Thursday, August 28, 2014

2016-ல் முதல்வர் வேட்பாளர் ஆவாரா ரஜினி..?: தமிழக அரசியல் களத்தை கைப்பற்ற பாஜக மெகா பிளான்


வரும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாள ராக முன்னிறுத்தி தமிழக அரசியல் களத்தை கைப்பற்ற பாஜக திட்டங் களை தீட்டி வருகிறது. இதில் விஜயகாந்தையும் அரவ ணைத்து செல்ல தமிழக பாஜக தலைவர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியிடம் மோடி நேரடியாக பேசிவிட்டார். பாஜக தலைவராக அமித் ஷா பதவி ஏற்றவுடன் அவரும் ரஜினி யுடன் பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக குஜராத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர், ரஜினி அரசியலில் இறங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் பல மாநிலங்க ளில் பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைத்தபோதும், தமிழகத்தில் அக்கட்சியால் ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த மிகவும் வலிமையான கூட்டணி தேவை என்று மோடி கருதுகிறார். அதேநேரத்தில், திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்ய பாஜகவுக்கு விருப்பம் இல்லை. ‘திராவிடக் கட்சிகளின் தற்போதைய சிக்கலான நிலையால் சில ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்படும். அதை பாஜக சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தமிழக பிரமுகர்கள் சிலர் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

எனவே, பாஜக தனது வளர்ச்சிக் காக தமிழகத்தில் விஜயகாந்த் மற்றும் ரஜினியை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. இதனாலேயே கடந்த சில மாதங்க ளாக விஜயகாந்த்தை உயர்த்திப் பிடித்து வருகிறது பாஜக.

விஜயகாந்த்தும் பிரதமருக்கு கடிதங்கள் எழுதுகிறார். ஊழலை ஒழிப்பதில் பிரதமரை பாராட்டி அறிக்கை விடுகிறார். மோடியும் விஜயகாந்த்துக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித் ததுடன், தமிழகத்தின் அனைத்து பாஜக தலைவர்களையும் நேரில் சென்று வாழ்த்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்தால் பாஜக கூட்டணியை தமிழகத்தில் வெற்றி பெற செய்துவிடலாம் என்று மோடி தரப்பு கருதுகிறது. அதற்காகவே குஜராத் அதிகாரிகள், தமிழகத் தின் மூத்த அரசியல் வல்லுநர்கள், தமிழகத்தின் சில பாஜக நிர்வாகி கள் ஆகியோரை கொண்ட தனிக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பாஜக சுமார் 156 தொகுதிகள் வரை போட்டியிடவும், அதில் 100 இடங்களை ரஜினி தொடங்கும் தனிக் கட்சிக்கு அல்லது அவர் கைகாட்டும் வேட்பா ளருக்கு அளிக்கவும் திட்டமிட் டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும் பாஜக விரும்புகிறது. இதுகுறித்து ரஜினியிடம் பாஜக தூதுவர்கள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், ரஜினி 2015-ல் பேசிக்கொள்ளலாம் என்று கூறி யிருக்கிறார். இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சக ரான ரவீந்திரன் துரைசாமி கூறும் போது, ‘‘ரஜினிக்கு பாஜக தூது விட்டது உண்மையே. அதனால் தான், தமிழக தலைவரான தமிழிசை சவுந்திரராஜன், பகிரங்கமாக ரஜினியை பாஜகவில் இணைய கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள். அந்த தலைவர்கள் மறைந்தாலும் அவர்களின் ஓட்டு வங்கி, வழிவழியாக அந்தக் கட்சிக்கு கிடைத்து வருகிறது.

ரஜினி களம் இறங்கினால் பெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் சமூக, அரசியல் சூழல் தற்போது கனிந்துள்ளது. மேலும் சாதி, மத ரீதியாக அல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரக் கூடியவராக அவர் இருப்பார். 2015-ம் ஆண்டு மத்தியில் அவர் அரசியலில் பிரவேசிக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

காப்பகம்