Thursday, January 16, 2014

குளிரிலும் மிளிர வேண்டுமா..?



இந்த ஆண்டு, குளிர் கொஞ்சம் அதிகம் தான். வீடு, அலுவலகம் என்று காலில் சக்கரம் கட்டி, சுற்றிக் கொண் டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க, நேரம் கிடைப்ப தில்லை. கிடைக்கும் நேரத்தில், வீட்டிலேயே அழகைப் பராமரித்து, பொலிவுடன் ஜொலிக்க...

 இதோ சில டிப்ஸ்!

பனிக் காற்று, சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கும். குறிப்பாக, கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி சுருக்கம் ஏற்படும். வறண்ட சருமமாக இருந்தால், அதிக திறனுள்ள மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இத சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங் கள்.

மேக்கப் செய்யும் முன், இதனை, கண் மற்றும் உதடுகளை சுற்றி போடவும். இதனால், நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

கண்களைச் சுற்றி சுருக்கம் ஏற்படாமல் இருக்க, சாதாரண பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்த்து, மோதிர விரலால், ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பின், 15 நிமிடம் கழித்து, மென்மையான பஞ்சுத் துணியால் துடைத்து விடுங்கள்.

 இது, கரு வளையத்தை போக்க உதவும். வெள்ளரி ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் இரண்டையும் சமமான அளவு கலந்து கண்களுக்குக் கீழே தேய்த்து, 15 நிமிடம் வைத்திருந்தால் போதும், கண்கள் கவிபாடும்.

பனி நிறைந்த காலைப் பொழுதும், குளிர்ந்த காற்றும் சருமத்தை சொரசொரப்பாக்கி விடும். இதிலிருந்து விடுபட, சருமத்திற்கு நீர்ச் சத்து அவசியம். ஆலிவ் ஆயில் அல்லது உங்கள் சருமத்திற்கு ஒத்துப் போகும் ஏதேனும் ஒரு எண்ணெயை, ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில், கல் உப்பை எண்ணெயில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சேர்க்கவும். இந்த கலவையை கழுத்தில் இருந்து உடல் முழுவதும் பொலிவு இழந்த சருமத்தின் மீது, வட்ட வடிவமான அசைவில் தேய்க்கவும்.

இதனால், சருமத்தின் சொரசொரப்பு குறைவதோடு, நீர்ச் சத்தும் கிடைக்கும். வறண்ட சருமத்திற்கு கிரீம் கலந்த சோப் வகைகளே சிறந்தது. குளித்த பின், பாடி லோஷன் தேய்த்து, பின், பவுடர் உபயோகித்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.

உடலின் மொத்த பாரத்தையும் பாதங்கள் தாங்குவதால், அதிக அழுத்தங்களைச் சந்திக்கிறது. உடலின் முக்கிய நரம்பு மண்டலங்களுடன் இணையும் பிரஷர் பாயின்டுகளும் பாதங்களில் தான் இருக்கின்றன. இதனால், வாரம் ஒரு முறை, மசாஜ் செய்தால், இந்த அழுத்தத்திலிருந்து பாதங்கள் விடுபடும். ஒரு அகன்ற பாத்திரத்தில், வெது வெதுப்பான தண்ணீரில், "எக்சோட்டிக் பாத் கிரிஸ் டல்சை' கரைக்கவும்.

 இதில், 10 முதல் 15 மார்பிள் கல் துண்டுகளைப் போடவும். பாதங்களை இந்த தண்ணீரினுள் வைத்து, மார்பிள் கல்லில் குதிகால்களைத் மெதுவாகத் தேய்க்கவும். இது உங்கள் பாதங்களை மிருதுவாக வைப்பதோடு, பித்த வெடிப்புகளும் வராது. தினமும் பாடிலோஷன் பயன்படுத்துவது, அதிக பலனை தரும்.

வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்வதை விட, வேறு எந்த சிறந்த சிகிச்சையும் கூந்தலுக்கு இருக்க முடியாது. தேங்காய் எண்ணெயை சூடாக்கும் முன், அதில் கால் பாகம் ஆலிவ், பாதாம் அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். வறண்ட வானிலை நிலவும் போது, இந்த ஆயில் மசாஜ், கூந்தலுக்கு தேவையான சத்தை தரும்.

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்......?

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

பிரவுசர் To பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்..!



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.

1. ஏற்கனவே பேக் அப் செய்து வைத்தவற்றிலிருந்து மாற்றம் செய்திட, "Favorites” பட்டனில் முதலில் கிளிக் செய்திடவும். "Add to Favorites” என்பதன் அருகே உள்ள அம்புக் குறியில் அடுத்து கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் "Import and Export” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Import /Export Settings விண்டோ தேர்ந்தெடுக்கப்படும்.

2. அடுத்து "Import from a file” என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து "Next” கிளிக் செய்திடவும்.

3. உங்களுடைய பேவரிட்ஸ் மட்டும் மாற்றம் செய்திட வேண்டும் என்றால், "Favorites” என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அல்லாமல், உங்களுடைய feeds மற்றும் cookies ஆகியவற்றையும் மாற்றம் செய்திட விருப்பப்பட்டால், “Feeds” and “Cookies” ஆகியவற்றின் மீதும் கிளிக் செய்திடவும். பின்னர் "Next” மீண்டும் கிளிக் செய்திடவும்.

4. அடுத்து "Browse” பட்டனில் கிளிக் செய்திடுக. பைல் பிரவுசரினைப் பயன்படுத்தி, நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த பேக் அப் பைலைத் தேடிக் கண்டறிந்து அதனைத் திறக்க "Open” என்பதில் கிளிக் செய்திடவும். மீண்டும் "Next” பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. அடுத்ததாக, "Favorites” எனப் பெயரிட்டுள்ள போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் "Next” பட்டனில் கிளிக் செய்திடவும்.

6. மீண்டும் பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, பேவரிட்ஸ் சேமித்து வைத்த OPML பைலைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து "Feeds” என்ற போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். இதே போல மீண்டும் சென்று, குக்கீஸ் கொண்டுள்ள டெக்ஸ்ட் (TXT) பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

7. இறுதியாக உங்கள் பேவரிட்ஸ், குக்கீஸ், பீட்ஸ் ஆகியனவற்றை மாற்றிட "Import” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். "Favorites,” “Feeds” and “Cookies” ஆகிய ஆப்ஷன்களில் டிக் ஏற்படுத்தினால், அவை அனைத்தும் மாற்றம் செய்யப்படும். முடிவாக "Finish” என்பதில் கிளிக் செய்து Import/Export Settings என்ற விண்டோவினை மூடவும். இனி, பேவரிட்ஸ், பீட்ஸ் மற்றும் குக்கீஸ் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கும்.

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம். அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்? நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.

குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது. நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.

முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.

பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம். எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.

அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிறபோதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம். அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.

மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம். வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.

நலிவிலிருந்து மீண்ட நம்பிக்கை குரல்...!

குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி தட்டி

எழுப்பி உங்கள் பெயரென்ன என்று வினவினார் மருத்துவர். “என் பெயரை ஒரு வார்த்தையில் சொல்லவா? ஒரு வரியில் சொல்லவா? அல்லது ஒன்பது வரிகளில் சொல்லவா” என்று கேட்டு மருத்துவர்களையே அசரவைத்த நம்பிக்கை மனிதர் திரு. செங்குட்டுவன்.

பல தடைகள் தாண்டி வெற்றி பெற்ற செங்குட்டுவன் அவர் குரலை இழந்தது எவ்வாறு?
பல வருடங்களாக தன்னை ஆசிரியர் பணியில் கரைத்துக்கொண்ட செங்குட்டுவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தொலைபேசியில் யாருடனாவது பேசும்போது, திடீரென்று ஒலிக்கும் பெண் குரல் யாருடையது என்று எதிர்முனையில் இருப்பவர்கள் வினவுவார் களாம். பிறகுதான் இவர் குரல் பெண்களின் குரல் போல் மென்மையடைந்து வருவதை உணர்ந்திருக்கிறார். சிறிதும் மனம் தளராமல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட செங்குட்டு வனுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுத்தமாக குரலை இழந்து பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். வேதியியல், இயற்பியல், கணிதம் என அனைத்து பாடங்களையும் சிறப்புற நடத்துபவர் செங்குட்டுவன். அவருக்கு அவர் குரலை இழந்ததுகூட வாழ்க்கைப் பாடமாகத்தான் தோன்றியது. இவர் சில காலம் சென்னையில் தங்க நேர்ந்தது. எந்த இடத்தில் இருந்தாலும் இவருக்கு கற்றுக்கொள்ளும் தாகம் மட்டும் குறையவே இல்லை. கன்னிமாரா நூலகத்தில் பல பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என அறிந்து பயிற்சிகளில் பங்கேற்றார். பட்டியலிடப்பட்ட பல பயிற்சிகளில் மாயாஜாலம் கற்றுக்கொள்வது என முடிவு செய்தார்.

மாயாஜாலக் கலையை கற்று முடித்தபின், இவர் செய்த வித்தையில் அசந்துபோன பலரில் குறிப்பிடத்தக்கவர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மோகன் காமேஸ்வரன் அவர்கள். நிலையறிந்து இவருக்கு உதவ முன்வந்தார். செங்குட்டுவனை முழுவதும் பரிசோதித்துப் பின் மருத்துவருக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே எழுந்த உரையாடல்தான் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட சம்பவம். பொதுவாகவே அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சைக்குப் பின் என சில விளம்பரங்களை கண்டிருக்கிறோம். ஆனால் செங்குட்டுவனைப் பொறுத்த வரையில் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நம்பிக்கை நிறைந்த அசாத்திய மனிதராகவே இருந்துவருகிறார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த செங்குட்டுவன், 21 வயதில் ஆசிரியராகப் பொறுப் பேற்று பின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். அமைதியாக மேற்கொள்ளவேண்டிய ஆசிரியர் பணியை அதிரடியும் அன்பும் கலந்து மேற்கொள்வது செங்குட்டுவன் ஸ்டைல். ஆசிரியர் பணியில் இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை “டியூஷன்”.

“பெற்றோர்கள் சத்தான உணவை கொடுத்தால் பிள்ளைகள் அடுத்த வீட்டில் கை ஏந்துமா என்ன? அப்படித்தான் டியூஷனும்.” என்று ஆசிரியருக்கே உரித்தான கோபம் அவர் வார்த்தைகளில்.

