Sunday, December 22, 2013

தூக்கம் வரலையா?




ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்





நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

சிடி ஸ்கேன்

தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

கலர் டாப்லர் ஸ்கேன்.

ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

எக்கோ

இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

இசிஜி


இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

டிஜிட்டல் இசிஜி

இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



டிஜிட்டல் எக்ஸ்ரே

சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

மோமோ கிராம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

மாஸ்டர் ஹெல்த செக் அப்

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்திய-தென்னார்ப்ரிக்கா:முதல் டெஸ்ட் போட்டி டிரா




ஜோகன்னஸ்பெர்க்: இந்திய-தென்னார்ப்ரிக்கா அணிகளுக்கிடையே ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 280 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 421 ரன்களும் எடுத்தது. தென்னார்ப்ரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில்  முடிவடைந்தது

ஆஷஸ் தொடரை இழந்தது இங்கிலாந்து அணி





பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியிடமிருந்து ஆஷஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 381 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் 218 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இன்று(செவ்வாடய்) அதிகாலை லண்டன் நேரம் சுமார் 6 மணி அளவில் முடிவடைந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய அணித் தலைவர் அலிஸ்ட்டர் குக் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது.

தமது அணிக்காக பி ஏ ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 120 ஓட்டங்களைப் பெற்றாலும், இங்கிலாந்து அணியால் தோல்வியை தடுக்க இயலவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்றும், அதுவே ஆஷஸ் தொடரை இழக்க முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்றும் பல முன்னாள் பிரபலங்கள் கூறியுள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில், ஆஸ்திரேலிய அணியை 3-0 எனும் கணக்கில் வென்று ஆஷஸ் தொடரை தக்க வைத்துக் கொண்டது.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 26 ஆம் தேதி மெல்பர்ண் நகரில் தொடங்கவுள்ளது.

கடைசி டெஸ்ட் சிட்னி நகரில் இடம்பெறுகிறது.

நான் ரஜினியை இயக்கவில்லை : கே.எஸ்.ரவிக்குமார்




ரஜினியை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கே.வி.ஆனந்த், பி.வாசு என பல்வேறு இயக்குநர்கள் இப்போட்டியில் இருக்கிறார்கள்.

ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "விரைவில் சுதீப் ('நான் ஈ' வில்லன்) நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். எந்த ஒரு புதிய படத்திலும் நான் ரஜினியை இயக்கவில்லை.

ரஜினியை வைத்து நான் இயக்கவிருந்த படம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்படுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் செய்திகள் யாவுமே வதந்தி தான். உண்மையில்லை" என்று கூறியிருக்கிறார்.

‘தூம் 3’ தூள் பறக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பறக்கிறது

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரக்கிறது

நிலா


நிலா


1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும்.

2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை 21.1969.
 (முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.'' நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.)

3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள்.

4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.

5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.

6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர்.

7.நிலவின் விட்டம் 3475 கி.மீ.

8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.

 9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது.

10.நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3680 கி.மீ.

11.நிலவு தன்னைத் தானே சுற்றிவரும் காலம் 29 1/2 நாட்கள்.

12.நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.

13.நிலவின் பெரிய பள்ளம் பெய்லீ ஆகும்.

14.நிலவின் கனம் பூமியனுடையதில் 8ல் ஒன்று..

15.நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியினுடையதில் 6ல் ஒன்று.

16.சூரிய ஒளி சந்திரனில் மேற்பரப்பில் பட்டு நிலா பிரதிபலிக்கின்றது.

17.சந்திரனில் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிரினம் ''பட்டானி.''

18.சந்திரனில் முதன் முதல் கொல்ஃவ் விளையாடினவர் ''ஆலன் செப்பர்டு''

19.விண்வெளியில் இருந்து பார்த்தால் வானம் கருப்பாக தெரியும்.

20.அர்மகோலைட் (Arma Colite) என்பது நிலவில் மட்டுமே கிடைக்கும் பொருள் ஆகும்.

21.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கிய இடத்திற்குப் பெயர் ''ஸீ ஆஃப் ட்ரான்க்யுலிட்டி'' (Sea of Tranquility)

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?


உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?

ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.

இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

தேன்: தொண்டை வலி

 தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

 காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி

 காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி

 சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு

 உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

உப்பு: பாத வலி

 நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

 முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

 மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால் வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி

 மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

தக்காளி: கால் பிடிப்பு

 இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி

 மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி

 மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை

 வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

புதினா: தசைப்புண்

 அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.

பசுக்கள் கோமாரி நோயால்


இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது...

ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும்.

மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி,மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும். நன்றி.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி


நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி


 பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .

உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன் காரணமாகவே தாக்காளர்களாலும் நடுவே இதனை கண்டறிந்து உடைக்க முடியாது.

இந்த எழுத்து வரிசையை பார்க்கும் போது முதலில் உங்களுக்கே தலை சுற்றும். இத்தனை கடினமானதை எப்படி நினைவில் கொள்வது என மலைப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை உருவாக்க பயன்படுத்திய அடிப்படை வாக்கியத்தை நினைவில் வைத்திருந்தால் போதுமானது, அதிலிருந்து பாஸ்வேர்டை உருவாக்க பயன்படுத்திய யுக்தியை கொண்டே அதை மீண்டும் எழுதிவிடலாம்.. இதற்கான குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.

பாஸ்வேர்டை உருவாக்க பெரும்பாலலும் எல்லோரும் பொதுவான வழிமுறைகல்ளையே கையால்கின்ற்னர். இவற்றை கொண்டே தாக்காளர்கள் பாஸ்வேர்டை யூகித்து விடுகின்றனர். ஆனால் வாக்கியங்கள் கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கும் போது மற்றவர்கள் அதை யூகிப்பது கடினம். அடிப்படை வார்த்தை தெரிந்தால் கூட அதில் செய்த மாற்றங்களை அப்படியே செய்வது கடிமானது.

எனவே தான் பாஸ்பேரேசை பயனப்டுத்துங்கள் என்கின்றனர்.

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.


இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.


கீழே உள்ள‌ இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘

இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன. அதன் பக்கத்தில் டிவி பட்டன்கள் இருக்கின்றன. ரிமோட்டை மறந்து விட்டு இந்த பட்டன்களை இயக்குவதன் மூலம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

அருகிலேயே எந்த வகையான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் எனும் பட்டியல் இருக்கிறது.

கிழே ஆண்டை தேர்வு செய்து கொள்ளாம்.

