Friday, January 17, 2014

வீரம் படத்தை மறுபடியும் பார்க்கணும் - சிம்பு



தல அஜித் நடித்து கடந்த ஜனவரி 10ல் வெளியாகியிருக்கும் வீரம் திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் வசூலையும் அள்ளிவருகிறது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அஜித்தின் வீரம் படத்தினை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்த சிம்பு கடந்த ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் வாலு போன்ற பல படங்களில் நடித்துவரும் சிம்பு, செவன் அப் விளம்பர மாடலாகவும் நடித்துவருகிறார். இதனால் மிகவும் பிசியான ஷெட்யூலில் இருந்ததால் அஜித்தின் வீரம் திரைப்படத்தினை வெளியாகி ஆறு நாட்களுக்குப் பிறகே பார்த்திருக்கிறார்.

வீரம் திரைப்படத்தினை பார்த்ததும் சிம்பு தான் வீரம் திரைப்படத்தினை வெகுவாக ரசித்ததாகவும், அஜித்தின் பிரபலத்தை நன்றாகப் புரிந்து கொண்டு
அதற்கேற்றாற்போல் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா என்றும் பாராட்டியுள்ளார். மீண்டும் இப்படத்தினைப் பார்க்க
விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன்



பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித்துடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏகன். அஜித் இப்படத்தில் சி.பி.ஐ. ஆபீசராக நடித்திருந்தார்.

தல அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், இறுதிக் கட்டத்தில் தனது கதாபாத்திரம் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால் தன்னால் அஜித்துடன் இணைந்து நடிக்கவியலாமல் போனது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் வரும்காலங்களில் தனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலாக இருந்தாலும், எதற்காகவும் அந்த வாய்ப்பினை நழுவ விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தல அஜித்துடன் நடிக்கும் இளம் நடிகர்கள் அஜித்தின் பெருந்தன்மையைப் பற்றிப் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!




இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

 சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

 திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

 முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க..!



உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்

உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :

  •     பெயர்(NAME)
  •     முகவரி(ADDRESS)
  •     போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  •  அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  •     கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  •     உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  •     எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  •     போனின் அடையாள எண் (IMEI)

ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.

விரக்தியில் கேப்டன் மகன்...!



கேப்டனின் மகன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவரை போடலாம் என முடிவெடுத்தவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.

 முதற்கட்டமாக, மயிலு நடிகையின் மகள் நடிக்க தயாராகி வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அவரிடம் போய் கேட்டிருக்கிறார்கள். அண்டங்காக்கா குயிலுக்கு ஆசைப்படலாம். ஆனா மயிலுக்கு ஆசைப்படலாமா என்பதுபோல், கேட்டவுடனே நடிகையின் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும் சூசகமாக சொல்லவேண்டும் என்பதற்காக ரூ.1 கோடி கொடுத்தால் நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்டவுடனே கேப்டன் தரப்பு பின்வாங்கிவிட்டது.

தனக்கு ஜோடியாக அவரை போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்த கேப்டன் மகன் இதனால் தற்போது விரக்தியில் உள்ளாராம்.

இசைக்கு மட்டுமே தனது திரை உலக பணி..!


இளம் இசை அமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது . நடிக்க வரும் பல வாய்ப்புகளை தட்டி கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரை உலக பணி  என்று திட்ட வட்டமாக இருக்கும் அனிருத் , அதை உரக்க சொல்லியும் வருகிறார் . "ஆக்கோ" _ சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்து ,கேட்டு வியந்த கதை . தன்னுடைய பங்களிப்பு ஒரு இசை அமைப்பாளராக மட்டுமே , என்று கூறியதோடு மிக சிறந்த பாடல்களை இசை அமைத்து கொடுத்து  இருக்கிறார்.

இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குனர் ஆ .ஷ்யாம் மாரும்  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தை பிரதான படுத்தி கசைளவ டழழம ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.

இந்த படத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக  இருக்கிறது. "ஆகோ" என்றால் ஆர்வ கோளாறு . மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சாரம்சமே "ஆர்வ கோளாறு"  படத்தின் கதை  என்று கூறும் இயக்குனர் ஷ்யாம்,  ஆக்கோ நகைசுவை கலந்த ஒரு யஉவழை% படம். இது எந்த குறிப்பிட்ட வயதினரையோ, வகுப்பினரையோ கவர மட்டுமே எடுக்க பட்ட படமல்ல . எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014 ஆண்டின் மிக சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார்.

