Friday, August 22, 2014

இந்த நடிகையை எங்கே பிடிச்சே..? பார்த்திபனிடம் கேட்ட பாரதிராஜா..!

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் தம்பி ராமய்யாவை தவிர அனைவருமே புதுமுகங்கள்தான் நடித்துள்ளனர். விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, பிரகாஷ்ராஜ், அமலாபால், டாப்சி, பரத், சாந்தனு, விமல் என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவருமே கெஸ்ட் ரோலில்தான் வந்து செல்கிறார்கள்.

மற்றபடி, முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில் பலரை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா பாதி, சுனைனா பாதி கலந்த கலவையாக இருக்கும் அகிலாவின் பர்பாமென்ஸைப் பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜாகூட, அற்புதமாக நடிச்சிருக்காளே. இந்த நடிகையை எங்கே பிடிச்சே என்று பார்த்திபனிடம் கேட்டாராம்.

இதை நேற்று அப்படத்தின் வெற்றி சந்திப்பில் தெரிவித்த பார்த்திபன். அகிலா பற்றி மேலும் கூறுகையில், இந்த அகிலா தமிழுக்கு புதியவர் என்றாலும், அவரது தாய்மொழியான கன்னடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனபோதும் தமிழில்தான் முழுக்கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். அதனால்தான் தமிழுக்கு வந்த முதல் படத்திலேயே பாரதிராஜாவிடம் பாராட்டு பெற்றிருக்கிறார் என்று கூறிய பார்த்திபன், நான் புதுமுகங்களை வைத்து இயக்கிய முதல் படமும் இதுதான்.

அதேபோல் நான் இயக்கிய படங்களில், நான் நடிக்காத முதல் படமும் இதுதான் என்றும் கூறினார்.

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர் சாவு

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு மைனர் பெண்ணிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர் உயிர் இழந்தார்.

நிர்வாண நிலையில்... :- தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை செயல் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவர் திப்தூர் கே.ஆர்.விரிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் உடலில் எந்தவித காயமும் இன்றி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திப்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உல்லாசம் அனுபவிக்கும் போது சாவு:- மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேத்தனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சேத்தனின் தோழியான 16 வயது மைனர் பெண்ணை கண்டறிந்து அவளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவள் போலீசாரிடம் கூறுகையில், “நானும் சேத்தனும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடவில் காதலாக மாறியது. அதானால் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். சம்பவத்தன்று சேத்தன் நீண்ட நேரம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சில மாத்திரைகளை சாப்பிட்டார். அதன் பின்னர் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது சேத்தன் திடீரென இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் செய்வதறியாது அங்கிருந்து சென்று விட்டேன்“ என்றார்.

வயாகரா மாத்திரைகள்:- இதற்கிடையே சேத்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ருத்ரமூர்த்தி கூறுகையில், “அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை உட்கொண்டதால் ரத்த நாளங்கள் விரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையில் உள்ள ரத்த நரம்புகளும் விரிவடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு சேத்தன் மரணம் அடைந்துள்ளார்“ என தெரிவித்தார்.


உல்லாசம் அனுபவிக்கும்போது வாலிபர் இறந்த சம்பவம் திப்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'ஐ' டீஸர்: இரண்டு வருட உழைப்பு ஒரு நிமிடத்தில்..!

கோடம்பாக்க அகராதியில் பிரமாண்டம் என்றால் ஷங்கர். ‘ஐ’ படம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கொஞ்சமும் சூடு குறையாத எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இடையில் ‘ஐ’ படத்தைப் பற்றிய எதிர்மறைத் தகவல்களும் வலம் வந்தன. ஆனால் ஐ படத்தை வெற்றிகரமாக முடித்துக் கடந்த 17-ம் தேதி தனது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடியிருக்கிறார் ஷங்கர். விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ரகசியம் பொத்திப் பாதுகாக்கப்பட்டுவரும் நிலையில் இந்தப் படத்தின் டீஸர் டிரைலரை கட் செய்து பார்த்திருக்கிறார் ஷங்கர். அதை நமக்குத் திரையிட்டுக் காட்டினார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இரண்டு வருட உழைப்பை ஒரே நிமிடத்தில் கண் முன் நிறுத்துகிறார்கள்.

‘ஐ’ படத்தில் ஷங்கர் கண்டிருக்கும் கனவு, விக்ரமின் உழைப்பு ஆகியவை என்ன என்பதற்கு இந்த டீஸர் ஒன்றே போதும் எனத் தோன்றுகிறது. முதல் ஷாட்டில் விக்ரம் கயிற்றில் தொங்கிக்கொண்டு வருகிறார். படத்தின் ஸ்டில்களைக்கூட ஏன் வெளியிடாமல் ரகசியம் காத்தார் ஷங்கர் என்பதற்குப் படத்தின் டீஸரில் பதில் இருக்கிறது. விக்ரமின் ஒவ்வொரு மேக்கப்பும், இது விக்ரமா என்று கேட்க வைக்கிறது. ‘ஐ’ தன்னளவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று முதல் டீஸரைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

முக்கியக் காட்சிகள்:- பாலத்தின் மீது செல்லும் லாரியில் நிறையக் கட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் மேல் விக்ரம் (மேக்கப்புடன்) ஓடுகிறார். ஒவ்வொரு கட்டையாக உருண்டு விழுகிறது. அந்தக் காட்சியைப் பெரிய திரையில், ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பார்கள் என்று அடித்துச் சொல்லலாம்.
ஒரு பாலத்தில் விக்ரம் மேக்கப் இல்லாமல், சிவப்பு பனியன் அணிந்து, பைக் ஒட்டிக்கொண்டு வருகிறார். பைக்கின் முகமும், மொத்த பைக்கும் அனிமேட்ரானிக்ஸ் (Animatronics) முறையில் மாறிக்கொண்டே இருக்கிறது. அதில் விக்ரம் பார்த்துக்கொண்டே ஓட்டிக்கொண்டு வருகிறார்.