பிளேஷ்பேக்கில் முழ்கி மகிழுங்கள்.

இணையதள முகவரி:http://my80stv.com/#RLpc-NSoR6g

ஆனால் இந்த தளத்தில் ஒரே குறை அமெரிக்கா சார்ந்த நிகழ்ச்சிகளையெ பார்க்கலாம். நம்மூருக்கும் இப்படி ஒரு தளம் அமைத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அடிக்கடி தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவுப்பு தோன்றுவதையும் பார்க்கலாம். தூர்தர்ஷனை என்ன தான் சிலர் கிண்டல் செய்தாலும் இன்றைய அழுகாச்சி மெகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ அட்டகாசங்களுக்கு டி.டி எவ்வளவோ மேல்.

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி


சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

 எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?

இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம்.

பெரும்பாலான நேரங்களில் இன்ஸ்டால் செய்யப்படும் போதே , இவை தேவையா என கேட்கப்பட்டிருக்கலாம். அவற்றை நீங்கள் கவனிக்கமாலும் இருந்திருக்கலாம். எது எப்படியோ, புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் போது அந்த சாப்ட்வேர் தவிர வேறு எந்த தேவையில்லாத சாப்ட்வேர் பயன்பாடுகளும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்படாமல் பாதுகாத்து கொள்ள விரும்பினால் அன்செக்கி சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
சாப்டேவேர்டன் நேரடியாக அல்லது மறைமுகமாக நிறுவப்படும் தேவையில்லாத பயன்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதாக அன்செக்கி உறுதி அளிக்கிறது. அதே போல ஏதேனும் உபரி சாப்ட்வேர் நிறுவப்படுவதாக் இருந்தால் அது பற்றி எச்சரிக்கையும் செய்வதாக சொல்கிறது. ஆக புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செயவதாக இருந்தால் அதற்கு முன்னர் அன்செக்கியை நிறுவிக்கொள்ளலாம். ( அன்செக்கி வேறு எதையும் நிறுவாது என நம்புவோம்).

இப்படியாக அன்செக்கி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது பாதுகாப்பு அளிப்பதோடு , குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படும் போது தானாகவே அந்த மேம்பாடுகளையும் செயலுக்கு கொண்டு வருகிறது.
இணையதள முகவரி: http://unchecky.com/

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.


ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.

லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .
எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முகவரியை கிளிக் செய்தால் நண்பர்கள் கிளிக் செய்தவுடன் அசந்து போவார்கள். காரணம் நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை அவர்களால் பார்க்க முடியும் என்பது மட்டும் அல்ல: அந்த படங்களின் பின்னே உள்ள கதைகளை நீங்கள் விவரிப்பதை அவர்கள் கேட்கலாம் என்பதால் தான் இந்த அசரல். ஆம் , புகைப்படங்களை கிளிக் செய்ததுமே இந்த சேவை ஒரு தனி அரட்டை அறையை உருவாக்கி கொடுக்கும். இம்ங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு புகைப்படம் எடுக்கப்பட இடம் பற்றி வரணனை செய்ய நண்பர்கள் கேட்டு ரசிக்கலாம்.
எங்காவது விடுமுறைக்கு போய்வந்ந்தால் விட்டுக்கு வந்த நண்பர்களிடம் ஆல்பத்தை காட்டி சுற்றுலா அனுபவத்தை விவரிப்பது போல , இந்த சேவை ஆன்லைனில் நண்பர்களிடம் புகைப்படம் பின்னே உள்ள கதைகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இப்போது சொல்லுங்கள் , புதுமையான புகைப்பட பகிர்வு சேவை தானே.

இணையதள முகவரி: http://live.pics.io/

FIFA உலக கோப்பை கால்பந்து - வெற்றியாளர்கள்

FIFA உலக கோப்பை கால்பந்து - வெற்றியாளர்கள் ( ஆண்டு, நடந்த நாடு , வெற்றியாளர் , ஸ்கோர் )

2010 - தென் ஆப்பிரிக்கா - ஸ்பெயின் - ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து
2006 - ஜெர்மனி - இத்தாலி - இத்தாலி 1-1 ( 5-3 ) , பிரான்ஸ்
2002 - ஜப்பான் / எஸ் கொரியா , பிரேசில் , பிரேசில் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனி
1998 - பிரான்ஸ் பிரான்ஸ் , பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் பிரேசில்
1994 - US- பிரேசில் - பிரேசில் 3-2 இத்தாலி
1990 - இத்தாலி - ஜெர்மனி - ஜெர்மனி 1-0 அர்ஜென்டீனா
1986 - மெக்ஸிக்கோ , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-2 ஜெர்மனி
1982 - ஸ்பெயின் - இத்தாலி - இத்தாலி 3-1 ஜெர்மனி
1978 - அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா , அர்ஜென்டீனா 3-1 ஹாலந்து
1974 - ஜெர்மனி - ஜெர்மனி - ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் ஹாலந்து
1970 - மெக்ஸிக்கோ , பிரேசில் , பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி
1966 இங்கிலாந்து , இங்கிலாந்து , இங்கிலாந்து 4-2 ஜெர்மனி
1962 - சிலி - பிரேசில் - பிரேசில் 3-1 செக்கோஸ்லோவாக்கியா
1958 - ஸ்வீடன் - பிரேசில் - பிரேசில் 5-2 ஸ்வீடன்
1954 - சுவிச்சர்லாந்து , ஜெர்மனி , ஜெர்மனி 3-2 ஹங்கேரி
1950 - பிரேசில் - உருகுவே - உருகுவே 2-1 என்ற கணக்கில் பிரேசில்
1946 - நடைபெற்றது
1942 - நடைபெற்றது இல்லை
1938 - பிரான்ஸ் இத்தாலி , இத்தாலி 4-2 ஹங்கேரி
1934 - இத்தாலி - இத்தாலி - இத்தாலி 2-1 செக்கோஸ்லோவாக்கியா
1930 - உருகுவே - உருகுவே - உருகுவே 4-2 அர்ஜென்டீனா

இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஜெனரல் (CAG)

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஜெனரல் (CAG)

 1. வி Narahari ராவ் -1948-1954

 2. ஏ கே சாந்தா 1954 - 1960

 3. ஏ கே ராய் 1960 - 1966

 4. எஸ் ரங்கநாதன் 1966 - 1972

 5. ஏ பக்ஷி 1972 - 1978

 6. கியான் பிரகாஷ் 1978 - 1984

 7. டி என் சதுர்வேதி 1984 - 1990

 8. சி ஜி Somiah 1990 - 1996

 9. வி கே Shunglu 1996 - 2002

 10. வி என் கவுல் 2002 - 2008

 11. வினோத் ராய் 2008 - 2013

 12. சசி காந்த் சர்மா 2013 - பதவியில்


(காலம் 6 ஆண்டுகள் பதவி அல்லது 65 வயதுக்கு, எந்த முந்தைய உள்ளது)

