Monday, August 11, 2014

எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும்..? - அதிர்ச்சித் தகவல்...!

இன்று உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் நோய் எது என்று கேட்டால் அது எச்.ஐ.வி என்று அக்கப்படும் எயிட்ஸ் நோய் ஆகும். அதுவும் மனிதர்களின் வீக் பாயின்ட் எதுவோ அதனைப் பார்த்து அங்கே அடிக்கிறது இந்த நோய். பொதுவாக செக்ஸில் ஈடுபட்டால், (செக்ஸில் ஈடுபடும் பாட்னர்) க்கு அந்த நோய் இருந்தால் மற்றைய நபருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எயிட்ஸ் வைரஸ் ரத்தத்தில் காணப்படுகிறது.

இந்த வைரஸ் ஆண்களின் பாலியல் உறுப்பு ஊடாகவும் பெண்களின் பாலியல் உறுப்பு ஊடாகவும் பரவும். மற்றும் ரத்த மாற்றம் செய்துகொள்வோர் மற்றும் சுத்திகரிக்கப்படாத ஊசிகளைப் பாவிப்பதாலும் இது பரவுகிறது. குறிப்பாக பெண்களின் உடலை எயிட்ஸ் நோய் தாக்கினால், அது முதலில் இனப்பெருக்க உறுப்பையே பாதிக்கிறது. உடலுறவில் ஈடுபடும்போது, பெண்களின் பிறப்பு உறுப்பில் கசியும் ஒருவகை திரவத்தில், இந்த வைரஸ் காணப்படும். இது ஆண்களின் குறியின் நுனியில் படும்போது, மென்மையான அவ்விடத்தினூடாக ரத்த நாளத்தை அடைந்து ஆண்களுக்கும் பரவுகிறது.

இதேபோல ஆண்களுக்கு இந் நோய் காணப்பட்டால், அது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு மற்றும் சுரப்பிகளையே முதலில் தாக்குகிறது. ஆண் பெண்ணோடு உடலுறவில் ஈடுபடும்போது ஆணின் விந்து ஊடாகவும், மற்றும் உணர்ச்சிப் பெருக்கில் ஆண் குறியில் இருந்து கசியும் பிறிதொரு திரவம் ஊடாகவும், இது பெண்களின் பிறப்புறுபினூடாகச் சென்று, ரத்தத்தில் கலக்கிறது. இதன் காரணமாகவே இந் நோயைத் தடுக்க ஆண்கள் ஆணுறை அணியவேண்டும் என்று, பல விளம்பரங்கள் போடப்பட்டு வருகிறது. இந் நோய் ஒருவரைத் தாக்கினால், அவ்வளவு சுலபத்தில் கண்டறிய முடியாது. இந் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவருக்கு அன்றைய தினம் சிறிதாக ஒரு காச்சல் தான் காயும். சிலவேளை அதுகூட இருக்காது. நாளாக நாளாக, இந்த வைரஸ் எமது உடலில் உள்ள, வெள்ளை அணுக்களைத் தாக்கி, அதனை முற்றாகச் செயலிழக்கச் செய்துவிடும். இதன் காரணமக எமது உடலில், நோய் எதிர்ப்பு தன்மை முற்றாகப் பாதிக்கப்படும். இதனால் ஜலதோஷம், காச்சல், எல்லா வகையான நோய்களும் மிக விரைவாக எம்மை தொற்றிக்கொள்ளும்.