மேக்கப் எதுவும் இல்லாமல், மேல் சட்டை இல்லாமல் விக்ரம் வெயிட் தூக்கும் காட்சி, பெரிய மரக்கிளையில் விக்ரம் (மேக்கப்புடன்) கிளைகளை நகர்த்திப் பாதி முகம் காட்டுவது, பாடல் காட்சிக்காகப் பின்னணியில் கலர் கலராக உடை அணிந்தவர்களுக்கு முன்னால் விக்ரம், எமி ஜாக்சன் இருவரும் ஆடுவது மற்றும் விக்ரம் கலர் கலரான பலூன்களில் டிரம்ஸ் வாசிப்பது போன்ற காட்சி, ‘கில்லி’ படத்தில் விஜய் போட்டிருக்கும் டி-ஷர்ட் போன்று அணிந்துகொண்டு விக்ரம் (மேக்கப்புடன்) சிவப்பு நிறப் பட்டுப் புடவை அணிந்த எமியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது எனப் பல்வேறு காட்சிகள் நிறைந்தது டீஸர்.

ஷங்கர் - விக்ரம் கூட்டணி உழைப்பு:- ஷங்கருக்கும், விக்ரமுக்கும் ‘அந்நியன்’ படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டது என்றால் தவறு. ஷங்கர், விக்ரம் இருவருமே ‘காதலன்’ படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ‘காதலன்’ படத்தில் பிரபுதேவா பாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது விக்ரம்தான். அப்படி ஆரம்பித்த நட்பால் ‘அந்நியன்’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அந்தக் கூட்டணியில் உருவான ‘ஐ’ படத்தின் விக்ரமின் உழைப்பு என்பது மற்ற நடிகர்கள் யாரும் செய்யத் துணியாத ஒன்று. அவ்வளவு மேக்கப், உழைப்பு, உடலமைப்பு மாற்றம் என ஷங்கரின் கனவுக் கதையை நிஜமாக்கியவர் விக்ரம். இந்தப் படத்திற்காகச் சாப்பிடாமல் 50 கிலோ வரை உடம்பைக் குறைத்து அனைவரையும் ‘ஐ’யோ எனச் சொல்ல வைத்திருக்கிறார். ஷங்கரின் கனவு, விக்ரமின் உழைப்பு இரண்டிற்கும் காசை வண்டி வண்டியாகக் கொட்டியிருக்கிறது ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம்.

'ஐ' படத்தின் டீஸரில் இறுதி ஷாட்டில் எமி ஜாக்சன் (ஒரு அறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில்) 'யார் நீ' என்று கேட்டுக் கத்துவார், அப்போது விக்ரம் (மேக்கப்புடன்) கதவை மூடுவார். அந்தக் கதவின் மீது 'ஐ' என்று போட்டு, ஷங்கர் முதல் அனைத்துப் பெயர்களையும் போடுவார்கள். அதைப் பார்க்கும் யாரும் அனிச்சையாகக் கைதட்டுவார்கள்.

ஹீரோவிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கும் ஹீரோயின்

உடன் நடிக்கும் ஹீரோவிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


‘ஜாக்பாட், ‘ராகினி, ‘எம்எம்எஸ் 2, ‘ஜிசிம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘வடகறி என்ற படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர்களிடம் இவர் ரகசியமாக கண்டிஷன் போட்டு நடிப்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கு முன்பு உடன் நடிக்கும் ஹீரோவிடமிருந்து எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்ததற்கான டாக்டர் சான்றிதழ் கண்டிப்பாக தரவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.

படத்தில் நடிக்கும்போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் வரும். எனவேதான் இந்த சான்றிதழை சன்னி கேட்பதாக அவரது தரப்பில் கூறுகின்றனர். ‘ஜிசிம் 2 படத்தில் அவர் நடித்தபோது அப்படத்தில் நடித்த ரன்தீப் ஹுடா, அருனோதய் சிங் ஆகியோரிடமிருந்து இதுபோன்ற சான்றிதழ் பெற்ற பிறகே நடிக்க சம்மதித்துள்ளார்.

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி (2014) - திரைவிமர்சனம்

சேலத்தில் புகழ்பெற்ற அய்யம்பேட்டை சித்தவைத்திய சாலை வைத்து நடத்தி வருகிறார் சிகாமணி. சிறுவயதில் இவரை வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக, இவருடைய அப்பா படிப்பை நிறுத்தி தலைமுறை தலைமுறையாக செய்துவரும் சித்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்து சித்த வைத்தியராக ஆக்குகிறார்.

சிகாமணி படிக்காததால் இவருடைய நண்பர்கள் இவரை ஏமாற்றி இவரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். இது சிகாமணிக்கும் தெரியவருகிறது. தான் படிக்காதவன் என்பதால்தான் தன்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். ஆகையால், படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் யாரும் தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்று முடிவெடுக்கிறான்.

