2050ஆம் ஆண்டில் இந்திய அரசை கைப்பற்றுவது என்பதுதான் மாவோயிஸ்டுகளின் நீண்டகால திட்டம் என்று முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பெருந்தாக்குதல் நாட்டை அதிர வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையை சத்தீஸ்கர் மாநிலத்தில் இறக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் இலக்கு வைத்து தொடங்கியிருக்கும் வேட்டை எங்கே போய் முடிகிறதோ தெரியவில்லை.
இது தொடர்பாக ஆங்கில நாளேட்டுக்கு முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை அளித்துள்ள பேட்டியில், இந்திய மத்திய அரசை உடனடியாக தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்டுகள் திட்டம் அல்ல.. அது அவர்களது கனவு. ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்பது அவர்களது நீண்டகால செயல்திட்டம். 2050ஆம் ஆண்டு இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம். மாவோயிஸ்டுகளின் உள்வட்ட ஆவணங்களில் இத்திட்டம் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிச்சயமாக முறியடிக்கும்.
தூக்கி எறியப்பட்ட மாவோயிஸ தத்துவம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறைவாக இருக்கிறது. மக்கள் நலக் கொள்கைகள் என்ற அடிப்படையில் அப்பாவி மக்களை தம்வசப்படுத்துகின்றனர் மாவோயிஸ்டுகள். ஆனால் அது போலியானது. சீனா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளிலேயே மாவோயிஸ தத்துவம் தூக்கி எறியப்பட்டுவிட்டது.
ஆண்டுக்கு ரூ1200 கோடி வசூல் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ரூ1200 கோடியை சுரங்க நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். தொலைதூர இடங்களுக்கான போக்குவரத்துகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்கினால் அவர்கள் நிச்சயம் பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவர்.
45 ஆயிரம் போலீசார் தான்.. டெல்லியைவிட 5 மடங்கு பெரிய பிரதேசம் பஸ்தார் பிரதேசம் மட்டும். டெல்லியிலோ 95ஆயிரம் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கே 45 ஆயிரம் போலீசார்தான்..
இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.
இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.
பொதுவாக குழந்தை பிறந்து விட்டால் அதை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. கைக் குழந்தையாய் இருந்தால் கண் கொத்தி பாம்பு போல எந்நேரமும் அதன் மீது ஒரு பார்வை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலில் இருந்து விழும், தொட்டிலில் இருந்து விழும். தவழும் குழந்தையாக இருந்தால் வீடு முழுக்க ரவுண்ட் அடித்து அலம்பல் பண்ணும். கண்டதையும் எடுத்து வாயில் போட்டு கொள்ளும். தத்தி நடக்கும் குழந்தையாய் இருந்தால் டேபிள், சேர் மீது ஏறி பொருட்களை கீழே தள்ளி விடும். அம்மாக்கள் சமைக்கும் போது வந்து புடவையை இழுக்கும். கொதிக்கும் பாத்திரத்தை தள்ளும். இதில் விபரீதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த பிரச்னைகளை சமாளிக்கதான் நம்ம ஊரில் பல விஷயங்களை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப அம்மாக்கள் கையாண்டு வருகின்றனர். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் போடுகின்றனர். அல்லது புடவையில் தூளி கட்டி, குழந்தையை படுக்க வைக்கின்றனர். தவழும் குழந்தையாக இருந்தால் இடுப்பில் கயிறு கட்டி வீட்டில் எங்காவது கட்டி விடுகின்றனர். அல்லது அம்மாக்களே இடுப்பில் குழந்தையை வைத்து கொண்டு ஒரு கையாலேயே வேலை செய்கின்றனர்.
இந்த பிரச்னைகளை சமாளிக்க அமெரிக்காவில் பேபி கீப்பர் என்ற பெயரில் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த 2 அம்மாக்கள்தான் இந்த நவீன பையை கண்டுபிடித்துள்ளனர். பேபி கீப்பர் பேசிக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ள இந்த பையை, மொபைல் தொட்டில் என்று கூறலாம். இந்த பையில் குழந்தையை உட்கார வைத்து அதில் உள்ள கொக்கிகளை சுவரில் மாட்டி விட்டால் போதும். கண்ணெதிரிலேயே குழந்தையை பார்த்தபடியே, கொஞ்சி கொண்டே அனைத்து வேலைகளை யும் முடித்து விடலாம். குழந்தை என்ன செய்கிறதோ என்ற பயம் இல்லை.
சியாட்டில் நகரில் வசிக்கும் 4 குழந்தைகளுக்கு தாயான டோன்ஜா கிங் மற்றும் 6 குழந்தைகளுக்கு தாயான எலிசா ஜான்சன் ஆகியோர்தான் இதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அம்மாக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை பற்றிய டென்ஷன் இல்லாமல் வேலைகளை முடித்து கொள்ளலாம். 35 பவுண்டு எடை வரை உள்ள குழந்தைகளை இந்த பை தாங்கும். எங்கு சென்றாலும் குழந்தையை அதில் உட்கார வைத்து கண்ணெதிரிலேயே மாட்டி வைக்கலாம். எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்லலாம் என்று டோன்ஜா வும் எலிசாவும் கூறுகின்றனர்.