வசூல் வேட்டையில் வீரம் - ஜில்லா



பொங்கலுக்கு வெளியான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி கொலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி வெளியாகின.

இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன.

வீரமும் , ஜில்லாவும் வெளியான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் திரிநாத் தெரிவித்துள்ளார்.

வீரம் மற்றும் ஜில்லா படங்களின் தயாரிப்பாளர்கள் வசூல் விவரங்களை துள்ளியமாக தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பொங்கல் விடுமுறை இரண்டு படங்களுக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது.

மேலும் வீரம் படத்தில் அஜித்தின் கிராமத்து கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.

தத்துவ ஞானி சாக்ரடீஸ் - வாழ்க்கை வரலாறு



கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை..!



1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும்.

ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது.

மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்

கலைத்துறையில் பல புதுமைகளை உண்டாக்கினார். அரசியலில் பல புரட்சிகளை செய்தார் படைத்தார். அரசாங்கத்தில் நேர்மையான நல்லாட்சியை நடத்தினார். மக்கள் குறைகளை அறிந்து மாவட்டம்தோறும் திட்டம் போட்டார். வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏழை மக்களுக்கு உடனே, என்ன செய்யவேண்டும் என்பதை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். பழஞ்சோறும் கூட பார்த்து அறியா பாலகர்களுக்கெல்லாம் தினம் தோறும் ஒரு வேலை மதிய சத்துணவு கொடுக்க உத்தரவு இட்டார். ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் மீது அக்கறை காட்டினார்.

தான் ஒரு நாட்டின் "முதல்மந்திரி" என்ற தற்பெருமை இல்லாமல் ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார் மற்ற மந்திரிகளிடமும், 1960ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார்.

இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்கனும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார். இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார்.

அந்த காலத்தில் மனிதனை வண்டியல் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கைரிக்ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்கனும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விசயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விசயங்கள்

‘இது கதிர்வேலன் காதல்’ - காதலர் தினத்தில் ரிலீஸ்.....






உதயநிதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகிறது. முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதன் பாடல் வெளியீடு 20–ந் தேதி நடக்கிறது.

இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமார், லட்சுமிமேனனை வைத்து சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.

உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் அறிமுகமானார். அதில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவதாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’ படம் வருகிறது.

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் கதை படமாகிறது...



விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன். சிங்கள ராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்று இருந்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். இக்கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சினிமா படமாகிறது. பிரவின்காந்த் நடிக்கும் புலிப்பார்வை படத்தில் இந்த காட்சிகள் சேர்க்கப்படுகின்றன. பாலச்சந்திரன் கேரக்டரில் நடிக்க 100 சிறுவர்களை பரிசீலித்து இறுதியில் பொருத்தமான சிறுவனை டைரக்டர் தேர்வு செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவத்தினர் இடையே நடந்த சண்டைகள் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் போன்றவையும் இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகிறது.

விஜய்,மோகன்லால் - மீண்டும்....






மீண்டும் மோகன்லாலுடன் மலையாளத்தில் விஜய்!

ஜில்லா திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் நன்றி சொல்லிவருகிறார் விஜய்.

சமீபத்தில் நடந்த ஜில்லா சக்சஸ் மீட்டில் துவங்கிய இந்த நன்றி-கூறும் படலம் தற்போது சமூக வலைதளங்கள் வரை தொடர்ந்துள்ளது.

முன்னணி சமூகவலைதளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார். அப்போது ஒரு ரசிகர் ‘நீங்க பாலிவுட்டுக்கு எப்ப போக போறீங்க?’ என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு விஜய் ‘நமக்கு எப்பவும் நம்ம நாடு தான்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும்  ‘நீங்கள் எப்போது மலையாள படத்தில் நடிப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, மோகன்லாலுடன் சேர்ந்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஆசை’ என்று கூறியிருக்கிறார்.

 கேரள ரசிகர்களிடையே விஜய் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. மோகன்லால் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததற்கு முக்கிய காரணமும் அதுதான். 

எனவே மறுபடியும் விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதில் ஆச்சர்யம் இல்லை என்கிறது கோடம்பாக்கம்

செல்போனில் புயல் அறிகுறி:வி.ஐ.டி.மாணவர்களின் லேட்டஸ்ட் சாதனை!