இதற்காக காலேஜ் வாசலில் அமர்ந்துகொண்டு தனக்கு பிடித்த பெண்ணை தேடுகிறார். அப்போது, காலேஜில் இருந்து வெளியே வரும் நந்தினியை பார்த்ததும் அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார்.

அவளை பின்தொடர்ந்து போய் அவளது வீட்டை கண்டுபிடித்து பெண் கேட்க போகிறார். அவளோ தன்னை கடத்தத்தான் அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு, தனது அப்பாவிடம் சென்று முறையிடுகிறார்.

அந்த ஊரில் மிகப்பெரிய மனிதரான நந்தினியின் அப்பா சிலம்பு சின்னத்துரை, தனது மகளை பின்தொடர்ந்து வந்த சிகாமணியையும், அவரது நண்பர் பால்பாண்டியையும் அடித்து துவம்சம் செய்கிறார்.

அப்போது சிகாமணி போனுக்கு வரும் அழைப்பை எடுத்து பேசும் சின்னத்துரை, அந்த போனில் பேசியவர் டாக்டர் இருக்கிறாரா? என்று கேட்டதும், சிகாமணி டாக்டர் என்று தவறாக புரிந்துகொள்கிறார். இவர்களும் அடி தாங்கமுடியாததால் தாங்கள் டாக்டர்தான் என்று பொய் சொல்கிறார்கள்.

இதையடுத்து, அவரது பெண்ணை திருமணம் செய்யத்தான் அவளை பின்தொடர்ந்தோம் என்று உண்மையைச் சொன்னபின், சின்னத்துரைக்கு சிகாமணியை பிடித்துப்போய் விடுகிறது. தனது பெண்ணை அவருக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவெடுக்கிறார். இருவீட்டாருக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருக்க சிகாமணி-நந்தினி திருமணம் நடந்தேறுகிறது. இதற்கிடையில், சிகாமணியின் நண்பர்கள் அவன் உண்மையான டாக்டர் என்பதை பெண் வீட்டாரிடம் சொல்லிவிட துடியாய் துடிக்கிறார்கள்.

இறுதியில், சிகாமணி டாக்டர் இல்லை என்பது நந்தினிக்கும், அவரது பெற்றோருக்கும் தெரிந்தா? நண்பர்கள் சிகாமணியின் முகத்திரையை கிழித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சித்த வைத்தியர் சிகாமணியாக வரும் பரத், அப்பாவி இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். தான் டாக்டர் இல்லை என்பது பெண் வீட்டாருக்கு தெரிந்துவிடுமோ? என்று தவிக்கும் காட்சிகளில் நம்மையும் தவிக்க விடுகிறார்.

நந்தினியாக வரும் நந்திதா, சேலையில் கச்சிதமாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். நந்திதா இதுவரை நடித்திருக்கும் படங்களில் வரும் பாடல்களில் முகபாவணைகளிலேயே எல்லோரையும் கவர்ந்துவிடுவார். இப்படத்தில் குத்துப்பாட்டு, வெஸ்டர்ன் என ஆட்டம் போட்டிருக்கிறார். ஆனால், பரத்துக்கு இணையாக இவரால் ஆட்டம் போட முடியவில்லை.

சிலம்பு சின்னதுரையாக வரும் தம்பி ராமையா தனது மூத்த மகளை தொழிலதிபருக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டேன், இளைய மகளை டாக்டருக்கு திருமணம் செய்துகொடுத்து விட்டேன் என்று பெருமைப்படும் அப்பாவாக அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், படம் முழுக்க இவருடைய சத்தம்தான் அதிகமாக கேட்கிறது. அதை கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, கருணாகரன், படவா கோபி, இமான் அண்ணாச்சி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து செம்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவன் படிக்காமல் பெரிய ஆளாக இருந்தால் அவன் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மைய கருத்தை வைத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதேவேளையில், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் படத்தில் விளக்கியிருக்கிறார். சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்தை காமெடியாக சொல்ல நினைத்தது சிறப்பு.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். சண்டைக்காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. பாடல் காட்சிகளிலும் சிரத்தை எடுத்திருக்கிறார். சைமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலா பாடும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ சிரிப்பு வைத்தியம்

வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் ஜோதிகா..!

1999ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை கோலிவுட்டை கலக்கிய ஜோதிகா சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு வெளியேறினார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக… தன் கடமையை செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். ஜோதிகா மீண்டும் நடிக்க வர சூர்யாதான் காரணமாம். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை பார்த்த சூர்யாவுக்கு இந்தப் படத்தை தமிழில் ஜோவை நடிக்க வைக்கலாமே என்று தோன்றி இருக்கிறது!


இது குறித்து ஜோதிகாவிடம் பேசிவிட்டு, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸை தொடர்பு கொண்டு, ”ஹவ் ஓல்டு ஆர் யூ’வின் தமிழ் ரீ-மேக்கில் ஜோதிகா நடிக்க விரும்புகிறார்.” என்ற தகவலை சொன்னதோடு, ”உங்களால் சென்னைக்கு வரமுடியுமா? என்று கேட்டாரம்! இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் சென்னைக்கு வந்தார். இதற்கிடையில் ஜோதிகாவையும் சம்மதிக்க வைத்திருக்கிறார் சூர்யா. தமிழ் சினிமாவில் இத்தனை புகழோடு இருந்தவர், மீண்டும் நடிக்க வருவதென்றால் அந்தப் படத்தில் அவருக்கு தீனி போடும் கேரக்டர் அவருக்கு அமைய வேண்டுமே? அவரின் காத்திருப்பு வீண் போகாது என்றே கூறுகிறார்கள் ஹவ் ஓல்டு ஆர் யூ மலையாளப்படத்தைப் பார்த்தவர்கள்.