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதிகள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதிகள்

 பகுதி I - ஒன்றியம் மற்றும் அதன் மண்டலம்
 பகுதி II - குடியுரிமை
 பகுதி III - அடிப்படை உரிமைகள்
 பகுதி IV - மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள்
 பகுதி IVA - அடிப்படை கடமைகள்
 பகுதி V - ஒன்றியம்
 பாகம் VI - மாநிலம்
 பகுதி VII - முதல் அட்டவணை படி பகுதி B யில் குறிபிட்டுள்ளார் மாநிலங்கள்
 பகுதி VIII - யூனியன் பிரதேசங்களில்
 பகுதி IX - பஞ்சாயத்து
 பகுதி IXA - நகராட்ச்சி
 பகுதி X - ஆதி மற்றும் பழங்குடி பகுதிகள்
 பகுதி XI - ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையே உறவுகள்
 பகுதி XII - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்
 பகுதி XIII - வர்த்தக, இந்திய எல்லையில் உள்ள வர்த்தக மற்றும் உடலுறவு
 பகுதி XIV - ஒன்றியம் கீழ் சேவைகள் மற்றும் அமெரிக்காவில்
 பகுதி XIVA - தீர்ப்பாயங்களை
 பகுதி XV-தேர்தல்
 பகுதி XVI - சில வகுப்புகள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள்
 பகுதி XVII - அதிகாரப்பூர்வ மொழி
 பகுதி XVIII - அவசர ஏற்பாடுகள்
 பகுதி XIX - இதர
 பகுதி XX - அரசியலமைப்பு திருத்தம்
 பகுதி XXI - தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்
 பகுதி XXII - குறுகிய தலைப்பு, ஆரம்பம், அதிகாரப்பூர்வ ஹிந்தி எழுத்துகள்          மற்றும் Repeals

உலகம்:

உலகம்:

★ மொத்த மேற்பரப்பு பகுதி: 510.064.472 சதுர கி.மீ.
★ மொத்த நில பரப்பளவு : 148.940.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில்      29.2 % )
★ மொத்த நீர் பகுதி : 361.132.000 சதுர கிமீ ( பிளானட் பூமியின் மேற்பரப்பில் 70,8  % )
★ மொத்த மக்கள் தொகை : 7,04 பில்லியன்
★ மொத்த எடை : 5,9722 × 1024 கிலோ
★ மொத்த தொகுதி : 1,08321 × 1012 கிமீ 3
★ மொத்த வயது : 4.54 பில்லியன் ஆண்டுகள்
★ மேற்பரப்பு ஈர்ப்பு : 32,041 ft/s2
★ சந்திரன் இருந்து தொலைவு : 384.403 கிமீ
★ சூரியனில் இருந்து தொலைவு : 150 மில்லியன் கிமீ
★ எக்குவடோரியல் ஆரம் : 6,378.1 கிமீ
★ சராசரி ஆரம் : 6,371.0 கிமீ
★ துருவ ஆரம் : 6,356.8 கிமீ
★ சுற்றும் வேகம் : 29,78 கி.மீ. / கள்
★ சுற்றும் நேரம் : 365,256363004 நாட்கள்
★ மேற்பரப்பு வெப்பநிலை : -88 / 5 ( நிமிடம் / அதிகபட்சம் ) ° C
★ சூரியனை சுற்றி சுற்றுப்பாதை அளவு : 92.956.050 மைல்கள் ( அரை பிரதான அச்சு )
★ சுழற்சி காலம் : 23,934 மணி நேரம்
★ சுழற்சி வேகம் : 1670 கிமீ / மணி
★ அருகில் உள்ள கிரகம் இருந்து தொலைவு : வீனஸ் இருந்து 38 மில்லியன் கிமீ
★ மொத்த கண்டம் : 7 ( ஆசியா , ஆப்பிரிக்கா , ஐரோப்பா , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா ,    ஆஸ்திரேலியா , அண்டார்டிகா )
★ மொத்த பெருங்கடல் : 5 ( பசிபிக் , அட்லாண்டிக் , இந்திய , தெற்கு , ஆர்க்டிக் )
★ ஐ.நா. அறியப்பட்டதா நாடுகள் : 193
★ முதன்மை டெக்டோனிக் பலகைகள் : 8 ( ஆப்பிரிக்க , அண்டார்டிக் , ஆஸ்திரேலிய , யூரேசிய ,            இந்திய , வட அமெரிக்க , பசிபிக் , தென் அமெரிக்க )
★ பெரிய கண்டம் : ஆசியா , 43.820.000 சதுர கிமீ ( மொத்த உலக நிலப்பகுதியில் 29.5 % )
★ மிகச்சிறிய கண்டம் : ஆஸ்திரேலியா , 9.008.500 சதுர கி.மீ.
★ மிகப்பெரிய நாடு : ரஷ்யா , 17.098.242 சதுர கி.மீ.
★ மிகச்சிறிய நாடு : வாடிகன் சிட்டி - 0.44 சதுர கி.மீ.
★ பெரிய பெருங்கடல் : பசிபிக் பெருங்கடல் - 155.557.000 சதுர கி.மீ.
★ மிகச்சிறிய பெருங்கடல் : ஆர்க்டிக் , 14.056.000 சதுர கி.மீ.
★ உயர்ந்த மலை : எவரெஸ்ட் , 29.029 அடி - நேபால்
★ நீளமான நதி : நைல் - 6.650 கிமீ
★ பெரிய ஏரி : காஸ்பியன் கடல் - 371.000 சதுர கி.மீ.

