தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தோற்றம் பெற்ற ஒரு சேவையாக ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை விளங்குகின்றது. தற்போது உள்ள ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் Paypal ஆனது பிரபல்யம் வாய்ந்ததாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் காணப்படுகின்றது. இந்நிலையில் Paypal - ற்கு நிகரான Square Cash எனும் பிறிதொரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் இச்சேவையானது முதன் முதலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இதற்காக iOS மற்றும் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் மூலம் பயனர் ஒருவர் வாரம் ஒன்றிற்கு 2,500 டொலர்களை ஆகக்கூடுதலான தொகையாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, October 17, 2013
Square Cash ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்!
Flipkart இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி S3 ரூ.19,499 விலையில் கிடைக்கும்!
கடந்த ஆண்டு கொரியாவின் மிக சிறந்த ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3, இப்போது இணையத்தில் ரூ.20,000-க்கும் குறைவாக கிடைக்கின்றது. சாம்சங் தயாரிப்பாளர் ரூ.25,400-ல் விற்பனை செய்துகொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி S3 கடந்த வாரத்திலிருந்து கைப்பேசிகளின் விலை குறைத்துள்ளது.
ஆனால் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart இணையதளத்தில் இப்போது ஒரு பெரிய தள்ளுபடி விலையில் கேலக்ஸி S3 விற்பனை செய்கின்றது. அதாவது இந்தியாவில் கேலக்ஸி S3 விலை ரூ.24,899-க்கு விற்பனை செய்தாலும் அதனை Flipkart இணையதளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே, ரூ.5,400 தள்ளுபடி செய்து ரூ.19,499 விலையில் வழங்கி வருகிறது.
இந்திய சந்தையில் உத்தரவாத இழப்பு இல்லாமல் ரூ.19,499-க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. சாம்சங் கேலக்ஸி S3 தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர்-ல் இப்போதும் ரூ.25,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அமேசானில் சாம்சங் கேலக்ஸி S3 கைப்பேசி ரூ.23,950-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இது மற்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடம் சுமார் ரூ.25,000 விலையில் கிடைக்கின்றது.
செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம்28ம் தேதி ஏவப்படுகிறது!
இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய்கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம் 28ம் தேதி அனுப்பப்படுகிறது. புவி வட்டப்பாதை வரை பி.எஸ்.எல்.வி, சி,25 ராக்கெட்டில் செலுத்தப்படும் இந்த விண்கலம் மங்கல்யான், அதன்பிறகு அதிலேயே பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம் புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நுழையும்.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் ( இஸ்ரோ) சார்பில் இதுவரை 105 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கை கோள்களை எடுத்துச்சென்று விண்ணில் நிலைநாட்டியுள்ளன. இதில் அதிகளவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன. கல்விப்பயன்பாடு, சுற்றுச்சூழல்பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, வாகனங்கள் கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்திய செயற்கை கோள்கள் பெரிதும் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் ஏவும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
அதற்காக மங்கல்யான் என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம், மற்றும் இதர துணை அமைப்புகள், பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட் ஆகியவை ரூ.450 கோடியில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப்பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட் மூலம் மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதை வரை கொண்டு செல்லப்படும். பின்னர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் இயங்கத்தொடங்கி, புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் வட்டப்பாதையில் விண்கலத்தை கொண்டு செல்லும்.
இந்த ராக்கெட் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. மங்கல்யான் விண்கலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழ முடியுமா போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். விண்கலத்தில், லைமேன் ஆல்பா போட்டோ மீட்டர், மீத்தேன் சென்சார் கருவி என்ற தட்பவெப்ப ஆய்வுக்கருவி, மார்ஸ் எக்சாஸ்பியரிக் காம்போசிஷன் அனலைசர் என்ற சுற்றுச்சூழல் ஆய்வுக்கருவி, மார்ஸ் கலர் கேமரா எனப்படும் செவ்வாயின் தரைத்தளங்களை படம் பிடிக்கும் கேமரா, டி.ஐ.எஸ் என்ற ஸ்பெக்ட்ரோ மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆன்டனாக்கள், சோலார்பேனல்கள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன.
பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட்டை நாளை 18 ம் தேதி விண்ணில் செலுத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென்று பைலின் புயல் தாக்கியதால் வானிலை நிலவரம் ராக்கெட் ஏவும் நிலையில் இல்லை. இதையடுத்து இஸ்ரோ மேற்கொண்ட ஆய்வுகளில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 19 வரையான கால கட்டங்களில் பருவநிலை சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்டோர் 28 ம் தேதி பி.எஸ்.எல்.வி சி,25 விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதையொட்டி ராக்கெட்டின் இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்து வருகின்றன. உதிரி பாகங்கள், உந்து இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு நிலை பணிகளும் முடிக்கப்பட்டு ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு வரப்பட்டு, இதர பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எக்ஸ்ட்ரா தகவல்
செவ்வாய் கிரகத்தில் குடியேற உலக அளவில் 1.6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 8 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 87 பேர்.
ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்!
உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.
என்ன காரணங்கள்
ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டால் அது உடலிலேயே கொழுப்பாக படிந்து விடுகிறது. அவை செலவழிக்கப்படாமல் சேர்ந்து உடல் பெருக்க தொடங்கி விடுகிறது. நார்மல் எடைக்கும் அதிகமாக கூடும்போது உடல்பருமன் பிரச்னையாகி பல வியாதிகளுக்கு வாசலாகி விடுகிறது.
பொதுவாக மாறிவரும் நமது சாப்பாட்டு முறைகளும், உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாததும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்கு மரபியலும் காரணமாக அமைந்து விடுகிறதாம். சில ஜீன்கள் ஒபிசிட்டி பிரச்னைக்கு காரணமாகி விடுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள்.
உயரத்திற்கேற்ற எடையை கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவாக உடல் எடையை, உடல் திண்ம குறியீடு (பிஎம்ஐ) மூலம் அளவிடுகிறார்கள். இது உடலின் எடை, உயரத்தை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. இந்த பிஎம்ஐ 25 முதல் 30 வரை இருப்பவர்கள் (அதாவது ஒரு சதுர மீட்டருக்கு 25 முதல் 30 கிலோ) அதிக பருமன் கொண்டவர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இந்த பிஎம்ஐ 30 கிலோவுக்கு அதிகமாக செல்லும் போது அது சிவியர் ஒபிசிட்டி எனும் நிலையாகி விடுகிறது. பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்கும் நபர்கள் தான் நார்மலான உடல் எடைக்காரர்கள். 40ஐ தாண்டும் போது நோயாளி ஆகிறார்கள்.
ஒருவரின் உயரத்திற்கேற்ற எடையை கணித்து கொள்ள சிம்பிளான வழி இருக்கிறது. ஒருவர் 150 செமீ உயரம் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். 150 என்பதில் 100ஐ கழித்து விட்டால் வரும் எண் 50. இதுதான் அவரது உயரத்திற்கேற்ற நார்மல் எடை. அந்த நபர் 50 கிலோ எடை இருக்கலாம். இது போல 160 செமீ உயரம் உள்ள ஒருவர், நார்மலாக 60 கிலோ வரை இருக்கலாம். இதற்கு அதிகப்படியாக எடை இருப்பவர்கள் உஷாராகி கொள்வது நல்லது.
நோய்களின் ‘அம்மா’ பல நோய்களுக்கு ஒபிசிட்டி தான் அம்மா. உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம்.. என நோய்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேன்சர் பாதிப்பு 30 சதவீதம் அதிகம். வயதுக்கு மீறிய எடையுடன் குண்டாக இருக்கும் குழந்தைகள் சீக்கிரமே நோயாளி ஆகி விடுகிறார்கள். இன்னும் விறுவிறுவென நடக்க முடியாது, அவசரத்துக்கு ஓட முடியாது, தொப்பைகாரர்களுக்கு குனிந்து எந்த வேலையும் செய்ய முடியாது என வேறு டைப்பான பிரச்னைகளும் இருக்கின்றன.