அந்தப் படத்தின் கதை என்ன தெரியுமா? வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த வேடத்தில் மஞ்சு வாரியரை நடிக்க வைத்திருந்தனர். இப்போது அந்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

ஆட்டத்தில் சரிகாவின் மகள் என்பதை நிரூபித்த ஸ்ருதி..!

வீ.சேகர் பிஸியாக இருந்தபோது கடைபிடித்து வந்த பழக்கம் இது. படத்துக்கு பூஜை போடும்போதே படத்தின் வெளியீட்டு தேதிதியை அறிவித்துவிடுவார். அவரைப்போலவே படத்தின் பூஜை அன்றே படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானித்து அறிவித்துவிடுமளவுக்கு பக்கவாக திட்டமிட்டு வேலை செய்கிறவர் இயக்குநர் ஹரிதான். விஷாலை வைத்து ஹரி தற்போது இயக்கி வரும் பூஜை படத்தை ஆரம்பித்தபோதும் கூட தீபாவளி வெளியீடு என்ற அறிவிப்போடுதான் துவங்கினார்.


தாமிரபரணி படத்திற்குப் பிறகு விஷாலும், இயக்குநர் ஹரியும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. பூஜை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம் பெறும் சில காட்சிகளை பழைய ஹைதராபாத்திலுள்ள கோல்கோண்டா கோட்டையில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஹரி. இதற்காக ஹைதராபாத் சென்றுள்ள பூஜை பட டீம், இன்று முதல் அந்தக் கோட்டையில் படப்பிடிப்பை நடத்தவிருக்கின்றனர்.

அங்கு நடைபெறும் படப்பிடிப்பைத் தொடர்ந்து இரண்டு பாடல் காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஒரு பாடலை ஹைதராபாத்தில் ஒள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியிலம், மற்றொரு பாடலை சுவிட்சர்லாந்தில் படம் பிடிக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்புடன் பூஜையின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுகிறது.

பூஜை படத்தில் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். பாடல் காட்சிகளில் தான் சரிகாவின் மகள் என்பதை நிரூபித்திருக்கிறாராம். பூஜை படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. கடந்த வருட தீபாவளி அன்று விஷாலின் பாண்டிய நாடு படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இந்த வருட தீபாவளி விருந்தாக பூஜை படம் இருக்குமா?

மாயவிழி (2014) - திரைவிமர்சனம்

நாயகன் சஞ்சய் படித்து முடித்துவிட்டு, எந்த வேலையும் கிடைக்காததால் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு வருகிறார். இவர் பிரியா என்ற பெண்ணையும் காதலிக்கிறார். நாயகனுடைய அம்மா வேலை பார்க்கும் வீட்டு முதலாளியான இலக்கியா, தனது கணவன் மூலமாக முழு தாம்பத்ய சுகம் கிடைக்காத தவிப்பில் இருந்து வருகிறார்.

ஒருநாள் சஞ்சய்யை சந்திக்கும் இலக்கியா, அவன் தனது வீட்டு வேலைக்காரியின் மகன் என்பதை தெரிந்து கொள்கிறார். அவன்மீது மோகம் கொள்கிறாள். தனக்கு கிடைக்காத சுகத்தை அவன்மூலம் பெற்றுவிட துடிக்கிறாள். ஒருநாள் சஞ்சய்யின் அம்மா இலக்கியாவின் வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிடுகிறாள். அவளைப் பார்க்க சஞ்சய், இலக்கியா வீட்டிற்கு வருகிறான். அங்கு வந்ததும் அவனிடம் ஒரு செல்போனை கொடுத்து, ஏதாவது அவசர உதவி வேண்டும் என்றால் எனக்கு போன் செய் என்று சொல்கிறாள். அவனும் அந்த செல்போனை வாங்கிக் கொண்டு அம்மாவுடன் அங்கிருந்து புறப்படுகிறான்.

அன்றுமுதல், இலக்கியாவும், சஞ்சய்யும் போனில் பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் இலக்கியாவின் தோட்டத்து பங்களாவுக்கு போகும் சஞ்சய்யிடம் இலக்கியா தனது ஆசையை கூறுகிறாள். என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கும் ஆசை துளிர்விட, அவளது ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறான். அதையடுத்து, இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி தங்களது உறவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இலக்கியாவுடன் கொண்ட உறவால், சஞ்சய்-பிரியா காதலில் சற்று விரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒருநாள் சஞ்சய்யும் இலக்கியாவும் உறவு கொண்டிருக்கும்போது இலக்கியாவின் கணவர் பார்த்துவிடுகிறார். நாயகனை தீர்த்துக்கட்டுவது என முடிவெடுக்கிறார் இலக்கியாவின் கணவர். இதற்கிடையில், சஞ்சய் காதலியான பிரியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கின்றனர்.

