Monday, September 22, 2014

பாலியல் பொம்மைக்குரிய உடல்வாகு கொண்ட பெண்..? - இதைக்கொஞ்சம் கேளுங்க..!

பாலியல் பொம்மைக்குரிய உடலமைப்பு வேண்டும் என்பதற்காக பெண்ணொருவர், 30,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை செலவு செய்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கெனன் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த விக்டோரியா வைல்ட் எனும் 30 வயதுடையு பெண்ணே; இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவரது, உதடு பிதுங்கி இருக்கும்படியும் மார்பு பெரிதாக இருக்கும்படியும் இவர் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல், கண் இமைகளையும் இவர் பெரிதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்புகளை பெரிதாக்குவதற்காக 25,000 பவுண்டும் மூக்குக்கு 3,000 பவுண்டும் கண் இமை மற்றும் நெற்றிப்பரப்புக்கு 2,000 பவுண்டுக்களும் இவர் செலவு செய்துள்ளார்.

பெஷன் ஷோக்களில் கிடைத்த பணம் மற்றும்  காதலனது உதவியுடனுமே இவர் இச்சிகிச்சைகளை செய்துள்ளார்.

'தற்போது, எனது உடலமைப்பு பாலியல் பொம்மை போல காட்சியளிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னை பார்த்து பலர் முறைக்கின்றனர். ஆனால் நான் எனது அழகையெண்ணி பெருமையடைகின்றேன்.

சிறுவயதிலிருந்தே இவ்வாறானதொரு பொம்மை போன்று காட்சியளிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் இவ்வாறான உடலமைப்பை பெறுவதற்கு எனது காதலுனும் சம்மதித்தார்.

'என்னை காணும் ஆண்களை நான் கவர்ந்து விடுகின்றேன். எனது காதலனும் மற்றையோர் என்னை பார்த்து ரசிப்பதை விரும்புகின்றார். நான் பிரபலமாக இருக்கவே விரும்புகின்றேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் முதல் தடவை இதுதான்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மகளை கட்டாயப்படுத்தி 2,000 பேருடன் உறவுகொள்ள வைத்த தாய்..!

பெண்ணொருவர், தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவுகொள்ள வைத்த கொடூர சம்பவம் வட இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஜக்குலின் மார்லிங்க் என்ற பெண்ணே இத்தகைய கொடூர செயற்பாட்டில் தனது மகளான ஆனாபெல்லை ஈடுபடுத்தியுள்ளார்.

ஜக்குலின் மார்லிங் பாலியல் குழுவொன்றுக்கு தனது மகளை அடிமையாக்கியுள்ளார்.

ஆனாபெல்(48) தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர், 'தி டெவில் ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் கொலின் பேட்லியுடன் ஜாக்குலின் மார்லிங் உறவு கொள்வதை 7 வயதில் ஆனாபெல் கட்டாயப்படுத்தலின் கீழ் பார்த்துள்ளார்.

ஆனாவுக்கு 11 வயது இருக்கையில் பேட்லி அவரை 2 முறை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

ஆனாவுக்கு 13 வயது இருக்கையில் அவரை அவரது இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு கொள்ளும் செயற்பாட்டில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைத்துள்ளனர்.

பேட்லி, ஆனாவை முதல் முறை வல்லுறவுக்குட்படுத்தும்போது 'இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் நீ நரகத்திற்கு செல்வாய்' என்று கூறி மிரட்டியுள்ளார்.

அந்த பாலியல் குழுவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்க ஆனா போன்ற சிறுமிகள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

'பகலில் பாடசாலை மாணவியாகவும் இரவில் பாலியல் அடிமையாகவும் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்றேன்' என்று ஆனாபெல் தெரிவித்துள்ளார்.

17 வயதில் கர்ப்பமான ஆனா குழந்தையை பெற்ற பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வழக்கில், பேட்லிக்கு 11 ஆண்டுகளும் ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தற்போது ஆனா இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்து அசத்திய அஜீத்..!


