு இடையூறாக வரும் நபர்களை இவர் துரத்தும் காட்சிகளில்தான் ஓடமுடியாமல் தவித்திருக்கிறார். கடைசி காட்சியில் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

நாயகி கார்த்திகா ஷெட்டிக்கு படத்தில் சிறு வேடம்தான். ஒரு சில காட்சிகளே வருகிறார். அதனால் மனதில் நிற்கவில்லை. படத்தில் வில்லனாக வரும் விடியல் ராஜூவின் நடிப்புதான் பலே. உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிரட்டி பேசி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் நம்மை மிரட்டியிருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனின் பலவீனத்தை புரிந்து வைத்துக்கொண்டு அவனை வைத்து தீவிரவாதிகள் தங்கள் காரியங்களை எப்படி சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ள இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுக்கு சபாஷ். படத்தின் முதல்பாதி சற்று தொய்வுதான். ஆனால், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. அதே விறுவிறுப்பை இறுதிவரை மாறாமல் கொடுத்திருப்பது இயக்குனரின் தனி சிறப்பு.

உதய்குமார் ஒளிப்பதிவில் சிக்கிமின் அழகை அழகாக படமாக்கியிருப்பது சிறப்பு. மலையில் அடுக்குமாடி வீடுகளை தனது கேமராவால் அழகாக படமாக்கியிருக்கிறார். கதையை விறுவிறுப்பாக நகர்த்த இவரது கேமராவும் உதவியிருக்கிறது. ஜான் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘ஆள்’ அழகுராஜா.

'வேலியே பயிரை மேய்ந்தது:' பெண்களை வைத்து விபசாரம்; போலீஸ்காரர் கைது...!

நகரில் பல இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்த போலீஸ்காரர் செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருபவர் பாலமுருகன் (வயது 23). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ஆகும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு கடலூர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது மதுரை மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரிமுத்து (34) என்பவர் பேச்சு கொடுத்தார். தனது வீட்டில் அழகிய பெண்கள் இருப்பதாகவும், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி பாலமுருகனை அழைத்து வந்ததாக தெரிகிறது. அங்கு வந்த அவர் பெண்களுடன் செல்ல மறுத்ததுடன் இதுகுறித்து செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து புரோக்கர் மாரிமுத்து, அவரது வீட்டில் இருந்த சதீஷ் மனைவி கலைச்செல்வி(37), கார்த்தி மனைவி பிரியா (எ) ராதா(32) ஆகிய 3 பேரை¬யும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலர் பாலமுருகன் என்பவர் மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்தது தான் இதற்கு காரணம். இதேபோன்று நகரில் பல இடங்களில் வாடகை வீடு பிடித்து இந்த தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்லூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் உண்மை என்று தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் போலீசாரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டிய போலீஸ்காரரே பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காப்பகம்