ஹாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை என்று 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி முடியும் முன்பே தனது உரையை நிகழ்த்திவிட்டு அர்னால்ட் கிளம்பினாலும், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து சிறப்பித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது, "'ஐ' இசை வெளியீட்டு விழா போல் அல்லாமல் வெள்ளி விழா நடைபெறுவது போல் உள்ளது. இப்படத்தை எப்போது பார்ப்பேன் என்று ஆவலாக உள்ளது. சீக்கிரம் காண்பியுங்கள்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு செல்லும் பணியை ஷங்கர் மேற்கொண்டு வருகிறார். இந்தப் படம் அவரை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஷங்கர் இந்திய சினிமாவை, ஹாலிவுட்டிற்கு நிகராக கொண்டு செல்வதற்கான கண்ணாக செயல்பட்டு வருகிறார்.
'ஐ' படம் 'சீயான்' விக்ரமை, 'ஐ' விக்ரமாக மாற்றியுள்ளது. படத்திற்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னை வருத்தி நடிப்பவர். இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம். தமிழ் சினிமாவிலும் சரி, ஹாலிவுட்டிலும் சரி விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை. சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கும் விக்ரமுக்கு நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.