புயல் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பதிலாக புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விவேக் வித்யாசாகரன் மற்றும் சந்தீப் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

வி.ஐ.டி. இயந்திரவியல் மற்றும் கட்டிட அறிவியல் பள்ளி பேராசிரியர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் செல்போன் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 929 மில்லியனிலிருந்து 2014–ம் ஆண்டில் 1.15 பில்லியன் அளவிற்கு உயரும் வாய்ப்பு உள்ளது.

செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலமாக புயல் போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும் வகையில் அதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

செயற்கைகோள் தொழில்நுட்ப வசதியின் மூலம் புயல் அறிகுறிகளை வானிலை ஆராய்ச்சி மையத்தினர் பெற்று அதனை தொலைகாட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வழியாக மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு பதிலாக செல்போன் மற்றும் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான புதிய தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தனர்.

ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையை அம்மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள ராயல் மெட்ராலாஜிக்கல் சொசைட்டியில் சமர்ப்பித்தனர். அதனை ஆய்வு செய்த ராயல் மெட்ராலஜிக்கல் சொசைட்டி அதனை ஏற்றுக்கொண்டு வானிலை அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.வி.ஐ.டி. மாணவர்கள் விவேக் வித்யா சாகரன், சந்தீப் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புயல் பற்றிய அறிகுறிகளையும், அதன் வேகம், பலம் மற்றும் அமைப்பு பற்றிய தகவல்களை செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

ஹீரோக்களுக்கு டிமிக்கி கொடுத்த - நயன்தாரா...!



நயன்தாராவை காதலிக்க கதாநாயகர்கள் பலர் சுற்றுகின்றனர். ஆனால் அவர் யாரிடமும் சிக்கவில்லை. இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முதல் காதல் சிம்புவுடன் நடந்தது. இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள். திடீரென அது முறிந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறைகளை அள்ளி வீசி விட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு நயன்தாராவும், சிம்புவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் இரண்டாவதாக பிரபு தேவா வந்தார். அவரின் ஆறுதல் பேச்சில் மனதை இழந்தார். இருவரும் காதலித்தார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வந்து நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினர்.

மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை மணக்க பிரபுதேவா தயார். ஆனால் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் இவர்களும் பிரிந்தார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவருமே இதுவரை சொல்ல வில்லை.

இதனால் விரக்தியின் உச்சிக்கு போன நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பழைய மார்க்கெட் சரியவில்லை. பெரும் தொகை சம்பளம் கொடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

தற்போது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. வீட்டில் அழைத்து விருந்து கொடுத்தார் என்றும் கூறப்பட்டது. இது போல் இன்னாரு இரண்டெழுத்து ஹீரோவும் அவரை விரும்புகிறாராம்.

 அத்துடன் பெரிய தொழில் அதிபர்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது விட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் யாருடைய காதலையும் நயன்தாரா ஏற்கவில்லை. எற்கனவே பட்ட அனுபவங்கள் மூலம் இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று சொல்லி விலகி போகிறாராம்.

விஜய் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள்...?





நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ‘ஜில்லா’ படம் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து?

பதில்:– ‘ஜில்லா’ படம் பெரிய வெற்றி படமாக காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே:– தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?

ப:– சீயான் விக்ரம்.

கே:– உங்கள் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?

ப:– தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

கே:– ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:– உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கே:– மோகன்லாலுடன் நடித்தது பற்றி?

ப:– மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.

கே:– இந்தி படத்தில் நடிப்பீர்களா?

ப:– நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்னா...

கே:– உங்களை எதிர்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?

ப:– அவர்களையும் நான் விரும்புகிறேன்.

இவ்வாறு விஜய் கூறினார்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?



மேக்-அப் பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது.

 மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை மேக்-அப்பிற்கு ஏற்றார் போல் மாறி, மேக்-அப் போட வசதியாக இருக்கும். இதன் மூலம் மேப்-அப் போட்டிருந்தாலும் இயற்கையான சருமத்தை போன்ற அமைப்பை பெற முடியும்.