தல அஜீத்தோட மனிதாபிமானம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத். ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருடைய கார் டிரைவர் விலை மலிவான செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்ததை அஜீத் பார்த்துள்ளார். அவர் முன்னால், அந்த போனை வைத்துக்கொண்டு அப்போது வந்த அழைப்பைகூட எடுத்துபேச ரொம்பவும் தயங்கியுள்ளார்.

அதனை புரிந்துகொண்ட அஜீத், உடனே அருகிலுள்ள செல்போன் கடையில் காரை நிறுத்தச் சொல்லி, விலையுயர்ந்த ஐ போன் ஒன்றை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், கார் ஓட்டும்போது ஹெட் செட் அணிந்து வண்டியை ஓட்டுமாறு டிரைவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

5-வது முறையாக போலீஸ் உடை அணிகிறாரா அஜீத்..?


அஜீத் போலீஸ் உடையில் நடித்த ‘ஆஞ்சநேயா’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் ஒரு சில படங்கள்  அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. இதுவரை 4 படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்துள்ள அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் போலீஸ் உடையில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் துப்பறியும் காட்சிகளில் வரும் அஜீத், போலீஸ் உடையணிந்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து, மிகவும் அழகான தோற்றத்துடன் வலம் வருகிறாராம்.

அஜீத்தின் 55-வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக ஆடியோ வெளியீடை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க..!

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்... இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும்.

இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும்.

கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு 'எம்பிரியோ’ என்று பெயர். மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் 'ஃபீட்டஸ்’ என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது.

எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது; மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க..!

அது இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ். பல வருடங்களாக அந்த ஒரே பஸ், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மார்க்கமாக சென்று கொண்டிருப்பதால், அந்த பஸ் ரொம்பவே தள்ளாடிவிட்டது. இழுத்து இழுத்து அது செல்வதால் விவரம் தெரிந்த பயணிகள் அதில் ஏறமாட்டார்கள். அநேகமாக நாலைந்து பயணிகள் ஏறுவார்கள். ஏறியதும் ஆளுக்கொரு சீட்டில் கால் நீட்டி படுத்துவிடுவார்கள்.

அன்று இரவு பத்து மணி இருக்கும். மழை இதோ இப்போதே வந்துவிடுவேன் என்பதுபோல் மிரட்டிக்கொண்டிருந்தது. 60 வயதைக் கடந்த முதியவர், அந்த பஸ்சில் ஏறினார். முன் பகுதி இருக்கைகளில் நாலைந்து பேர் இருந்தும், படுத்தும் தூங்கிக்கொண்டிருக்க இவர் பின்பகுதியில் போய் அமர்ந்துகொண்டார்.

பஸ் 10, 15 கிலோமீட்டர் கடந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை ஏற்றிவிட்டார்கள். அவளுக்கு 30 வயதிருக்கும். நாகரிக தோற்றம். அங்கும் இங்கும் பார்த்தவள் முகத்தை சுழித்தாள். அந்த முதியவரை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். பாதுகாப்பு தேடுபவள்போல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள். அவருக்கும் தூக்கம் வரும் வரை பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம்.   கண்டக்டர் வந்தார். சற்று தூரத்தில் உள்ள ஊர் ஒன்றுக்கு டிக்கெட் எடுத்தாள்.

முதியவரிடம் பேசிக்கொண்டே வந்தாள். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். தனது நண்பர் ஒருவர் கிராமத்தில் இறந்துவிட்டார். இறுதிக் காரியம் முடித்துவிட்டு திரும்பி வருகிறேன் என்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் அவர் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் தெரிவித்து விட்டார். அந்த அளவுக்கு பக்குவமாக கேள்விகளைப் போட்டு பதில்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவருக்கு தூக்கம் வருவது போலிருந்தது. அவளுக்கு ஒன்றிரண்டு முறை போன் வந்துகொண்டிருந்தது. அதை எடுத்து பேசாமல் அவள் மெசேஜ் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தாள். பஸ் அப்போதுதான் திணறி திணறி இருட்டான பகுதிக்குள் புகுந்து சற்று வேகமெடுத்திருந்தது.

