Wednesday, October 2, 2013

மன அழுத்தம் -சமாளிப்பது எப்படி?


 Work, home, and all the girls carry a double burden that is vatanikal asta.



ஸ்ட்ரெஸ் எனும் சீரியஸ் பிரச்னை!

வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கும் எல்லாப் பெண்களுமே அஷ்டாவதானிகள்தான். குடும்பத்துக்காக வேலையையோ,  வேலைக்காக  குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த அவர்களுக்கு, தம்மையும்  கவனித்துக் கொள்ள  வேண்டும் என்பது மட்டும் ஏனோ மறந்து விடுகிறது. ‘முடியலியே...’ எனப் புலம்பிக் கொண்டாவது முடியாத  காரியங்களையும் முடித்துவிட்டு  அடுத்த வேலையைப் பார்க்கிற அவர்களுக்குத் தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன  அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. அதை அப்படியே  விட்டால் அடுத்தடுத்து தொடரப் போகிற அவதிகளையும் அறியாத அவர்களை  எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?

‘ஐயோ.... என்னால சமாளிக்க முடியலையே...’ என்கிற நினைப்புதான் ஆரம்பம். ‘என் குழந்தைங்களுக்கு என்னால சரியான அம் மாவா இருக்க  முடியலை. வேலையிடத்துலயும் என்னால சரியான நேரத்துக்கு வேலைகளை முடிக்க முடியலை... நான் என்ன பண் ணப் போறேன்...’ என்கிற  புலம்பல்கள் அடிக்கடி வந்தால், சந்தேகமே இல்லை. உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வந்து விட்டது. படபடப்பு,  அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத  பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள்.

யாருக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் வரும்?

வேலையையும் வீட்டையும் கவனிக்கிற ஒவ்வொரு பெண்ணுமே அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங் களிலும் 100  சதவிகிதம் பர்ஃபெக்ஷனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் ஸ்ட்ரெஸ் வருகிறது. வேலைக்கும் போய்க் கொண்டு,  வீட்டையும் பார்ப்பது என்றால்,  கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருக்கும். ஏதோ சமாளித்தால் போதும் என நினைக்கிற பெண்களுக்கு ஸ்ட்ரெஸ்  வருவதில்லை.

எப்படிச் சமாளிப்பது?

வேலையிடத்தில்...

வீடு, வேலை என இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்கப் பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை  உங்கள் திறமைக்கான ஒரு வடிகாலாகப் பாருங்கள். படித்திருந்தும், ஒரு ஹவுஸ்ஒயிஃபாக நேரம் போக்கா மலிருக்க, வேலை உங்களுக்கு ஒரு  ஆறுதல். எனவே வேலை, வேலை என எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும்,  அதிகமாக சம்பாதிக்க வேண்டும், பிள்ளைகளை  மிகச் சிறந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண் டும் என்கிற அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த  ஆசைகளைத் தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக  வேண்டும்.

வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு அதிக பட்ச கால ஒழுக்கம் அவசியம். வீட்டில் இருப்பவர்கள் என்றால் நேரத்தை தன் வசமாக் கிக் கொள்ளலாம்.  வேலைக்குச் செல்கிற வர்களுக்கு நேர நிர்வாகம் மிக முக்கியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து  வீட்டாருக்கு எத்தனை  மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ,  டி.வியோ, வேலைக்குச் செல்கிறவர்களின்  களைப்பை நீக்கிப் புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உல கத்தை மறக்கும் அளவுக்கு அதிலேயே மூழ்கக்கூடாது.

வேலையிடத்தில் கூடியவரையில் வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள் உங்கள்  ஸ்ட்ரெஸ்சை  அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். சக ஊழியர்களின் அந்தரங்க விஷயங் களில் பட்டும், படாமலும்  இருப்பதுதான் நல்லது. வேலையிடத்தில் நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு மணித்துளியும் ஆக்கப்பூர்வமாக  இருந்துவிட்டால், வேலை நேரம்  முடிந்தும் அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற அனாவசிய டென்ஷன் இருக்காது.

வீட்டில்...

வேலைக்குச் செல்கிற பெரும்பாலான பெண்களை, அவர்களது கணவர்களும், கணவர் வீட்டாரும் விரோதியாகவே பார்ப்பது சகஜம்.  ‘வேலைக்குப்  போற திமிரு’, ‘சம்பாதிக்கிற கொழுப்பு’ என்கிற விமர்சனங்கள் சர்வசாதாரணமாக வரும். அவற்றைப் பெரிது படுத்த  வேண்டாம். கணவர், அவரது  பெற்றோர், கணவரது உடன்பிறப்புகள் என உங்களுக்கு நெருங்கிய வட்டத்துடன் நல்ல நட்பை வளர்த் துக் கொள்வதுதான் முதல் தீர்வு. வேலைக்குச்  செல்கிற எல்லா பெண்களுக்கும், குழந்தைகளை யார் பொறுப்பில் விடுவது என்கிற  கவலை பெரிதாக இருக்கும். பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்னை  என்றால், பெற்றோருக்கு அடுத்து, உடனடியாக தாத்தா- பாட்டி களின் மனசுதான் பதறும். எனவே அம்மா - அப்பா அல்லது மாமனார் - மாமியாரின்  தயவைத் தக்க வைத்துக் கொள்ளும்  டெக்னிக்கை கற்று வைத்திருப்பது நலம். சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அவர்களிடம் கொடுத்து,  தேவையானதை வாங்கிக்  கொள்ளச் சொல்லலாம். இன்னும் ஒருபடி மேலே போய், மொத்த சம்பளத்தையும்கூட அவர்களிடமே கொடுத்துவிட்டு,   தேவைக்கேற்ப அவ்வப்போது பணம் வாங்கிக் கொள்ளலாம். அன்பாலும், பொறுப்பாலும் கட்டிப்போடுகிற இந்த டெக்னிக், உங்களு டைய பலவிதமான  மன அழுத்தங்களை காணாமல் போகச் செய்யும்.