குடும்பத்தில் ஆண் படித்தவராக இருப்பதைக் காட்டிலும் ஒரு பெண் படித்தவராக இருக்கும்போது எத்தனை நன்மைகள் விளையும் என்பதற்கு என் தாயார் சிறந்த உதாரணம். கண்டிப்பான தந்தை. தந்தையிடம் கற்றுக் கொண்ட ஒழுக்கமும், நேரம் தவறாமை, தாயின் பரிவும், அனைத்தையும் தாண்டி ஆசிரியர் பணியில் அடைந்த அளவற்ற மகிழ்ச்சி. இவையே, பல தடைகளை தகர்த்தெறிந்து இன்று என்னை வெற்றியாளன் ஆக்கியிருக்கிறது” என்கிறார் செங்குட்டுவன்.

குரலை இழந்து மீண்டும் பெற்றவர் மட்டுமல்ல, வாழ்வை இழந்து மீண்டும் பெற்றவர், வெற்றியும் பெற்றவர் திரு. செங்குட்டுவன்.

பத்து நிமிடத்தில் வெற்றி...?

வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லது எப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றி பெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டை பார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.

பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.

சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் செய்து தரப்படும் என்ற அறிவிப்பை பார்த்ததும், எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனால் அரை மணி நேரமாவது ஆகும் என்று தோன்றும்.

நிறுவனங்களின் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல, இப்பொழுதெல்லாம் யாரும் நம்புவதில்லை.

அதனால் அந்த நிறுவனம் அறிவிப்பில் ஒரு வரியை கூடுதலாக சேர்த்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி தாமதமானாலும் பிரிண்ட் இலவசம் . பணம் கட்டத்தேவையில்லை.

தொழிலில் ‘வெற்றி பெறச் செய்வோம்’ என்ற வாக்குறுதியைப் போலவே நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்கள் பத்தே நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் மனங்களை வென்று விடுகிறார்கள்.

இந்திய இணைய இணைப்பு வேகம்..!



இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா பிட்ஸ் வேகம் தரும்.

இந்தியாவில், 49Mbps வேகத்தில் டவுண்லோட் செய்திட முடியும் என்பதே ஆச்சரியமான ஒரு தகவலாகும். இருந்தாலும், உலக அளவில், அதன் சராசரியான வேகத்துடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவான ஒன்றாகும்.

ரிலையன்ஸ் 4ஜி அதன் உறுதிமொழிக்கேற்ப வேகமான இணைய இணைப்பினைத் தந்தாலும், அது பிரிட்டனில் கிடைக்கும் இணைய இணைப்பினைக் காட்டிலும் 30% குறைவாகவே இருக்கும். பிரிட்டனில் சில இடங்களில் 60Mbps வேக இணைப்பு கிடைக்கிறது.

இணைய இணைப்பு வேகத்தினைக் கண்காணிக்கும் Speedtest.net என்ற இணைய தளம் இன்னும் பல ஆர்வமூட்டும் தகவல்களைத் தந்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 85.54Mbps வேகம் கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சராசரி இணைய வேகம் 18.5Mbps மட்டுமே. மொபைல் நெட்வொர்க் இணைப்பில், அமெரிக்க சராசரி வேகம் 58.25Mbps ஆக உள்ளது.

கூகுள் நிறுவனம், Google Fiber என்ற திட்டத்தின் கீழ் நொடிக்கு 1Gbps (gigabits per second; 1gigabit = 1024megabits) வேக இணைப்பு தருவதாக அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் கான்சஸ் நகரத்தில் அதிக பட்ச வேகம் 49.86Mbps ஆக உள்ளது. இது, அமெரிக்காவில் இரண்டாவது அதிக வேகமாகும்.

உலகிலேயே மிக அதிகமாக இணையத்துடன் இணைப்பில் இருக்கும் நாடாக தென் கொரியா பெயர் பெற்றுள்ளது. இதன் அதிக பட்ச பிராண்ட்பேட் வேகம் 53.3Mbps. சராசரி வேகம் 13.3Mbps. மொபைல் நெட்வொர்க்கில், இந்நாட்டில் இயங்கும் SK Telecom நிறுவனம், தான் அதிக பட்ச வேகமாக 225Mbps அளவினை எட்டியதாக அறிவித்துள்ளது. இதன் LTEA தொழில் நுட்பம், மொபைல் நெட்வொர்க்கில் 50% கூடுதலான வேகத்தில் டேட்டா டவுண்லோடினை அனுமதித்ததாக அறிவித்துள்ளது.

ஹாங்காங் நாட்டில், உலகிலேயே அதிக வேகமான இணைய இணைப்பு (65.1Mbps) வேகம் உள்ளது. இங்கு இணைய இணைப்புகளின் சராசரி வேகம் 10.8Mbps. இங்கு கிடைக்கும் 4ஜி மொபைல் ஸ்பீட் 20Mbps ஆக உள்ளது. இந்தியாவில் 4ஜி இணைப்பினை, பார்தி ஏர்டெல் நிறுவனமும் வழங்க இருக்கிறது. தற்போது புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் இதன் நெட்வொர்க்குகள் இயங்குகின்றன.

இங்கும் மொபைல் போன்களில் இது கிடைக்கவில்லை. இந்நிறுவனத்தின் யு.எஸ்.பி. டேட்டா கார்ட் மூலம் சராசரி டேட்டா டவுண்லோட் 40Mbps கிடைக்கிறது. ஆனால், இது 100Mbps வேகம் அடைய முயற்சிக்கிறது.

மேற்கண்ட தகவல்களிலிருந்து, இந்தியாவின் இணைய இணைப்பு வேகம், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம்.
3ஜி இணைய இணைப்பிற்கான கட்டணம் இந்தியாவில் இதன் பரவலுக்கு ஒரு தடையாகவே உள்ளது. நிறுவனங்கள் இதனால், வலுவான கட்டமைப்பினை அமைக்கத் தயங்குகின்றனர்.

அதிகமான எண்ணிக்கையில் மக்களை 3ஜி அல்லது 4ஜிக்குக் கொண்டுவர, கட்டமைப்பிற்கான செலவு அதிகமாகும். அதற்கேற்ற வகையில், இணைய இணைப்பிற்கான கட்டணத்தை விதிக்க முடியவில்லை. இதனால், இருபக்க இழுபறியாக இணைய வேகம் உள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாகப் பரவி வருவதால், இதன் பயனர்கள், அதிவேக மொபைல் இன்டர்நெட்டினை எதிர்பார்க்கலாம். பெரும் அளவில் மக்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் வீடியோ காண முயற்சிப் பார்கள் என்பதனால், இந்த வகையில் மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும்.

அதனால், குறைந்த கட்டணத்தில் இணைப்பு வழங்கி, இணைய நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப கட்டமைப்பினை வலுப்படுத்த முடியும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி





ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி:-
           
 ஹாலிவுட் சினிமாவின் உயரிய கவுரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இதில் 'கிராவிட்டி' மற்றும் 'அமெரிக்கன் ஹஸல்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகப்படியாக, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறந்த திரைப்பட பிரிவில் 9 திரைப்படங்கள் போட்டியிடுவதால் எந்தத் திரைப்படம் விருதைப் பெரும் என இப்போதே ரசிகர்கள் இடையே விவாதம் ஆரம்பித்துவிட்டது. முழு பரிந்துரை பட்டியல் பின்வருமாறு:

 
சிறந்த திரைப்படம்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

ஹெர்

நெப்ராஸ்கா

ஃபிலோமினா

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த இயக்குனர்


ஸ்டீவ் மெக்குயின் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்)

டேவிட் ஓ ரஸல் (அமெரிக்கன் ஹஸல்)

அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி)

அலெக்ஸாண்டர் பெய்ன் (நெப்ராஸ்கா)

மார்டின் ஸ்கார்சஸே (தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்)



சிறந்த நடிகர்

ச்விடெல் எஜியோஃபோர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

கிறிஸ்டியன் பேல் - அமெரிக்கன் ஹஸல்

மாத்யூ மெக்கானஹே - டாலஸ் பையர்ஸ் கிளப்

ப்ரூஸ் டெர்ன் - நெப்ராஸ்கா

ஃலியார்னடோ டிகாப்ரியோ - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த நடிகை

ஏமி ஆடம்ஸ் - அமெரிக்கன் ஹஸல்

கேட் ப்ளான்செட் - ப்ளூ ஜாஸ்மின்

சாண்ட்ரா புல்லக் - கிராவிட்டி

ஜுடி டென்ச் - ஃபிலோமெனா

மெரில் ஸ்ட்ரீப் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி



சிறந்த திரைக்கதை 

அமெரிக்கன் ஹஸல்

ப்ளூ ஜாஸ்மின்

ஹெர்

நெப்ராஸ்கா

டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த தழுவல் திரைக்கதை 

பிஃபோர் மிட்நைட்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஃபிலோமினா

கேப்டன் ஃபிலிப்ஸ்

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த உறுதுணை நடிகை

லுபிடா நையோங் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜெனிஃபர் லாரன்ஸ் - மெரிக்கன் ஹஸல்

ஜூலியா ராபர்ட்ஸ் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி

சாலி ஹாக்கின்ஸ் - ப்ளூ ஜாஸ்மின்



சிறந்த உறுதுணை நடிகர்

பர்காத் அப்தி - கேப்டன் ஃபிலிப்ஸ்

ப்ராட்லி கூப்பர் - அமெரிக்கன் ஹஸல்

மைக்கெல் ஃபாஸ்பென்டர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜோனா ஹில் - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்

ஜாரெட் லெடோ - டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த அனிமேஷன் திரைப்படம்


தி க்ரூட்ஸ்

டெஸ்பிகபில் மீ - 2

ஃப்ரோஸன்

தி விண்ட் ரைசஸ்



சிறந்த ஒளிப்பதிவு

தி கிராண்ட் மாஸ்டர்

தி கிராவிட்டி

இன்சைட் லெய்ன் டேவிஸ்

நெப்ராஸ்கா

ப்ரிஸனர்ஸ்



சிறந்த ஆடை வடிவமைப்பு

மைக்கல் வில்கின்சன் - அமெரிக்கன் ஹஸல்

வில்லியம் சாங் - தி கிராண்ட் மாஸ்டர்

கேதரின் மார்டின் - தி கிரேட் காட்ஸ்பி

மைக்கெல் ஓ கானர் - தி இன்விஸிபில் வுமன்

பாட்ரிசியா நாரிஸ் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த படத்தொகுப்பு 

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த அயல் மொழித் திரைப்படம்

தி ப்ரோகன் சர்கிள் ப்ரேக்டவுன் - பெல்ஜியம்

தி கிரேட் பியூட்டி - இத்தாலி

தி ஹண்ட் - டென்மார்க்

தி மிஸ்ஸிங் பிக்சட் - கம்போடியா

ஓமர் - பாலஸ்தீன்



சிறந்த ஒப்பனை, சிகையலங்காரம்

டாலஸ் பையர்ஸ் கிளப்

பேட் கிராண்ட்பா

தி லோன் ரேஞ்சர்



சிறந்த கிராஃபிக்ஸ்

கிராவிட்டி

தி ஹாபிட்: தி டீசொலேஷன் ஆஃப் ஸ்மாக்

அயர்ன் மேன் 3

தி லோன் ரேஞ்சர்

ஸ்டார் ட்ரெக் இன்டு டார்க்னெஸ்

இன்று ஒரு தகவல் -- அறிஞர் அண்ணா ...!!



அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் .அப்பொழுது தான் ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் பல எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறிய சமயம். அண்ணா அவர்கள் டில்லியில் ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் .

அந்த கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்த பிறகு அண்ணா அவர்கள் சென்றார் .அந்த இடத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்க பட்டிருந்தன . அண்ணா பேசும்போது ,அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் நீங்கள் பேசுவதை காட்டிலும் எங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார் .

அப்பொழுது அந்த பத்திரிகையாளர் அண்ணாவிடம் "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க கூடாது என்று மறுக்கிறீர்கள் " என்று கேட்க அறிஞர் அண்ணாவோ "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் " என்று திருப்பி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பத்திரிகையாளரோ " இது ஒரு பொதுவுடைமை நாடு .இங்கு யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்கு தான் முன்னுரிமை .அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்தி . அப்படியானால் ஹிந்தி தானே தேசிய மொழி " என்று சொல்லியிருக்கிறார் .

ஆனால் அறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியே பதில் அளித்தாராம் ." நீங்கள் சொல்வது போல பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிகையை விட காக்கைகளின் எண்ணிக்கை தானே அதிகம். காக்கைகள் அதிகம் இருப்பதால் நாம் அதை தேசியப்பறவயாக வைக்கவில்லையே ,மயிலை தானே வைத்து இருக்கிறோம் " என்றாராம்

இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கை தட்டும் ஓசை நிற்க பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் .

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!

தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

 



தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."...

"எப்ப தூக்கம் வரும்பா?"

"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."

"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."

"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."

"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"

"கடவுள்..."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"

"கடிக்காது..."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."

"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"

"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்...."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான் நீ தூங்கு..."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்கு பசிக்குது..."

"கொசு இட்லி சாப்பிடுமா?"

"அதெல்லாம் பிடிக்காது..."

"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"

"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."

"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"

"கேட்டுத் தொலை"

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்கு பல்லே இல்லை..."

"பிறகு எப்படி கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."

"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"

"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"

"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"

  • இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வேலை தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!


இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

 இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்

கட்டி பிடிங்க..! ரத்த அழுத்தம் குறையும், மூளை சுறுசுறுப்பாகும்..!



நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும்.

இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது.

இது தவிற கட்டி தழுவுவது உங்களை மேலும் மென்மமையாக மாற்றும். அத்துடன் உங்கள் அன்புக்குரியோரை நீங்கள் அடிக்கடி தழுவி கொள்வது அவர்கள் உடையே ஆன அன்பை மேம்படுத்தும். இது கால போக்கில் உறவில் ஏதும் சிக்கல் ஏற்பட்டாலும், அதனை அறுத்தெறிய வழிவகுக்கும். குற்றமே செய்தாலும் அந்த நம்பிக்கை உரிய அன்பானவர்கள் உங்கள் முந்தய அன்பான நடவடிக்கைகளை எண்ணி தவறையும் மறப்பார்கள்.

ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

மேலும் நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.

அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, அந்த தழுவதலின் மூலம் ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும்.

அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பு காலப்போக்கிலும் மேம்படாது என்று இந்த ஆய்வின் முடிவில் நரம்புநோய் மருத்துவர் சாண்ட்க்யூளர் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் 'தங்க வேட்டை' நடத்தும் வீரம், ஜில்லா..!



பொங்கலுக்கு ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன.

இது 2014ம் ஆண்டின் சிறப்பான துவக்கமாக அமைந்துள்ளது என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.25 கோடி

 வீரமும் சரி, ஜில்லாவும் சரி ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


கமலை தொடரும் விஷால்.....



‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலின் கதாபாத்திரத்திற்கு முன்னுதாரணம் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் திரு.
பாண்டிய நாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்துவருகிறார் விஷால்.

இப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இயக்குகிறார். விஷாலுடன் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ஒரு மனிதனின் ஆசைகள் பற்றிய கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’. நாயகன் என்ன ஆசைப்படுகிறான். அதைநோக்கிச் செல்லும்போது என்னென்ன தடைகள் வருகின்றன? எல்லாவற்றையும் மீறி எப்படி தடைகளை எதிர்கொண்டு தனது ஆசையை அடைகிறான் என்பதே படத்தின் கதை.

“இந்தப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது. சினிமாவில் பொலிஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன், துரோகி, விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு.

ஆனால் இந்தப்படத்தில் விஷால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு எந்த முன் மாதிரியும் இல்லை. காரணம் கதை புதிது.. கதாபாத்திரம் புதிது என்று கூறியுள்ளார்.

மேலும்‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலுக்கு ராசியான ஜோடியாக மாறியுள்ள லட்சுமி மேனனுக்கு இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம் கொடுக்கப்பட்டுள்ளது

அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா அஜித்..? 25 கோடி சம்பளம்…!




ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்ட நிலையில்,  இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு.

அதற்கான விடையாக, ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேட்டியளித்தார் அஜித்.

அவரது கருத்து அப்போது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை அஜித்.

இதற்கிடையில் யங் சூப்பர் ஸ்டார், ஓல்டு சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சிம்பு போன்றவர்கள் சுய (தம்)பட்டத்தோடு கிளம்பினார்கள்.

இன்னொரு பக்கம், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்க அவரது அப்பாவின் மூலம் சில பல காய்நகர்த்தல்கள் நடைபெற்றன.

ஊடகங்களின் உதவியுடன் இப்படி எல்லாம் ‘செட்டப்’ செய்தாலும், விஜய் நடித்த படங்களின் தொடர் தோல்வி அவர்களின் முயற்சியை காலி பண்ணிவிட்டது.

விஜய்யின் கதை இப்படி என்றால், ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சொன்ன அஜித்தோ, நடிப்பில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று திசைமாறிச் சென்றார்.

நல்லவேளை, கண்கெடுவதற்கு முன்பே சூரியநமஸ்காரம் செய்ய, அதாவது நடிப்பில் கவனம் செலுத்த திரும்பி வந்தார்.
பில்லா 2 போன்ற சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், சுதாரித்துக் கொண்டு சரியான இயக்குநர்களை, கதையை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார் அஜித்.

குறிப்பாக ஆரம்பம், வீரம் படங்களின் அதிரடி வெற்றியின் மூலம் தற்போது விஸ்வரூபமே எடுத்துவிட்டார் அஜித்.

இன்றைய தேதியில் சூர்யா, விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களையும்விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகி இருக்கிறார் அஜித்.

அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?


25 கோடி!

”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று அன்று சொன்னதை, அஜித் உண்மையாக்கும் நாள் வெகு அருகில் என்றே தோன்றுகிறது.

அஜித் – கௌதம் மேனன் கூட்டணி உறுதியானது..!



அஜித் நடிப்பில், கௌதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆரம்பம் படத்தின் படப்படிப்பு முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம் படத்தை ஆரம்பித்தார் அஜித்.

இப்போது, அடுத்த படம் யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டார். இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஆரம்பம் படம் தயாரித்த ஏஎம் ரத்னத்தின் சத்யசாய் நிறுவனத்துக்கே தந்துள்ளார் அஜித்.

இயக்குபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்று அஜித் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீசத்யசாய் நிறுவனத்துக்காக அஜித் நடிக்கும் படத்தை இயக்க, இன்று கௌதம் மேனன் கையெழுத்திட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனனும் அஜித்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இணையவிருந்தனர். படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.

இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கூடிவந்துள்ளது. ஆரம்பம் படத்தைத் தயாரித்தாலும், கடன்கள் முழுமையாக அடையாமல் ஏஎம் ரத்னம் சிரமப்படுவதைப் பார்த்து அவருக்கு மீண்டும் படம் நடித்துத் தருகிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை..!



வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை இந்த      ( ஜனவரி ) மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான தனி அமைப்பாக ஒழுங்கு விதிமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

வங்கிகளில் கணக்கு துவங்குவது என்பது சாமானியர்களுக்கு இன்னமும் ஒரு கடினமான செயலாகத்தான் இருந்து வருகிறது. அதற்கான வழிமுறைகளை எளிதாக்கி, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை சீர்படுத்த வேண்டும் என்று வங்கிகளை ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

அதிக வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களை விளக்காமல், அவர்களுக்கு சாதகமான காரணிகளை மட்டும் பெரிது படுத்தி, இன்ஷூரன்ஸ போன்ற வங்கி வியாபாரம் சாராத சில சேவைகளை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் மீது திணித்துக் கொண்டிருக்கின்றன. விற்பனைக்குப் பின், வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதற்கு அவை முன் வருவதில்லை. சில சமயங்களில், வாடிக்கையாளர்களின் முறையீடு இல்லாமலேயே, இம்மாதிரி சேவைகளுக்கான கட்டணங்கள் அவர்கள் கணக்குகளிலிருந்து எடுக்கப்படுகின்றன என்பது போன்ற புகார்களும் பதிவாகியிருக்கின்றன. இம்மாதிரி நிகழ்வுகள் நடக்காமல், வாடிக்கையாளர்களின் நலன் பாதுக்காக்கப்படவேண்டும் என்று வங்கிகள், ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில், வங்கிகளுக்கு நேரடியாக செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, ஏ.டி.எம். மற்றும் இணைய தளங்கள் மூலம் தங்கள் வங்கி கணக்குகளை நிர்வகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே வேகத்தில், அவர்களுடைய பண பரிவர்த்தனைக்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவது ஒரு அச்சுறுத்தலான விஷயமாகும். தொழில் நுட்பத்துடன் கூடிய வங்கி சேவையில் செüகரியங்களுடன், பல இடர்பாடுகளும் (ரிஸ்க்) ஒளிந்திருக்கின்றன.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை களின் போது, கார்டு உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்கள் பெரும் பொருள் இழப்புக்கு ஆளாகின்றனர். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு சார்ந்த இணையதள தகவல்கள் கடத்தப்பட்டு, அவை முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. அம்மாதிரி இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் வாடிக்கையாளர்கள், பொருள் இழப்புக்கு ஆளாகின்றனர். இம்மாதிரி அசம்பாவிதங்களின்போது, அனைத்து பொறுப்புகளையும் வாடிக்கையாளர்களின் மீது சுமத்தி, வங்கிகள் இழப்பீடு வழங்காமல் தப்பிக்கும் விதமாகத்தான் தற்போதைய விதிமுறைகள் அமைந்திருக்கின்றன. தவிர்க்கமுடியாமல் இழப்பீடுகள் வழங்கினாலும், அவை காலம் கடந்தே வழங்கப்படுகின்றன.

