Wednesday, September 10, 2014

உறவுகளில் அளவுக்கு அதிகமாக பகிர்வதால் ஏற்படும் விளைவுகள்..!

உங்கள் துணை உங்களைப் பற்றி சற்று அதிகமாகவே தெரிந்து வைத்துள்ளார் என்ற உணர்வை நீங்கள் பெறுகிறீர்களா? அப்படியானால் உங்கள் உறவில் நீங்கள் அளவுக்கு அதிகமாக பகிர்ந்து கொள்கிறீர்கள். ஒரு உறவில் இருக்கும் போது, உங்களைப் பற்றி நீங்கள் அளவுக்கு அதிகமாக பகிர்ந்து கொண்டால் (குறிப்பாக உறவின் ஆரம்ப கட்டத்திலேயே), உங்களை நீங்களே உங்கள் துணையிடம் அம்பலப்படுத்துகிறீர்கள். இதனால் உங்கள் உறவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.

பல நேரங்களில் அளவுக்கு அதிகமான பகிர்தலால் சண்டைகள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு உண்டாகும். கடைசியில் உங்கள் உறவு முடிவதற்கு அதுவே காரணமாகியும் விடும். அதனால் தான் ஒரு உறவில் வேகமாக அடியெடுத்து முன்னேற நினைப்பது ஆரோக்கியமானது அல்ல. அனைத்து உறவுகளும் ஆரோக்கியமான வேகத்தில் தான் நகர வேண்டும். அதனை வேகமாக நகர்த்த முயற்சித்தால் எதிர்மறையான தாக்கங்களையும், காயங்களையும் தான் உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான பகிர்தல் ஆச்சரியங்களை கொன்று உறவில் இருக்கும் சந்தோஷத்தை எடுத்துவிடும். சொல்லப்போனால் இதனால் உங்கள் உறவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். நம்பிக்கையுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தும் திரும்பி எப்படி உங்களை தாக்கும் என்பது உங்களுக்கே தெரியாது. இதனால் உங்கள் மரியாதை போய் உறவின் மீதிருக்கும் நாட்டமும் போய்விடும்.

ஒரு உறவில் அளவுக்கு அதிகமாக பகிர்வதால் ஏற்படும் சில ஆபத்தான தாக்கங்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

கையில் இருக்கும் சீட்டுக்கள் அனைத்தையும் உங்கள் எதிராளியிடம் காட்டிவிட்டீர்கள். இனி உங்கள் உறவு முழுவதும் நீங்கள் காயத்தோடு தான் இருக்க வேண்டி வரும்.

உங்கள் துணையை பற்றிய சில மர்மங்களும், ஆச்சரியங்களும் ஓரளவிற்கு இருந்தால் தான் உங்கள் உறவு சுவாரஸ்யமாக இருக்கும். இருப்பினும் உங்கள் உறவில் நீங்கள் அளவுக்கு அதிகமான பகிர்தலில் ஈடுபடும் போது, தொடங்குவதற்கு முன்னாலேயே நீங்கள் அந்த புதிருக்கான விடையை கண்டுபிடித்து விடுகிறீர்கள்.

உங்கள் துணைக்கு உங்கள் மீது எப்போதெல்லாம் கோபம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் அந்தரங்க ரகசியத்தை குத்திக் காட்டி உங்களை வார்த்தை என்ற சவுக்கால் விளாசுவார். நீங்கள் ஆதரவற்று போவீர்கள்.

உறவில், சீக்கிரத்திலேயே அனைத்தையும் பகிரும் போது, உங்களின் பயங்கரமான கடந்த காலம் உங்கள் துணையை பயமுறுத்தலாம். உங்கள் கடந்த காலத்தை மறந்து உங்களை உங்கள் துணை விரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்த்த பிறகு தான் இவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு உறவு என்பது ஒருவரை பற்றி மற்றவர் தொடர்ச்சியாக அறிந்து கொள்ளும் செயல்பாடே. ஆனால் நீங்களோ உங்களைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் ஒரே நேரத்தில் கூறி விட்டால், உங்களைப் பற்றி காலப்போக்கில் அறிந்து கொள்ளும் சுவாரஸ்யத்தை உங்கள் துணை இழந்து விடுவார்.