வேலை முடிந்து களைப்பாக வருவீர்கள்... அதுவரை குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட களைப்பில், சலிப்பில், விட்டால் போதும்  என உங்களிடம்  பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு, வெளியே போவார்கள் பெரியவர்கள். காபி போட்டுக் கொடுக்கக்கூட ஆளிருக் காது. ‘என்ன சம்பாதிச்சு என்ன  சுகத்தைக் கண்டோம்.... என்ன வாழ்க்கை’ என அலுப்பு வருவது இயற்கைதான். அதை கோபமாக  வார்த்தைகளிலோ, செயல்களிலோ யாரிடமும்  வெளிப்படுத்தாதீர்கள். அம்மான்னாலே இப்படித்தான்.... எரிஞ்சு விழுவாங்க’ என்கிற  எண்ணம் உங்கள் பிள்ளைகளுக்குப் பதிந்து விடும். நீங்கள்  வேலைக்குப் போகத்தானே உங்கள் பிள்ளைகளை அவர்கள் பார்த்துக்  கொள்கிறார்கள்... அவர்கள் உதவியின்றி அது உங்களுக்கு சாத்தியமாகுமா என  மாற்றி யோசித்துப் பாருங்கள். கோபத்தை ஓரங்கட்டி  விட்டு, அவர்களுக்கும் ஒரு கப் காபி கொடுத்து விட்டு, நீங்களும் காலை நீட்டிக் கொண்டு காபி  குடியுங்கள். அரக்க, பரக்க அடுத்த  வேலைகளைப் பார்க்க ஓடாமல், 10 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.

கணவருக்கும், உங்களுக்குமான தாம்பத்ய உறவை சுமுகமாக வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். சின்னச் சின்ன ஸ்பரிசமும், அரவ ணைப்பும்  முத்தமும் ஸ்ட்ரெஸ்சை பெரியளவில் விரட்டியடிக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஸ்ட்ரெஸ்சை விரட்டுவதில்  உங்கள் பாடி  லேங்வேஜுக்கும் இடமுண்டு. முடிந்த போதெல்லாம் உங்கள் குழந்தைகளைக் கட்டியணைத்து, முத்தமிடுங்கள். கணவன்  உள்பட யாரிடமும், உதட்டுச்  சுழிப்பிலோ, கண் அசைவிலோ கோபத்தையோ, வெறுப்பையோ வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் எத் தனை பெரிய பொறுப்பில், பதவியில் இருந்தாலும்,  வீட்டுக்குள் அன்பான மனைவி யாக, எளிமையான அம்மாவாக உங்கள் ரோலை  முழுமையாக அனுபவியுங்கள்.

உங்களையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்...


முடியாத வேலைகளுக்கு ‘நோ’ சொல்லத் தயங்காதீர்கள். டென்ஷன் எல்லை மீறும் போது, ஓய்வெடுக்கத் தயங்காதீர்கள். வேலையிடத்தில்  உங்களுக்கு அனுமதிக்கப்படுகிற விடுப்புகளை அவ் வப்போது எடுத்து விடுங்கள். லீவே எடுக்காமல் போய், கிரீடம் சுமப்பதில் மட்டுமே சுகம்  காணாதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும்  லீவு ஒரே ஒரு நாளாக இல்லாமல், 36 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இருந்தால்தான் உங்களை  ரீசார்ஜ் செய்யும்.

ஓய்வு நேரத்தில் உங்களுக்குப் பிடித்தவற்றை மட்டுமே செய்யுங்கள். அது உங்கள் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதா கவோ, உங்களுக்கு  மிகப் பிடித்த இசையைக் கேட்பதாகவோ, பார்லர் சென்று அழகுப் படுத்திக் கொள்வதாகவோ, பழைய தோழி களை சந்திப்பதாகவோ எதுவாகவும்  இருக்கலாம். வீட்டிலிருக்கும் பெண்கள் 10 சேலையோ, சல்வாரோ வைத்திருக்கிறார்கள் என் றால், உங்களுக்கு 20 செட்டாவது தேவை.

‘சம்பாதிக்கிற காசெல்லாம் இவ டிரெஸ்சுக்கும், மேக்கப்புக்குமே போகுது’ என யாராவது பேசினாலும், காதில் போட்டுக் கொள்ளா தீர்கள். நல்ல  உடையும், ஆபரணங்களும்கூட உங்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத் தரும். இவற்றை எல்லாம் கடந்தும், உங்களுக்கு  ஸ்ட்ரெஸ் இருந்தால்,  மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் கவுன்சலிங் போகலாம். மூன்றாவது நபரிடம் மனதில் உள்ளதை  எல்லாம் கொட்டும் போது பெரிய  ஆறுதல் கிடைக்கும்.

அதற்கும் அடங்காத ஸ்ட்ரெஸ் என்றால் மனநல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.  தொடர்ந்து ஒரு  குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற மருந்துகள், ஸ்ட்ரெஸ் அதிகரிக்கிற போது மட்டும் எடுத்துக்கொள்கிற  மருந்துகள் என எத்தனையோ  உண்டு. மருந்து, மாத்திரையா என அலற வேண்டாம். மழைக்குக் குடை பிடிப்பது மாதிரி, இதுவும்  ஒருவகையான பாதுகாப்புதான்.

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!


 Here are some things karutiye public interest. Questions been expressed. Responsible for answering to the state, there will be   medical.


எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.