 இதனால் முகத்திற்கு போடும் மேக்-அப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருப்பதுடன், மிகவும் அழகாகவும் காட்டும். மேலும் இந்த மேக்-அப் பிரைமர் போட்டால், முகத்தில் அதிக மேக்-அப் வழிவதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இதனை மேக்-அப் வெகுநேரம் தங்காத இடத்தில் தடவ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தாடை, கண் இமைகள், உதடு மற்றும் முகத்தை சுற்றி இதை போட வேண்டும். எந்த வகையான மேக்-அப்பாக இருந்தாலும், போடும் முன்னர் முகம் சுத்தமாக இருப்பது அவசியம்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?

 * முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதிலும் சோப் அல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

* பின் மென்மையான மற்றும் சுத்தமான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.

 * அடுத்து ஈரப்பதம் தரும் க்ரீமை தடவி, சருமத்தில் அது காயும் வரை விட வேண்டும்.

 * காய்ந்தவுடன் பிரைமரை தடவ வேண்டும். அதிலும் முகத்தில் மேக்-அப் அதிக நேரம் தங்காத இடத்தில் கவனமாக பூச வேண்டும். கண் இமை, உதடு மற்றும் தாடை போன்ற இடங்களில் அதிக கவனம் கொண்டு பூசவும்.

* பிறகு முகம் முழுவதும் பூச வேண்டும். பிரைமரானது நன்கு முகத்தில் காய்ந்தவுடன், ஃபௌண்டேஷன் க்ரீம் (foundation cream) பூச வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் தேவதை தான்.

உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...!



உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.

இருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும்.

இப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.

 உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் .

தேவையான பொருட்கள்:

தேன் - 2 டீஸ்பூன்

 பட்டை - 1 டீஸ்பூன்

 தண்ணீர் - 1 கப்

செய்முறை:

 * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

 * பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும்.

 * நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில் பாதியை இரவில் படுக்கும் முன்பும், மீதியை மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்தும் குடிக்க வேண்டும்.

குறிப்பு:
காலையில் குடிக்கும் போது அதனை சூடேற்ற வேண்டாம்.

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..?



நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.???

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்.

வெரி குட்..
மனோஜ் .. நீ சொல்லு.. மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது.. மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து சார்..!!

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்..

"மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

ஆபிஸ் போகும் பெண்களெ...! உங்களுக்காக சில டிப்ஸ்...



அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்;

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்

"வாய் துர் நாற்றத்திற்கு பாய் சொல்லும் ‘ஆயில் புல்லிங்’....!



“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.

நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று.

நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடாதா?’ என்று நப்பாசை. ஆனால், அப்படியும் நாற்றம் போகவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரை நான் சந்திக்க நேரிட்டது.

மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர் ஆயிற்றே, அவரிடம் என் குறையைக் கூறினால், அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன்.

எனக்கு இருக்கும் வாய் துர்நாற்றம் பற்றி அவரிடம் கூறினேன். தாமதிக்காமல் சொன்னார்: ‘தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போவதை நீங்களே உணர்வீர்கள்’என்றார்.

அவர் கூறியதில், அப்போது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும், போகாத துர்நாற்றம், நல்லெண்ணெய்யால் எப்படி போகப் போகிறது என்று கிண்டலாக நினைத்தேன்.

இருந்தாலும், அதையும் செய்துதான் பார்த்து விடுவோமே என்று, மறுநாளில் இருந்தே, ‘ஆயில் புல்லிங்’செய்யத் தொடங்கினேன். பத்து நாட்களில் படிப்படியாக என்னுடைய வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நானே உணர்ந்தேன்.

பதினைந்து நாட்கள் கடந்தபிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! ‘நல்லெண்ணெய்க்கு இப்படியொரு மகத்தான மருத்துவ குணமா..?’

இப்போது நண்பர்கள் என்னுடன் அமர்ந்து, சிரித்த முகத்துடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.

‘வாயில் இருந்த துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று எல்லோரும் கேட்டார்கள்.

நான், ‘ஆயில் புல்லிங்’பற்றி சொன்னேன். அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தார்கள்.

‘நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், இப்போது முழுமையாக நம்புகிறேன். பலனை உண்மையாகக் கண்டபிறகுதான் நல்லெண்ணெய்யின் சிறப்பே எனக்குத் தெரிய ஆரம்பித்தது’என்றேன்.