இறுதியில் சஞ்சய், இலக்கியாவின் கணவனால் கொல்லப்பட்டாரா? பிரியாவும்-சஞ்சய்யும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் இலக்கியாவின் நடிப்பு மட்டும்தான் மெச்சும்படியாக இருக்கிறது. கணவனுடனான தாம்பத்ய சுகம் கிடைக்காமல் தவிக்கும் தவிப்பில் ரசிகர்களை கிரங்கடிக்கிறார். அதேநேரத்தில், சஞ்சய்யுடன் உறவு கொள்ளும் காட்சிகளில் காம ரசத்தை அள்ளி தெளித்திருக்கிறார். படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. நாயகன் சஞ்சய் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். இவர் செய்யும் ஒவ்வொரு செய்கையும் நமக்கு காமெடியைத்தான் வரவழைக்கிறது.

சஞ்சய் காதலியாக வரும் பிரியா மற்றும் நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் ஏதோ படத்தில் வந்துவிட்டு போயிருக்கிறார்கள். படத்தில் இரண்டு கதை. இரண்டு கதையும் ஒன்றுகொன்று சம்பந்தம் கிடையாது. அப்புறம் எதற்கு இந்த இரண்டு கதை. இந்த மாதிரியெல்லாம் எடுத்து எதற்குத்தான் ரசிகர்களை குழப்புகிறார் என்று இயக்குனர் தமிழரசுவை கேள்வி கேட்க வைக்கிறது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் வசனங்களே இல்லை. ஒரு ஊமைப் படம் பார்த்த உணர்வே இருந்தது.

மது குடிப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்று போட்டுக் கொள்ளலாம் என்பதற்காக படம் முழுக்க ஒரே சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது என வைத்து படத்தையே நாறடித்திருக்கிறார். இவர்போன்ற இயக்குனர்கள் இனி படங்களே எடுக்கக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்.

கணேஷ்ராஜா ஒளிப்பதிவு ஓரளவுக்கு பரவாயில்லை. படத்தில் வசனங்கள் இல்லாததால் சஞ்சீவ் குமாரின் இசையாவது படத்தை இழுத்துச் செல்லுமா? என்று பார்த்தால் அதுவும் மட்டமான ரகம்தான்.

மொத்தத்தில் ‘மாயவிழி’ மயக்கவில்லை.

கபடம் (2014) - திரைவிமர்சனம்

நாயகன் விச்சு (சச்சின்) சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒருநாள் நண்பரை சந்திக்க கோவிலுக்கு போகும்போது அங்கு வரும் நாயகி பத்மினியை (அங்கனா ராய்) பார்க்கிறார். பட்டுச்சேலையில் அவளை பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளுக்கு தெரியாமலேயே அவளது பெற்றோரிடம் திருமணம் பேசி முடிக்கிறார். அவர்களும் நிச்சயதார்த்த தேதியை குறித்துவிடுகின்றனர்.

யாரென்று தெரியாமலேயே அந்த நிச்சயதார்த்தத்துக்கு பத்மினியும் ஒத்துக் கொள்கிறார். நிச்சயதார்த்தத்தின் போது விச்சுவை பார்த்ததும் அவளுக்கு பிடித்துப் போய்விடுகிறது. 3 மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்வதாக பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர்.

முன்பின் அறிமுகமில்லாத பத்மினியிடம் எப்படி பேசுவது? எப்படி பழகுவது? என்று தெரியாமல் நாயகன் சற்று தடுமாறுகிறார். ஒருகட்டத்தில் அவளுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு காலை உணவு சாப்பிட வருமாறு அழைக்கிறான். அதன்படி அவளும் வருகிறாள்.

அங்கே, எதிர்பாராதவிதமாக விச்சுவின் அறையை பார்க்கிறாள். அந்த அறையில் விச்சு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஆங்காங்கே மாட்டி வைத்திருப்பதை பார்த்ததும் சற்று நெளிந்து போகிறாள். ஆனால், விச்சுவோ, பத்மினி அந்த புகைப்படங்களை பார்த்திருக்கமாட்டாள் என்று மனக்கணக்கு போடுகிறான்.

விச்சுவுக்கு தான் ஒரு நல்ல காதலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பத்மினி அவளுடன் நெருங்கி பழகுகிறாள். ஆனால், பத்மினியின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. இதை அவளிடம் வெளிப்படையாகவே கூறுகிறான். இதனால், விச்சுவுக்கும் பத்மினிக்கும் இடையே சிறு இடைவெளி உருவாகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளிலும் விச்சு மீது பத்மினிக்கு ஆசையைவிட வெறுப்பே அதிகமாக உருவாகிறது.

ஒருகட்டத்தில் பத்மினி இன்னொருவருடன் நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் பைக்கில் ஊர் சுற்றுவதுமாக இருப்பதாக விச்சுவுக்கு அவனது நண்பர்களில் ஒருவன் கூறுகிறான். பத்மினியின் நடவடிக்கைகளும் அதுபோலவே இருப்பதால் அவள்மீது சந்தேகம் கொள்கிறான்.

ஒருநாள் ஊருக்கு கிளம்பும் பத்மினியை சந்திக்க வரும் விச்சு அவளை தனது காரில் அழைத்துச்சென்று பஸ்ஸில் ஏற்றிவிடுகிறான். பின்னர், அந்த பஸ்ஸை பின்தொடர்ந்து சென்று அவளை நோட்டமிடுகிறான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அவள் பாதி வழியிலேயே பஸ்ஸை நிறுத்தி, அருகிலுள்ள ஒரு லாட்ஜிற்கு சென்று தனது பெயரை மாற்றிக்கொடுத்து ரூம் எடுத்து தங்குகிறாள். அவளை பின்தொடர்ந்து சென்ற விச்சுவும் தனக்கு அவளது அறைக்கு எதிரில் உள்ள அறையில் தங்குகிறான்.