உங்களைப் பற்றி உங்கள் துணையிடம் அளவுக்கு அதிகமாக பகிர்கையில் உங்கள் மீது உங்கள் துணைக்கு சந்தேகம் எழலாம். உங்கள் கடந்த காலத்தில் நீங்கள் பல காதல் கதைகளை வைத்திருந்து, இப்போது ஒருவரை மணந்து செட்டில் ஆகியிருக்கலாம். உங்கள் கடந்த கால உறவுகளைப் பற்றி உங்கள் துணையிடம் தெரிவிப்பது வீண் சந்தேகங்களை தான் எழுப்பும்.

நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் தான் உங்கள் துணையிடம் அனைத்தையும் பகிர்கிறீர்கள். ஆனால் உங்கள் இருவருக்கும் ஒத்து போகாமல் அவர் உங்களை விட்டு பிரிந்து சென்றால் என்ன ஆகும்? உங்களைப் பற்றிய அந்தரங்கங்களை இந்த உலகம் முழுவதும் அவர் பரப்ப வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு எதிராக உங்கள் கடந்த காலத்தை உங்கள் துணை பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, அப்படி நடந்து விடுமோ என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடும். உங்கள் துணை சாதாரணமாக கூறும் விஷயத்தை கூட நீங்கள் அதனுடன் தொடர்பு கொண்டு பார்ப்பீர்கள்.

ஒரு புது உறவில் நுழையும் போது, வாய் வலிக்கும் வரை பேச ஆசைப்படுவோம். ஆனால் ஒரே மூச்சாக அனைத்து விஷயங்களையும் பேசி விட்டால், பின் பேசுவதற்கு எதுவுமே இருக்க போவதில்லை. விஷயம் இல்லாத உறவாக மாறி விடும்.

பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவர் எரித்துக்கொலை 3 பேர் கைது..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவர் எரித்துக்கொலை 3 பேர் கைது : -

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம்பிடித்தவர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போனில் படம் பிடிப்பு:- ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கண்ணன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 20). இவர் பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதை குளித்து கொண்டிருந்த அந்த பெண் பார்த்து பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் சுதாகரின் வீட்டில் சொல்லி இரு வீட்டினரும் சுதாகரை கண்டித்ததாக தெரிகிறது.

மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தை கூட்டி சுதாகரை விசாரிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன சுதாகர் கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீடடுக்கு சென்று தங்கி விட்டார்.

தீ வைப்பு:- இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை விடியற்காலையில் உடல் முழுவதும் தீக்காயத்துடன் வீட்டுக்கு வந்த சுதாகர் பெற்றோரிடம் தன்னை சிலர் வழிமறித்து தாக்கி உடல் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக சுதாகரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னை சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டதாக தெரிவித்தார்.

3 பேர் கைது:- அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் தந்தை கண்ணியப்பன் (வயது 43), சகோதரர் முருகன் (20), உறவினரான மற்றொரு முருகன் (33) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவர்ச்சி போஸ்’ கொடுத்து திரையுலகினரை அதிர வைத்த சமந்தா, சுருதிஹாசன்

தமிழ், இந்தி பட உலகில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் போன்றோர் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர்.

இவர்களில் சுருதிஹாசன், சமந்தா இடையே மட்டும் கவர்ச்சி போட்டி நடக்கிறது. அரைகுறை ஆடையிலும், நீச்சல் உடையிலும் தாராளம் காட்டுகிறார்கள். சுருதிஹாசன் இந்தியில் விலைமாதுவாக படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.


தெலுங்கு படங்களில் ஆபாசமாக குத்தாட்டமும் ஆடி வருகிறார். சுருதியின் கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் பரவி வருகிறது. கவர்ச்சி படங்களை படக்குழுவினர் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுருதிஹாசன் புகாரும் அளித்துள்ளார்.