சாப்பிடாதீங்க..
உடல் பருமன் பிரச்னையிலிருந்து தப்பிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
எண்ணெயில் வறுத்த கறி, உணவுகள், ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ், யோகர்ட், முட்டை, பீட்ஸா, பர்கர், சமோசா, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகள். அரிசியில், கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். எனவே அரிசி, அரிசியால் செய்யப்படும் பதார்த்தங்களை குறைப்பது நல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.
சாப்பிடுங்க..
நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
யாருக்கு சர்ஜரி அவசியம்?
உடல்பருமன் பிரச்னைக்கு இரைப்பையின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சையும் ஒரு வழியாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் வரும் பிரச்னைகளான நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு, மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது ஒரு எபெக்டிவ்வான வழி.
இந்த அறுவை சிகிச்சை இரு பிரிவாக உள்ளது. ஒன்று ஊட்டச் சத்துக்கள் உடல் எடுத்து கொள்வதை குறைப்பது, மற்றொன்று உணவை எடுத்து கொள்வதை குறைப்பது. சில நேரங்களில் இரண்டும் முறைகளும் பயன்படுத்தப்படும். லேப்ராஸ்கோப்பிக் முறையில் செய்யப்படுவதால் வலியோ, தழும்புகளோ இருக்காது. அதோடு அறுவை சிகிச்சைக்கு பிறகு நீரிழிவு நோயும் கட்டுக்குள் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரைப்பையின்அளவை குறைப்பதால் உணவு எடுக்கப்படும் அளவு இயற்கையாகவே குறைகிறது. உடல் பருமனும் வெகுவாக குறைந்து விடுகிறது. ஆபரேஷனுக்கு பிறகு ரெகுலர் செக்அப் அவசியமானதாக இருக்கிறது. உடல் பருமன் பிரச்னையில் வருமுன் காப்பதே சிறந்தது.
கலோரி
நாம் எடுத்து கொள்ளும் கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயது, எடை, பாலினம், வேலை போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு தேவையான கலோரிகள் அமைகிறது. சிறுவர்கள்: சராசரியாக 1500-1800 கலோரிகள்
பெண்கள்: மிதமான வேலை பார்ப்பவர்களுக்கு 1100-1300, ஆக்டிவான வேலை பார்க்கும் பெண்களுக்கு 1400 -1600 கலோரிகள்.
ஆண்கள்: மிதமான வேலை பார்க்கும் ஆண்களுக்கு 1600-1800, கடின வேலை பார்ப்பவர்களுக்கு 1800-2000.
ஒவ்வொருவரும் கலோரி அட்டையை வைத்துக் கொண்டு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட முடியாது. ஆனால் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
கலோரி அட்டவணை
உணவு கலோரி
சப்பாத்தி(30 கிராம்) 100
மசாலாதோசை 200
சமோசா 150
பூரி(1) 350
உப்புமா(சின்ன கிண்ணம்) 100
சாதம் (ஒரு கப்) 280
சிக்கன்(70 கிராம்) 100
முட்டை(1) 80
குலோப் ஜாமூன்(2) 250
ரசகுல்லா(2) 150
டீ, காபி (1 கப்) 70-80
டாக்டர். ரவீந்திரன் குமரன், அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை.
பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்!
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தனியாக செல்லும் போதோ, அலுவலகத்திலோ அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் காரணமாக அச்சம் இருக்குமானால் அதை பதிவு செய்யும் கருவி ஒன்றை தெற்கு தில்லியை சேர்ந்த யாஷ்பாட்டியா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்துள்ள இக்கருவி புளூடூத் தொழில் நுட்பத்தைக்க்கொண்டது. ஏழு கிராம் எடையுள்ள சதுர வடிவில் இருக்கும் இச்சாதனம் ரீச்சார்ஜபள் பேட்டரிகளை கொண்டது என தெரிவித்துள்ள்ளார். மேலும் இக்கருவியானது ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாச விகிதம் போன்றவற்றையும் கண்டறிய உதவுகிறது.
