Saturday, August 16, 2014

உங்கள் வீட்டின் கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு..? - இதைப்படிங்க..!

தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் ஃபேன் சுற்றும், லைட் எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாகக் கேட்கிறோம்.

ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும்.

நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம். ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும்.

மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரணமான கார் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்.

பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அனாவசியமாகச் செலவாகிறது.

ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும் ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும் எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் ஏசி இயங்க வழிசெய்ய வேண்டும். வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது.

ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும். வீட்டைக் கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலமும் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.

அடுத்து விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. எனவே தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை ஒளிர விடுதலைத் தவிர்க்க வேண்டும். குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் புறத்தில் இரவுகளில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். வெளிச்சம் தேவைப்படாதபோது அவற்றை அணைத்துவிடுதல் நல்லது.

பிரிட்ஜ்களின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் செலவாகிறது. எனவே ப்ரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் ப்ரிட்ஜை அடிக்கடி மூடித்திறப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவுப் பதார்த்தங்களை 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும், ஃப்ரீஸரை 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும் வைத்துப் பராமரிப்பது நல்லது. ப்ரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம்பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.

மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின் ஆற்றலை சரியான விதத்தில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

விக்ரமின் '' ஐ '' – ஓர் முன்னோட்டம்..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ரிலீசாகுற வரையில் அல்லது அவராக சொல்கிற வரையில் அது தங்கமலை ரகசியம்தான். இடையில் ஏதாவது ஒரு வழியில் கசிந்தால்தான் உண்டு. அப்படி சில விஷயங்கள் இப்போது கசிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஐ பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.


* ஐ ஒரு விளையாட்டை பற்றிய படம் அல்ல. சாதாரண மனுஷன் அமானுஷ்ய சக்தி பெற்றவனாக மாறி என்ன செய்கிறான் என்கிற கதை. அது மாய மந்திரமோ, தெய்வ சக்தியோ அல்ல, விஞ்ஞான ரீதியாக கிடைக்கும் அமானுஷ்ய சக்தி.

* விக்ரம் 40 கிலோ கொண்ட ஒல்லி பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், அந்நியன் ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட்அப்கள் இருக்கிறது.

* மொத்தம் 5 பாடல்கள், அதில் “என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்…” என்கிற பாடலை ஏ.ஆர்.ரகுமானும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பாடல் ஒன்றை அனிருத்தும் பாடி உள்ளனர்.

* கொடைக்கானலில் 300 ஏக்கரில் விதவிதமான ரோஜாக்களை பயிரிட்டு வளர்த்து வெவ்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்கள்.

* விக்ரமிற்கு நியூசிலாந்தை சேர்ந்த வேட்டா நிறுவனம் மேக்-அப் போட்டிருக்கிறது. விக்ரம் மேக்அப் போட்டுக் கொண்டால் அது கலையாமல் இருக்க மைனஸ் டிகிரி குளிர் வேண்டுமாம். இதற்கென்றே ஒரு ஆள் மட்டும் அமர்ந்து கொள்கிற தனி பிரிசரை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மேக்அப் செலவு மட்டும் 5 கோடி.

* சீனா சண்டைக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அந்தரத்தில் நடக்கும் சைக்கிள் சண்டையும், ஒரிசாவில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தின் ஹைலெட்டாக இருக்கும். சீன சண்டைக்கு ஒரு மாதமும், ஒரிஸா சண்டைக்கு 25 நாளும் ஆகியிருக்கிறது.

* இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது படத்தை உருவாக்க. சீனாவில் 2 மாதங்கள் தங்கியிருந்து 40 சதவிகித படத்தை எடுத்திருக்கிறார்கள்.

* படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை 5 நாடுகளில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். சென்னையில் நடக்கும் விழாவில் ஒரு பிரபல ஹாலிவுட் ஹீரோ கலந்து கொள்கிறார். சில்வஸ்டர் ஸ்டோலன், டாம் குரூஸ், அர்னால்ட் இந்த மூவரில் ஒருவராக இருக்கலாம்.

* இந்திய மொழிகள் 6, உலக மொழிகள் 14 என 20 மொழிகளில் ரிலீசாகிறது ஐ.

* படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி.

தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தி பிடிக்கப்போகும் ஐ ஒவ்வொரு தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். “ஆஸ்கர் விருதுகளை நாம் தேடிப்போக வேண்டாம். அதனை நம்மை தேடி வரச் செய்வோம்” என்பார் கமலஹாசன். அந்த நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

காக்கிசட்டையா..? காதலா..? குழப்பத்தில் இளையத் தளபதி..!

ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ.

தனது அடுத்த படத்திற்காக எப்படியோ விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார் அட்லீ.

பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த பிறகே ஓகே சொல்வார் விஜய்.ஆனால் அட்லீயிடம் நாம் சேர்ந்து படம் பண்றோம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.


இதனால் படுவேகமாக மற்ற வேலைகளை கவனித்து வந்த அட்லீ இப்போது வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்.

ஏனென்றால் நடுவில் சிம்புதேவன் சொல்லிய காதல் கதையும் விஜய்யை டிஸ்டிரப் பண்ணியிருக்கு.

விஜய் இதில் யாருக்கு முதல் சாய்ஸ் கொடுப்பார் என்பதுதான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

ரசிகர்களே உங்களின் விருப்பம் காக்கியா..? காதலா..? யோசிங்க

சமத்தான நடிகை சமந்தா இப்படி பண்ணிட்டாரே...!

இதுவரை சமத்து பொண்ணாக இருந்த சமந்தா, அஞ்சான் மூலமாக முதன் முறையாக தமிழில் பிகினி அவதாரம் எடுத்துள்ளார்.

நான் ஈ, நீதான் என் பொன் வசந்தம், போன்ற திரைப்படங்களில் மிகவும் கண்ணியமான ஆடை அணிந்து தமிழ் கூறும் நல்லுலக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமந்தா.

ராமய்யா ஒஸ்தாவய்யா தெலுங்கு திரைப்படத்தில் பிகினியில் நடித்திருந்தாலும், தமிழர்கள் பலருக்கும் இதை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தையும், வாட்டத்தையும் போக்க, நான் எதற்கும் அஞ்சமாட்டேன் என்று அஞ்சான் தமிழ் படத்தில் பிகினி உடைக்கு மாறியுள்ளார் சமந்தா.

படம் நெடுகிலும் குட்டை ஆடை கட்டி வந்தாலும், பாடல் காட்சி ஒன்றில் நான்கைந்து செகண்டுகளில் பிகினியில் தோன்றி மறையும் சமந்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் ரசிக சிகாமணிகள். ஹோம்லி பொண்ணு இப்படி ஆயிடுச்சே என்று பச்சாதாபபட்டவர்களும் உண்டு. சிலருக்கோ இந்த பொண்ணு உடம்புக்கு இதெல்லாம் ஓவரா இல்லை என்ற நினைப்பும் வந்து சென்றது.

எது எப்படியோ, தெலுங்கருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நான் தாராளமானவர்தான் என்று காண்பித்துள்ளார் சமந்தா. அந்த வகையில் தமிழகத்துக்கு மற்றொரு பிகினி நாயகி கிடைத்துவிட்டார். இந்நிலையில் இளைய தளபதி விஜய்யுடன், சமந்தா நடிக்கும், கத்தியிலும் இதுபோன்ற காட்சி இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது இயற்கைதான்.