இந்தியாவில் ஏற்ப்பட்ட மிகபெரிய பூகம்பங்களில் பட்டியல்


இந்தியாவில் ஏற்ப்பட்ட மிகபெரிய பூகம்பங்களில் பட்டியல்

 ஜூன் 16, 1819 ----------கச், குஜராத் 8
ஜனவரி 10, 1869 -----------அசாம் 7.5
மே 30, 1885 -------------Sopore, ஜம்மு மற்றும் காஷ்மீர் 7
ஜூன் 12, 1897 -----------ஷில்லாங் பீடபூமி, மேகாலயா 8.7
ஏப்ரல் 4, 1905 --------------காங்க்ரா, இமாச்/சல பிரதேசம் 8
ஜூலை 8, 1918 --------------Srimangal, அசாம் 7.6
ஜூலை 2, 1930 -------------Dhubri, அசாம் 7.1
ஜனவரி 15, 1934 ---------- நேபால் பார்டர் , பீகார் 8.3
ஜூன் 26, 1941-------- அந்தமான் தீவுகள் 8.1
அக் 23, 1943 -------அஸ்ஸாம் 7.2
ஆகஸ்ட் 15, 1950 -----------அருணாச்சல பிரதேசம் சீனாவின் எல்லை 8.5
ஜூலை 21, 1956 ------------Anjar, குஜராத் 7
டிசம்பர் 10, 1967 -------கோய்னா, மகாராஷ்டிரா 6.5
ஜனவரி 19, 1975 --------பட்ஜெட், இமாச்சல பிரதேசம் 6.2
ஆகஸ்ட் 06, 1988 -----------மணிப்பூர், மியான்மர் எல்லை 6.6
ஆக 21, 1988 நேபால் பார்டர் , பீகார் 6.4
அக் 20, 1991---------உட்டர்கஷி மலைகள் 6.6
செப்டம்பர் 30, 1993------ லாத்தூர்-உஸ்மனாபாத், மகாராஷ்டிரா 6.3
மே 20, 1997--------- ஜபல்பூர், மத்திய பிரதேசம் 6
மார்ச் 29, 1999------------ Chamoli மாவட்டம், உத்தர பிரதேசம் 6.8
ஜனவரி 26, 2001------- Bhuj, குஜராத் 7.7

திராவிட மொழிகள்


1. இந்தியமொழிக் குடும்பங்கள்:

a. இந்தோ-ஆசிய மொழிகள்
b. ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்
c. சீன-திபெத்திய மொழிகள்
d. திராவிட மொழிகள்

2. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை என மொழியியல் பேராசரியர் ச.அகத்தியலிங்கம் குறிபிட்டுள்ளார்.

3. திராவிட மொழிக் குடும்பங்கள்:

a. தென்திராவிட மொழிகள்
b. நடுத்திராவிட மொழிகள்
c. வடதிராவிட மொழிகள்

4. இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது,

5. தென்திராவிட மொழிகள்:

தமிழ், மலையாளம்,கன்னடம்,குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா

6. நடுத்திராவிட மொழிகள்:

தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ,ஜதபு

7. வடதிராவிட மொழிகள்:

குரூக், மல்தோ, பராகுய்

8. கால்டுவெல் “திராவிட மொழிகளின் ஒப்பிலகணம்” என்ற நூல் எழுதி உள்ளார்.

9. தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்இந்திய மொழிகளை ஒருகாலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று அழைத்தனர்.

10. தமிழ்> தரமிள> திரவிட> திராவிட என உருவாகியது என்று ஈராஸ் பாரதியார் கூறுகிறார்.

11. தமிழ்மொழிகளில் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்.

கம்பர்



1. பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது (சோழநாட்டுத் திருவெழுந்தூர்)

2. இறந்த ஊர்: பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை

3. தந்தை: ஆதித்தன்

4. போற்றிவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்

5. காலம்: 12 ஆம் நூற்றாண்டு

6. சயங்கொண்டார், ஒட்ட்க்கூத்தர், புகழேந்தி புலவர் ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள்.

7. கம்பர் 1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.

8. நூல்கள்: ஏர் எழுபது, திருக்கை வழக்கம்(இரண்டும் உழவு பற்றியது), கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி

9. கம்பர் மகன் அம்பிகாபதி

10. அம்பிகாபதி எழுதியது அம்பிகபதிக்கோவை

11. சிறப்பு: கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், கல்வியில் பெரியர் கம்பர், வெண்பா பாடுவதில் வல்லவர், விருதப்பா பாடுவதில் வல்லவர்.

12. புகழுரைகள்:

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

 “கம்பனைப் போல் வள்ளுவனைப் போல்

 இலங்கோவடிகள் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”

 “யாமறிந்த புலவரிலே”

-பாரதி

 உழவின் சிறப்பு

 மேழி- கலப்பை, ஏர்; வேந்தர்- மன்னர்; ஆழி- மோதிரம்; சூழ்வினை-உண்டாகும் வறுமைத் துன்பம்; காராளர்- மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.

கம்பராமாயணம்

"தாதுகு சோலை தோறும் சன்பகக் காடு தோறும்
 போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்
 மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்
 ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே"

தாதுகு- மகரந்தம், போது- மலர், பொய்கை- குளம், பூகம்- கமுகம்(பாக்கு மரம்)

 "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

 நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

 அலகிலா விளையாட்டுடையார் அவர்

 தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"

உலவாக்கல்- உண்டாகுதல்( படைத்தல்); நிலைபெருத்தல்- காத்தல்; நீக்கல்-அழித்தல்; நீங்கலா- இடைவிடாது; அகிலா- அளவற்ற; அன்னவர்- அத்தகைய இறைவன்; தலைவன்- இறைவன்; சரண்- அடைக்கலம்

1. கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”

2. வழிநூல் என்றும் கூறுவர்.

3. காண்டங்கள்:

4. பாலகாண்டம்

5. அயோத்தியா காண்டம்

6. ஆரணிய காண்டம்

7. கிட்கிந்தா காண்டம்

8. சுந்தர காண்டம்

9. யுத்த கண்டாம்

 காண்டம்- பெரும் பிரிவு, படலம்- உட்பிரிவு




முகம் காட்ட மறுத்த நிலா


முகம் காட்ட மறுத்த நிலா

 பூமிக்கு அருகேயுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து நம்மை வந்தடையும் ஒளி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீச ஆரம்பித்ததாக இருக்கும். அது நம்மை வந்து சேர்வதற்குள் இத்தனை ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

2.விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசுத் துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும் (1 டன் = ஆயிரம் கிலோ), ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது.

3.சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது. சனிக் கிரகத்தை ஒரு பாத்திரம் என்று வைத்துக் கொண்டால், அதற்குள் 744 பூமிகளை உள்ளே வைக்க முடியும்.

4.விண்வெளிக்குப் போன முதல் உயிரினம் மனிதனல்ல, ஒரு நாய். அதன் பெயர் லைகா. 1957இல் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சோதனை உயிரினமாக அது அனுப்பி வைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக விண்கலத்துக்குள் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில், அது இறந்து போனது.