நவீன தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் வங்கிகள், வாடிக்கையாளர் களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் அடங்கியிருக்கும் ஷரத்துக்கள், பெரும்பாலும் வங்கிகளுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும் விஷயம், நம்மில் பலருக்கு தெரியாது. அதன்படி, பணபரிவர்த்தனைகளின்போது முறைகேடுகள் நடந்தால், அந்த முறைகேடுகள் வங்கியின் அசட்டையால் தான் நடந்தது என்று நிரூபிக்க வேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்பாகும். வங்கி ஊழியர்கள் பணபரிவர்த்தனை முறைகேடுகளுக்கு துணை போனாலும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடையாது. தங்கள் பணம் பறிபோனதற்கு, அவர்கள்தான் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவேண்டும் என்ற விதிமுறையும் அமலில் இருக்கிறது.

தற்போதைய நிலைமையை, வாடிக்கையாளர்கள் பக்கம் சாய்க்கும் விதமாக, விதிமுறைகளை வங்கிகள் திருத்தி அமைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, பண இழப்பு சம்பவங்களில், வாடிக்கையாளரின் கவனக்குறைவு முக்கிய பங்கு வகித்ததற்கான ஆதாரங்களை இனி வங்கிகள்தான் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் வங்கிகள், பண பரிவர்த்தனைகளுக்கான தங்கள் கட்டமைப்பு வசதிகளை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கணக்கிலிருந்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தொடர்ந்து ஒரே நாளில் அல்லது குறுகிய இடைவெளிகளில் பணம் எடுக்கப்பட்டால், வாடிக்கையாளரின் செலவு வரலாற்றின் அடிப்படையில் கணக்கை தொடர்ந்து ஸ்கேன் செய்து, வாடிக்கையாளரின் ஒப்புதலை பெறும் வரை, கார்டை தற்காலிகமாக முடக்கும் மென்பொருள் வசதிகள் வெளிநாடு களில் பயன்படுத்தப்படுகின்றன. இது, முறைகேடுகளை தக்க தருணத்தில் தடுத்து, வாடிக்கையாளரை பெருத்த பொருள் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். மேலும், வாடிக்கையாளரின் கவனக்குறைவு உறுதி செய்யப்படாத பட்சத்தில், அவரை அலையவிட்டு, மன உளைச்சல்களுக்கு உள்படுத்தாமல், இழப்பீடுகள் 48 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

மேக்னெடிக் டேப் பொருத்தப்பட்ட கார்டுகளிலிருந்து, வாடிக்கையாளரின் எண் போன்ற ரகசிய தகவல்களை கடத்துவது எளிதாக இருப்பதால், அதற்கு பதிலாக சிப்ஸ் பொருத்திய கார்டுகளின் பயன்பாடு வெளிநாடு களில் அதிகரித்திருக்கின்றன.இதுவும், வாடிக்கையாளர் பாதுகாப்பு சார்ந்த ஒரு நடவடிக்கையாகும். இந்திய வங்கிகள் இம்மாதிரி தொழில் நுட்ப மேம்பாடுகளை ஆராய்ந்து அமல் படுத்தினால்தான், பொருளாதார மோசடிகளால் ஏற்படும் நஷ்டங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

ஏ.டி.எம். பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தகுந்த உயிர் மற்றும் பண பாதுகாப்பை அளிக்கவேண்டியது வங்கிகளின் கடமையாகும். இந்த இயந்திரங்கள், வங்கிகளின் மினி கிளைகளாக செயல்படுகின்றன. அதனால், வங்கி கிளைகளின் நேரடி வேலை பளு குறைந்து, நிர்வாக செலவும் மிச்சமாகிறது. ஆகையால், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், ஏ.டி.எம். மையங்களுக்கு, அவை இயங்கும் எல்லா நேரத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டியது வங்கிகளின் தலையாய கடமையாகும். விழித்திரை பதிவுகள் மூலம், ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் முறை பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஏ.டி.எம். பணபரிமாற்றங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை தடுக்க,விரல் ரேகைகளை பதிவு செய்து, வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையை வங்கிகள் உடனடியாக அமல்படுத்தினால், மோசடி குற்றங்களை பெருமளவில் தவிர்க்கலாம்.

இந்திய வங்கிகளின் வரலாற்றில் முதன் முறையாக, சேவைகளின் தரத்தை பொருத்து, வங்கிகளை உயர் ரகம், நடுத்தரம், அதற்கும் கீழ் என்று தரம் பிரிக்கும் பணியையும் ஒழுங்குமுறை ஆணையம் துவங்கியிருக்கிறது. ஒருவர் கணக்கு துவங்கும் போது கேட்கப்படும் கேள்விகள், கோரப்படும் ஆவணங்கள் ஆகியவை இந்த தரப் பிரிவிற்கு சில காரணிகளாக அமையும். இதைத் தவிர, அன்றாடம் வாடிக்கையாளர் கள் நடத்தப்படும் முறை, அவர்கள் அளிக்கும் புகார்கள், குறைகள் தீர்க்கும் முறை, தொலைபேசி உரையாடல்களின் தரம் ஆகியவைகளும், தரவரிசை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வங்கிகளின் பொருளாதார பலம் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது. இந்த தரவரிசைப் பட்டியலை, இணையதளத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட உத்தேசித்திருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வங்கியில் கணக்கு துவங்குவது அல்லது ஒரு வங்கியில் இருக்கும் கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது போன்ற முடிவுகளை எடுக்க, இம்மாதிரி தர வரிசை பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தங்கள் சேவை தரத்தை உயர்த்திக்கொள்ள, இந்த தகவல்கள் வங்கிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கும் வங்கிகள், தங்கள் வியாபாரத்தின் தூண்களான வாடிக்கையாளர்களுக்கு உரிய அனைத்து தரமான சேவைகளையும், பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அதை பூர்த்தி செய்ய, வங்கிகள் தங்களை பெருமளவில் தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் தற்போதைய நிலைமையாகும்.

வங்கிகளின் சேவை தரத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களின் காதுகளில் தேனாக வந்து பாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

முதுமை என்பது வரமா..? சாபமா..?



           இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவப் பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து 60 வயதிற்கு மேல் வாழும் மக்களின் மனநோய் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆய்வின் முடிவு உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த முடிவின்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் நகரங்களில் 17.3 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 20 விழுக்காட்டினரும் ஒருவகை மனநலம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 விழுக்காடாக உள்ளது.

இதேபோல் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை ஒட்டுமொத்தமாக 55 விழுக்காடு வரை வளர்ச்சியை எட்டக்கூடும் என தெரிய வந்துள்ளது. அப்போது 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

தற்போது 1.71 கோடி பேர் மனநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்றவாறு மருத்துவமனை வசதிகளும், பணியாளர்களின் தேவைகளும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதியவர்கள் மனநலம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாததே! பெற்று வளர்த்த பிள்ளைகளே தங்களைப் புறக்கணிக்கும்போது பெற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த வேதனையின் உச்சமே மன இறுக்கமாகி மன நோயாக மாறுகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஆன்றோர் கூறியதை மறக்கலாமா? அந்த வணக்கத்துக்குரிய தெய்வங்களை பாரமாகக் கருதுகிற இளைய தலைமுறையை என்னென்பது? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிற்றில் இருந்தபோது அவள் பாரமாகக் கருதியிருந்தால் இன்று நாம் பூமியில் பிறந்திருக்க முடியுமா? இதை எண்ணிப் பார்க்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை.

விலங்குகளின் குட்டிகள் நடக்கத் தொடங்கியதும் தாயை விட்டுப் பிரிந்து விடுகின்றன; பறவைக் குஞ்சுகள் சிறகு முளைத்ததும் தாயை விட்டு பறந்து விடுகின்றன. மனிதர்களும் அப்படியிருந்தால் பகுத்தறிவு பெற்று என்ன பயன்? நமக்கும், விலங்குகளுக்கும் வேறுபாடு என்ன?

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பார்கள். பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம். எவ்வளவு காலத்துக்கு இளமை இப்படியே இருக்கப் போகிறது? எல்லாருமே முதுமையை நோக்கியே பயணம் செய்கிறோம். இதுதான் உண்மை. இந்த உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?

“ஒரு தாய் 10 குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம்; 10 குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது’ என்பது சீனப் பழமொழி. “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவைப் பிராட்டி. அருமையான காரியங்களைச் செயல்படுத்துவதே அறிவுடைய மனிதர்களின் அடையாளம். அந்த அடையாளங்களை இழந்து விட்டு வாழ்வதால் பயன் என்ன?

பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில் தனி வீட்டில் தவிக்கின்றனர். பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும் யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அவர்களது பணத்துக்காகப படுகொலை செய்யும் பரிதாபப் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கே இருக்கிறது மனிதநேயம்?

திருவள்ளுவர் கூறியது போல உறுப்புகளால் மட்டும் ஒருவர் மனிதராக மாட்டார். கூர்மையான அறிவு பெற்றிருந்த போதும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரங்களைப் போன்றே மதிக்கப்படுவர்.

அரம்போலும் கூர்மைய ரேணும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்


என்று குறள் கூறுகிறது.

காயை விடக் கனி சுவையானது. இளைஞர்களைவிட முதியவர்கள் அறிவோடு அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். இந்த மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்வது அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்படும்.

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 60 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 32 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கிற்கும் மேலாகும். 2010ஆம் ஆண்டில் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருந்தது. இது 2015ஆம் ஆண்டில் 32 கோடியை எட்டும் என ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார்.

அண்மையில் மூத்த குடிமக்கள் தொடர்பாக புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் வளர மூத்த குடிமக்களின் பங்கு கணிசமானது. தாய் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதன் மூலம் அவர்கள் உலகப் பொருளாதாரத்திற்குத் தங்கள் பங்களிப்பைபைத் தருகின்றனர் என்பதை இம்மாநாடு அங்கீகரித்தது.

இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இருப்பதாக அறியப்பட்டாலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் முதியவர்களாகவே இருக்கின்றனர். மத்திய ஆட்சி எனினும், மாநில ஆட்சி எனினும் நிலைமை இதுதான்.

இளைஞர்களின் ஆற்றலும், முதியவர்களின் அனுபவமும் இணைந்து செயல்படும்போதுதான் ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறும். ஆனால், இங்கே ஆட்சியிலும், அரசியல் கட்சிகளிலும் மூத்தவர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.