திடீரென்று அவள் புடவை முந்தானையை சரிய விட்டாள். ஜாக்கெட்டின் முதல் பட்டன் பகுதியை இழுத்து கிழித்தாள். முதியவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, அவரோடு நெருக்கமாக அமர்ந்தாள். ‘உங்களை பற்றிய முழுவிவரமும் எனக்கு தெரியும். சமூகத்தில் மரியாதையான ஆள் நீங்க. என் உடை இப்படி ஆவதற்கு நீங்கதான் காரணம் என்று இப்பவே என்னால் கூச்சல்போட்டு பஸ்சை நிறுத்த முடியும். பஸ் போலீஸ் நிலையத்திற்கு போகும். உங்க மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்திடும்..’ என்று மிரட்டும் தொனியில் பேசினாள்.

அவர் கெட்ட கனவு கண்டவர்போல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெலவெலத்து போனார். அந்த இரவு நேரத்திலும் வியர்த்தது.

‘மரியாதையாக கையில் கிடக்கிற வாட்சையும், மோதிரத்தையும் கழற்றி கொடுங்க..’ என்றவள், அவரது சட்டை காலரை நீக்கி கழுத்தை பார்த்தாள். பளிச்சென்ற தங்க சங்கிலியும் கிடந்தது. ‘எல்லாத்தையும் கொடுத்திடுங்க. நான் அடுத்த பஸ் ஸ்டாப்பில் சைலண்டாக இறங்கி போயிடுறேன்..’ என்றாள்.

‘தராவிட்டால் என்ன பண்ணுவே?’ பயத்துடன் வாய் குழற கேட்டார்.

அடுத்த ஊர் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்திடும். அங்கே என்னை எதிர்பார்த்து என் ஆட்கள் நிற்கிறார்கள். இப்பவே நான் கூச்சலை ஆரம்பித்து, அந்த நிறுத்தம் வரும் வரை தொடருவேன். அங்கே பஸ்சில் ஏறும் அவர்கள், உம்மை நையப்பு டைத்துவிடுவார்கள். தட்டிக்கேட்கக்கூட நாதி இருக்காது. கிழவன் பஸ்சில் இளம் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்டான் என்றால் ஊரே நம்பும். உடம்பை புண்ணாக்க போகிறாயா?’ என்று அவள் ஒருமையில் பேசி, தான் கைதேர்ந்த திருடி என்பதை அவருக்கு புரியவைத்தாள்.

அவர் அப்படியே குத்துக்கல் போல் இருக்க, அவளே மோதிரம், தங்க சங்கிலி, வாட்ச் எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டாள்.

அமைதியாக இருந்த அவர் கூச்சல் போட்டு எல்லோரையும் எழுப்பிவிடலாமா? என்று யோசித்தபோது அவள், ‘கண்டக்டர் ஸ்டாப் வந்துடுச்சி’ என்று கத்தினாள்.

பஸ் மெல்ல மெல்ல குலுங்கி நிற்க முயற்சிக்க, தூரத்து வெளிச்சத்தில் ரோட்டில் மூன்று தடியன்கள் நின்றிருந்தனர். அவர்கள் அருகில் ஒரு காரும் நின்றிருந்தது. ‘சத்தம் போட முயற்சிக்காதே. மூன்று பேரும் பஸ்சில் ஏறி உன்னை பந்தாடிவிடுவார்கள். நீ கிழித்த ஜாக்கெட் அப்படியே இருக்கிறது பார்த்தாயா!’ என்றாள்.

பஸ் நின்றது. வேகமாக இறங்கிய அவள், அந்த தடியர்களிடம் இவரை அடையாளங்காட்டினாள். அவர்கள் சைகையால் ‘வாயை பொத்திக்கொண்டு செல்’ என்று சைகையால் மிரட்டினார்கள். அவள் தடியர்களோடு காரில் ஏறினாள். இவர் இருந்த பஸ்சும் கிளம்பியது.

அவர்கள் திட்டமிட்டு காரில் வந்து, அவளை பயன்படுத்தி வழிப்பறி செய்திருக்கிறார்கள். காரியம் முடிந்ததும், அதே காரில் முந்திச் சென்று காத்திருந்து, அவளை ஏற்றிச்சென்றுவிட்டார்கள்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க!

காப்பகம்