5.நிலவு 27 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதேநேரம் இப்படிச் சுற்றி வரும்போது, அது தன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பூமிக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக 1959இல்தான் பார்க்க முடிந்தது. அப்போது ரஷ்யாவின் லூனா 3 என்ற விண்கலம் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பியதால், அது சாத்தியமானது.

செவ்வாயில் நிரந்தரமாக குடியேற...

சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 20,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. இதற்காக 2018ம் ஆண்டில், ரோபோவை அனுப்பி வைக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது.

திட்டக் குழு சவால்கள்


திட்டக் குழு சவால்கள்-1
 .............................................

எல்லாக் கூட்டாட்சி நாடுகளிலும் மத்திய அரசுகள் தன்னிச்சையாகச் செயல்படக்கூடியவையாக இருக்கின்றன. மாநில அரசுகள் அரசியல் சட்டப்படி தன்னிச்சை அதிகாரங்கள் பெற்றிருந்தாலும், பல்வேறு அம்சங்களில் மத்திய அரசைச் சார்ந்திருக்கக் கூடியவையாக உள்ளன. நிதிபெறுவதில் மாநிலங்கள், மத்திய அரசைச் சார்ந்திருப்பது வெளிப்படையாக உள்ளது.

மாநிலங்கள் நிதிபெறக் காரணம்

 பொதுவாக, மத்திய அரசிடம் அதிக வருவாய் தரக்கூடிய வரி இனங்களான - கம்பெனிகள் (மீதான) வரி, வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி போன்றவையும் பல சிறிய வரி இனங்களும், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. ஆனால், மத்திய அரசுக்கு இருக்கும் பொது செலவுப் பொறுப்புக்கள் குறைவாகவே உள்ளன.

மக்களின் அருகில் உள்ள மாநில அரசுகள் குறைவான வரி ஆதாரங்களைப் பெற்றுள்ளன. ‘வாட்' என்ற மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி, சாராயத்தின் மீதான கலால் வரி, சொத்து மாற்றத்தின் மீதான முத்திரைத் தாள் வரி, வாகன வரி என்ற சில வரி வருவாய்களே உள்ளன. மாநில அரசுகளுக்கு இருக்கும் பொதுச் செலவுப் பொறுப்புக்கள் அதிகம். இந்தச் செலவுகளுக்கு ஈடான வருவாய் இல்லாததினால், மத்திய அரசு தரும் மானிய வருவாயைப் பெறவேண்டியுள்ளது.

நிதி பெறும் வழிகள்

 மத்திய அரசிடமிருந்து மூன்று வழிகளில் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, திட்டக்குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மத்திய அமைச்சகமும் தன்னிச்சையாகச் சில நிதிகளை வழங்குவது அந்த மூன்று வழிகளாகும். இதில் மிக முக்கியமானது நிதிக் குழுவின் பரிந்துரைகள்.

நிதிக் குழு

 நடுநிலையோடு நிதிப்பகிர்வு இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் சட்டம் 280-வது பிரிவின்படி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நிதிக் குழு மத்திய அரசால் அமைக்கப்படும். வருமான வரி வருவாயும் கலால் வரி வருவாயும் மட்டுமே மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அரசியல் சட்டத்தில் ‘எஞ்சிய அதிகாரங்கள்' எல்லாம் மத்திய அரசிடம் இருக்கும் என்ற பிரிவைப் பயன்படுத்தி, மத்திய அரசு சேவை வரியை விதித்து அதிக வரி வருவாய் வசூலித்தது.

ஆனால், இவ்வருவாய் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, 2000-ல் மத்திய அரசின் எல்லா வரிகளின் (செஸ், சர்-சார்ஜ் நீங்கலாக) நிகர வருவாயை மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் சட்டத் திருத்தம் நிறை வேற்றப்பட்டது. இதே போன்று 1993-ல் நிறைவேற்றப்பட்ட 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி வழங்க வேண்டும் என்று 270-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது.

செயல்பாடு

1951-ல் முதல் நிதிக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இக்குழுவுக்கு நீதிபதிகள் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்பு, அரசியல் தலைவர்கள் நியமிக்கப் பட்டனர். அண்மைக்காலமாக பொருளாதார வல்லுனர்கள் தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தக் குழுவில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களும் ஒரு உறுப்பினர் செயலரும் இடம்பெறுவர். பொருளாதாரம், பொது நிர்வாகத் துறைகளில் உள்ள வல்லுனர்களை இதன் உறுப்பினர்களாக நியமிப்பது வழக்கம்.

14-வது நிதிக்குழு 2013, ஜனவரி 2, அன்று நியமிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர். ஒய்.வி. ரெட்டி தலைவராகவும், அபிஜித் சென் (பகுதி நேர உறுப்பினர்), சுஷ்மா நாத், எம்.ஜி. ராவ். மற்றும் சுதிப்தோ மண்டல் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இக்குழு மத்திய, மாநில அரசுகளோடு ஆலோசனை நடத்தி, தன் சுய ஆராய்ச்சியின் அடிப்படையிலும் மேலே கூறிய அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளை அக்டோபர் 31, 2014-ல் மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்கும். இப்போது அமைக்கப்பட்டுள்ள 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் 2015-16 முதல் 2019-20 வரை அமல்படுத்தப்படும்.

எதையெல்லாம் பரிந்துரைக்கலாம்?

நிதிக் குழு பரிந்துரைகள் செய்யும் பொதுவான அம்சங்கள்பற்றி அரசியல் சட்டத்தில் உள்ள குறிப்புகள் இவை:

1. மத்திய அரசின் நிகர வரி வருவாயை (வரி வசூலிக்கும் செலவு நீங்கலாக) மத்திய, மாநில அரசுகளுக்குப் பிரித்துக்கொடுப்பது. உதாரணமாக: 70% மத்திய அரசுக்கும், 30% மாநில அரசுக்கும்.

2. எல்லா மாநிலங்களும் ஒரே அளவு பொது செலவுத் தேவையும், வரி வருவாய் பெறக்கூடிய திறனும் இல்லாததினால், நிதிக் குழு எந்த மாநிலங்களுக்கு அதிக நிதியும், எந்த மாநிலங்களுக்குக் குறைவான நிதியும் கொடுக்க வேண்டும் என்று கூற வேண்டும். இதுதான் மாநிலங்களுக்கு உள்ள தொகையை (30%) மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொடுப்பதற்கான சூத்திரம்.

3. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு நிதித் தொகுப்பிலிருந்து தர வேண்டிய நிதிக்கான பரிந்துரையையும் தர வேண்டும்.