சந்தேகத்துக்கான விதை:

அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச  அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய்த் தடுப்புக்கு பல்வேறு வகைகளை  சுட்டிக்காட்டினாலும் குழந்தை பருவத்திலிருந்து தடுப்பூசிகள் போடுவது அடிப்படையானது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப இதன் தன்மை  மாறுபடும். எழுநூறு கோடிக்கும் மேல் இன்று உலக மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா இரண்டாவது இடத்தில்  இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசி சந்தையின் மதிப்பு 275 மில்லியன் டாலர். சந்தேகம் இங்கேதான் எழுகிறது.

இந்திய மருத்துவத்துறை - 1990க்கு முன்:


மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துகள் உற்பத்தியில் உலகிலேயே இன்று இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார்  200 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவின் மருந்துகளை நம்பித்தான் இருக்கின்றன.  (இன்னொரு பக்கம் இதே இந்தியாவில்தான் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் எந்தவிதமான மருந்துகளையும் வாங்க முடியாதவர்களாக ஏழ்மையில்  இருக்கின்றனர். எவ்வளவு பெரிய முரண்!) இதற்கு காரணங்கள் மூன்று. 1. இந்திய காப்புரிமை சட்டம், 1970. 2. பொதுத்துறை நிறுவனங்கள். 3.  1978ல் உருவாக்கப்பட்ட மருத்துவ கொள்கை. ஆங்கிலேயர் ஆட்சியில்1911ல்  உருவாக்கப்பட்ட தயாரிப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு பன்னாட்டு  நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதிக்கப்பட்டன.

அதுநாள் வரை இருந்த மருந்துக்கான காப்புரிமை (றிக்ஷீஷீபீuநீt  றிணீtமீஸீt) செய்முறைக்கான காப்புரிமையாக (றிக்ஷீஷீநீமீss  றிணீtமீஸீt)  மாற்றப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்  வெவ்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில்  சரிவு ஏற்பட்டது.  சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்., எச்.ஏ.எல். ஆகியவை மருந்துகளை  உடனுக்குடன் கிடைக்க வழிசெய்தன.

ஸோ... வேறுவழியின்றி பன்னாட்டு மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்தனர். 1978ல்  உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கை இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் சாதகமான பல அம்சங்களை கொண்டு  வந்தது. அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த 374 மருந்துகளும் விலைக் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்  குறைந்து 25 சதவிகிதத்துக்கு வந்து நின்றது.

இந்திய மருத்துவத்துறை - 1990க்குப் பின்:


இந்திய மருத்துவத்துறையின் அபார வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த மூன்று காரணங்களும் 1990க்குப் பின் மெல்ல மெல்ல தேய்ந்துவிட்டன.  பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நீர்த்து போய்விட்டது. ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் உற்பத்தி இல்லை. ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில்  மிகக் குறைந்த அளவில் உற்பத்தி தொடர்ந்தது. 1978ல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கைகளில், 1986, 1994, 2001ல் திருத்தங்கள்  செய்யப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டன. உலக வர்த்தக நிறுவனத்தில் கையெழுத்திட்டு வர்த்தகம் சார்ந்த அறிவுசார்  சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாலும், 1970ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தில் ஒரு மாற்றத்தை 2005ல் கொண்டு வந்ததாலும்  வெளிநாட்டில் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடியாமல் போனது.

இதனால்தான் இன்று மருந்துகள் சராசரி இந்திய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டன. மருந்துகளின் மீதான கட்டுப்பாடு மெல்ல மெல்ல தளர்ந்து  வருவதால், அனைவருக்கும் மருந்து என்பது இப்போது சாத்தியமில்லை. தவிர, மனித ஆரோக்கியத்துக்கான பராமரிப்பில் சுமார் 80 சதவிகிதம்  மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அடித்தட்டு மக்களே. சுகாதாரம்  இல்லாத சுற்றுச்சூழல், மறுக்கப்படும் அடிப்படை வசதிகள், சுத்தமில்லாத குடிநீர் என அன்றாட பிரச்னைகளுடன் மருந்து விலையும் மக்களை  அதளபாதாளத்துக்கு தள்ளியிருக்கிறது.

மருந்துத் துறையில் தாராளமயம் புகுந்துவிட்டதால், அத்தியாவசியமான மருந்துகளின் உற்பத்தி குறைந்து விட்டது. பதிலாக தேவையற்ற  மருந்துகளின் உற்பத்தி அதிகரித்துவிட்டது. இதனால் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை விண்ணைத் தொட்டிருக்கிறது.சுருக்கமாக சொல்வதெனில் இந்திய மருத்துவத்துறை இப்போது உற்பத்தியிலிருந்து விலகி வர்த்தகத்துக்கு மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக பெரும்  சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 50  சதவிகித இந்திய மக்களுக்கு தேவைக்கேற்ப மருந்து கிடைக்கவில்லை.

காணாமல் போகும் இந்திய நிறுவனங்கள்:


பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களை அடுத்தடுத்து இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. சில உதாரணங்கள்.  மேட்ரிக்ஸ் லாப்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மைலன் வாங்கியிருக்கிறது. போலவே டாபர் பார்மா நிறுவனத்தை  சிங்கப்பூரை சேர்ந்த பெரசீனியஸ் கேபியும், ரான்பாக்சியை ஜப்பானை சேர்ந்த டாய்ச்சி சான்க்கியோவும், சாந்தா பையோடெக் நிறுவனத்தை பிரான்சை  சேர்ந்த சனோபி அவெண்டிஸ்ஸும், ஆர்க்சிட் கெமிக்கல்சை அமெரிக்காவை சேர்ந்த ஹாஸ்பிராவும், பிரமல் ஹெல்த் கேரை அமெரிக்காவை சேர்ந்த  அப்பாட்டும் வாங்கியிருக்கின்றன.

இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி:


சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் மருத்துவத்துறை வளர்ச்சியில் தடுப்பூசி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை இறப்பில் அபாயகரமான நிலையில் இருந்த நம் நாட்டை காப்பாற்றியது சுயேட்சையான, சுயசார்பான மருந்து  கொள்கைகள்தான். உதாரணமாக 1967 - 1977ம் ஆண்டுகளில் கடும் முயற்சியால் போலியோ சொட்டு மருந்து குன்னூரில் உள்ள பாஸ்டர் இந்தியா  நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால், பின்னாட்களில் இந்திய அரசு தயாரிப்பை ஏதேதோ காரணங்கள் சொல்லி முடக்கி வைத்தது. அதற்கு பின்னர்  1987ல் மும்பையில் உள்ள ஹாப்கின்ஸ் நிறுவனம் போலியோ சொட்டு மருந்தை தயாரித்தது. இதையும் ஒரு கட்டத்தில் இந்திய அரசு நிறுத்தச்  சொன்னது.

இதன் பின்னர் 1988ல் மத்திய அரசு ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியது. அந்நிறுவனத்தால் முழு உற்பத்தியும் செய்ய முடியவில்லை.  தேவைக்கேற்ப கொடுக்க முடியவில்லை. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. என்றாலும் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்த ஆர்டர்கள்  குறையவில்லை. பதிலாக அதிகரித்தன. 1989ல் குர்கானில் தொடங்கப்பட்ட மிக்ஷிசிளிலி நிறுவனம் (பிரெஞ்சு தொழில்நுட்ப உதவி) தட்டம்மை  தடுப்பூசி தயாரிப்புக்கான வேலையில் இறங்கின. ஆனால், பிரான்ஸ் அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாமல்  போனதால், போடப்பட்ட மூலதனம் மொத்தமும் விரயமாகி, ஒரு கட்டத்தில் இந்த நிறுவனமும் மூடப்பட்டது.

இதனால் நம் நாட்டில் இருந்த தட்டம்மை தடுப்பு மருந்து தேவையை தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்தன.  மொத்தத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளபடி உலக தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தாராளமாக கிடைப்பதில்லை.  ஒரு தட்டுப்பாடு நிலவியபடியே இருக்கிறது. இது செயற்கையான தட்டுப்பாடு. இதுவும் 1990க்கு பிறகுதான் தொடங்கியது. தாராளமயம்  அறிமுகப்படுத்தப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான் என்பதை நினைவில் கொள்க. 1998 - 2001 காலத்துக்குள் மக்களின் அடிப்படை  தேவைகளுக்காக கொடுக்கப்படும் பாரம்பரியமிக்க தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைத்துவிட்டு, அதிக லாபம் தரக்கூடிய தடுப்பூசிகள் சந்தைக்கு வரத்  தொடங்கியது. இதற்காகவே 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு இந்தியாவில் மூடப்பட்டன. இந்திய மக்கள் சக்கையாக  பிழியப்பட்டார்கள். இது உலக நாடுகளிலும் எதிரொலித்தது.

காரணம், இந்திய உற்பத்தியாளர்களில் பெரும்பான்மையினர் - அதாவது, 9 நிறுவனங்கள் - உலக மக்களின் தேவைகளுக்காக தடுப்பூசி மருந்துகளை  உற்பத்தி செய்து வந்தவர்கள்தான். இதில் எட்டு பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் லாபகரமான தடுப்பூசிகள், இந்திய  நாட்டு அட்டவணையில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டன. வலுக்கட்டாயமாக மக்களும், குழந்தைகளும் இதை போட்டுக் கொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டன, செய்யப்பட்டும் வருகின்றன.

ஆபத்தான தடுப்பூசிகள்:

உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் கொடூரமான ரசாயன விஷங்கள் கலக்கப்பட்ட தடுப்பூசிகளை யாருக்கும் போடக் கூடாது என்று  எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், லாபம் சம்பாதிப்பதற்காக அவைகள் இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளில் சர்வசாதாரணமாக புழங்குவதாக சொல்கிறார்கள். எனவே, நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் கீழ்க்கண்ட ரசாயன நச்சுகள் அதில்  இருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை சரிபாருங்கள். குடும்ப மருத்துவர்களின் உதவியை நாடுங்கள்.

அமோனியம் சல்பேட் - வயிறு, குடல் கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்று  நோய்களை ஏற்படுத்தும்; லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பை உண்டாக்கும்;  எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை  உண்டாகும்; அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா உண்டாகும்; ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோயை  உண்டாக்கும்; டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்;

குளுதரால்டிஹைட் - பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் - ஒவ்வாமை; பாலிமைக்சின் பி பாதரசம் -  வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் கருதப்படுகிறது. மூளை, நரம்பு களில் பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாக கருவில் வளரும்  சிசுவை அடையும்; நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும். மூளை வளர்ச்சி குறைப்பாட்டை உண்டாக்கும்;  பினால் (கார்பாலிக் அமிலம் / எதிலின்கிளைகால் / பினோஜைதனால்) - செல்களை பாதிக்கும் விஷம்.

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது



அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா இராணுவத்தலைமையகமான பெண்டகன் அதன் 10 பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ஒத்துக்கொண்டிருப்பதாக இந்திய தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து இந்திய தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்,  விரைவில் அந்த தொழில் நுட்பங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுடன் அடுத்தடுத்து பகிர்ந்துகொள்வதற்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய அமெரிக்க துணை ராணுவ மந்திரி அஷ்டன் கார்டர், ஒபாமா நிர்வாகம் இப்பொழுது குரூப்-8 நாடுகளின் பட்டியிலில் இந்தியாவை இணைத்துள்ளது என்று கூறினார். இந்த நாடுகள் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை வணிக நோக்கில் அல்லாமல் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கைகளால் பலன்...(நீதிக்கதை)!





ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....

" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.

ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.

மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.

மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.

நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.

புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.

தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...

"நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.

ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதை

பிறருக்கு வழங்கி வாழ்தலுமே நன்மை பயக்கும்" என்றார்.
 
 

ஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு!




சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது.


அக்கால கட்டத்தில் சென்னை மகாண வைசிராயாக இருப்பவர்கள் கோடை காலத்தில் ஊட்டிக்கு வந்து தங்கி ஒய்வு எடுப்பதற்காகவும், அரசு பணிகளை கவனிக்க இந்த மாளிகை கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 633 மதிப்பில் இம்மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு கூடுதல் அறை கட்டப்பட்டது. 1904ம் ஆண்டு இந்த மாளிகை முழுவதும் மின்சார இணைப்பு வசதி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இதற்கு ராஜ்பவன் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இம்மாளிகை தமிழக ஆளுநர் மாளிகையாக அறிவிக்கப்பட்டது.



தமிழக கவர்னர் அல்லது இந்திய குடியரசு தலைவர் ஆகியோர் ஊட்டி வந்தால் இங்கு தான் தங்குகின்றனர்.முன்பு தமிழகத்திற்கு ஆளுநராக வருபவர்கள் பலர் கோடை காலங்களில் அதிக நாள் இங்கிருந்தே நிர்வாகத்தை கவனித்துள்ளனர். மற்ற அரசியல் தலைவர்கள் அல்லது அரசு உயர்பதவிகளில் உள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.  இந்த மாளிகையில் 17 அறை உள்ளது. வரவேற்பு அறையில் பல்வேறு வகையான ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையை சாதாரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கவோ, புகைப்படமோ எடுக்க அனுமதிப்பது இல்லை.


மிஷ்கினுடன் இணையும் கமல்!



இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்க்கும் திட்டத்தில் உள்ளாராம் உலக நாயகன்.


கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.


முகமூடி தோல்வியால் வருத்தப்பட்ட மிஷ்கினை, இந்தப் படத்தின் வெற்றியானது மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
பாடல்களே இல்லை, முக்கியமாக மிஷ்கினின் குத்துப்பாட்டு இல்லை, கதாநாயகி இல்லை. என பல இல்லை'கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய முத்திரையைப் பதித்திருக்கிறது.



சமீபத்தில் கமல்ஹாசனை பிரசாத் ஸ்டுடியோவுக்கு பிரத்யேகமாக அழைத்த இளையராஜா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.



முழு படத்தையும் பார்த்து மிரண்டுபோன கமல் நெகிழ்ந்துபோய் மிஷ்கினைப் பாராட்டி கங்கிராட்ஸ் சொல்லி இருக்கிறார்.


அதுமட்டுமில்லை சீக்கிரமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் செய்வோம் என்று சொல்லி மிஷ்கினை மகிழ்ச்சியில் மிதக்க வைத்துள்ளாராம் கமல்.

போலிஸ் அவதாரம்! சிவகார்த்திகேயன்!




கொமடி கதாபாத்திரத்தில் இருந்து பொலிஸ் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.       


கொமடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன்.


அப்படியே ஒரே மாதிரி   நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். நடிப்பவருக்கும் சலிப்பு தட்டிவிடும்.


இதனை நன்கு புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் இப்போது ஓசைப்படாமல் தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார்.


இப்படி அவர் தடாலடியாக ஆக்‌ஷன் ரூட்டில் இறங்க, சினிமாவில் அவரது குருநாதரான தனுஷ் தான் காரணம்.


எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷே இந்தப்படத்தையும் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசைக்கு அனிருத், காமெடிக்கு சதீஷ் எனஎதிர்நீச்சல் டீம் அப்படியே இதிலும் களம் இறங்குகிறது.
கதாநாயகியாக நடிக்கத்தான் ஒரு முன்னணி நாயகியை தேடிவருகிறார்கள்.

மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!


தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.


ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, நிகழ்வுகளைப் பார்க்கும்போதோ அவை உள்ளது உள்ளவாறே மனதில் பதிந்துவிடும்.


2 - paper reading

 



நாளிதழ்களில் மேம்போக்காக தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டுச் செல்வதைத் தவிர்த்து, சற்று உன்னிப்பாகப் படித்தால் பல புதிய சொற்களையும், சொற்றொடர்களையும், பயன்பாடுகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.


அரசியல் தொடங்கி அறிவியல் வரை ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பல புதிய சொற்கள் உருவாகின்றன. தொடர்ந்து படித்தால்தான் அவ்வப்போது அறிமுகமாகின்ற புதிய சொற்களைப் புரிந்துகொள்ள முடியும். “அதற்கெல்லாம் தேவையில்லை’, “வாசித்து என்ன ஆகப்போகிறது?’ அவ்வப்போது இணையதளங்களில் பார்த்துவிடுகின்றோம்’ என்றெல்லாம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.


அறிவியல், பக்தி, சோதிடம், திரைப்படம் வேலை வாய்ப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகள் வெளிவரும் நாள்கள் மட்டுமே செய்தித்தாளை வாங்குவதை விட்டு அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செய்தித்தாளை தெரிவு செய்து, அதனை தினமும் படிப்பதை நடைமுறையில் கொள்வது நல்லது. அப்பொழுதுதான் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும். என்றாவது ஒருநாள் படிக்காமல் விட்டுவிட்டால் அன்று வந்திருந்த முக்கியமான செய்தியையோ, கட்டுரையையோ நாம் இழக்க நேரிடும். கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ தினமும் 300 பக்கங்களுக்கு மிகாமல் உலகச் செய்திகளைப் படிப்பாராம்.