பிள்ளைகளை டிவி பார்க்க வைத்து விட்டு கள்ளக்காதல் ஜோடி அறையில் உல்லாசம்

குலசேகரம்: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே செறுகோணத்தை சேர்ந்தவர் மலையன் (42). நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் காவியா (34 இருவரது பெயரும் மாற்றம்). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு மலையன், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது திருவட்டார் அருகே கல்லுபாலத்தை சேர்ந்த கீதா (34, பெயர் மாற்றம்) உடன் பழக்கம் ஏற்பட்டது. கீதாவுக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். கணவர் பிரிந்து சென்று விட்டார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அடிக்கடி கள்ளக்காதலி கீதாவுடன், மலையன் ஊர் சுற்றத் தொடங்கினார். இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரம் காவியா வுக்கு தெரியவந்தது. இதையடுத்து காவியா, கணவர் மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்தார். ஆசாரிபள்ளத்தில் உள்ள தாய் வீட்டின் அருகில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இதனால் கணவரின் கள்ளக்காதலுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டதாக காவியா நினைத்தார். இந்த நிலையில் நேற்று குலசேகரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காவியா புறப்பட்டார். இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது திருவட்டார் அருகே கல்லுபாலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, கணவரின் பைக் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பஸ்சில் இருந்த காவியா அடுத்த ஸ்டாப்பில் அவசரமாக இறங்கினார். நேராக கணவரின் பைக் இருந்த வீட்டுக்கு சென்றார். வீடு திறந்து இருப்பதை கண்டவர் உள்ளே நுழைந்தார். இரு பிள்ளைகள் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவர், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அதிரடியாக நுழைந்தார். அந்த அறையில் உள்ள கட்டிலில் கணவர் மலையன், கள்ளக்காதலி கீதாவுடன் அரைகுறை ஆடைகளுடன் இருப்பதை கண்டு ஆவேசம் அடைந்தார். உடனே அங்கேயே அழுது புரண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இது குறித்து உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு மலையன், காவியா, கீதா ஆகிய 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு கள்ளக்காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறினர். பின்னர் அவர்களிடம் தனித்தனியாக எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகளை..!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது. 

நீங்கள் அதிகம் பதற்றமடைகிறீர்களா?- உங்கள் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளை சற்று கண்காணியுங்கள்

ஒருவர் அதிக பதற்றத்துடன் காணப்படுவதற்கும், அவர் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். இது குறித்து லண்டனில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில்: "ஒருவர் அதிகமான பதற்றத்துடன் காணப்படுவதற்கும், பேஸ்புக்கில் புகைப்படங்களை மிக அதிக அளவில் அப்லோட் செய்வதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. பிறரால் கண்டுக்கொள்ளப் பட வேண்டும், அதிகமான “லைக்ஸ்” வேண்டும் என்று எண்ணுபர்களே இப்படி அதிக அளவில் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுபவராக இருப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பதில் தேர்ந்தவராகவும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகஜமாக பழகுபவர்கள் vs பதற்றமானவர்கள்:


பிறரிடம் சகஜமாக பழகும் எக்ஸ்ட்ரோவெர்டுகள் பேஸ்புக்கில் அவ்வப்போது தங்கள் புரொபைல் பிக்சரை மட்டுமே மாற்றுகின்றனர். ஆனால், பதற்றம் நிறைந்த நியூரோடிக்ஸ் அதிகமான புகைபடங்களை ஒரே அல்பம் உள்ளே அடிக்கடி அப்லோட் செய்கின்றனர்.

இதற்கு காரணம், அவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டன் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அஸார் எஃப்தெகார் கூறியுள்ளார்.

இந்த ஆய்விற்காக அய்வாளர்கள் 17 வயது முதல் 55 வயது வரை கொண்ட 100 பேரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது தோற்றத்தைப் பற்றி அவரது சுய கருத்து உள்ளிட்ட இன்னும் சில கேள்விகள் கேட்டக்கப்பட்டன. அதன் பின்னர், இவர்கள் எப்படி புகைப்படங்களை அப்லோட் செய்கிரார்கள், ஃபேஸ்புக் நன்பர்களிடம் எப்படி உரையாடிகிறார்கள் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

அய்வின் முடிவில் தெரிந்தது என்னவென்றால், இவர்கள் தங்களது சமூகத்திடையே அதிகமான அங்கீகாரத்தையும், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்..? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்

ஏடிம் இயந்திரத்தில் அதிகமாக பணம் எடுப்பவர் நீங்கள் எனில் வரும் நவம்பர் மாதம் முதல் இது உங்களுக்கு பெருஞ்செலவை ஏற்படுத்த போகிறது.

அதாவது, ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வரைமுறையின் படி, ஒரு மாதத்தில்  பிற வங்கி ஏடி.எம்களில் இலவசமாக மூன்று  முறை மட்டுமே பரிவர்த்தனை (நிதி மற்றும் நிதி அல்லாத) செய்ய முடியும்.


அதேபோல், அதே வங்கி ஏடி.எம்.களில் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த எல்லையை தாண்டி பயன்படுத்தும்  போது ஒவ்வொரு முறைக்கும் நாம் ரூ 20 கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.

இந்த நடைமுறை மெட்ரோபோலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு பொருந்தும். இந்த அறிவிப்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

காப்பகம்