சுருதியை போல் சமந்தாவும் கவர்ச்சிக்கு இறங்கியுள்ளார். ‘அஞ்சான்’ படத்தில் நீச்சல் உடையில் தோன்றி திரையுலகினரை அதிர வைத்தார். உச்சகட்டமாக இருவரும் தற்போது ஆங்கில பத்திரிகைகளுக்கு ‘கவர்ச்சி போஸ்’ கொடுத்தும் அசத்தி உள்ளனர். இனிவரும் படங்களில் இருவரையும் இன்னும் கவர்ச்சியாக பார்க்கலாம்.

திருட்டுக்கல்யாணத்திற்கு கற்றுக்கொடுக்கும் டிவி சீரியல்கள்..!

சமையல் நிகழ்ச்சி, அழகுக்குறிப்பு, ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? என பல ஆரோக்கியமான விசயங்களை கற்றுக்கொடுத்த தொலைக்காட்சிகள்தான் இன்றைக்கு கள்ளக்காதல் தொடங்கி திருட்டுக்கல்யாணம் வரை பலவித சமூக விரோதச் செயல்களை கற்றுக்கொடுக்கும் தொல்லைக்காட்சிகளாக மாறிவருகிறது.

மாமியார் மருமகள் பிரச்சினை தொடங்கி நாத்தனார், அண்ணி, கொழுந்தனார் இடையேயான உறவுமுறைக்குள் பலவித சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி வரும் தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது திருட்டுக்கல்யாணங்களும் அதிகரித்து வருகிறது.

திருமணமான ஆணுக்கு மற்றொரு பெண்ணை மணமுடித்து வைக்க அந்த பெண்ணின் குடும்பத்தினரும், பையனைப் பெற்ற அம்மாவும் சேர்ந்து பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்கின்றனர். கடந்த பல மாதங்களாகவே இந்த திருட்டு கல்யாணம் பற்றிய சம்பவங்கள்தான் சன்டிவியின் சீரியல்களில் இடம் பெறுகிறது.


சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரில் இந்த திருட்டு கல்யாணம் தொடர்பான கதைதான் இப்போது பத்து எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகிவருகிறது.


மகன் சுரேசுக்கு சௌமியாவை திருட்டு கல்யாணம் செய்து வைக்க பெண்ணின் குடும்பத்தினருடன் சேர்ந்து சரோஜா போடும் நாடகம்தான் இப்போது இல்லத்தரசிகளிடம் பேச்சாக இருக்கிறது.

கணவருக்கு ஆகாது எனக்கு தாலிப்பிச்சை போடு என்று மகனை ஏமாற்றி திருட்டு கல்யாணம் செய்ய முயலும் சரோஜா, ஐயரை கூட்டிக்கொண்டு கோவில் கோவிலாக ஓடுகிறாள். ஐயர் ஏதாவது சொன்னால் பணத்தை கொடுத்து வாயை மூடிவிடுகிறாள் சரோஜா.


இது இப்படி என்றால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரின் கதையோ அதைவிட கந்தரகோலம். இந்த சீரியரின் தொடக்கவே கணவனையும் மகளையும் விட்டுவிட்டு ஓடிப்போன ஒரு பெண்ணைப் பற்றியதுதான். இப்போது மருமகளை கழற்றிவிட்டு மகனுக்கு மற்றொரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கும் கதையாக மாறிவிட்டது.

இந்த அசிங்கத்திற்கு பெண்ணை பெற்றவர்கள், பையனின் அம்மா என அனைவரும் உடந்தை. இதில் சாருவின் அம்மா என்று கூறிக்கொள்ளும் அமைச்சரின் கள்ளமனைவி மாயாவும் உடந்தை என்பதுதான் கொடுமை. மகளுக்கு பிடித்தவனுடன் சேர்த்துவைக்க எந்த எல்லைக்கும் போவேன் என்கிறாள் மாயா.

ஆகாத மருமகளா கழற்றிவிட்டுவிட்டு அப்படியே வசதியான பெண்ணாக பார்த்து வளைத்துப்போட்டு மகனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வை இதுதான் இந்த சீரியல்கள் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் தென்றல், தெய்வமகள் தொடரின் இயக்குநர் ஒருவர் என்பதுதான். இரண்டு தொடர்களுமே விகடன் தயாரிப்புதான்.