பல அரசியல் பிரமுகர்களும், வேறு பல துறையைச் சார்ந்தவர்களும் தினமும் படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள்ளூர் செய்தி தொடங்கி உலகச் செய்திகள் வரையில் அறிய, நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது நாளிதழைப் படிப்பதற்காக ஒதுக்குவது நல்லது.


அவ்வாறே நூல் படிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். கதைகள், கட்டுரைகள், சாதனையாளர்களின் வரலாறு, ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல், பயணக்கட்டுரைகள் என பலவகையான நூல்கள் உள்ளன. சார்லி சாப்ளினுக்கு புதிய சொற்கள் மேல் அலாதிப் பிரியம் என்றும், தினமும் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார் என்றும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவார் என்றும் கூறுவர். அவர் தன்னுடைய சுயசரிதையில் அதிகமான புதிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூல் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளும் முன்பாக எந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஐயம் மனதில் தோன்றும். பல நூல்களைப் படிக்கப் படிக்க நாளடைவில் தானாகவே எந்த நூலைப் படிப்பது என்ற தெளிவு கிடைத்துவிடும்.


நூல் என்பது நமக்கு சிறந்த நண்பன் என்பதை மனதில் கொண்டு, நாளிதழ் வாசிக்க நேரம் ஒதுக்குவதைப் போல தினமும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் ஏதாவது ஒரு நூலைப் படிப்பது நல்லது.


படிப்பதால் மனம் தெளிவாகிறது. நினைவாற்றல் பெருகுகிறது. நற்சிந்தனை மேம்படுகிறது. நாளிதழ்களைப் படிப்பதால் அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே நூல்களைப் படிக்கும்போது நமக்குள் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலிட ஆரம்பிக்கிறது.
ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம் வரலாறு படிப்பதோடு மட்டுமன்றி வரலாறு படைக்கவும் வேண்டும் என்று கூறுவாராம். அவ்வாறான உயரிய சிந்தனையை மனதில் வைத்து வரலாற்றைப் படைக்க முடியும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும்.


நாளிதழையோ, நூலையோ படித்து முடித்தபின்னர் நண்பர்களிடமும், குடும்பத்தாரிடமும் படித்தவை பற்றி விவாதிக்கலாம். அதன் மூலம் பல புதிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புதிய சொல், புதிய செய்தி, புதிய உத்தி, புதிய நடை, புதிய வரலாறு என்று ஒவ்வொரு நிலையிலும் ரசித்து ரசித்துப் படிக்கலாம்.


இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் வாசிப்புப் பழக்கத்தை இன்று முதல் தொடங்கலாம். நண்பர்களையும் இவ்விதப் பழக்கத்தை மேற்கொள்ள அறிவுறுத்தலாம். வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்கி, வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்கி நூல் எண்ணிக்கையைப் பெருக்கினால் வீடும் நாடும் வளம் பெறும்.

கர்ப்ப கால டயட்டும் உடற்பயிற்சியும்!



Diet and exercise in pregnancy



ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி என்பார்கள். காரணம் குழந்தையை கருவில் சுமக்கும் போது பெண்கள் உடல் ரீதியாகவும்  மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம்.


கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என்று ஆரம்பித்தார் உணவு ஆலாசகர் அம்பிகா சேகர். "முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம்,  சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது". எனவே மாதுளம் பழசாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து  குடித்து அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.



நான்கு முதல் ஆறு மாதம் வரையிலான காலத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகும். தவிர கர்ப்பகாலத்தில் இருக்கும்  குழந்தைகள் ஓட்டுண்ணிகள். அவை தனக்கு தேவையான ஆகாரத்தை அம்மாவின் உடலில் இருந்தே உறிந்துக் கொள்ளும் என்பதால் தேவைக்கு  அதிகமான போஷாக்கு உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும்.. குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம், இரும்பு மற்றும் இதர புரத சத்துகள் மிகவும்  அவசியம்.



பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், போன்றவற்றில் அதிக கால்சியம் சத்துகள் அடங்கியுள்ளது. தினமும் குறைந்த பட்சம் மூன்று  டம்ளர் பால் குடிப்பது அவசியம். கீரை வகை, பேரீட்சை, கேழ்வரகு, ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.   நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடலாம். தவிர எல்லா வகையான காய் மற்றும் பழங்களையும்  சாப்பிடவேண்டும். புரதசத்துக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட், வேர்க்கடலை, மீன், முட்டை, சாப்பிடலாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும்  உகந்தது.



ஆனால் கர்ப்ப காலத்தில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சராசரி எடையில் இருந்து பத்து முதல் பன்னிரெண்டு கிலோ  அதிகரிக்க வேண்டுமே தவிர அதற்கு மேல் எடை கூடக்கூடாது. கடைசி மூன்று மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடைகிறது. இந்த சமயத்தில்  தாயின் உடலில் அதிக நீர்ச்சத்து சேரும். அதனால் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்படும். எனவே உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.



படுக்கும் போது காலை உயர்த்தி வைத்து படுக்கலாம். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிடவேண்டும். ரசம் சாதம், பால் சாதம்  சாப்பிடலாம். பிறகு படுக்கும் முன் ஒரு தம்ளர் பால் அல்லது பழம் சாப்பிட்டு விட்டு படுக்கலாம். பொதுவாக கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது  இயல்பு என்பதால் தினமும் ஒரு பழம் மற்றும் நார்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும் என்றார் அம்பிகா சேகர். இப்படி உணவுகளில் கவனம்  செலுத்தினால் மட்டும் போதாது. கூடவே உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்றும் ஆரம்பித்தார் உடற்பயிற்சி நிபுணர் ராக்கி.



கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும்  அவசியம். அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது  சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உட்காரும்  போது சேரில் அமராமல் தரையில் உட்கார வேண்டும்.



காலை நீட்டி தரையில் அமர்வதால் இடுப்புக்கு பயிற்சி மற்றும் கால்வீக்கம் ஏற்படாது. கீழே அமர்ந்து எழும்போது தொடை மற்றும் கணுக்காலில்  உள்ள தசைகள் வலுவடையும். இரண்டு கால் பாதங்களும் ஒன்றாக சேரும்படி தரையில் ஐந்து நிமிடங்கள் அமர வேண்டும். இது தொடை மற்றும்  இடுப்பு தசைகளை வலுவடையச்செய்யும். இறுதியாக ஒன்று எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே  மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ராக்கி.      


பிரசவத்துக்கு பின் அழகாக எளிய உடற்பயிற்சிகள்!



Beautifully simple exercise after pregnancy



பத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந் தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.


குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். எனவே பிரசவம் முடிந்த  பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை  விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த அளவு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும்.  வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால் வேலை செய்பவர்களுக்கு 2000 கலோரிகள் தேவையாக இருக்கும்.



பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடு செய்ய  வேண்டும். அதற்கு கீரைகள், பேரிச்சை, கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேசர்த்துக்கொள்ள வேண் டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.



குழந்தைகள் ஒட்டுண்ணிகள். எனவே தாய்மார்களின் சரியாக சாப்பிட்டால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதற்காக  கண்ணில் தென்படுவதை எல்லாம் சாப்பிடக்கூடாது. கொழுப்புசத்துள்ள உணவுகளை தவிர்த்து புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



குழந்தைக்கு பால் புகட்டுவதால் கால்சியம் மற்றும் புரதசத்து, அதிகமாக தேவைப்படும். பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண் டு, இறால், சோளம், போன்றவற்றில் அதிக கால்சிய சத்துள்ளது. தினமும் குறைந்த பட்சம் இரண்டு தம்ளர் பால் குடிப்பது  அவசியம். பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டையில் புரதசத்துகள் உள்ளன. இவை பால் சுரக்கவும்  உதவக்கூடியவை.



தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பால் புகட்டும் முன் ஒரு சொம்பு  நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும்.  கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இரு ப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத் துள்ள உணவுகள், கிழங்கு வகைகள், மற்றும் தேங்காய், போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு  போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.



எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு, போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம். வேப்பிலை பொடி, சுண்டைக்காய் பொடி மற்றும் நார்த்த இலையை பொடி செய்து  தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். இது அஜீரண  பிரச்சனைக்கு நல்ல மருந்து. சில பெண்கள் பால் சுரக்காமல் அவதிபடுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.



இப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போலவே சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், வீட்டு வேலைகள் செய்யலாம்.அறுவை சிகிச்சை என்றால் மூன்று மாதம் கழித்து உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனையுடன் செய்யலாம்.



சில எளிய உடற்பயிற்சிகள்



மல்லாந்து படுத்துக்கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். பிறகு இடது காலை மேலே உயர்த்த வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இது போல் தினமும் பத்து முறை செய்யலாம். வயிறு உப்புசம் குறையும். நின்றுக் கொண்டு இரண்டு கை விரல்களும் கால் விரல்களும் தொடும் அளவு குனிய வேண்டும்.



பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இடுப்பு பகுதிக்கு இது நல்ல பயிற்சி. மேசை மேல் அமர்ந்து வேலை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்யும் போது அது பெல்விக் மற்றும் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். அதாவது கீழே அமர்ந்து சாப்பிடலாம், காய்கறி நறுக்கலாம், இது போன்ற வேலைகளை கீழே அமர்ந்து செய்யலாம். நேரம் இருந்தால் குழந்தை பிறந்து ஐந்து மாதம் கழித்து நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.


உயிர் தியாகத்தில் உருவான அமராவதி அணை!





திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.


சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் அப்போதைய உடுமலை தாலுகாவின் கிழக்கு பகுதி, தாராபுரம், கரூர் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அங்குள்ள மண் வளத்திற்கு நெல் விளையும் பூமியாகவே மாற்றமுடியும் என பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.



அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி 1953ம் ஆண்டு அணை கட்டும் பணிகள் துவங்கின. பாதி பணிகள் முடிவடைந்திருந்தது. நான்கு பணியாளர்கள் அணை கட்ட தேவையான கற்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கட்டுமானம் நடந்த இடத்திற்கு சென்றனர்.



அதே வண்டியில் பயணம் செய்த துணை பொறியாளர் பார்த்தசாரதி, பணியாளர்கள் அந்தோணி, ஏசைய்யா, பழனிச்சாமி கவுண்டர், ஆறுமுகம் என 4  பேர் பயணம் செய்துள்ளார். திடீரென அந்த வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பணியாளர்களும், பொறியாளரும் கற்களுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்தனர்.  திடீரென ஒரு நாள் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.



பின்னர் ஒரு வழியாக 1957ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவுகள் காலம் முழுவதும் அழியாமல் இருக்க, அணையிலேயே கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர். 


திகார் ஜெயிலில் முன்னாள் உலக அழகி ஒலிவியா!


அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார்.இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


2 - oliviya miss world


அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஒலிவியா.



 கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிவியா கலந்து கொண்டார். முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஒலிவியா, மகாவீர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, துப்புரவு பணியில் இருந்து விடுபட்டு சமூக சேவகர்களாக மாறிய பெண்களிடம் கலந்துரையாடினார்.


கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடி அறிமுகம்!




கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.

கூகுள் கிளாஸ் அம்சங்கள்:

25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது,


16 ஜிபி சேமிப்பு வசதி,


கூகிள் கிளவுட் சேமிப்பு வசதி,


5 மெகாபிக்ஸல் கேமெரா,


வீடியோ பதிவுக் கருவிகள்,


Wi-Fi,


புளூடூத்,


24 மணி நேர பேட்டரி சேமிப்பு,


42 கிராம் எடை.



இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, 'ஒகே. கிளாஸ்' என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. 'டேக் எ பிக்சர்' என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.



இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம். சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன்படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனச் சிதறல் ஏற்படலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். 



இந்திய அஞ்சல் துறை – க்ம்பளிட ரிப்போர்ட்!


நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது.



இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது பைசா செலவில் ஒரு கடிதத்தை அனுப்பிவிட முடியும் என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு எத்தனை சந்தோஷம் தருகின்ற விஷயம் தெரியுமா?



1 - indian post 1

 


அதிலும் தொலை தூரத்தில் இருக்கும் உறவுகளையும், நட்புகளையும் எழுத்தினால் ஸ்பரிசிக்கும் அனுபவம் எத்தனை மகத்தானது. மூன்றரை ரூபாய்க்கு உள்நாட்டு அஞ்சலும், ஐந்து ரூபாயில் மூடிய உறைத் தபாலும் அனுப்ப முடியும் என்பது எவ்வளவு சவுகரியமான விஷயம்.



இன்றைக்கு என்னதான் எஸ்.எம்.எஸ்.ஸýம், ஈ மெயிலும் வந்துவிட்டதென்றாலும், கடிதங்களின் மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் பரவசத்தை அனுபவிப்பவர்கள் இன்றும் இலட்சக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியா.


இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது.


வரலாறு


இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764-1766களில் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்ட்து.
அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. 



வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய, சென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.
1 india post.2

 

துறை அமைப்பு


இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது

அஞ்சல் அலுவலகங்களின் வகைகள்

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
தலைமை அஞ்சல் அலுவலகங்கள்
துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்


அஞ்சல் அலுவலகச் சேவைகள்

இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

ராஜதானிப் பிரிவு – தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.


பச்சைப் பிரிவு – தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.
பெருநகரப் பிரிவு – பெங்களூர் , ஐதராபாத் , கொல்கத்தா , சென்னை , டெல்லி , மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.


வணிகப் பிரிவு – அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.


பருவ இதழ்கள் பிரிவு – அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.


மொத்தத் அஞ்சல் பிரிவு – பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்


அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.

உதாரணமாக, * புதுடெல்லி , ஜம்மு – காஷ்மீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.


ராஜஸ்தான் , குஜராத் , டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.


மத்தியப் பிரதேசம் , கோவா , மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.


ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.


தமிழ்நாடு , கேரளா , இலட்சத்தீவு , மினிகாய்த்தீவு ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.


ஒரிசா , அந்தமான் – நிகோபார் , மேற்கு வங்காளம் , மிசோரம் , மேகாலயா , மணிப்பூர் , நாகலாந்து , அசாம் , அருணாச்சலப் பிரதேசம் , திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.


பீகார் , ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்கிறது.



பலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்

பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.

அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை

பதிவுத் அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்


அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)


அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை


செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி


மின்னணு அஞ்சல்


இணைய வழி பில் தொகை செலுத்தல்


புத்தகங்கள் விற்பனை


இதர சேவைகள்

இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.

பொதுசேமநலநிதி
தேசிய சேமிப்புப் பத்திரம்
வங்கி சேமிப்புக் கணக்கு
மாத வருவாய்த் திட்டம்
வைப்புத் தொகைத் திட்டங்கள்
கடவுச்சீட்டு விண்ணப்பம்
தங்கக் காசு விற்பனை(தற்போது இல்லை)
காப்பீட்டுத் திட்டம். 



என பலசேவைகளிலும் கால் பதித்துள்ள இந்திய அஞ்சல் துறை, புதியதாக வங்கி ஒன்றைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாம். அதற்கு பதிலாக, தனது அடிப்படைச் சேவையான தபால் சேவையைப் பழையபடி சரியாக வழங்குவதையே இந்தியத் தபால் துறை முக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

மனிதனை போன்றே ரோபோட்டுக்கும் மூளை! இந்திய விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு!




ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.



மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.


இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர்.


இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார்.


எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார்.


சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார்.


ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும், கோபப்பட முடியும். ஏன் முகபாவத்தை கூட காட்ட முடியும்.


பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம், அது தான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!





எல்ஜி நிறுவனம் ஜி2 வரிசையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 16ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.41,500, 32ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.43,500 என்றும் இற்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும்.


எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:



5.2 இன்ச் டிஸ்பிளே,


423 அடர்த்தி பிக்சல்கள்,


2.26GHz குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்


13 மெகாபிக்சல் முன் கேமரா


2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா


2ஜிபி ராம்


3ஜி,


2ஜி,


Wi-Fi,


புளுடூத்,


ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்.


3000 mAh பேட்டரி.


இவர் யார்? உனக்குத் தெரியுமா?


மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2- 1869)


மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.

பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16-வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது.

இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார்.

பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால்  ரெயில் நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இதுபோன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பிறகு 1894-ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906-ம் ஆண்டு ஜோகார்னஸ்பர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.

அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1921-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரை (மார்ச் 1930) பிப்ரவரி 1930-ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது.

இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இதுபோல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இதுபோல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

காந்தி- ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை) காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஐ குறிக்கும் நாளாகும்.

இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இந்நாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 

காப்பகம்