இதற்கு இடையில், எனக்கு ஆலோசனை கூறிய நண்பர், மருத்துவக் கல்லூரி பேராசிரியரை ஒருநாள் உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். என் வாய் துர்நாற்றம் முழுமையாக பறந்தோடிவிட்ட செய்தியைக் கூறி, அதற்கு மூலகாரணமாக இருந்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.

சந்தோஷ முகத்துடன் என்னைப் பார்த்தார்... ‘நல்லெண்ணெய்யால் வாய் துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று அவரிடமே கேட்டேன்.

அதற்கு, ‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’என்றார்.

இப்படி, மிகக் குறைந்த செலவில் குணப்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்யின் சிறப்பு தெரியாமல், இவ்வளவு காலமும் இருந்திருக்கிறேனே!

எனக்கு நல்லெண்ணெய் வைத்தியத்தை அறிமுகம் செய்த பேராசிரிய நண்பருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறி முடித்த சுந்தர்ராஜன் முகத்தில் வாய்கொள்ள முடியாத அளவு சிரிப்பு ரேகை படர்ந்திருந்தது!

எலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லிட்டர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உடையவர்கள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌லிரு‌ந்து ‌விடுபடலா‌ம்.

வாய் நாற்றத்தை போக்க எலுமிச்ச பழத்தை ஒரு தம்ளர் நீரில் பிழிந்து அதனுடன் சிறிது அளவு உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லது.

"வாய் துர் நாற்றம்" உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு_ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாயை உப்புகரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக_வைத்திருப்பதும், பற் குழிகளை பல் மருத்துவர்களிடம் சென்று அடைத்துகொள்வதும், தினம் இரண்டு முறை பல் துலக்குவதும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும்.

அமலாபாலின் - புது ஆசை....



சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அமலாபால் தெரிவித்தார். அனுஷ்கா, தமன்னா போன்றோர் ராணி, இளவரசி வேடங்களில் நடிக்கின்றனர்.

நயன்தாராவும் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். சிலர் விலைமாது வேடத்தில் நடித்து விருதுகள் வாங்கியுள்ளனர்.

அமலாபாலுக்கு காதல் பட வாய்ப்புகளே கிட்டியுள்ளன. கதாநாயகர்களுடன் ‘டூயட்’ ஆடவே பயன்படுத்தப்பட்டு உள்ளார். இது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அமலாபால் வீர சேகரன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சிந்து சமவெளி படத்தில் மாமனாரை காதலிக்கும் பெண்ணாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

‘மைனா’ படத்தின் வெற்றி அவரை பிரபலபடுத்தியது. தெய்வ திருமகன், காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், ‘தலைவா’ போன்ற படங்களில் நடித்தார்.

 தற்போது ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில், தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார்.

அமலாபால் கூறும் போது, ‘கிராமத்து கதையம்சம் உள்ள படத்தில் நான் அறிமுகமானதால் அது போன்ற படவாய்ப்புகள் நிறைய வந்தன. ஒரே மாதிரி நடிக்க பிடிக்கவில்லை.

சரித்திர கதையம்சம் உள்ள படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. அது போன்ற கேரக்டரை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்’ என்றார்.

நடிகை சுசித்ராசென் காலமானார்....



பழம்பெரும் நடிகை நடிகை சுசித்ரா சென் காலமானார்.

அவருக்கு வயது 82  கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

முதல்வர் மம்தாபானர்ஜி 7 முறை அவரை மருத்துவனையில்  சென்று பார்த்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 8.30 மணி அளவில் அவர் காலமானார்.

 இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் பெண் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குள் வசைபாடாதீர்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுறுத்தல்...



 நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரது ரசிகர்கள் தங்களுக்குள் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

வீரம், ஜில்லா படங்களையொட்டி அவர் தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நிலைத்தகவல்:

"தலயா? தளபதியா?

அஜித்தா? விஜய்யா?

பொங்கல் போட்டியில யாருக்கு வெற்றி?

ஜில்லாவா? வீரமா?

இந்த ஆரோக்கியமான போட்டி சினிமா உலகத்துக்கு சம்பாரிச்சு தரப்போறது எத்தனையோ கோடிகள். முதல் இடம் இரண்டாம் இடம் தாண்டி ரெண்டு பேருமே தனக்காக உருவாக்கி வச்சுருக்க ரசிகர் கூட்டம் இவுங்க ரெண்டுபேரோட படங்களையும் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்காங்கன்ற நிலைமை தான் இவ்வளவு கோடிகளை திரையுலகத்துக்கு சம்பாரிச்சு தருது. ஒரு வகையில் இது ஆரோக்கியம்தான்.