ஏற்கனவே குழந்தை இல்லை என்றால் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் மனைவிகள் சீரியலில் அதிகரித்தனர். இதனால் அப்பாவிப் பெண்கள் பலரும் உண்மையிலேயே தங்களின் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர் என்று செய்திகள் வெளியாகின. இப்போது திருட்டுக்கல்யாண சீசன் அதிகரித்துள்ளது. எங்கே போய் எப்படி விடியப்போகிறதோ?

விபச்சாரத்தில் சிக்கிய நடிகை ஸ்வேதா: ட்விட்டரில் குமுறிய குஷ்பு

விபச்சார வழக்கில் நடிகை ஸ்வேதா பாசு சிக்கியுள்ள நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணின் முகத்தை மட்டும் ஏன் காட்டுகிறார்கள் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இதையடுத்து அவரது புகைப்படம் டிவி, செய்தித்தாள்களில் பெயருடன் வந்தது. ஆனால் அவருடன் சிக்கிய மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் பெயர் கூட வெளிவரவில்லை.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா..?

விபச்சாரம் தண்டிக்கப்படும் குற்றம் என்றால் சம்பந்தப்பட்ட ஆணையும் அதே சட்டப் பிரிவில் கைது செய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையை நாடியதால் அவருக்கும் அந்த பிரிவின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் இருந்து சுகம் பெறும் ஆணுக்கு தான் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பண கஷ்டத்தால் அவதிப்பட்டபோது விபச்சாரம் செய்தால் சம்பாதிக்கலாம் என்று சிலர் தனக்கு ஆசை வார்த்தை காட்டி இந்த தொழிலில் ஈடுபடுத்தியதாக ஸ்வேதா பாசு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கொழு கொழு' பெண்கள் 'கும்'மென்று கவர்ச்சியாக இருப்பதன் ரகசியங்கள்..!

தங்கள் உடம்பில் அழகான வளைவுகளை உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை அவனுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

இந்திய ஆண்களைப் பொறுத்தவரை, தளதளவென்று இருக்கும் பெண்கள் தான் அன்பாகவும் பாசமாகவும் நட்போடும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாணி, கோணி அந்தப் பெண்கள் செய்யும் குறும்புகளிலும் அலும்புகளிலும் பெரும்பாலான நம் ஊர் ஆண்கள் சொக்கித்தான் போகிறார்கள்!

தளதள பெண்களின் அருகில் இருக்கும் ஆண்கள் சொர்க்கத்தில் இருப்பது போலத்தான் மிதந்து கொண்டே இருப்பார்கள்.இந்தத் தளதள பெண்கள் கிண்ணென்று கவர்ச்சியாக இருப்பதன் காரணம் தான் என்ன? அவர்கள் தோற்றத்தில் இருக்கும் ஒரு க்ரியேட்டிவிட்டிதான் முக்கியக் காரணம் என்று சொல்லலாம். மேலும் அந்தப் பெண்களின் க்யூட்டான பார்வை, வசீகரமான புன்னகை, வளுவளுப்பான உடம்பு, 'திடும் திடும்' என்ற நடை... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தளதள பெண்களின் இதுப்போன்ற பல ரகசியங்களைக் கொஞ்சம் தோண்டி எடுப்போம், வாருங்கள்!

தளதள பெண்களின் கிக்கான வளைவுகள் தான் முதல் ரகசியம். 36-24-36 அளவுகளில் அந்த வளைவுகள் இருந்தாலே எந்த ஆணுக்கும் சூடு ஏறுமே!

நம் ஊர் பையன்கள் ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பார்த்தாலே காத தூரத்திற்கு ஓடி விடுவார்கள். 'எலும்புக் கூடு' என்று இகழவும் செய்வார்கள். ஆனால் சதைப் பிடிப்புடன் ஒரு பெண் 'கும்'மென்று நடந்து வந்தால் அவளுக்குப் பின்னாடியே தான் போவார்கள்.

