Sunday, August 24, 2014

தமிழ் சினிமாவுக்கு 'அஞ்சான்' கற்று தரும் பாடம் என்ன தெரியுமா..?

'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்!

இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.

சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' முதலான படங்கள் வர்த்தக வெற்றியை எட்டாதது இங்கே கேள்வியை எழுப்புகிறது.

சரி, ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் ரசிகர்களால் பதியப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் ஒரு படத்தின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதுபற்றி, தமிழ் சினிமாவின் வர்த்தக விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் கோடம்பாக்க பிரமுகர் ஒருவரிடம் பேசினேன்.

"சிறிய பட்ஜெட் படங்களுக்கு எப்படியோ... ஸ்டார் வேல்யூ உள்ள பிரம்மாண்ட படங்களுக்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். படம் நன்றாக இல்லை என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் ரசிகர்களின் செயல்தான் தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை சீரழிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

காரணம், ஒரு பிரபல நடிகரின் படம் சுமாராக இருந்தால்கூட, தனக்குப் பிடித்த நடிகரின் போட்டியாளர் என்று அவரைக் கருதி, அந்த நடிகரின் படத்தை நையாண்டி, நக்கல், பகடி என்ற பெயரில் சீரழிப்பு வேலைகள் நடக்கின்றன. 'படம் செம மொக்கை... யாரும் போகாதீங்க' என்று முன்னெச்சரிக்கை வேறு. தனக்கு விருப்பமற்ற ஒரு நடிகரின் படம் வெற்றியடைவதை ஒரு ரசிகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை எந்த வகையான உளவியலில் சேர்ப்பது என்பது தெரியவில்லை.

அஞ்சான் படத்துக்கு எதிராக எந்த ரசிகர் மோசமான பதிவிட்டு இருந்தாலும், அது சூர்யாவுக்குப் போட்டி நடிகராகக் கருதப்படுபவர்களுடைய ரசிகர்களின் வேலை என்று நினைத்து, அவர்களது படங்கள் வரும்போது சூர்யாவின் தீவிர ரசிகர்கள் களத்தில் இறங்குவதும் நடக்கலாம். இப்படியே மாறி மாறி செய்துகொண்டிருப்பதால், நிச்சயம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு பாதக நிலை நீடிப்பது உறுதி" என்றார் அந்த முக்கியப் புள்ளி.

ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வெகுவாக பிரபலம் அடைவதற்கு முன்பு, ஆன்லைனில் ப்ளாக்ஸ் எனப்படும் வலைப்பதிவுகளில் வெளிவரும் சினிமா விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த விமர்சனங்களுக்குக் கிடைத்த வரவேற்பை உணர்ந்த சினிமா துறையினர், வலைப்பதிவாளர்களுக்கே தனியாக ப்ரிவியூ ஷோ நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் உணர்ந்த இளம் சினிமா படைப்பாளிகள் சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினர். அதன் மூலம், தங்கள் படைப்புகளுக்கு வலுவான விளம்பரம் கிடைக்கவும் வழிவகுத்தனர். இதற்கு, 'கற்றது தமிழ்' ராம் தனது 'தங்கமீன்கள்' படத்தை ஆன்லைனில் பிரபலப்படுத்திய அணுகுமுறையைக் குறிப்பிடலாம்.

ஆனால், இணையவாசிகளின் பலத்தை உணர்ந்து, தங்கள் படங்களின் டைட்டில் கார்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அவர்களை உச்சிக் குளிர வைத்ததில் முன்னோடி என்னவோ மலையாள சினிமா துறைதான்.

சரி, நம் விஷயத்துக்கு வருவோம். அஞ்சானுக்கு கிடைத்த ஆன்லைன் வரவேற்பால், முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது படங்களின் புரோமோஷன்கள் குறித்தும், சமூக வலைதளங்களை அணுகுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிந்தேன்.