இளைஞர்களும், மாணவர்களும் அவர்களுக்கு எடுபிடிகளாகவும், ஏணியாகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இந்த கெடுபிடிகளால் ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் வெறுப்படைந்து ஒதுங்கி விடுகின்றனர்.

இங்கு நடப்பது “மக்களாட்சி’ என்று கூறப்பட்டாலும் வாரிசு அரசியலே தலைதூக்கி நிற்கிறது. தலைவர்கள் தங்கள் வாரிசுகளையே கட்சியிலும், ஆட்சியிலும் புகுத்திடும் போக்கே எங்கும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியே. இங்கே இளைஞர்களுக்கும். மூத்தவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.

“எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்பதும், “மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பதும் இங்கே பேச்சளவில்தான்.

சமுதாயத்தில் இளைஞர்கள் மூத்தவர்களை மதிப்பதில்லை. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களை மதிப்பதில்லை. இந்தப் போக்கு நல்லதில்லை.

மூத்த குடிமக்களைப் போற்றிக் காக்கும் பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் இருக்கிறது. உழைத்து ஓய்வு பெற்றவர்களை இறுதிவரை காக்கும் கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்கக் கூடாது.

“அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்ற பிறகு அவருக்கும், அரசுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை’ என்ற அரசாங்கத்தின் பிடிவாதத்தைப் போக்கும் விதமாக, கடந்த 1982 டிசம்பர் 17அன்று நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இப்போதும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

“”பென்சன் ஒரு கருணைத் தொகையல்ல. அது பணி நிறைவு பெற்ற அலுவலரின் அசைக்க முடியாத உரிமை. அவர் பணியில் இருக்கும்போது எத்தனை வாழ்க்கை வசதிகளுடன் வாழ்ந்து வந்தாரோ, அதே வசதிகளுடன் அவர் பணி நீங்கிய பிறகும் வாழ வேண்டும்…” என்பதே அந்தத் தீர்ப்பாகும்.

மேலும், 1982இல் வியன்னாவில் ஐ.நா. அமைப்பு சார்பாக கூட்டப்பட்ட உலக அனைத்து முதியோர் மாநாட்டில், “பென்சன் என்பது ஈட்டிய ஊதியம்’ என்று உறுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பணியாற்றியவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை இப்போது பணியாற்றுகிறவர்களுக்கு மறுக்கப்படுகிறது. “புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரால் தனியாரிடம் விடப்படுகிறது. எல்லாமே தனியாரிடம் விடப்படுமானால் அரசாங்கமே தேவையற்றதாக ஆகிவிடுமே.

கடந்த அக்டோபர் முதல் நாள் உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு சார்பில் தலைநகர் புது தில்லியில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் பேரணியும், கருத்தரங்கமும் நடத்தியுள்ளனர். அந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன.

“காக்கை குருவி எங்கள் சாதி’ என்று பாடினார் பாரதியார். நாம் நம் முன்னோரை நேசிக்கவே தயங்குகிறோம்; மூத்தோரை ஆதரிக்கவே யோசிக்கிறோம். இன்று நம் சமுதாயம் இருக்கும் நிலையில் ஒரு மனிதனுக்கு முதுமை என்பது வரமா அல்லது சாபமா?

ஃபார்மல் ஷூ வாங்கும் ஆண்களுக்கான சில பயனுள்ள டிப்ஸ்..!



'ஆள் பாதி ஆடை பாதி' என்பது ஊரறிந்த பழமொழி. உங்களுடைய ஆடையலங்காரத்தில் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும் காலணிகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும், உங்களுக்கான ஒட்டுமொத்த பாணியையும் வழிநடத்தக் கூடியதாக வைத்திருக்கவும் வேண்டியது அவசியமாகும்.

இவை உங்களுடைய பாதங்களை குப்பைகளிலிருந்து காப்பாற்றியும், மோசமான தரைப்பகுதிகளில் பாதுகாத்தும் வந்தாலும் உங்களுடைய ஸ்டைலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க முடிவதில்லை. அழகிய காலணிகள் உங்களுடைய ஸ்டைலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றிக் கொண்டு செல்லவும் செய்கின்றன. ஒவ்வொரு ஸ்டைல் காலணியும் ஒவ்வொரு வகையான உடைகள் மற்றும் நிகழ்வுகளுக்கென்று தேர்ந்தெடுக்கலாம்.

இந்த வர்த்தகமயமான உலகத்தில், நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவோ அல்லது பணி நிமித்தமாகவோ அல்லது கருப்பு டை அணிந்து டின்னருக்கு செல்வதாகவோ என எதுவாக இருந்தாலும் காலணிகள் அவசியம். சரியான ஷூவை அணிவதன் மூலம் நம்பிக்கை அதிகரித்து, உங்களுடைய எண்ணங்களும் மேம்படுகின்றன. அனைத்து உடைகளுக்குமான ஷூக்கள் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதில்லை. நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு போகிறீர்கள் மற்றும் எந்த உடையை அணிகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், அந்நிகழ்வில் மற்றவர்கள் அணிவதைப் போலவும் ஷூக்கள் இருக்க வேண்டும்.

ஃபேஷன் பற்றி அதிகம் தெரியாதவர்களாக இருப்பவர்கள் கூட அதிகம் பரிந்துரைக்கப்படுவது கருப்பு நிற லெதர் ஷூக்களையே. எனினும், கருப்பு நிற ஷூவை லேஸுடன் அணிவதற்கும், பழுப்பு நிற ஷூவை ஸ்லிப்-இன் வகையில் அணிவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சில நேரங்களில் உங்களுடைய வாடிக்கையாளர்களுடன் பாதி அலுவல் மற்றும் பாதி கேஷூவல் வகையில் ஞாயிற்றுக்கிழமை விருந்துகளுக்கு செல்ல வேண்டியிருக்கும் போது, முழுமையான ஃபார்மலில் செல்வதா அல்லது கேஷூவலாக செல்லலாமா என்பது போன்ற குழப்பங்கள் உங்களுக்கு வரும்.

இதுப்போன்ற நேரங்களில் உங்களுடைய ஆடை அணிகலன்களை, மிகவும் தேவையான பொருட்களை தயாராக வைத்திருக்கவும் மற்றும் கடைசி நேரத்தில் தடுமாறாமலும் இருக்கவும் செய்யவே நீங்கள் விரும்புவீர்கள். இதோ நீங்கள் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் ஃபார்மல் ஷூக்களை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்

வியாபார நிகழ்வுகள்


இது போன்ற நிகழ்வுகளில் சூட்-உடன் சேர்த்து தோலால் செய்யப்பட்ட ஷூக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றின் முன்-மேல் பகுதி உங்களுடைய பாதத்தை சூழ்ந்திருக்குமாறும் மற்றும் தனித்திருப்பதாகவும் இருக்க வேண்டும். மேல் பகுதியில் தோலை கொண்டு, தனியான இரப்பர் கட்டைகளை கொண்டிருக்கும் ஷூக்களை தவிர்க்கவும். மற்ற லெதர் ஷூக்களைப் போல இவை ஃபார்மல் ஷூக்களாக இருப்பதில்லை. லேஸ்களை கொண்டிருக்கும் ஷூக்கள் பொதுவாகவே வியாபார நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதாகவும், மிகவும் ஃபார்மல் வகை என்று கருதுவதாகவும் உள்ளன.

ஃபார்மல் லெதர் ஷூ

இரவு விருந்துகளுக்கு ஏற்ற டக்ஸீடோ ஆடைகளை அணியும் போது உங்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான சாய்ஸ்களே காலணியை தேர்ந்தெடுப்பதில் கிடைக்கும். சூட்களுடன் நீங்கள் அணியும் காலணிகளைப் போலல்லாமல், அதிகபட்ச தையல்கள் இல்லாத ஷூக்களையே நீங்கள் இதில் தேடுவீர்கள். ஃபார்மல் ஷூக்களில் லேஸ் தவிர பிற பகுதிகள் அனைத்தும் ஃப்ளைனாகவே இருக்கும். ஃபார்மல் ஷூக்கள் பளபளப்பாக தோற்றமளிக்கும், ஆனால் நீங்கள் பேடன்ட் லெதரை வசதியற்றதாக நினைத்தால் மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கும் திறன் கொண்ட கருப்பு மேட் தோல் ஷூக்களை பயன்படுத்தலாம்.

பிஸினஸ் கேஷூவல் ஷூக்கள்

பிஸினஸ் கேஷூவல் ஷூக்கள் என்பது மிகவும் சிக்கலான சூழல்களை மையமாக கொண்டவையாகும். அலுவலகத்தில் செல்லும் இன்ப சுற்றுலாவாகவோ அல்லது ஒரு ஞாயிற்றுக் கிழமை விருந்தாகவோ இருக்கும் வேளைகளில் நீங்கள் பாதி ஃபார்மலில் இருக்க வேண்டும். இச்சூழலில் ஜுன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ப்ளேஸரையும் கூட போட்டிருக்க நேரலாம். நீங்கள் கேஷூவல் பேண்ட்களை - டெனிம் அல்லது ஷhர்ட்ஸ்களை அணிந்தால், ஷூக்களை அதற்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். கேஷூவல் உடைகளிலும் மிடுக்கான தோற்றததை பெற விரும்பினால், தோலால் செய்யப்பட்ட போட் ஷூக்களை தேர்ந்தெடுங்கள். லோஃபர் வகை காலணிகள் இந்த உடைகளுக்கு மிகவும் ஏற்றவையாகும்.

லோபர்ஸ் காலணிகள்

ஊர் சுற்றிக் கொண்டே இருக்கும் வியாபார அலுவலர்களுக்கு மிகவும் ஏற்றவை லோபர் வகை காலணிகளாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளின் போது எளிதில் கழட்டவும், மாற்றவும் ஏற்றவையாகவும், வசதியாகவும் மற்றும் பல்வேறு வகை பயன்பாடுகளுக்கும் இந்த காலணிகள் உதவுகின்றன. மென்மையான மற்றும் எளிமையான வடிவமைப்புகளே மிகவும் ஃபார்மலாக இருக்கும். மேலும், அடர்வண்ணங்கள் மிகவும் ஃபார்மல் என்றும் (கருப்பு நிறம் மிகவும் ஃபார்மல் என்று பெயர் பெற்றுள்ளது), மற்றும் உங்களுடைய சாக்ஸின் ஒரு சிறு பகுதி வெளியே தெரிவது ஃபார்மல் என்றும் கருதப்படுகின்றது. லோபர் காலணிகள் ஜுன்ஸ் மற்றும் பிற பேண்டகளுடனும் நல்ல தோற்றத்தைக் கொடுக்கின்றன. மேலும் டை அணியாமல் சூட்களை போடும் போதும் லோபர்கள் நலல தோற்றத்தைக் கொடுக்கின்றன.