இதுவே கடைசியில் எமக்கு எமனாகி, கொன்றுவிடும். இந் நோயை குணப்படுத்த இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒருவர் உடம்பில் இந்த வைரஸ் பரவினால், அது மேற்கொண்டு விருத்தியாகாமல் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள், இந்த வைரஸை செயற்கை முறைமூலம் கண்டுபிடித்ததாகவும், பின்னர் இதனை குரங்கு ஒன்றிற்கு கொடுத்து சோதனை செய்தவேளை, குறிப்பிட்ட குரங்கு பரிசோதனை நிலையத்தில் இருந்து தப்பிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அது தப்பிச் செல்லும்போது ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதனூடாகவே அந்த ஆபிரிக்க இனத்தவருக்கு முதன் முதலாக எயிட்ஸ் நோய் பரவியது என்று பரவலாக எல்லோராலும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்ந்துவிட்டால் இந் நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள். இதுவும் ஒருவகையில் உண்மை தான். பல பெண்களிடம் செல்லும் ஆண்களும், பல ஆடவரை நாடிச் செல்லும் பெண்களுமே இந் நோயின் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள். அதிலும் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொள்வோரும் அடங்குவர்.

5 நிமிட இன்பத்துக்காக வாழ் நாள் முழுவதும் அல்லலுறவேண்டுமா என்று யோசிக்கும் ஆண்களும் பெண்களும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள்.

தண்ணீருக்குமா வயதாகும்..? - பயமில்லாமல் படிங்க..!

‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரில் மட்டும் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடுவதேன்? பாட்டில் தண்ணீரைத் திறக்காத வரை, அதில் பாதிப்பில்லை. ஆனாலுமே, அதன் சுவையானது நாள்பட மாறிக் கொண்டே இருக்கும்.

சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும். சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும். எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு. அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடப்படுகிறது.

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, "அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.

புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

அதனால், குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல... ரசித்து அனுபவியுங்கள்..!

பாஸட் புட் சூப்பரா, இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அதே போலத்தான் உறவும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவதை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவது போலத்தான் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நினைத்து நினைத்து இன்புற முடியும்.

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில்தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப்புணர்வுதான் இறுதியில் மிஞ்சும்.

சிலர் உறவின்போது பல தவறுகளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் மனங்களுக்கும் நல்லது. அது என்ன தவறுகள் என்பதைப் பார்ப்போமா…

நிறைய முத்தம் கொடுங்கள்:-செக்ஸ் உறவின்போது பலரும் செய்யத் தவறுவது நிறைய்ய்ய்ய்ய முத்தம். இருவரும் இணையும் அந்த ரம்மியமான தருணத்தை மேலும் மேலும் இனிமையாக்க உதவுவது எண்ணிக்கைக்குள் வராத அளவு முத்தமிடுவதுதான். இங்குதான், அங்குதான் என்றில்லாமல் நினைக்கும் இடத்தில், கணக்கே இல்லாமல் முத்தமிடுங்கள். இது இருவருக்கும் இடையிலான அன்பை அதிகரிக்க உதவும். அளவு கடந்த ஆசையை தட்டி எழுப்ப உதவும். முத்தத்தைதப் போல ஒரு சக்தி வாய்ந்த எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களது முத்தம் அவரை தட்டி எழுப்பி உங்களை ஆனந்தபுரிக்குக் கூட்டிச் செல்லும்.

அவசரப்படாதீர்கள்:-உங்களது பார்ட்னரும் செக்ஸ் மூடுக்கு வர வேண்டியது அவசியம். ஆனால் பலர் அவசரம் அவசரமாக எதையாவது செய்து பார்ட்னரை டென்ஷன்படுத்துவார்கள். அதற்குத்தான் நிறைய நேரத்தை முன்விளையாட்டுக்கு செலவிட வேண்டும் என்பது. முன் விளையாட்டை அதிகரிக்கும்போது தானாகவே இருவருக்கும் நல்ல மூடு வந்து விடும்.

சரியான இடத்தில் தொடுங்கள்:-முன்விளையாட்டின்போது சிலர் தேவையில்லாமல், உணர்ச்சிகள் அதிகம் வெளிக்கிளம்பாத இடங்களைத் தொட்டும், தடவியும், கடித்தும் மேலும் டென்ஷனைக் கூட்டுவார்கள். அப்படி இல்லாமல், உங்களது துணையை எந்த இடத்தில் தொட்டால் சிலிர்ப்பார், எப்படித் தொட்டால் சிரிப்பார், எந்த மாதிரி தொட்டால் சிலாகிப்பார் என்பதைத் தெரிந்து கொண்டு சரியாக குறி வைத்து விளையாடுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே பொதுவாக கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அதேபோல ஆண், பெண் உறுப்புகளில் விளையாடுவதும் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியவை.