4. மாநிலங்களுக்கு மேலும் தேவையான நிதியை, அரசியல் சட்டம் 275-வது பிரிவுப்படி கருணைத் தொகையாகத் தருவதற்கான பரிந்துரைகளும் கொடுக்க வேண்டும்.

5. இவை இல்லாமல், மத்திய அரசு கூறும் வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளையும் கொடுக்க வேண்டும்.

நிதிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், இதுவரை நிதிக் குழுக்களின் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்திவருகிறது. முதல் இரண்டு நிதிக் குழுவில் மாநிலங்களின் திட்டச் செலவுகளுக்கும் சேர்த்தே நிதி பகிர்வு செய்யப்பட்டது. மூன்றாம் நிதிக் குழுவிலிருந்து இவ்வழக்கம் கைவிடப்பட்டு, மத்திய அரசின் வரிவருவாயில் பங்கும், மாநில அரசின் திட்டம் சாராத செலவுகளுக்கான கொடையும் பரிந்துரை செய்யப்படுகிறது.

அணிவகுக்கும் சவால்கள்

 இந்த நிதி ஆண்டு (2013-14) தமிழ்நாட்டின் மொத்த அரசு செலவான ரூ 1.42 லட்சம் கோடியில் ரூ. 8463 கோடியே மத்திய அரசிடமிருந்து நிதியாகப் பெறப்படும் என்று மாநில நிதி அறிக்கை கூறுகிறது. அதாவது, மொத்த செலவில் 5.9%. மத்திய அரசு நிதியில் மூன்றில் இரண்டு பங்கு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிதிக் குழுவும் தமிழகத்துக்கான நிதி அளிப்பைக் குறைத்துவந்திருக்கின்றன. 13-வது நிதிக் குழு (2010-15) மற்ற மூன்று தென் மாநிலங்களுக்கும் இரண்டு மடங்குக்கு மேல் நிதி உயர்த்தி கொடுத்தபோது, தமிழகத்துக்கு மட்டும் இரண்டு மடங்கைவிடக் குறைவாக உயர்த்தியது. இந்தச் சூழ்நிலையில்தான், 14-வது நிதிக் குழு தமிழகம் வந்து நிதி மாற்றம் தொடர்பாக விவாதித்தது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே நிதியை நடுநிலையோடு பிரித்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட 14-வது நிதிக் குழு, இந்த வருடம் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது (பார்க்க பெட்டிச் செய்தி).

இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதும், அதனால் மத்திய அரசின் வரி வருவாய் குறைவாக உள்ள சூழலில், மாநிலங்கள் அதிக நிதிக் கேட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்நேரத்தில், 14-வது நிதிக் குழு முன் பல சவால்கள் ஒன்றாகத் தோன்றி உள்ளன.

முக்கிய நடப்பு விவகாரங்கள் (18 டிசம்பர்)


1. சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்பட்டது.

2. 2013 ஆம் ஆண்டு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய அணியில் முன்னால் அணித்தலைவர் கபில் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

3. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாலஸ்லேமியா சோதனை கருவியை இம்முனோ புற்றுநோய் தேசிய நிறுவனத்துடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இனைந்து வெளியிட்டது.

4. பாராளுமன்றத்தில் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு வலுவான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தவை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

5. ராண் உற்சவம், குஜராத் மாநிலத்தில் ஒரு கலாச்சார திருவிழா- கட்ச்யில்(Kutch) தொடங்கியது.

6. தென் இந்தியாவின் 1st உயரமான கிரிக்கெட் ஸ்டேடியம் வயநாடு, கேரளாவில் தொடங்கப்பட்டது.

7. ஜப்பான் அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறை செலவை 5% அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

8. மார்த்தாண்ட வர்மா, திருவாங்கூர் அரச குடும்பத்தின் தலைவர் 92 வயதில் காலமானார்.

9. மொத்த பணவீக்க நவம்பர் 2013 ல் 7.52 சதவீதமாக அதிகரித்துள்ளது.

10. அங்கேலா மேர்க்கெல்(Angela Merkel) மூன்றாவது முறையாக ஜெர்மனின் வேந்தர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய நடப்பு விவகாரங்கள் (19 டிசம்பர்)


1. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஆன பண பரிமாற்று ஒப்பந்தம் 15 பில்லியன் டாலர்களில் இருந்து 50 பில்லியன் டாலர் என்று அதிகரித்துள்ளது.

2. பிரெஞ்சு நாட்டை சார்ந்த அல்ஸ்ட்ரோம்(Alstom) நிறுவனம், பிஹெச்இஎல் நிறுவனத்துடன் 125 மில்லியன் யூரோ மதிப்புக்குரிய பாகங்கள் மற்றும் சேவைகளை 1000 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி புதிய அனல் மின்சார திட்டத்துக்கு வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது.

3. தேவயாணி கோப்ரகாடே, ஐக்கிய நாடுகளுடைய இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக மாற்றப்பட்டார்.

4. இந்தியா, ஆசிய பசிபிக் ஜூனியர் கோல்ப் சாம்பியன்ஷிப் முதல்முறையாக வென்றுள்ளது.

போரில் முக்கியப் பங்கு

பாகிஸ்தானுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த மிக்-21 எப்.எல். ரக போர் விமானம் கடந்த 11-ஆம் தேதியன்று இறுதியாக விண்ணில் பறந்து சேவையில் இருந்து விடை பெற்றது.

இதனையடுத்து மிக் விமானங்களுக்குப் பதிலாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான சோதனை ஓட்டம் இன்று நிறைவு பெற்றதை அடுத்து விமானத்தை இந்திய விமானப்படை சேவையில் இணைப்பதற்கான 2-அம் நிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பத்திரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமானப்படை தளபதி பிரவுனிடம் வழங்கினார்.

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?


சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளி கேந்திரம் அமைக்கத் திட்டம் உள்ளது.

இப்புதிய விண்வெளி கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்.

ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளி கேந்திரத்தை அமைக்க இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித்தான் செலுத்தப்படுகின்றன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும். ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவதுதான் நல்லது.

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளி கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். விண்வெளி கேந்திர அதிகாரிகள் ராக்கெட் கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை நடுவானில் அழிப்பர். இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர் 25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திசை மாறியபோது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளி கேந்திரத்தை கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 23.93 மணி நேரம் பிடிக்கிறது. பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல, இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில், சுழற்சி வேகம் மணிக்கு 1569 கிலோ மீட்டராகத்தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளி கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத்தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளி கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில்தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளி கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளி கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன.