பத்மினி எதிர் அறையில் வேறு ஒருவனுடன்தான் இருக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, அவளை கொல்ல துடிக்கிறான். தனது நெருங்கிய நண்பன் சிவாவுக்கு போன் போட்டு இதை சொல்கிறான். பதிலுக்கு சிவாவோ அப்படி எதுவும் செய்துவிடாதே? நான் வருகிறேன் என்று சொல்கிறான். அவனுக்கு 20 நிமிடம் அவகாசம் கொடுத்துவிட்டு பத்மினிக்கு எதிர் அறையிலேயே தங்கியிருக்கிறான்.

விச்சு நினைத்த மாதிரியே எதிர் அறையில் பத்மினி வேறு ஒருவனுடன் நெருக்கமாக இருந்தாளா? விச்சு கொடுத்த 20 நிமிடத்திற்குள் சிவா வந்து அந்த கொலையை தடுத்தானா? இல்லை விச்சு, பத்மினியை கொலை செய்தானா? என்பதே மீதிக்கதை.

விச்சுவாக வரும் சச்சின் அழகாக இருப்பதோடு, நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். நிர்வாண புகைப்படங்களை தனது அறையில் வைத்து ரசிக்கும் இவரது கதாபாத்திரம், ஏன் தனக்கு நிச்சயமான பெண்ணுடன் நெருக்கமாக இருக்க பயப்படுகிறது என்பதுதான் புரியவில்லை. கடைசி காட்சிகளில் இவரது நடிப்பு அபாரம்.

பத்மினியாக வரும் அங்கனா ராய், மாடர்ன் உடையிலும், சேலையிலும் அழகாக பளிச்சிடுகிறார். சச்சினை மயக்க இவர் செய்யும் சேஷ்டைகளாகட்டும், பின் அவனை வெறுத்து ஒதுக்குவதாகட்டும் தெளிவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு லாட்ஜில் நடக்கும் கதை என்பதால் படத்தில் கதாபாத்திரங்கள் மிகக் குறைவுதான். சச்சின் நண்பனாக வரும் ஆதித்யா, லாட்ஜ் ஊழியராக வரும் காதல் சரவணன் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, இதேபோல் நிறைய படங்கள் வந்துவிட்டன. அதையே தூசி தட்டி மறுபடியும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோதி முருகன். முதல் பாதி சற்று போரடித்தாலும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

சாஷி இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பாடல் காட்சிகளில் இவரது உழைப்பு தெரிகிறது.

மொத்தத்தில் ‘கபடம்’ விறுவிறுப்பு

இணையத்தை எளிதாக கையாள பயன்மிக்க குறிப்புகள்..!

Internet tips and Tricks

மிகச்சிறந்த Internet tips and Tricks (கணினிக் குறிப்புகள்) என்ற இப்பதிவில் உண்மையிலேயே சிறந்த Internet tips and Tricksகளைப் பார்க்க இருக்கிறோம்.

இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இன்று ஏராளம். கணினியில் மூலம் அதிகம் இணையத்தைப் பாவிக்கிறோம். வலைத்தளங்கள் அல்லது இணையப் பக்கத்தை எளிதாக கையாள குறுக்கு விசைகளைக் (Shortcuts of internet)கற்றுக்கொண்டோமானால் எளிதாக நாம் பிரௌசிங் செய்யலாம்.

இதனால் நேரம் மீதியாகும். குறிப்பாக Internet சென்டர் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறுக்குவிசைகள் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நேரத்தில் இணையத்தில் உங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் இணையத்தில் உலவப் பயன்படும் உலவிகளைப் பற்றிய தகவல்களையும் (About Browsers)அறிந்துவைத்திருப்பது மேலும் இணையத்தில் சிறப்பாக உலவ பயன்படும்.

internet tips and tricksவிரைவாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் Internet tips and Tricks களைப் பார்ப்போம்.

முதலில் உங்கள் பிரௌசரைத் திறந்தவுடன் என்ன செய்வீர்கள்? அட்ரஸ் பாரில் நீங்கள் விரும்பும் வலைத்தளத்தின் பெயரை உள்ளிட்டு Go அல்லது Enter அழுத்துவீர்கள் அல்லவா?

இதில் உள்ளப்படும் URL -ஐ முழுவதுமாக தட்டச்சிட்டு, உதாரணமாக http://goodluckanjana.blogspot.com/ என தட்டச்சிட்டு enter கொடுப்பீர்கள்.

இனி அவ்வாறு செய்ய வேண்டாம். goodluckanjana என அட்ரஸ் பாரில் தட்டச்சிட்டு Ctrl+Enter தட்டிப்பாருங்கள்.

வலைத்தளம் திறக்கிறதா? கண்டிப்பாக திறக்கும். Ctrl+Enter கொடுக்கும்போது தானாவே அட்ரஸ்பாரில் நாம் உள்ளிடும் பெயருக்கு முன்பாக htttp:// என்ற ஆரம்பமும், .com என்ற முடிவும் தானாகவே சேர்ந்துகொள்ளும்.

ஒவ்வொரு வலைத்தள முகவரியையும் இப்படி வலைத்தளத்தின் பெயரை மட்டும் உள்ளிட்டு கண்ட்ரோல்+என்டர் மட்டும் தட்டுவதால் எளிதாக வலைத்தளத்தைத் திறக்க முடியும்.

