Showing posts with label உடற்பயிற்சி. Show all posts
Showing posts with label உடற்பயிற்சி. Show all posts

Saturday, August 23, 2014

7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...!

நண்பர்களே! உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்கு ஆரோக்கியமான வழியை பின்பற்ற ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு டயட் முறையை உங்களுக்காக கொடுத்துள்ளது.

மேலும் இந்த முறையை படிக்கும் போது நீங்கள் இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளையும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் பொய். ஏனெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு வாரம் பின்பற்றி வந்தால், நிச்சயம் 7 நாட்களுக்கு பின்னர் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதை காண்பீர்கள்.

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை தவறாமல் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். இதனால் உங்களை 'குண்டுமணி' என்று கிண்டல் செய்தவர்கள், ஒரு வாரம் கழித்து கிண்டல் செய்யாத வகையில் மாற்றத்தைக் காணலாம்.

முதல் நாளில் சூப் டயட்டை பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த எந்த சூப்பை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அசைவ சூப் குடிக்கும் போது மட்டன் சூப் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக சூப்பில் உப்பை அதிகம் சேர்க்காமல், முடிந்தால் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இரண்டாம் நாளில் முட்டைக்கோஸை பலவாறு செய்து சாப்பிட வேண்டும். இதனால் முட்டைக்கோஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

கிரேப் ஃபுரூட்டில் கொழுப்புக்களை கரைக்கும் நொதிகள் அதிகம் இருப்பதால், மூன்றாம் நாளில் கிரேப் ஃபுரூட் டயட்டை பின்பற்றுங்கள். இதனை அப்படியே அல்லது ஜூஸ் என்று எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

ஆம், வெறும் பழங்களை சாப்பிட்டாலும் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதற்கு நான்காம் நாளில் விருப்பமான பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.

காய்கறிகளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே ஐந்தாம் நாளில் பசலைக்கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு என்று வெறும் காய்கறிகளை விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக அப்படி சமைத்து சாப்பிடும் போது உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். மேலும் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ தான் சாப்பிட வேண்டும்.

ஆறாம் நாளில் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். எனவே ஆறாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், சுடுநீரை குறைந்தது 6-8 லிட்டராவது குடித்து விட வேண்டும். இதனால் சுடுநீரானது கொழுப்புக்களை கரைத்துவிடும்.

ஏழாம் நாளில் நல்ல விருந்துணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக அப்படி விருப்பமான உணவுகளை உட்கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக வயிறு நிறைந்து வழியும் அளவு சாப்பிட வேண்டாம். மேலும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

மேற்கூறியவாறு ஒரு வாரம் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். ஆனால் எந்த ஒரு செயலை செய்யும் போது, நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், அந்த செயல் வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமட்டுமின்றி பலருக்கு இந்த டயட் ஒர்க் அவுட் ஆகாது, ஏனெனில் இதை மட்டும் எப்படி சாப்பிட்டால் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கக்கூடியவை. எனவே நம்பி மேற்கொள்ளலாம்.

Tuesday, January 21, 2014

அடிக்கடி பசி ஏற்படுவதைத் கட்டுப்படுத்தும் யோகாக்கள்!!!




உணவுகளின் மீது தீவிர நாட்டம் ஏற்படும் போது மனதுக்கு பிடித்த பல வகையான உணவுகளை அளவு பார்க்காமல் உண்ணுவோம். ஆனால் நாம் அளவோடு உண்ணவில்லை என்றால் நம் அன்றாட உணவு பழக்கத்தை பாதித்து பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். துரதிர்ஷ்டவசமாக, சுயக் கட்டுப்பாடும், ஒழுக்கமும் சுலபம் இல்லை. அதுவும் உணவு விஷயங்களில் மிகவும் அவைகளை கடைப்பிடிப்பது கடினம். ஆனால் உணவுகளின் மீது இப்படி பைத்தியமாக இருப்பதை தவிர்க்க ஒரு வழி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; ஆம், அது தான் யோகா!