விண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்..!



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா..? வேண்டாமா..? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர்.

 மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.

இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன:-

1. டெஸ்க்டாப்பில் அதிக பயன்பாடு: இது என்ன ரகசிய மெனுவா? என்று கேட்கும் அளவிற்குப் புதிய பயன்பாடுகள், இந்த விண் 8.1 அப்டேட்டில் கிடைக்கிறது. விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாடு இதில் முதல் இடத்தில் உள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப் திரையில், வலது மூலையில் ரைட் கிளிக் செய்தால், விண்டோஸ் இயக்கத்தின் பல பயனுள்ள ஆப்ஷன்களுக்கான ஷார்ட்கட் வழிகளை மெனுவாகப் பெறலாம். விண்டோஸ் 8 எப்படி ஷட் டவுண் செய்வது என குழப்பமாக உணர்ந்த பயனாளர்கள், இந்த மெனுவினைப் பார்த்து, அப்பாடா தலைவலி விட்டது என்று எண்ணுவார்கள். பவர் ஆப் செய்வதற்கும், ரீ ஸ்டார்ட் செய்வதற்கும், சிஸ்டம் முடித்து வைக்கவும் பல வழிகளை இது காட்டுகிறது.

2. டெஸ்க்டாப்பிற்கு கம்ப்யூட்டரை பூட் செய்திட: நீங்கள் விண் 8/ 8.1 சிஸ்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஸ்டார்ட் ஸ்கிரீன் தேவை இல்லை என எண்ணி, எளிமையான பழைய ஸ்கிரீன் தோற்றமும் செயல்பாடும் போதும் என எண்ணுகிறீர்களா? உங்க ளுடைய விருப்பத்தினை மைக்ரோசாப்ட் வல்லுநர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். டெஸ்க்டாப்பில், உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் 'Properties' தேர்ந்தெடுக்கவும். நேவிகேஷன் டேப்பினைத் தேர்ந்தெடுத்து 'Go to the desktop' என்ற ஆப்ஷனில் டிக் செய்திடவும். பின்னர், விண்டோஸ் உங்கள் டெஸ்க்டாப்பில் பூட் செய்திடும்.

3. ஸ்டார்ட் ஸ்கிரீன் ஒழுங்குபடுத்து: உங்களிடம் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட திரைக் காட்சிகளுடன் ஒரு ஸ்மார்ட் போன் உங்கள் பயன்பாட்டில் இருந்தால், அதே போன்ற ஒழுங்குமுறையினை, உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் ஸ்கிரீனிலும் எதிர்பார்ப்பீர்கள் தானே? இது கம்ப்யூட்டரிலும் விண் 8.1 சிஸ்டத்தில் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய அப்ளிகேஷன் குரூப்பினை வேறு பெயருக்கு மாற்றுவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனில் ரைட் கிளிக் செய்து, 'Customise' என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் திரையில் தோன்றும் புரோகிராம் டைல்ஸ்களை ஒருங்கிணைக்கவும், பெயர் சூட்டவும் முடியும்.

4. எக்ஸ்பாக்ஸ் மியூசிக் பிளே லிஸ்ட்: சர்ச் எனப்படும் தேடல் செயல்பாடுகள், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், மீண்டும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. பல பின்னூட்டங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் சில விஷயங்கள் சீரமைக்க வேண்டியுள்ளது. எனவே, மிக விரைவான தேடலை மேற்கொள்ள, சிஸ்டத்துடன் கிடைக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரினைத் திறந்து (உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து), Bing பயன்படுத்தவும். இங்கு இசைக் கலைஞர்களைக் குறிப்பிட்டுத் தேடலாம். பின்னர் Share Charm என்பதில் மவுஸைக் கொண்டு சென்று அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Music' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் இசைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் அமைத்திடலாம். இந்த வகையில் தேடல் தெளிவும் விரைவும் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

5. நிரந்தர வால் பேப்பர்: ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆகிய இரண்டும் வெவ்வேறு என நீங்கள் உணர்ந்தால், எப்படி ஒரே வால் பேப்பரை இரண்டுக்குமாக அமைக்க முடியும்? ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து Settings Charm திறக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Personalise' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குப் பிடித்தமான வால் பேப்பரைத் தேர்ந்தெடுத்து, இரண்டுக்குமாக அமைக்கலாம்.

6. ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட: கம்ப்யூட்டரில் இருக்கும் ஸ்டோரேஜ் உங்களுக்குப் போதாது; கூடுதலாக இன்னும் ஹார்ட் டிஸ்க் இடம் தேவை, அதுவும் இலவசமாகக் கிடைக்குமா என்று பார்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மிக அருமையான ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதி தரப்படுகிறது. மைக்ரோசாப்ட் தன் ஸ்கை ட்ரைவினை, விண் 8 .1 பயன்படுத்தும் பயனாளர்களை இணைத்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், Settings Charm செல்லவும்; 'Change PC settings' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதிலிருந்து 'SkyDrive' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில், நீங்கள் உங்கள் டாகுமெண்ட் மற்றும் பைல்கள் அனைத்தையும், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட விருப்பமா என்ற ஆப்ஷன் தரப்படும். மாறா நிலையில், அனைத்து பைல்களையும் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட அமைத்துவிட்டால், இணைய இணைப்பில் இருக்கும்போது, அனைத்து பைல்களும் ஸ்கை ட்ரைவிற்குக் கொண்டு செல்லப்படும். இதனால், நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், எந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும், உங்கள் பைல்களை அணுக இயலும்.

7. அனைத்து அப்ளிகேஷன்களும் எளிதான தோற்றத்தில்: ஸ்டார்ட் ஸ்கிரீனில், நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அவற்றிற்கான டைல்ஸ்களுடன், வானவில் வண்ணக் கலவையில் தோற்றமளிக்கும். ஆனால், இவற்றத் தேடிக் கண்டறிய, நாம் ஒவ்வொரு திரையாகச் செல்ல வேண்டியதிருக்கும். அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க வேண்டுமானால், அதற்கு விண் 8.1 வழி செய்கிறது. டைல்ஸ் கீழாக அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்தால், இந்த வியூ கிடைக்கும். இங்கிருந்து, அனைத்து அப்ளிகேஷன்களையும் நீங்கள் விரும்பியபடி அமைக்கலாம். அவற்றை இன்ஸ்டால் செய்த நாட்களின் அடிப்படையில், அவற்றின் அளவின் அடிப்படையில், அகரவரிசைப்படி என நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொண்டு தேடிப் பெறலாம்.

8. எழுப்பும் அலாரம்: ஆம், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தைப் பயன்படுத்தி, நாள், வாரம், மாதம் அடிப்படையில் நேரத்தை செட் செய்து அலாரம் அமைக்கலாம். இது விண்டோஸ் போன் சிஸ்டத்தில் உள்ள அப்ளிகேஷன் போலத் தெரிகிறதா? ஆம். அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவூட்டல்களும், அதற்கான தனி ஒலிகளும் அமைத்து இயக்கலாம். அப்ளிகேஷன் பட்டியலில் இந்த அலாரம் செட் செய்திடும் அப்ளிகேஷனும் கிடைக்கிறது.

9. அப்ளிகேஷன்களை அருகருகே இயக்க: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் போது, ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். ஆனால், விண் 8.1ல் இரண்டு அப்ளிகேஷனை ஒரே நேரத்தில் இயக்கலாம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த அப்ளி கேஷன்கள் இயங்கும் இடத்தினைச் சரியாகச் சரி பாதி இடத்தில் இயக்க வேண்டியதில்லை. ஒன்றைச் சிறிய இடத்திலும், இன்னொன்றைச் சற்றுப் பெரிய இடத்திலும் நம் தேவைப்படி அமைத்து இயக்கலாம்.

10. பைல்களின் நகல்களைத் தக்க வைக்க: உங்களுடைய முக்கியமான பைல்களின் பேக் அப் நகல்களை எப்படி எங்கு வைப்பீர்கள்? நம் பைல்கள் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நாம் எண்ணினாலும், அவை கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றின் நகல்களைப் பாதுகாப்பாக வைத்திட விண்டோஸ் 8.1 வசதி தருகிறது. இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு 'System and Security' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதே நேரத்தில் 'file history' என்று அமைத்துத் தேடலில் ஈடுபடவும். அப்போது யு.எஸ்.பி. ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றை பேக் அப் பைல்களுக்காக இணைக்க வேண்டியதிருக்கும். இதில் பேக் அப் பைல்கள் பதியப்படும்.

விக்ரம் பாணியை கடைப்பிடிக்கும் தனுஷ்..!



விக்ரம் பாணியை கடைப்பிடிக்கும் தனுஷ்..!

மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை என்பதால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான கெட்டப்பில் வருகிறாராம் தனுஷ்.

ஆனால், அப்படி அவர் நடிக்கிற ஒவ்வொரு கெட்டப்புமே இதுவரை எந்த படத்திலுமே தனுஷ் நடிக்காத கெட்டப்பாம். அதனால், ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் அதிக காலஅவகாசம் எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, விக்ரம் போன்ற சில ஹீரோக்கள் தாங்கள் நடிக்கிற புதுமையான கெட்டப் பற்றி வெளியில் லீக்அவுட் பண்ணாமல் இருந்து வருவதையடுத்து. இப்படத்திலிருந்து தனுசும் அதை கடைபிடிக்கிறாராம். ஏற்கனவே ஒரு கெட்டப் சம்பந்தமான போட்டோக்கள் வெளியாகி விட்ட நிலையில், மற்ற 3 கெட்டப்புகளையாவது சீக்ரெட்டாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

அதனால், அனேகன் படத்தில் நடித்து முடிகிற வரைக்கும் சினிமா விழாக்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கும் தனுஷ், வழக்கமாக தான் நடித்து வரும் படங்களின் ஸ்டில்களை தனது உதவியாளரை வைத்து அவ்வப்போது போட்டோ எடுத்து வருபவர், இந்த படத்தைப்பொறுத்தவரை, போட்டோவே எடுத்துக்கொள்ளவில்லையாம். தனது கெட்டப் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த திடீர் முடிவு.

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!


தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..! 

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.

ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில முயற்சிகளின் மூலம் அதன் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த முடியும். நமது வயது, மரபணுவின் அமைப்பு ஆகியவையே தாடி வளர்ச்சியின் அளவையும் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றது. ஆனால் உங்கள் வயதிற்கேற்ற வளர்ச்சியை விட அதிக அளவு தாடியை வளர செய்வதற்கு இயற்கையான பல வழிகள் உள்ளன.