இதனிடையே, "ரசிகர்களிடம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவதும் தவறான அணுகுமுறை என்பது அஞ்சான் விஷயத்தில் உறுதியாகிவிட்டது. 'பாபா'வுக்கு அது நேர்ந்தபோது ஃபேஸ்புக் இல்லாதது யாரோ செய்த நற்ச்செயல். அஞ்சானுக்காக 20 லட்சம் யூடியூப் ஹிட்ஸ் கிடைத்தவுடன் சக்சஸ் மீட் வைத்தவர்கள், படம் சரியில்லை என்று கலாய்த்தால் ஏற்றுதானே ஆகவேண்டும்?" என்று என்னிடமே கேட்டார் ஒரு சினிமா ஆர்வலர்.

அதேவேளையில், சமூக வலைதளத்தை மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கின்றனர், இளம் இயக்குநர்கள்.

ஆன்லைனில் நீண்ட காலமாகவே இயங்கிவரும் இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டபோது, "முன்பெல்லாம் பத்திரிகை விமர்சனம்தான் மக்களின் விமர்சனம் என்ற காலம் இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறார்கள், அவர்களது விமர்சனத்தை உடனே பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஒரு சின்ன படம் கூட நன்றாக இருக்கிறது என தொடர்ச்சியாக விமர்சனங்கள் வரும்போது அந்தப் படத்தின் வசூல் கூடுகிறது. நமக்கு சாதகமாக இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, படம் சரிவர ஓடவில்லை என்றால், ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இயங்குபவர்களை குறைசொல்வது சரியல்ல. கொலவெறி என்ற பாடல் ஹிட்டானதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் தானே காரணம்" என்றார்.

இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் பேசியபோது, "நான் சோஷியல் மீடியா ரியாக்‌ஷன்களை பாசிட்டிவ்வாதான் பார்க்கிறேன். பெரிய அளவில் விளம்பரங்கள் பண்ண முடியாமல், மக்களின் விமர்சனங்கள் மீதான நம்பிக்கை வைத்தே சில படங்கள் வெளியாகின்றன. ஏன்... 'பீட்சா', 'ஜிகர்தண்டா' படத்துக்குக் கூட ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்கள் மூலமாகதான் காட்சிகள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. அவ்வாறு விமர்சனங்கள் வெளியிடுவதில் எனக்கு தெரிந்து தவறு எதுவும் இல்லை. கலெக்‌ஷன் கூடும்போது கொண்டாடாமல், குறையும்போது மட்டும் திட்டினால் எப்படி?" என்றார் அவர்.

எனினும், "சிட்டி ஏரியால தான்பா இந்த பாதிப்பெல்லாம். அவுட்டர்ல எந்த பாதிப்பும் கிடையாது. ஃபேஸ்புக் மாஸ் ஹீரோ படங்களை என்னதான் கும்மாங்குத்து குத்தினாலும் சிட்டியை தவிர்த்த ஏரியாக்களில் பெரிய பாதிப்பு இல்லை" என்றும் தயாரிப்பு பிரிவு தரப்பைச் சேர்ந்த ஒருவர் தனது அப்சர்வேஷனைச் சொன்னதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

குளிர்காலத்தில் பக்கவாதம், மாரடைப்புக்கு வாய்ப்பு அதிகம் - எச்சரிக்கை...!

சாதாரண நேரங்களைக் காட்டிலும் குளிர் காலங்களில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்துடன் கூடிய தட்பவெப்ப நிலையே அதிக காலங்கள் நீடிக்கிறது.

ஆனால், குளிர்காலம் வரும்போது  இந்தியர்களின் உடல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறும்போது நோய்கள் பாதிக்கும் அபாயங்கள் இருந்து வருகின்றன. ஆனால், இதற்கான  காரணிகள் குறித்து ஏராளமானவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக குளிர்காலங்களில் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் குளுமை காரணமாக சுருங்கிவிடும். இதனால் இதயம் அதிக செயல்பட  வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்படும்.