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

யோகாவால், பசிக்கு அடங்கிவிடும். இந்த தடையால் கிடைக்கும் நன்மைகளை பற்றி யோகாவை சீரான முறையில் செய்பவர்களுக்கு நன்றாக தெரியும். யோகாவை சீரான முறையில் செய்பவர்களுக்கு கட்டுக்கோப்பான உடலமைப்பு, அமைதியான மனது, உடலின் மீது அளவுக்கு அதிகமான திருப்தி மட்டுமல்லாது ஒரு வித சுய ஒழுக்கமும் ஏற்படும். அதனால் பசியை கட்டுப்படுத்த யோகா ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

பசியை அடக்க யோகாவின் எளிய ஆசனங்கள்:

பல விதமான மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் தியானங்களின் கலவையே யோகா. உங்கள் உடலில் உள்ள தேவதையும் சாத்தானும் சீஸ் கேக்கை நீங்கள் உண்ணலாமா வேண்டாமா என்று பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறதா? இருவரின் பேச்சையும் கேட்காதீர்கள். மாறாக அவர்களை விரட்டியடித்து, கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். பின்வரும் எளிய யோகாசனங்களை செய்திடுங்கள்.
 தெரிந்து கொள்ள வேண்டியவை:

 யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தக்கூடிய 10 நோய்கள்!!!
நின்று கொண்டு முன் பக்கமாக குனிதல்:
• சுவற்றில் இருந்து ஒரு அடி தள்ளி, எழுந்து நின்று (நீங்கள் ஏற்கனவே அமர்ந்திருந்தால்) காலை விரித்துக் கொள்ளுங்கள். இரண்டு கால்களுக்குள் உள்ள இடைவெளி, உங்கள் இடை அகலத்துக்கு இருக்க வேண்டும்.

 • உங்கள் பின்புறத்தை அப்படியே சுவற்றின் மீது சாய்த்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக முட்டியை வளையுங்கள். உங்கள் மேல் உடலை முன்பக்கமாக மடக்குங்கள். அதனால் உங்கள் வயிறும் நெஞ்சும் உங்கள் தொடை மீது வளைய வேண்டும்.

 • சிறிது முறை மூச்சு விடுங்கள்; உதாரணத்திற்கு, மூச்சை வெளியே விடும் போது 6 முறை மூச்சுப்பயிற்சியில் ஈடுபடலாம். பின் மெதுவாக நிமிர்ந்து, உங்கள் பின்புறத்தை மெதுவாக சுவற்றின் மீது சாய்க்கவும்.

• கண்களை மூடிக்கொண்டு, சிறது மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடலாற்றலை பொறுத்து இதனை 3-4 முறைகள் செய்திடுங்கள். குழந்தைகளின் ஆசனம் (பாலாசனா):

• தரையில் முட்டி போட்டு இடுப்பை குதிகாலின் மீது வையுங்கள். முட்டி இடுப்பு அகலத்தை விரிவு படுத்துங்கள்.

• அடுத்து, ஆழமாக மூச்சிழுத்து பின் மூச்சை வெளியேற்றுங்கள். பின் மெதுவாக உங்கள் நெஞ்சை முன் பக்கமாக வளையுங்கள். முழுவதுமாக வளைந்த பின்பு வயிற்றையும் நெஞ்சையும் தொடைகளின் மேல் படுமாறு செய்யவும். உங்கள் உடல் ஒத்துழைத்தால், நெற்றியை தரையின் மீத்து படுமாறு வளைந்திடுங்கள்.

 • மேற்கூறிய நிலையை அடைந்த பிறகு, உங்கள் கைகளை தரையில் மீது வைத்திடுங்கள். உங்கள் உள்ளங்கை தரையை பார்த்தவாறு கைகளை முன்பக்கமாக நீட்டிக் கொள்ளலாம் அல்லது உள்ளங்கை கூரையை பார்த்தவாறு உங்களது கைகளை பின்பக்கமாக கட்டிக்கொள்ளலாம்.

 உங்கள் உடல் எந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ அத்தனை மணி நேரத்திற்கு மேற்கூறிய ஆசனங்களை செய்திடுங்கள்.

அதிலும் இந்த ஆசனங்களை 3-4 முறை செய்திடுங்கள். அடுத்த முறை உணவுகளின் மீது தீவிரமான நாட்டம் ஏற்படும் போது, உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உடலில் உள்ள ஆற்றலை கொஞ்சம் எரித்திட வேண்டும்.

மேற்கூறிய இரண்டு ஆசனங்களையும் சீரான முறையில் செய்து சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உணவுகளின் மீது உங்களுக்கு இருக்கும் தீவிரமான ஆர்வம் குறைந்து அளவாக உட்கொண்டு உடலை கட்டமைப்புடன் வைத்திருப்பீர்கள்.

Monday, January 20, 2014

ஜாக்கிங் செல்பவரா நீங்கள்? - எச்சரிக்கை..!!!




உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஜாக்கிங் செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது:-

உடல் எடையை குறைக்க பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) எப்போதும் சிறந்ததாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது.

எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும். அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செலவிடப்பட்டு சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

காப்பகம்