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625 கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காக செலுத்த முடிவதில்லை. அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீது செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்க வேண்டிய பிரச்சினையே இருக்காது. செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்பு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இல்லையேல் நாடே ஸ்தம்பித்து விடும். எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற அதிக சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்தே செலுத்த இயலும். தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை. ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.

ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம். ஆனால் ஒன்று.

இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது என்பது உறுதி.

முக்கிய நடப்பு விவகாரங்கள் (21 டிசம்பர்)


*** முக்கிய நடப்பு விவகாரங்கள் (21 டிசம்பர்) ***
 .................................................. ......................
1. இந்திய விஞ்ஞானிகள் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் “பில்” (Pill) யை உருவாக்கியுள்ளனர்.

2. பைலின் புயல்(Cyclone Phailin) தாக்கத்தை திறம்பட கையண்டடற்காக ஒடிசா அரசை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

3. பொலிவியா நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் Tupak Katari விண்ணில் செலுத்தப்பட்டது.

4. தேர்தல் ஆணையம் “ஆம் ஆத்மி கட்சியை” மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கியது.

5. உஷா சங்வான்(Usha Sangwan), எல்ஐசியின் முதல் பெண் நிர்வாக இயக்குனரக நியமிக்கப்பட்டார்.

6. அமைச்சரவை குழு ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

7. நான்காம் தலைமுறை போர் விமானம் LCA தேஜாஸ் இரண்டாம் செயல்பாடு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

8. P.H. பரேக் (P.H. Parekh) உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இஞ்சிப் பால்..!


இஞ்சிப் பால்..!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்!




தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் ஹீரோவாக அறிமுகமானவர்கள் மட்டும் 68 பேர். இவர்களில் கார்த்திக் மகன் கவுதம் (கடல்), சேது (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆகியோர் மட்டுமே அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கவுதம் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமான இளம் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் தவிர மலையாளத்திலிருந்து வந்த நிவின் (நேரம்), சந்தோஷ் (ஆதலினால் காதல் செய்வீர்), ராம் (தங்க மீன்கள்), விக்ரம் ஆனந்த் (நிர்ணயம்), அசோக் ஷெல்வன் (பீட்சா-2) ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார்கள்.

2013ம் ஆண்டு 80 ஹீரோயின்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இது எந்த ஆண்டிலும் எந்த மொழியிலும் இல்லாத சாதனை அளவாகும். இவர்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நஸ்ரியா நாசிம் (நேரம்), ராதா மகள் துளசி (கடல்), நிவேதா தாமஸ் (நவீன சரஸ்வதி சபதம்), மிருத்திகா (555), சுரபி (இவன் வேற மாதிரி) ஆகியோர் கவனிக்கப்பட்டவர்கள். இவர்கள் தவிர, விபா (மதில்மேல் பூனை), அஷ்ரிதா ஷெட்டி (உதயம் என்.எச்-4), சுர்வின் (மூன்று பேர் மூன்று காதல்), ஸ்ரீரம்யா (யமுனா), இஷா தல்வார் (தில்லுமுல்லு) ஆகியோர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சிறிய பட்ஜெட்டில் கூட படம் எடுத்துவிட முடிகிற சூழ்நிலை இருப்பதால் புதியவர்கள் சினிமா நோக்கி வருகிறார்கள். நான்கு பேர் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து விடுகிறார்கள்.

நடிக்கும் ஆசையுடன் இருக்கிறவர்களுக்கு கொஞ்சம் முயற்சி செய்தால் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அதனால்தான் புது ஹீரோ, ஹீரோயின்களின் வருகை அதிகமாகி இருக்கிறது. அப்படி அதிகமானாலும் நிலைத்து நின்றவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. காரணம் இப்போது சினிமாவில் அறிமுகமாவது எளிது. திறமையால் மக்களை சென்றடைவதும், சென்றடைந்து புகழ் பெற்றால் அதை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நிறைய புதுமுகங்கள் வருவது ஆரோக்கியமான விஷம்யம்தான். அப்போதுதான் திறமையாளர்கள் கிடைப்பார்கள் என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!



நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

- கேரள பெண்கள் ஏன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே...!

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!


     பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.

எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

    சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

    அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.

    இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?

பதட்டத்தை வெல்ல பதினொரு வழிகள்:

1 . முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

2 . ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

3 . உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

4 . நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

5 . காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

6 . எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

7 . தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

8 . உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

9 . உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

10. அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

11. தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்.

மூன்று வகையன குணங்கள்....?


மூன்று வகையன குணங்கள்
 

1. சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.

2. ரஜோ குணத்தின் இலட்சணங்கள் .

3.  தமோ குணத்தின் இலட்சங்கள்



சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.

எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.

ரஜோ குணத்தின் இலட்சணங்கள்:

 மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமோ குணத்தின் இலட்சங்கள் :


எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.

 இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?
சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.

தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.

எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்

100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.

முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.

எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.

தீப்பட்ட இடத்தில் - பீட்ரூட்

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

வெற்றிலை போடுவது ஏன்?



பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

 வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

அம்பிகாபதி - அமராவதி?



கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இஃது அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. எனவே, குலோத்துங்கனுக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.

“எப்பொழுதும் தன் மகளின் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதி, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நுாறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடிக்கவேண்டும். இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் அம்பிகாபதிக்கு அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று குலோத்துங்கன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்தான்.

குறித்த நாளில் அனைவரும் கூடினர். அம்பிகாபதி சிற்றின்பம் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான். மறைவில் இருந்த அமராவதி அம்பிகாபதி ஒவ்வொரு பாடல் பாடி முடித்ததும் எண்ணி வைக்கப்பட்டிருந்த நுாறு மலர்களில் ஒவ்வொரு மலராக எடுத்து வேறுபடுத்தி வைத்தாள். கலத்தில் இருந்த நுாறாவது மலரும் தீர்ந்தது. அம்பிகாபதி நுாறு பாடல்களை வெற்றிகரமாக பாடி முடித்தாயிற்று என்னும் மகிழ்ச்சியில் மறைவில் இருந்த அமராவதி எட்டிப் பார்த்து விடுகிறாள். அவள் முகத்தைப் பார்த்தவுடன் தன்னை மறந்த அம்பிகாபதி,

சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.

என அமராவதியை வருணித்துப் பாடி விடுகின்றான். சோழன் வைத்த சோதனையில் அம்பிகாபதி கடைசியில் மயிரிழையில் தோற்றுப் போனான். ஆம்! அம்பிகாபதி பாடிய காப்புச் செய்யுளையும் போட்டிச் செய்யுளுள் ஒன்றாகக் கொண்டு எண்ணிய அமராவதி 99 வது போட்டிச் செய்யுள் முடிந்தவுடனே 100-வது செய்யுள் முடிந்தது என நினைத்து எட்டிப் பார்த்தாள்.