அதோடு இக்கருவியை பொருத்திக் கொண்ட பெண்களுக்கு வாழ்க்கையில் அச்சுறுத்தும் தருணங்கள் வரும் போது பயம் மற்றும் நடுக்கத்தை நீக்கி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் உடலியல் மாற்றங்களை கொடுக்கிறத. என்று பாட்டியா தெரிவித்தார்.
பொது இடங்களில் திடீரென ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளும் பெண்கள் ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் இது உதவும். அதாவது பெண்கள் இந்த கருவியை பொருத்தியிருந்தால், அவர்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது இக்கருவியானது அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் செல் போனுக்கு மின் அணு மூலம் குறுந்தகவல் அனுப்பும் ஆற்றல் கொண்டது என பாட்டியா தெரிவித்துள்ளார்.
Fear-sensing device to aid distressed women
*********************************************
Rise in crimes against women made 37-year-old south Delhi-based Yash Bhatia realise that protests alone don’t work. Putting himself in the shoes of the victims, the National Institute of Fashion Technology graduate has devised a sensor that records bodily changes that occur when a person is in a crisis.
உங்கள் தெருவை 360 டிகிரி கோணத்தில் ஆன் லைனில் பார்க்கலாமா?
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களை ‘லைவ்’வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள தெருக்களையும் துல்லியமாக ‘லைவ்’ வாக காட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கூகுள் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், ஜெனிசிஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை இப்போது செய்துள்ளது. அதிலும் உங்கள் தெருவை அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 டிகிரி கோணத்தில் முபபரிமாணத்தில் பார்த்து, எந்த முகவரிக்கு போக வேண்டுமோ அதை அறிந்து கொள்ளலாம். அவ்வசதியை ‘வோனோபா’ (www.wonobo.com)-க்குள் நுழைய வேண்டுமாக்கும்..
இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ள ஜெனிசிஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய நகரங்களில் , பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட இடங்களில் ‘மேப்’பிங் செய்யும் பணிகளில் இறங்கி உள்ளது.தற்போது பெங்களூர், மும்பை, சென்னை உட்பட 54 நகரங்களில் இந்த நிறுவனம் ஒவ்வொரு தெருவையும் துல்லியமாக ஆன்லைனில் காட்டுவதற்கான ‘மேப்’பிங் ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் 42 நகரங்களில் உள்ள தெருக்களை ஆன்லைனில் துல்லியமாக பார்க்கும் வசதியை செய்ய உள்ளது.
அதிலும் ஒவ்வொரு தெருக்களை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பதுடன், அங்குள்ள ஓட்டல், தபால் அலுவலகம், வங்கி என்று மக்களுக்கு தேவையான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தேடி பார்க்கலாம். குறிப்பிட்ட தெருவை ஆன்லைனில் கண்டுபிடித்து அதை பெரிதாக்கி, அங்குள்ள குறிப்பிட்ட ஓட்டல், அலுவலகம் போன்றவற்றை துல்லியமாக பார்க்கலாம். தகவல்களுக்கு www.wonobo.com வெப்சைட்டுக்கு போய் பார்க்கலாம்.
INDIA’S FIRST AND ONLY 360-DEGREE VIEW PLATFORM: WONOBO.COM
*******************************************
Country’s leading geospatial solutions company Genesys International Corporation (NSE GENESYS) on Monday announced the launch of WoNoBo.com. Users will be able to search, explore and share ‘points of interest’ across the length and breadth of the country. At launch, the service will be available for 12 major Indian cities and will soon be expanded to 54 cities.
Subscribe to:
Posts (Atom)