உங்கள் தாடி சீக்கிரமாக வளர்வதற்கு அதை ஊட்டமளித்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்வில் உள்ள மற்ற காரியங்களை போல இதற்கும் நல்ல ஊட்டமளித்தல் மற்றும் தேவையான அளவு கவனிப்பை அதற்கு கொடுத்தல் ஆகிய செயல்கள் சீக்கிரம் வளர உதவும். முகத்தில் உள்ள காய்ந்து போன மற்றும் இறந்து போன திசுக்களை வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர உதவுகின்றது.

அதிக அளவு அக்கறையுடன் முகத்தில் உள்ள தாடியையும், முகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கென்று சில எண்ணெய்கள் பயன்படுத்தி தாடிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க மறக்கக் கூடாது.

உணவு

 புரதச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களும் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வும் தாடியை சீக்கிரம் வளர்க்க உதவுகின்றன. முடி வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை புரதச்சத்தே தருகின்றது. அதை செயல்படுத்த நல்ல தூக்கம் தேவைபடுகின்றது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அடர்த்தியான நீளமான முடியை வளர செய்யும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதில் மிகவும் அவசியமானதாகும். இல்லையென்றால் அது இருக்கும் முடியையும் உதிர செய்துவிடும்.

வளர விடுங்கள்

முடி வளரும் பருவத்தில் கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்திருக்கும். மெதுவாக வளரும் முடியும் தாடி வளர வளர சீக்கிரம் முளைத்து வளரும். இவ்வாறு வளரும் போது அவை சமமாகவும், ஏதேனும் சமமில்லாத திட்டுகள் இருந்தால் அவையும் மறைந்துவிடும். ஆகையால் முடி வளர்வதற்காக நேரம் கொடுங்கள்.

இறந்த தோலை நீக்குதல்

 உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த திசுக்களை நீக்கி விடுங்கள். நல்ல ஸ்கிரப்-ஐ பயன்படுத்தி இதை செய்யுங்கள். இறந்த தோல் தசைகளை எடுத்து விடுதல் புதிய தசைகளையும் நல்ல முடியையும் வளரச் செய்யும். ஆண்களின் சருமத்திற்கென்று தயார் செய்யப்பட்ட எக்ஸ்போலியேட் மாஸ்க்-ஐயும் பயன்படுத்தி பாருங்கள்.

கண்டிஷனர்

 நல்ல முடி இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல முறையில் கண்டிஷன் செய்து வைக்க வேண்டும். இது தாடி முடியை வெட்டச் செய்யாமல் பாதுகாக்கும். காஸ்டர் எண்ணெய் இதற்கு மிக சிறந்த கண்டிஷனிங் பொருளாக அமைகின்றது. கண்டிஷனர் உங்கள் தாடியை சரியாக வளர வைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவை முகத்தில் இருக்கும் முடிகளுக்கு ஊட்டமளிப்பதில் சிறந்தவையாகும்.

வைட்டமின்கள்

வைட்டமின் 'பி' யை உங்கள் உணவிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும். பையோடின் என்ற இணை சேர்க்கையை எடுத்துக் கொள்வதும் முடி மற்றும் நகத்தை விரைவாக வளர்க்க உதவும். பையோடின் - கல்லீரல், காலிபிளவர், பீன்ஸ், மீன், கேரட், வாழைப்பழம், சோயா, முட்டை மற்றும் தானியங்களில் உள்ளது.

கவுண்டரின் கலக்கல் நடனம்..!



ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் கவுண்டமணி.

கௌதம் மேனனின் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கும் “49–ஓ“ என்ற படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தில் மழைவரம் வேண்டி வருணதேவனை குளிர்விக்கும் விதமாக குழுவினருடன் கவுண்டமணி ஆடிப்பாடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது.

இந்தப்பாடல் மழைவர உத்திரவாதம் அளிக்கிறதோ இல்லையோ படத்தில் சிரிப்பு மழைக்கு உத்திரவாதம் உண்டு” என்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ்.

அந்த அளவுக்கு இந்தப்படத்தில் கவுண்டர் உதிர்க்கும் வசனம் ஒவ்வொன்றும் அவரது ரசிகர்களுக்கு பேரானந்தம் தருமாம்.மேலும் “49-ஓ“ அரசியல் படமல்ல, நகைச்சுவை மிளிர சொல்லப்படும் ஒரு புத்திசாலித்தனமான படம் என்று கூறியுள்ளார்.


ஐ லவ் யு...அப்பா...உங்கள் மகன் சொல்ல வேண்டுமா...?



நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும்.

நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும்.

 ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான உறவை மதிக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும்.

சில சமயங்களில் விரைவில் இது நடந்து, நிலைமை சாதகமாகி விடும். எனினும், பெரும்பாலான நேரங்களில், இந்த மாற்றத்திற்கு காலம் ஆகும் மற்றும் சற்றே அதிக காலம் கழித்து தான் உங்களை தங்களுடைய மாற்றுத் தந்தையாக ஏற்றுக் கொள்வார்கள்.

இவையனைத்தும் புதியதாகவும் மற்றும் ஒரு புதிய மனிதனை தங்களுடைய உள் வட்டத்திற்குள் கொண்டு வருவது அவர்களுக்கு கடினமாகவும் இருக்கும்.

மாற்றுத் தந்தையாக இருப்பதிலிருந்து முழுமையான தந்தையாக மாறும் போது நம்மை பிரிக்கும் விஷயமாக குழந்தைகளுக்கு தந்தையர்கள் இருப்பது இருக்கிறது.

தந்தைகளை, அவர்கள் மிகவும் விரும்புவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. அவர்களுடைய ஆதிக்கம் உங்களுடையதை விட நன்றாக உருவாகி இருக்கும்.

 நீங்கள் என்ன செய்தாலும், அந்த வளையத்திற்குள் நுழைய வேண்டாம். உங்களுக்கு சொந்தமாக ஒரு இடத்தை உருவாக்குங்கள் மற்றும் அதன் வழியாக குழந்தைகளுடன் உறவை கொண்டு வாருங்கள்.

அவர்களுடைய இடத்தை கொடுங்கள் மற்றும் மிகவும் அதிகமான ஆதிக்கம் செலுத்த வேண்டாம்.

இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!!




  •  அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.

  •  ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

  • இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

  •  உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

  •  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

  •  எப்போதும் பேசுவதைக் கேட்டு,பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப்பேசுங்கள்.

  • ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

  • ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

  •  ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

  • ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

விஜய்யை வைத்து அவார்டுக்காகவோ, குடும்ப படமோ எடுக்க முடியாது – ஜில்லா தயாரிப்பாளர்....



நல்ல படம் எடுப்பது என்பது இப்போது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. அதிலும் டாப் ஹீரோவை வைத்து குடும்ப பாங்கான நல்ல படம் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சில தினங்களுக்கு முன்பு ‘ஜில்லா’ படம் பற்றி பேசியதாவது,‘ஜில்லா’ படம் பொங்கலுக்கு முன்னாடியே ரிலீசாகி நல்லா ஓடிக்கிட்டிருக்கு.

பொங்கலுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணினா கலெக்‌ஷன் பாதிக்குமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு. ஆனால் நாங்க எதிர்பார்த்ததை விடவும் படம் நல்லா வசூல் பண்ணிக்கிட்டிருக்கு.

அதே நேரத்துல இன்னொரு விஷயத்தையும் நான் இங்க சொல்லியாகணும். விஜய் மாதிரியான ஒரு ஹீரோவை வெச்சு ஒரு ஆர்ட் பிலிமையோ, அல்லது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரியான குடும்பப் படமோ எடுக்க முடியாது.

ஏன்னா அவரோட ரசிகர்கள் அந்த மாதிரியான படங்களை விரும்ப மாட்டாங்க. அவருக்கு இருக்கிற ரசிகர்கள் அப்படிப்பட்டவங்க. அவரோட ரசிகர்களை திருப்திபடுத்துற அளவுக்கு படம் எடுக்கலேன்னா அந்தப்படம் கண்டிப்பா ஓடாது. அது தப்பாப் போயிடும்.

அதுமட்டுமில்லாம அவரை நம்பி நெறைய டிஸ்ட்ரிபியூட்டர்கள் பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. அவங்களும் சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் படம் எடுக்க முடியுமே தவிர அவார்டுக்காகவெல்லாம் படம் எடுக்க முடியாது.

அதனால தான் ‘ஜில்லா’ படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் படமா எடுத்துருக்கோம். தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ‘ஜில்லா’ ரிலீசான எல்லா ஏரியாக்களிலும் நல்லா போய்க்கிட்டிருக்கு என்றார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

ஏற்கனவே விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’ என்ற சில்வர் ஜூப்ளி படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர் தான் இப்போது அதே மாதிரியான ஒரு குடும்பப் படத்தை விஜய்யை வைத்து எடுக்க முடியாது என்று கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அஜீத் உடன் கவுதம் மேனன் படத்தில் அனுஷ்கா..!



நடிகை அனுஷ்கா தற்போது ருத்ரமாதேவி மற்றும் மஹாபலி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த இரு படங்களிலும் அவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜீத் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் தயாரிப்பாளர்கள் கேட்டு உள்ளனர்.

உடனே, சரி என்று அனுஷ்கா ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆனால், அதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.  அனைத்து விசயங்களும் முடிந்த பின்பு படத்திற்கான படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் தொடங்கும்.  இத்தகவலை நடிகை அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நமீதா - ரத்ததானம் உடல்தானம் செய்தவர்கள் என்னை சந்திக்கலாம்.....


கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology- இல் பொறியியல் மாணவ மாணவியரும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா.

காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை மாணவ மாணவியருடன் அமர்ந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆர்த்தி தொகுத்து வழங்கிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா மேடையில் ஏறி அவர்களுடன் தானும் நடனமாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ_ மாணவிகள் மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், நலிவடைந்தவர்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த உதவிப்பொருட்களை நமீதா ஏழைமக்களுக்கு வழங்கினார்.

ரத்ததானம் உடல்தானம் செய்தவர்கள் என்னை சந்திக்கலாம்..

மாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார் பாதி மாணவர்கள் செய்திருந்தனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட  நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர். இது நல்ல மாற்றம். மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த காலேஜில் பார்க்கிறேன். மகிழ்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,
ரத்ததானம்  அல்லது   உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று பேசினார்.

பொங்கல் வைத்தார்.. கரும்பு கடித்தார்..