இணையப்பக்கங்களில் ஒரு தொடுப்பிலிருந்து மற்றொரு தொடுப்புக்கு எளிதாக மாற Tab அழுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

Tab பட்டனை அழுத்துவதன் மூலம் ஒரு இணைப்பிலிருந்து அடுத்த இணைப்பிற்கு தானாகவே செல்ல முடியும்.

மீண்டும் முந்தைய இணைப்பிற்கு செல்ல Shift+Tab அழுத்துங்கள்.

ஒரு வலைத்தளத்தில் உள்ள படிவத்தை (Form) நிரப்ப அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல இந்த Tab key உங்களுக்கு உதவும். Email Form, வலைத்தளங்களின் கணக்குகளை உருவாக்க(Website account creation form) போன்ற விண்ணப்ப நிரப்புக் கட்டங்களை நிரப்பும்போது ஒவ்வொரு கட்டமாக கர்சரை வைத்துக் கிளிக் செய்யாமல் Tab விசையை அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லலாம். முந்தை கட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் Shift+Tab அழுத்துங்கள்.

ஒரு வலைத்தளத்தை, வலைப்பக்கத்தை மறுபடியும் தொடக்கம்(Refresh) செய்ய F5 விசையை அழுத்துங்கள்.

வலைத்தளம் அல்லது வலைப்பக்கத்திலுள்ள URL செலக்ட் செய்ய F6 விசையை அழுத்துங்கள்.
அல்லது Alt+D கொடுக்கலாம்.

வலைபக்கத்தை முழுவதுமாக Screen க்கு கொண்டுவர F11 விசையை அழுத்துங்கள்...

கூகிள் சர்ச் போன்ற சர்ச் பாக்சில் நீங்கள் வேண்டியதை எளிதாக தேடிப்பெற தேட வேண்டிய சொற்களுடன் "" குறிகளை இட்டு Search கிளிக் செய்யுங்கள். உதாரணமாக "goodluckanjana" என Google Search-ல் தேடினால் நீங்கள் தேடிய சொற்களுக்கான "goodluckanjana" -க்கான சரியான முடிவுகள் மட்டும் உங்களுக்கு காட்டும். இவ்வாறு நீங்கள் உங்களுக்கு வேண்டிய சொற்களை "" குறிகளுக்குள் இட்டுத் தேடுவது உங்கள் தேடுதலை எளிதாக்கும். நீங்கள் வேண்டிய செய்திகளடங்கிய வலைத்தளங்கள் முதன்மைப்படுத்தி காட்டும்.

தேடுபெட்டியில் தேடியதை தட்டச்சிட்டுவிட்டு அருகிலுள்ள Search பட்டனை கிளிக்செய்வதைக் காட்டிலும் Enter அழுத்திப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் தேடுபெட்டியில் தேடும்போது வேண்டியதை தட்டச்சிட்டு என்டர் கொடுத்தாலே போதும். உடனே தேடல் தொடங்கிவிடும். மௌஸ் கர்சரைக் கொண்டுபோய் சர்ச் பட்டனில் கிளிக் செய்துதான் சர்ச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. (புதியவர்கள் இந்த Internet tips and Tricks ஐ கவனிக்கவும்.)

Tabbed Browsing

தற்காலத்தில் உள்ள அனைத்து பிரௌசர்களுமே Tabbed browsing அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. முக்கிய பிரௌசர்களான IE, Firefox, Google Chrome ஆகிய உலவிகளில் இப்போது Tabbed Browsing வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது வலைப்பக்கத்தில் உள்ள இணைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய விண்டோவில் திறக்கும் முறை மாறிவிட்டது.

ஒரே விண்டோவில் Tabbed முறையில் அடுத்து அடுத்து திறக்கும் செயல்பாட்டைக் கொண்ட புதிய வலைஉலவிகளே(Tabbed Browsing) இப்போது பெரிதும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதையும் நவீன தொழில்நுட்ப்பதிற்கு(New Technology) ஒரு உதாரணமாக சொல்லலாம்.

இவ்வாறு டேப்(Tab) பயன்படுத்தி ஒவ்வொரு வலைப்பக்கத்தையும் ஒரே விண்டோவில் திறப்பதற்கு குறுக்கு விசைகள் உள்ளன. பொதுவாக எல்லா உலவிகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு வலைப்பக்கத்தை அல்லது ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்க இந்த இணைப்பில் கண்ட்ரோல் கிளிக் செய்தால் புதிய டேபிள் அந்த இணைப்பு திறக்கும். இதற்கு மற்றொரு வழியும் உள்ளது. உங்கள் Mouse-ல் Scroll Wheel இணைப்பின் மீது ஒரு சொடுக்கு சொடுக்குவதன் மூலமும் வலைப்பக்கத்திலுள்ள ஒரு இணைப்பை புதிய டேபில் திறக்கச் செய்யலாம். இவ்வாறான Internet tips and Tricks களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர Internet Browsing உங்களுக்கு எளிதாகிவிடும்.

Browserகள் பலவகை:

நம் கணினியிலேயே அமைந்திருக்கும் Browser ஒன்று உண்டு. அதுதான் Internet Explorer என்ற வலைஉலவி. பெரும்பாலானவர்கள் இதையே தங்கள் உலவியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இணையத்தில் பல்வேறு வலைஉலவிகள் இலவசமாக கிடைக்கின்றன. அவைகள் கணினிலேயே இணைந்து இருக்கும் இன்டர்நெட் பிரௌசரைவிட மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது.