உண்மையில் சி்ற்றின்பம் கலக்காமல் 99 செய்யுள் பாடி இன்னும் ஒரு செய்யுள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் அம்பிகாபதி அமராவதியைப் பார்த்துப் பாடிய பாடல் மிகப்பெரிய தலைக்குனிவை கம்பருக்கு ஏற்படுத்தியது. தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மன்னனுக்குப பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. சோதனையில் தோற்ற அம்பிகாபதியும், கம்பரையும் சோழ நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று கூறி நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுகின்றான்.

சிந்தனைகள் சில........?




நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...

உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...

சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக
ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...

உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்
பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு
அந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...

உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்
மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்
என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...

உங்களை நீங்களே தூய்மையாக
பிரகாசமாக வைத்து கொள்வது நல்லது...
உலகை நீங்கள் காண உதவும் ஜன்னல் நீங்கள் தான்...

அச்சம் வரும்போதேல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள்...
நம்பிக்கையின் உயரம்... அச்சத்தின் உயரத்தை விட அதிகமாய்
இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

உங்கள் வாழ்கைக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதரும்...
ஒன்று உங்களுக்கு எதாவது கற்றுகொடுக்க வந்திருக்கிறார்...
அல்லது - உங்களிடமிருந்து எதாவது கற்று கொள்ள வந்திருக்கிறார் ..

சோம்பேறித்தனம் என்பது பணம் மாதிரி...
உங்களிடம் அது நிறைய இருக்க இருக்க மேலும் மேலும்
வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்...

சந்தோஷத்தைத் தேடி இந்த உலகில் அலைகின்றனர்
அது உங்கள் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது
திருப்தியான மனம் எல்லாருக்கும் அதைத் தருகிறது...

நம்முடைய காலகட்டத்தில் புனிதத்துவத்தை
நோக்கிச் செல்லும் பாதை செயல் உலகின்
ஊடகச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்...

நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால்... சோம்பேறி...
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்... சுருசுறுப்பானவர்...
நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால்... வெற்றியாளர்...

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க?




 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

காதலின் வயது எது???



வாழ்க்கை என்றால் என்ன என்ப...



தைபுரிந்து கொள்ள இயலாத வயதில் உனக்கு
எதற்கு காதல்!!!


கல்வி கற்கும் வயதில் நீ ஏன் காதலை பற்றி கனவு காண்கிறாய்?
கொஞ்சம் சிந்தி!


முதலில் நீ உன் காலில் நிற்கத்தக்கதகுதியை
பெற்றுக் கொள்...


அதற்கு பின் தாராளமாய் நீ காதலி


அப்போது புரியும் வாழ்க்கை
பயணம் என்பது எத்தனை கரடுமுரடான தென்று.


உங்கள் கருத்துக்கள் வரவேற்கதக்கது...

உன்னால் முடியும் என்று நம்பு!

மா மேதை அப்துல் கலாமின் கனவு
        
         அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்...



தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.

அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. ஒருநாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில், ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய் யாத முகத்துடன் இருந்த அண்ணா, "இப்போதைக்கு என்னால் அங்கே வர முடி யாது'’என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந் தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக "தாங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்'’என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் “"சரி, திருவையாருக்குச் சுற்றுப் பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ, அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக் கொண்ட தோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.

அண்ணாவிடமிருந்து ஒருநாள் "நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன்' என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரி யரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலை யில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட் காமல் எப்படி அவ ரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.

அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகு முறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ""நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்..அதில் பேசுகிறேன்..''’என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாகப் பேசி முடிவெடுத்து "நதிகள்'’என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.

மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணி நேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந் தோம். நதிகளின் முக்கியத் துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசு மரத்தாணி போல் பதிந் தது. இன் றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும், எழுதும் கட்டு ரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.

ஐம்பது வருடங்களுக்கு முன் னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ் நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்ப தில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.

நமது நாட்டில் ஆண்டுதோறும் 1500 BMC நதிநீர் வெள்ளத்தினால் கடலுக்குள் போய் சேருகிறது. அதில் 300 BMC நீரை நாம் உபயோகித்தாலே, நாடு வளம் பெற்று நலம் பெறும். அந்த 300 BMCநீரை எப்படி நாட்டுக்குள் திருப்பி விடுவது என்பதைப் பற்றி நாம் யோசித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக் கிறோம். நதிநீர் இணைப்பு என் பது இன்று பேச் சளவில் ஒரு கருத்துருவாக்க மாக இருந்தா லும் மிக விரை வில் காலத்தின் கட்டாயத்தினால் அது நனவாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், பல பேர் முடியாது, முடியாது என்பதை தாரக மந்திரமாக வைத்துள் ளார்கள்.

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் மேம்பாட்டுக்காக, மாநிலங்கள் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நதிநீர் இணைப்புக்காக ஒன்றுபட வேண் டும் என்பதுதான் என் அவா. இதற்குத் தேவை கூட்டு மனப் பான்மை (ன்ய்ண்ற்ஹ் ர்ச் ம்ண்ய்க்ள்). எல்லா மனங்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். இந்த கூட்டு மனப்பான்மையை அந்த நாள் முதல் இந்நாள் வரை நான் இராமநாத புரத்து மக்களிடம் பார்க்கிறேன். பொதுப் பிரச்னையில் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டே முடிவெடுப் பார்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நான் மேற் கொண்ட என்னுடைய முதல் சொந்த ஊர்ப்பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. என்னைக் காண மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள். அவர்களிடம்தான் எத்தனை கதைகள்! எத்தனை சோகங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை வெற்றிகள்!

அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை தியேட்டர் வேண்டும் என்பது. கொச்சியில் இருந்த மாதா அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நானும் ஒரு நிதியை அதற்காக ஒதுக்கியிருந்தேன். அவர்களும் மனம் உவந்து அப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் திறப்பு விழா எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இதே இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நான் வருகை தந்த போதும் எண்ணற்ற இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டேன். அவர்களிடம் இந்தியா முன்னேறிய நாடாக மாற வேண்டும் என்கிற கனவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

நம்முடைய பக்கத்து நாடுகள் சிலவற்றில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் காண்கிறோம், அந்த நாடுகள் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

காப்பகம்