பூ போல பாவியுங்கள்:-சில ஆண்களுக்கு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்கும். அதாவது அப்படியே ஒட்டுமொத்த உடலையும் தூக்கி தனது துணை மீது போட்டு அமுக்கி விடுவார்கள். பெண் உங்களது வெயிட்டை எப்படித் தாங்குவார்.. அதையெல்லாம் யோசிக்க வேண்டும். பெண்களைப் பூ போல பாவித்து கையாள வேண்டும்.  எனவே மென்மையாக கையாளுங்கள். உடல் எடையை உங்களது துணை மீது வைத்து அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள்.

மெதுவா.. மெதுவா…:-கிளைமேக்ஸ் ஆண்களுக்கு எப்போதுமே சீக்கிரம் வந்து விடும். ஆனால் பெண்களுக்கு நேரம் பிடிக்கும். எனவே அதற்கேற்ற வகையில் உங்களது உறவின் வேகத்தைக் குறைத்தும், தணித்தும் விவேகமான முறையில் செயல்பட வேண்டும். அவரது இன்பத்தையும், சந்தோஷத்தையும், அனுபவிப்பையும் நீங்கள் மதித்து அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். விந்தணு வெளியேறுவதை தள்ளிப் போட நிறைய உபாயங்கள் உள்ளன. அதைக் கடைப்பிடித்து உங்களது துணையையும் களிப்பூட்டுங்கள்.

சொல்லாமல் செய்யாதீர்கள்:-நீங்கள் வேகமாக உறவில் ஈடுபட்டு அதை விட வேகமாக விந்தணு வெளியிட்டு விடும் நிலை சில நேரங்களில் ஏற்படலாம். அது உங்களது துணைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். அதுக்குள்ளேயும் முடிச்சுட்டீங்களே என்று அவர் விசனப்பட நேரிடும். எனவே எனக்கு உச்சம் வந்து விட்டது என்பதை, வெளியேற்றி விடவா என்று உங்களது துணையிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அதற்கேற்றவாறு உங்களது துணை செயல்பட அது ஏதுவாகும்.

செக்ஸை ஆபாசமாக்கி விடாதீர்கள்:-அதேபோல செக்ஸ் உறவை ஆபாசமான விஷயமாக மாற்றி விடக் கூடாது. அது ரொம்ப முக்கியம். செக்ஸ் உறவு என்பது ஒரு கலை. அதை நயத்தோடு அணுகுவதும், செயல்படுத்துவதுதான் நல்ல உறவுக்கு அழகு. நீங்கள் எதைச் செய்தாலும் அதை ரசித்து்ச செய்யுங்கள். மாறாக, அந்தப் படத்தில் அப்படிப் பண்ணானே, நாமும் அதே போலச் செய்யலாமா என்று ஆபாச பட நிலைக்கு கொண்டு போய் விடாதீர்கள். அது சீக்கிரமே உறவு கசந்து போக வழி வகுத்து விடும். அதேபோல சிலர் உறவின்போது படு ஆபாசமாக பேசக் கூடும். அதையும் தவிர்ப்பது நல்லது.

மெஷின் போல இயங்காதீர்கள்:-உறவின்போது சிலர் மெஷின் போல இருப்பார்கள். அதுவும் தவறு. ஏதோ ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது போல சில ஆண்கள் இயங்கக் கூடும். அதுவும் தவறு. ரசித்து, ஒவ்வொன்றையும் ருசித்து, அனுபவித்து, அழகியலோடு செய்யும்போதுதான் உறவுகள் இனிக்கும், சுவைக்கும். 

மொபைலில் கட்டணத் திருட்டை தடுப்பது எப்படி?

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா? மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!

இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.

இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!

காப்பகம்