சம்பந்தப்பட்ட மாணவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரைச் சொல்லி அழைத்ததை ஒரு தடவை தான் கேட்டிருப்பார் ஆனால், ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

நாட்டுப்புற கலைஞர்களையும் அவ்வாறே "ராஜன் அண்ணா.."என்று அழைத்து மனதாரப்பாராட்டி அவரையும் புளாங்கிதம் அடையவைத்தார். பேராசியர்கள் , கல்லூரி அலுவர்கள் மட்டுமின்றி அங்கு உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண்களையும் அவரே அழைத்துத் தன்பக்கத்தில் நிற்க வைத்து நலம் விசாரித்துக் கொண்டார்.

முன்னதாக கல்லூரிக்குள் நுழைந்த நமீதாவை மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோலப்போட்டி நடந்தது, நமீதாவும் கோலம் போட்டு மகிழ்ந்தார். மாணவியர் வைத்த பொங்கலை ருசிபார்த்து சிறப்பாகப் பொங்கல் வைத்தவரிடம் எப்படி இவ்வளவு சுவையாக வைத்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

வழக்கமாக நமீதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல், மிகவும் சகஜமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பழகியது போன்ற திருப்தியுடனும் ளுஆமு குழஅசய ஐளெவவைரவந ழக வுநஉ"ழெடழபல கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது , கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தாருக்கு மட்டுமல்ல நமீதாவிற்கே ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

உரி அடித்தார்..


உரியடிக்கையில் கண்களைக் கட்டிக்கொண்டு ஏமாற்றாமல் அவர் சரியாக அடித்தது அங்குள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தியது

தமிழ் சினிமாவின் வளரும் படங்கள் - 2014




 கார் மீது காதல்!

தமிழ்சினிமாவில் குறும்பட இயக்குநர்கள் மீதான வெளிச்சம் பரவிக்கிடக்கும் சீசன் இது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக எடுத்த குறும்படமொன்றைத் தழுவி ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் . இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடியவரும் கூட.

படத்தின் கதை 1995-ல் மதுரை பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடக்கிறது. கிராமத்துப் பண்ணையாரான ஜெய்பிரகாஷ், அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ‘பத்மினி ‘கார் ஒன்றை வாங்குகிறார். அவருக்கு கார் ஓட்ட தெரியாது.

இதனால் அந்த ஊரில் கார் ஒட்டத்தெரிந்த விஜய்சேதுபதியை தனது ஓட்டுநராக வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். விஜய் சேதுபதிக்கு அதே ஊரைச்சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் காதல்.

 காதல் வந்ததாலும் ஓட்டுநர் வேலையை மறக்காமால் இருக்கும் சேதுபதியின் ஓட்டுநர் வேலைக்கு, பெரிய ஆப்பு வைக்கிறார் பண்ணையாரின் மகள். தனக்கு சீதனமாக அப்பாவின் பத்மினிக்காரை வாங்கிப் போகிறார் மகள். முதன்முதலில் வாங்கிய காரை பறிகொடுக்கும் பண்ணையாரும், வேலையை இழக்கும் விஜய் சேதுபதியும் சோகமாகிறார்கள்.

இதன்பிறகு கார் அவர்களிடம் திரும்பி வந்ததா இல்லையா என்பதை நகைச்சுவையும் சென்டிமெண்டும் கலந்து சொல்லியிருக்கிறார் அருண்குமார். படத்தில் பண்ணையாராக ஜெயபிரகாஷும், அவரது மகளாக சினேகாவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் இந்தப் படமும் ஹிட் அடிக்கும் என்கிறார்கள்.

ஆடு புலி ஆட்டம்!

விஜய் நடித்த துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து கலைப்புலி எஸ். தாணு தயாரித்துவரும் படம் ‘நேர் எதிர்’. தயாரிப்பாளர், இயக்குநர், கேயாரின் முதன்மை உதவியாளர் ஜெயபிரதீப் எழுதி, இயக்கியிருக்கிறார்.

ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுடன் பார்த்தி தமிழ்சினிமாவுக்கு புதிய வில்லனாக அறிமுகமாகிறார். ‘நேர் எதிர்’ ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஒரே இரவில் நடக்கும் கதை. “உலகில் மனிதனைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்திலிருந்து மாறியதில்லை.

புலி புல்லைத் தின்னாது; வேட்டையாடவே செய்யும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால் மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.

ஒரு மனிதன் எப்போது புலிபோல பதுங்குவான்,எப்போது சிங்கம்போல வேட்டையாடுவான். எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போலவிஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது.

எல்லா விலங்குகளின் குணத்தையும் தனக்குக்கொண்டவனாக இருக்கிறான். ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர் எதிர் ஆக மனிதன் மட்டுமே இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு 5 கதாபாத்திரங்களை பின்னியிருகிறேன்.

படத்தில் வரும் ஐந்து பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.”என்கிறார் நேர் எதிர் இயக்குநர் ஜெயபிரதீப்.

காதல் முக்கோணம்

வெளிப்புறப் படப்பிடிப்புக்கான சாதனங்களை வழங்கி வரும் ரவிபிரசாத் ’அவுட்டோர் யூனிட்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. ‘நான் ஈ’ புகழ் நானி, -நித்யா மேனன் இணைந்து நடித்து வெற்றிபெற்ற "அலா மொதலயிந்தி" என்ற தெலுங்குப் படத்தை தமிழுக்கு ஏற்ப சற்று கதையை மாற்றி ரீமேக் செய்து வருகிறார்கள்.

‘கடல்’ பட நாயகன் கௌதம் கார்த்திக் , ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை ரவி தியாகராஜன் இயக்கி வருகிறார்.

மூன்று இளம் இதயங்கள் மத்தியில் நடத்தும் காதல் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்த என்னமோ ஏதோ. காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாததால், சாலை விபத்தில் சிக்கிக்கொள்ளும் கௌதம், தனது காதல் கதையை சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறதாம் கதை.

“காதல் எப்போது எப்படி வேண்டுமானாலும் தனது விளையாட்டுக்கு மனிதர்களை பொம்மைகள் ஆக்கிவிடுகிறது. இதில் காதலின் விளையாட்டை இதுவரை தமிழ்ரசிகர்கள் கண்டிராத முக்கோணக் காதல் கதையாக சொல்லியிருக்கிறேன்” என்கிறார் ரவிதியாகராஜன்.

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்....



ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர் ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார். 1987–ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ராஜீவ்காந்திக்கு சிங்கள ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படடது.

அப்போது 22 வயது சிங்கள வீரர் திடீர் என்று துப்பாக்கியை திருப்பி பிடித்து ராஜீவ்காந்தி தோள் பட்டையில் அடித்தார். இது 1987–ம் ஆண்டு ஜூலை 30–ந்தேதி நடந்தது. ராஜீவ் காந்தியை தாக்கிய சிங்கள வீரர் விஜித் ரோகன விஜய முனி கைது செய்யப்பட்டு ராணுவ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது ஒரு நாட்டின் அதிபரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. விஜய முனிக்காக வாதாடிய வக்கீல் கூறுகையில், ‘‘அவர் கொலை முயற்சியில் ஈடு படவில்லை. அந்த எண்ணம் இருந்திருந்தால் துப்பாக்கியில் இருந்த கத்தியால் குத்தி இருக்கலாம்’’ என்றார்.

இதையடுத்து அவருக்கு சில வருடங்கள் மட்டுமே ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவை தாக்கியதால் அவர் சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாக புகழப்பட்டார். ஜெயிலில் கூட ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்தார். உலகை ஏமாற்றும் விதமாக இலங்கை அரசு கண்துடைப்பு நாடக மாடியது.

ஜெயிலில் இருந்து விடுதலையான விஜயமுனி பட்டப்படிப்பை முடித்து சுயதொழில் ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டார். சிங்கள உரிமைய கட்சியில் இணைந்து 2000–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

தற்போது இவர் ஆளும் ராஜபக்சேவின் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார். 1987–ல் சந்தேகத்தின் பேரில் கைதான தமிழ் அரசியல் கைதிகள் பலர் இன்னும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமரை அடித்த விஜயமுனி சுதந்திரமாக வெளியே வந்தது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

2 - ன் 1 முருங்கை சாம்பார் -- சீக்ரெட் ரெசிபி .....!




சீக்ரெட் ரெசிபி

சாம்பார் பொடி

என்னென்ன தேவை?

துவரம்பருப்பு - அரை கப்

கடலைப்பருப்பு - அரை கப்

கொத்தமல்லி (தனியா) - ஒரு கப்

மிளகாய் வற்றல் - 1 கப்

மிளகு - 1 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் - 1 சிறிய கட்டி

கறிவேப்பிலை - 2 ஈர்க்கு உலர்ந்தது.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பெருங்காயத்தை பொரித்து பருப்பு வகைகளை வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும். மற்ற பொருள்களையும் வாசம் வரும்வரை  வறுத்து பொடிக்கவும்.

இன்னொரு முறை: பெருங்காயத்தைதவிர அனைத்தும் வெயிலில் உலர வைத்தும், பெருங்காயத்தை கடாயில் பொரித்தும்
பொடிக்கலாம்.


என்னென்ன தேவை?

கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்த துவரம்பருப்பு - இரண்டு கப்

முருங்கைக்காய் - 2

பெரிய வெங்காயம் - 2 (ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டியது)

சின்ன வெங்காயம் - கால் கப்

தக்காளி - பொடியாக நறுக்கியது கால் கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

புளி - ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு

அன்னபூர்ணா சாம்பார் பவுடர் அல்லது

சாதாரண சாம்பார் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

வெல்லம் - சிறிது

உப்பு - தேவையான அளவு.

அரைக்க...

சின்ன வெங்காயம் - அரை கப்

தக்காளி - ஒன்று

தேங்காய் - கால் கப்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

வெந்தயம் - ஒரு சிட்டிகை

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 2 (கீறியது).

எப்படிச் செய்வது?

புளியை நீர்க்க கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீரும் தக்காளியும் சேர்த்து
2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

 கொதித்ததும் புளித்தண்ணீரும் பருப்பும் வெல்லமும்  பெருங்காயமும் சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம்,  மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் தாளித்து சாம்பாரில் கலக்கவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சூடாக இட்லி, தோசை அல்லது வடையுடன்  பரிமாறவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை?

 சாம்பாரில் முக்கியமானது  சாம்பார் பொடி. வறுத்து அரைக்கும் சாம்பார் பொடி சுவையை மாற்றிவிடும். அதனால்  சாதாரணமான சாம்பார் பொடியே போதுமானது.

அதிக நேரம் கொதிக்க விட்டால் முருங்கைக்காய் கரைந்துவிடும். பருப்பு அதிகம் வெந்து குழையாமல் முழுதாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் துவரம்பருப்புடன் சிறிது மைசூர் பருப்பு சேர்க்கலாம்.

காப்பகம்