குளிர்காலத்தில் காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு, குறைந்து காணப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள  சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள் மற்றும் பைபர்நோஜன் மூலக்கூறு ஆகியவை அதிகரிக்கும். இதனால் மற்ற காலங்களைக் காட்டிலும்  குளிர்காலத்தில் மனித உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது.

இதனால் வழக்கத்திற்கு மாறாக ரத்தம் உறையத்தொடங்கி, மூளை மற்றும்  இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

ரத்தக்குழாயும் சுருங்கி, ரத்த ஓட்டமும் குறைவதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்தியாவில்  மலைப்பிரதேசங் களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற பிரதேசங்களில் வசிப்பவர்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் உள்ளது.

இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது என்ற சந்தேகம் எழலாம். குளிர்காலத்தில் மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுதான்  ரத்த ஓட்டம் குறைந்ததற்கான முதல் அறிகுறி.

குளிர்காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால், இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தக்கொதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்பு வயதானவர்களுக்கு  அதிகம் ஏற்படும்.

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனித உடலில் உள்ள வெப்பம் 80  பாரன்ஹீட்டுக்கு குறையும்போது விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடல் நடுக்கம் தொடங்கி, மயக்கநிலை, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை  ஏற்படும்.

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இதோ உங்களுக்காக..!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 26–ந் தேதி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (செப்டம்பர்)26–ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ விழா:- திருமலை–திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது. கூட்டத்தில் சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின், போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாஸ் (சித்தூர்), கோபிநாத்ஜாட்டி (திருப்பதி), தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் பேசியதாவது:–

அடுத்த மாதம் (செப்டம்பர்) 26–ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று ஆந்திர அரசு சார்பில் முதல்–மந்திரி என்.சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

30–ந்தேதி கருட சேவை நடக்கிறது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்யவும், கேலரிகளில் அமர்ந்து வாகன ஊர்வலத்தின் போது தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பக்தர்கள் அதிகம் கூடுவதால் கருப்பு பூனைப்படை அதிகாரிகள் வந்து திருமலையில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்ய உள்ளனர். அன்று திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையில்லா மின்சாரம்:- அக்டோபர் மாதம் 1–ந்தேதி தங்க தேரோட்டம், 3–ந்தேதி மரத்தேரோட்டம், 4–ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகிய மிக முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் அரசு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தடையின்றி மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமலையில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

தனியார் வாகனங்களில் தேவஸ்தானம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமலை, திருப்பதி, ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வழக்கம்போல் வாகன வீதி உலாவின்போது முன்னால் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் தள்ளிப்போகும் கார்த்தியின் மெட்ராஸ் ரிலீஸ்..!

‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மெட்ராஸ்.

கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகியுள்ள நிலையில், படத்தை கடந்த மாதம் 15-ந் திகதியே வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

 ஆனால், சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் திகதியை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.


இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டை அக்டோபர் மாதம் 2-ந் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

லிங்காவில் ரஜினியின் புதிய பஞ்ச் டயலாக்..!

ரஜினி படம் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், சிவாஜி மற்றும் இயந்திரன் படங்களில் அவ்வளவாக பஞ்ச் இல்லையென்றாலும் அவற்றின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக திருப்திப்படுத்தியது.


நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்திருக்கும் ரவிக்குமார் கதையை ஒட்டிய பரபரப்பான பல வசங்களை எழுதியுள்ளதாக தெரியவருகிறது. லிங்கா படத்தில் ரஜினியின் பாத்திரம், ராஜ வம்சத்தில் பிறந்த ஒருவன் மக்களுக்காக பாடுபட்டு ஒரு அணையை கட்ட திட்டமிடுவதாகவும் அதை செய்யும் பொருட்டு வரும் காட்சியில் பின்வரும் பஞ்ச் வசனம் வருவாதகவும் எதிர்ப்பர்க்கபடுகிறது.