அவற்றில் முதன்மையான மூன்று browserகள்.. (Top Three Browsers)

1. Google Chrome
2. Firefox Browser
3. Opera Browser

இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட அனைத்து உலவியிலும் தற்போது நான் முன்னரே குறிப்பிட்டபடி Tabbed Browsing முறையில் இயங்குகிறது.

Add-Ons and Plugins:

இத்தகைய புதிய பிரௌசர்களுக்கு ஆயிரக்கணக்கில் பிளகின்களும், ஆட்ஆன் புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. வேண்டிய வசதிகளை இந்த வலைஉலவிகளில் இணைப்பதன் மூலம் கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.

உங்கள் பிரௌசர் அப்டேட்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் புதிய வசதிகளைப் பெற முடியும். உதாரணமாக Adobe Flash Player Update-ஐ கூறலாம். இந்த Adobe Flash Player ஆனது இணையத்தில் இருக்கும் வீடியோக்கள், படங்களை காண்பதற்கு பயன்படுகிறது.

இவ்வாறான update களைச் செய்யும்போது கணினியின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் மேம்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் பிரௌசர் பிளகின்கள்(Browser Plugins), ஆட்ஆன் புரோகிராம்களை (Odd-On Programe)தவறாமல் அப்டேட் செய்வது முக்கியம்.

மேற்கண்ட Internet tips and Tricks  அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செய்ய பழகிக்கொண்டாலே இணையம் உங்கள் வசமாகும்.  உங்களாலும் மிகச் சிறந்த, வேகமான,பாதுகாப்பான உலவுதலை(Browsing) செய்ய முடியும்.

3 வார்த்தை சொன்ன சிம்புவை 2 வார்த்தையால் காயப்படுத்திய‌ ஹன்சிகா..?

சிம்பு உடனான காதல் பிரிவு காரணமாக ஹன்சிகா உடைந்துபோய்விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். நடந்ததோ வேறு…லவ் பிரேக்கப் பற்றி நினைத்து சோர்ந்து போகாமல், தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா. சிம்பு உடனான காதல் முறிவை அவர் மறந்துவிட்டார். ஆனால் சிம்பு – ஹன்சிகா காதலையும் பிரிவையும் மீடியாக்கள் விடுவதாக இல்லை.

சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பபட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. ”இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட குணம். ஏன்னா நான் அந்த மாதிரியான குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கேன். என்று சொன்னதன் மூலம் சிம்புவின் குடும்பத்தை குறைத்து மதிப்பிடுவதுபோல் பதில் சொல்லி இருக்கிறார் ஹன்சிகா.

தொடர்ந்து பேசிய ஹன்சிகா, பிரிவு ஏற்படுறதுக்கு முன்னாடி என்கிட்ட அவர் (சிம்பு) ரெண்டு வார்த்தைதான் சொன்னாரு. அதனால காயப்பட்டு நானும் ரெண்டு வார்த்தை பேசினேன். ஆனா அவரை காயப்படுத்துறதுக்கு எனக்கு விருப்பமில்ல. இப்பவும் அவர் நல்லாயிருக்கணும்னு வாழ்த்துறேன்.” என சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

காதல் பிரிவுக்கு பின்னர் நடைபெற்ற ‘வாலு’ படத்தில் கடைசிகட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன் இணைந்து நடித்துக் கொடுத்தார் ஹன்சிகா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டது. இதன் பிறகு அவர் ‘வேட்டை மன்னன்’ படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலும் ஹன்சிகாவுக்கு வரப்போகிறது. என்ன செய்யப்போகிறாரோ?

இணையத்தில் வலம் வரும் ஹன்சிகாவின் குளியல் வீடியோ..!

ந‌டிகை ஹன்சிகா பக்கெட் தண்ணீரில் குளிக்கும் வீடியோதான் இப்போது பரபரப்பாக இணையத்தில் சுற்றி வருகிறது. திரிஷா குளித்ததாக கூறப்பட்ட பிரச்சினையே ஓயாத நிலையில் இது வேறயா என்று யாரும் விவகாரமாக யோசிக்க வேண்டாம். இது வேறு மாதிரி குளியல். உலக நன்மைக்காகவே ஹன்சிகா குளித்துள்ளார்.

ஐஸ்பக்கெட் சேலஞ்ச் இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளது ஐஸ்பக்கெட் விளையாட்டுதான். இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சேலஞ்ச் ஆகும். ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊற்றி கொள்ள வேண்டும்.

விளையாட்டில் நிதி திரட்டல் அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள் என்பது இதன் நோக்கம்.

ஹன்சிகா வீடியோ இதில் பங்கேற்று ஹன்சிகா ஐஸ்பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் சுற்றிவருகிறது. அந்த வீடியோ காட்சியில், வீட்டின் குளியலறை போன்ற பகுதியில், பேண்ட் மற்றும் டாப் அணிந்திருக்கும் ஹன்சிகா, தலையில் தண்ணீரை கொட்டியபடி நடுங்குவது பதிவாகியுள்ளது.

கவர்ச்சி குளியல் ஏதோ நல்ல எண்ணத்தில் குளிரை பொருட்படுத்தாது ஹன்சிகா தலையில் தண்ணீரை ஊற்றியுள்ளார். ஆனால் கொழுக், மொழுக் ஹன்சிகா, தொப்புள் தெரிய குளிப்பதை பார்ப்பதற்காகவே ஒரு கோஷ்டி வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் ஆக்கிவிட்டதாம்.

காப்பகம்