ஆனாலும் அந்த சராசரி பாமர ரசிகன் இன்னும் எதிர்பார்க்கிறான் என்பதே உண்மை. அந்த எதிர்பார்ப்பை இரண்டு படங்களும் பூர்த்தி செய்ததா?

இந்தக் கேள்விகளை, அதற்கான பதிலை எப்ப்படி சொல்வது என தெரியாமல் இன்று நமது வலைதளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற எல்லா நெட்வொர்க்கிலும் ஒவ்வொருவரின் ரசிகர்களும் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது.

உங்களை போன்ற ரசிகர்களால்தான் அவர்கள் இருவரும் இந்த உயரம் போனார்கள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை எழுதினால் அதற்கு செவிசாய்க்க மாட்டார்களா? இருவருக்குமே அந்தப் பக்குவம் இருக்கிறது.

ஆகவே ரசிகர்களே... உங்கள் தேவை அவர்களிடம் என்ன என்பதை உணர்த்துவது தான் நாகரீகம். மாறாக, கிண்டல் செய்து எழுதுவதை மாற்றி இன்னும் அவர்களை உயரம் கொண்டுபோக வித்திடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல படங்களும், திரையுலகுக்கு நிறைய வருமானமும், நல்ல சிந்தனை உள்ள புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கலாம்.

இவ்வாறு இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி , மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு : அரசியலில் ஈடுபட திட்டமா?



முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

அவர் மம்தாவை சந்தித்தது அரசியலில் ஈடுபடப்போவதற்கான அறிகுறி என அனைவரும் கருதிய வேளையில் மறுபடியும் அவர் இதை மறுத்துள்ளார்.

தான் ராஜர்ஹட் பகுதியில் சேட்டிலைட் பகுதியில் தொடங்கவுள்ள தனது பள்ளிக்கூட திட்டம் சம்பந்தமாக தான் பேசியதாகவும், மற்றபடி அரசியல் சம்பந்தமாக மம்தாவிடம் எதுவும் பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அம்மாநில இளைஞர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருப் பிஸ்வாசும் கங்குலி பள்ளி சம்பந்தமாக தான் முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார்.

மணிரத்னம், நாகார்ஜுனா - ரீ என்ட்ரி...



தெலுங்கு ஹீரோக்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா-- நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

கார்த்தி மகன் கவுதம் அறிமுகமான கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இந்திப் படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

ஆனால், இப்போது தெலுங்கு ஹீரோக்களான மகேஷ் பாபு மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி மணிரத்னம் தரப்பில் விசாரித்தபோது, ஆக்ஷன் கதையான இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. 

தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமிழ் மற்றும் மலையாள முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள் என்றனர். படத்துக்கு  தயாரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.

நாகார்ஜுனா நடிப்பில் இதயத்தை திருடாதே படத்தை மணிரத்னம் ஏற்கனவே இயக்கி இருந்தார்.

விஜய் மற்றும் மகேஷ்பாபு நடிப்பில், கல்கியின் பொன்னியின் செல்வனை ஏற்கனவே படமாக்க இருந்தார் மணிரத்னம். சில காரணங்களால் அது நின்றுபோனது குறிப்பிடத்தக்கது

அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் - அதிர்ச்சி தகவல்..!!!



தற்போது சந்தைகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன.

எனவே அதை பெண்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

இம்மையம் நடத்திய ஆய்வில் உலக அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான முக அழகு க்ரீமில் அதிக அளவு பாதரசமும், சில வகை லிப்ஸ்டிக்கில் எஃகும் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த அதிகளவு பாதரசம் சிறுநீரகத்தை பாதிக்கவும், தோலின் நிறம் மாறும் வகையிலும், அதில் வடுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகு சாதனப்பொருட்களில் பாதரசம் பயன்படுத்தப்படுவதற்கு தடை உள்ள போதிலும், ஆய்வு செய்யப்பட்ட 32 முக அழகு க்ரீம்களில் 44 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் பாதரசம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதே போல் 30 லிப்ஸ்டிக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் 50 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் எஃகு கலந்திருப்பது தெரியவந்தள்ளது.