"எனக்கு ஹிந்து வேண்டாம், முஸ்லிம் வேண்டாம், கிறிஸ்டியன் வேண்டாம், செட்டியார், நாடார், முதலியார் யாரும் வேண்டாம், இந்தியனா இருக்கறவன் மட்டும் என் கூட வாங்க" என்று வரும் அந்த குறிப்பிட்ட காட்சி திரியாரங்குகளில் பட்டையை கிளப்பும் என்கிறார்கள்.

துணிக‌ளை அல‌சும் போதும் காய‌ப்போடும் போதும் - இதைப்படிச்சிட்டு போங்க...!

லைனிங் வைத்து தைத்து உள்ள‌ துணிகளை துவைத்து காயப்போடும் போது உள்பக்கமாக அதாவது லைனிங் பக்கமாக காயபோடவேண்டும்.மேல் பக்கம் காய போட்டால் உள்ளே உள்ள லைனிங் துணி சுருங்கி நிற்கும். அயர்ன் செய்யும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.

புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.

சில‌ பேர் நிறைய‌ சோப் போட்டு பிரெஷ் போடுவார்க‌ள் ஆனால் ச‌ரியா அல‌சமாட்டார்க‌ள். சோப்பை ந‌ன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிற‌கு வெண்ணீரில் அல‌சினால் கூட‌ சீக்கிற‌ம் சோப் நுரை விடும். முன்று த‌ண்ணீரில் ந‌ல்ல‌ அல‌ச‌னும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட‌ அல‌ர்ஜி ம‌ற்றும் அரிப்பு வ‌ரும்.

பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.

டூர் செல்லும் போது ஹேங்க‌ரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிக‌ளை காய‌ப்போடுவ‌து சுல‌ப‌ம்.

வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உட‌ற்ப‌யிற்சியும் ஆச்சு.இதே போல் மிதிய‌டிக‌ளையும் அல‌ச‌லாம்.

டெய்ல‌ரிட‌ம் லைனிங் துணி வைத்து காட்ட‌ன் டிரெஸ்க‌ளை தைக்கும் போது அதை அல‌சி அய‌ர்ன் செய்து கொடுக்க‌வும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்த‌தும், க‌ருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உய‌ர்ந்த‌ துணியாக‌ இருந்தால் இன்னும் உங்க‌ளுக்கு ம‌ன‌சே ஆறாது.

காட்ட‌ன் புட‌வை க‌ட்டுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பால்ஸ் வைத்து தைத்து க‌ட்டினால் புட‌வை தூக்கி கொள்ளாம‌ல் இருக்கும்.

நிறைய‌ க‌ர்சீப் துவைத்து காய‌போடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த‌ தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைக‌ளை சேர்த்து முடிச்சி போட்டு காய‌ போட‌லாம்.
   பிரதி எடுக்க

தாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம்..!

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட:- சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர:- சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்:- கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு:- மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

ஃபிளாஸ்க்கில் எதை ஊற்றினாலும் ஆறிவிடுகிறதா..?

உள்பக்கம் கண்ணாடி பொருத்தப்பட்டது, ஸ்டீல் பொருத்தப்பட்டது என இரு ஃபிளாஸ்க் வகைகள் உள்ளன.

பெரிய சைஸ் ஃபிளாஸ்க்கில் அதன்  கொள்ளளவை விடக் குறைவாக ஊற்றி வைத்தால், உள்ளிருக்கும் திரவம் விரைவில் குளிர்ச்சியடைந்து விடும்.

அதனால், உங்கள் பயன்பாட்டுக்கு  ஏற்ற வகையில் சரியான அளவு ஃபிளாஸ்க் தேர்ந்தெடுப்பது நல்லது.

கண்ணாடி  ஃபிளாஸ்கை குளிர் நீரில் கழுவிவிட்டு, உடனே கொதிக்கும் நீரை  ஊற்றினால் வெடித்துவிடும்.

