Wednesday, August 13, 2014

முகப்பரு பிரச்சனைக்கு நல்ல பலன் தரும் ஃபேஸ் பேக்குகள்...! - ட்ரைப்பண்ணுங்க..

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொந்தரவு தரக்கூடிய பிரச்சனை என்று சொன்னால், அது முகப்பரு தான். அதிலும் அந்த முகப்பரு வெடித்து, அதிலிருந்து வெளிவரும் ஒரு நீர்மம் மற்ற இடங்களில் படிந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். மேலும் முகத்தில் பருக்களானது வந்துவிட்டால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும்.

நிறைய மக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கடைகளில் விற்கப்படும் இரசாயம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பலர் முகத்தின் அழகை இழந்தது தான் மிச்சம். ஆகவே எப்போதும் இரசாயம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை நினைப்பதற்கு பதிலாக, முகப்பருக்களை போக்க ஏதாவது இயற்கை வழிகள் உள்ளதா என்று யோசிக்க வேண்டும்.

ஏனெனில் இயற்கை பொருட்களால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் இயற்கை பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. அதிலும் சாப்பிடும் பழங்களைக் கொண்டும் முகப்பருக்களை போக்க முடியும். இப்போது எந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ பேக் போட்டால், முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம்..

ஸ்ட்ராபெர்ரி:-ஸ்ட்ராபெர்ரி பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கும்.

வாழைப்பழம்:-மலிவான விலையில் கிடைக்கும் வாழைப்பழத்தைக் கொண்டும் முகப்பருக்களை போக்கலாம். அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் சிறிது சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவ வேண்டும்.

தர்பூசணி:-தர்பூசணியில் நீர்ச்சத்துடன், வைட்டமின்களில் சி, ஏ மற்றும் டி அதிகம் உள்றளது. எனவே இதனை அரைத்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, பருக்களையும் மறைக்கும்.

ஆப்பிள்:-ஆப்பிள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் இது முகப்பருக்களை போக்குவதுடன், பழுப்பு நிற சருமத்தையும் சரிசெய்யும் தன்மைக் கொண்டவை.

ஆரஞ்சு:-சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழமும் சருமத்தின் அழகை அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதற்கு ஆரஞ்சு பழத்தைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது ஆரஞ்சு பழத் தோலை பொடி செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

பப்பாளி:-பப்பாளி பழத்தை அரைத்து, அதில் பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடலாம். இதனால்ல் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

செர்ரி:-செர்ரிப் பழத்ரை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தக்காளி:-தினமும் தக்காளியை அரைத்து அதனை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், பருக்கள் போய்விடும்.

ப்ளம்ஸ்:-பருக்களையும் அதனால் ஏற்பட்ட தழும்புகளையும் போக்க வேண்டுமானால், ப்ளம்ஸ் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம். அதிலும் ப்ளம்ஸை பால் சேர்த்து அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

சிவப்பு திராட்சை:-சிவப்பு திராட்சையை தயிர் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பருக்களை எளிதில் மறையச் செய்யலாம். 

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் - இதோ முழுமையான நிவாரணம்...!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து..!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

வாய் நாற்றத்தால் அவதி படுகிறீர்களா இதோ இருக்குங்க மருந்து..!

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

* ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

* கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

* கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

* புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

* கொய்யாப்பழம்: பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

* மாதுளை: அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

காப்பகம்