எனவே பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என இம்மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் இக்குற்றச்சாட்டை பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலத்திற்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ...!



ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.

அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய விழாவில் தான் இவ்விருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

"லைப் ஓ.கே" திரை விருது விழங்கும் நிகழ்ச்சியில் ரேகா பங்கேற்று அதை ரசித்து பார்த்துகொண்டிருந்தபோது, அமிதாப், ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கு வந்தனர். அபிஷேக் ஊடகத்துறையினருடனும், அமிதாப் விருந்தினர் ஒருவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயாபச்சன் எதேச்சையாக ரேகாவின் இருக்கைக்கு அருகே வந்தார். ரேகாவை பார்த்தவுடன் விலகிச் செல்லாமல் அவரை பார்த்து புன்னகைக்க அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.

பின்னர் தனது இருக்கையிலிருந்து எழுந்த ரேகா ஜெயாவுடன் கைகுலுக்கியதுடன் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அமிதாப்பும் ரேகாவும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1981 ஆம் ஆண்டு வெளியான "சில்சிலா" படமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். இப்படத்தில் ஜெயாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரெடியா...? நாசா அறிவிப்பு....



செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும்.

நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா தான் இப்போ செல்லப்பிள்ளை..!



வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதர்வாவுடன், ஈட்டிஜி.வி.பிரகாஷ் குமாருடன், பென்சில் உட்பட, 4 படங்களில் நடித்து வருகிறார்.

இதில், ஈட்டி படத்தில், முதன்முறையாக காமெடி காட்சிகளிலும் நடித்து உள்ளாராம். இந்த காமெடி காட்சிகளில், ஸ்ரீதிவ்யா வெளுத்து வாங்கியுள்ளாராம்.

மேலும், கோடம்பாக்கத்தில், இயக்குனர்கள் சொல்வதை கச்சிதமாக நடித்து முடித்து விட்டு, எந்தவித அலட்டலும், ஆடம்பரமும் இல்லாமல், அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறார், ஸ்ரீதிவ்யா. இதனால்,இயக்குனர்களின் செல்லப் பிள்ளையாகவும், அவர் உருவெடுத்து உள்ளார்.

ரூ.90 கோடியை தாண்டியது வீரம் வசூல்..?



அஜீத் நடித்த வீரம் திரைப்படம் ரிலீஸான ஆறு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது முந்தைய படத்தின் சாதனையான ஆரம்பம் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறத்.

அஜீத், தமன்னா, விதார்த் நடித்த ‘வீரம்’ படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழில் மட்டும் இந்த படம் ரூ.7 கோடி வசூல் செய்தது. அதன்பின்னர் பொங்கல் விடுமுறை நாட்கள் என மொத்தம் நேற்று வரை உள்ள ஆறு நாட்களின் மொத்த வசூல் ரூ.40 கோடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ரூ.17.8 கோடி வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரம்பம் படத்தின் வசூலைக்காட்டிலும் ரூ.6கோடி அதிகம் என கூறப்படுகிறது.

வீரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.45 கோடி ஆகும்., இதன் தற்போதைய வசூல், இன்னும் எதிர்ப்பார்க்கப்படும் வசூல், சாட்டிலைட் உரிமை வசூல், மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு வசூல் என சேர்த்து மொத்தம் ரூ.,90 கோடி வசூலாகும் என கூறப்படுகிறது.

மேலும் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வீரம் படம் கூடுதலாக அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கோவை விநியோகிஸ்தர் கூறினார். ஆரம்பம், வீரம் என தொடர்ந்து இரு வெற்றிகளை கொடுத்துள்ளதால் அஜீத் மிகவும் குஷியாக இருக்கிறார்.

தனது கால் ஆபரேஷனை கூட தள்ளிவைத்துவிட்டு அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை தரும் பெரிய சம்பளம்..!




பெயர்தான் சின்னத்திரையே தவிர அது நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ரொம்ப பெருசு. இந்தி உலகில் கோடிகணக்கில் சம்பளம் சர்வசாதாரணம். அதுவும் ரியாலிட்டி ஷோக்களுக்காக இந்தி நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் தலைசுற்ற வைக்கும்.

  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. 
  • கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி.
  •  மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், 
  • அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை.

  • தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியதுதான் அதிக பட்ச சம்பளம் எபிசோடுக்கு பத்து லட்சம்.

காப்பகம்