அதனால், எப்போதுமே ஃபிளாஸ்க்கை வெந்நீரில் கழுவுவது பாதுகாப் பானது.

 நல்ல ஃபிளாஸ்க்கில் வெந்நீர், டீ, காபி போன்றவை 8 மணி நேரம் வரை சூடாக இருக்கும்.

சூப் போன்ற மசாலா கலந்த பொருட்கள் குறைவான  நேரம்தான் சூடாக இருக்கும்.

மசாலா, டீ, காபி என மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நல்லதல்ல.

 சிலர், ஃபிளாஸ்க்கின் மூடியில் உள்ள வாஸரை  கழற்றி சுத்தம் செய்வார்கள்...

சரியாகப் பொருத்த மாட்டார்கள்.

அதனாலும் வெப்பம் வெளியேறிவிடும். ஃபிளாஸ்க்கின் உள்பக்கம் துர்நாற்றம் வராமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். 

முதுமையிலும் இளமை வேண்டுமா..? அப்போ இதைப்படிங்க…!

அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்.

சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம் கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கேல் கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம். பசலைக் கீரை ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய் குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.

பால் பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.

 தக்காளி தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும். 

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறைகள்..!

ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை. ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது.

ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி! மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும். 

சினிமா, விளம்பர தூதுவர் மூலம் அதிக வருமானம் சம்பாதிக்கும் அனுஷ்கா..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் அனுஷ்கா முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு சினிமாவில் நடிப்பது தவிர விளம்பர படங்கள் மூலமும் பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக பணியாற்றுவதன் மூலமும் பலகோடி வருமானம் குவிகிறது.


அனுஷ்காவைவிட நயன்தாரா அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் விளம்பர படங்கள் மூலம் வருவாய் ஈட்டவில்லை. திரிஷா, ஹன்சிகா, சமந்தா போன்றோர் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் தலைகாட்டியும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அனுஷ்காவை போல் பெரிய வணிக நிறுவனங்களில் இவர்கள்கள் விளம்பர தூதுவராக இல்லை.

சமீபத்தில் மொபைல் போன் கம்பெனியொன்று அனுஷ்காவை தங்கள் நிறுவனத்தில் விளம்பர தூதராக்கி கொண்டது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இதுதவிர இன்னும் சில பெரிய நிறுவனங்களும் தூதுவராக்க அவரை அணுகியுள்ளன.

தமிழ், தெலுங்கில் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கிறார். ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி, பாகுபலி சரித்திர படங்களிலும் நடிக்கிறார். சினிமா மற்றும் விளம்பரங்கள் மூலம் இருவழிகளில் அனுஷ்காவுக்கு பணம் குவிகிறது.

டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா..? - இதைப்படிங்க...

ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.

பூக்களின் வாசம் தரும் இதம்:- மலர்களின் வாசனை தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள்.

நெருக்கமாக அமருங்கள்:- துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

திராட்சையும் ஸ்ட்ராபெரியும்:- காதலை வெளிக்கொணரும் பழங்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

இதமாக வருடுங்கள்:- பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்:- தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.

இந்த வழிமுறைகளை நீங்கள் முயற்சி  செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும்னு நினைக்கிறீங்களோ அது வேண்டியது தானாகவே கிடைக்கும். 

செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் 'ஃப்ரியா இருங்க'...!

இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சனைதான் ..

தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.

தம், தண்ணிக்கு நோ:- புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.

சுய இன்பம் வேண்டாம்:- திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து உங்கள் துணையின் ஆசையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

எளிதான பொசிஷனையே தொடருங்க:- நமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடை நோ:- ஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

சத்தான உணவே உற்சாக உறவு:- நாம் உண்ணும் சத்தான உணவே உற்சாக உறவை நிர்ணயிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால்தான் முன்னோர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்துள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன நீங்கள் உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்கலாம்.,

காப்பகம்