தலை முதல் கால் வரை ஒவ்வொரு பாகத்தில் அழகைக் கொட்டி வைத்திருக்கும் நமீதா போன்ற ஒரு 'ஹாட்'டான பெண்ணை டேட்டிங் கூட்டிக் கொண்டு போக எந்த ஆண் தான் தயங்குவான்?

தளதள பெண்களுடைய கவர்ச்சியான கண்களுக்கும் நம் ஊர் ஆண்கள் ரொம்பவே சொக்கித்தான் போவார்கள். அவர்களுடைய கடைக்கண் பார்வைக்கே ஆண்கள் அடிமைகளாகி விடுவார்கள்!

தளதளவென இருக்கும் பெண்கள் நின்றால் ஒரு ஸ்டைல், நடந்தால் ஒரு ஸ்டைல், உட்கார்ந்தால் ஒரு ஸ்டைல்... இப்படி ஒவ்வொரு ஸ்டைலிலும் அவர்களுடைய வளைவுகள் தரும் கவர்ச்சிக்கு நம்ம பசங்க சொக்கித்தானே போவார்கள்!

இவ்வளவு ரகசியங்களையும் தன்னிடத்தில் கொட்டி வைத்துள்ள தளதள பெண்களைக் கட்டிலில் கிடத்தும் போது, அவர்கள் எவ்வளவு 'ஹாட்'டாக இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!

குண்டான பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அப்படி கண்டதையும் சாப்பிட்டுத் தான் உடம்பை ஏற்றி வைத்துள்ளார்கள். அவர்கள் சாப்பிடுவதும் ஒரு அழகுதான்!

உடற்பயிற்சி செய்யும் தளதள பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் செய்தும் தங்கள் உடம்பை சும்மா 'கிண்'ணென்று ஏற்றி வைத்திருப்பார்கள்! 'உடற்பயிற்சி' என்ற அந்த வார்த்தையைச் சொன்னாலே போதும், அவர்கள் முகம் மிகவும் க்யூட்டாகும்.

நீங்க தூங்குற 'லட்சணத்திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்...!

இரவில் தூங்கும் போது, நாம் எப்படி தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பது தெரியாது. ஆனால் ஒருவரின் குணத்தை அவரது தூங்கும் நிலையைக் கொண்டே சொல்ல முடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையில் தூங்கினால் மிகவும் பிடிக்கும். அப்படி எந்த நிலை பிடிக்கிறதோ, பெரும்பாலும் அந்த நிலையிலேயே இரவிலும் தூங்குவார்கள்.

இப்போது எந்த நிலையில் தூங்கினால், என்ன குணம் இருக்கும் என்பதைக் கொடுத்துள்ளோம். இவைகளைப் படித்துவிட்டு, இரவில் தூங்கும் போது உங்கள் துணை அல்லது வீட்டில் உள்ளோரிடம் எந்த நிலையில் படுக்கிறீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். அதற்கு சைக்காலஜிஸ்ட் ஒருவர் சொல்வதாவது, ஒருவர் தூங்கும் போது உடலானது ஒருவரது சுபாவத்திற்கு ஏற்றவாறு மாறும் என்று சொல்கிறார். சரி, இப்போது எந்த நிலையில் படுத்தால், என்ன குணம் உள்ளவர்கள் என்று பார்ப்போமா..!

படுக்கும் போது, படத்தில் காட்டியவாறு சுருங்கிப் படுப்பவர்களானால், அவர்கள் தனிமையை விரும்பமாட்டார்கள். அவர்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம். மேலும் அவர்கள் வெளித்தோற்றத்தில் கரடுமுரடானவர்களாக இருந்தாலும், மன அளவில் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் அதிக வெட்கப்படும் குணம் உடையவர்கள். அதனால் தான் பெரும்பாலான பெண்கள், இந்த நிலையில் படுக்கிறார்கள்.


சிலர் தூங்கும் போது உடலை போர்வையால் போர்த்தி தூங்குவார்கள். அத்தகையவர்களிடம் ஒரு தனித்துவமான குணம் என்றால், அவர்கள் எந்த ஒரு உணர்ச்சியையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தமாட்டார்க்ள. மேலும் தனக்குள்ள கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

தூங்கும் போது கை மற்றும் கால்களை விரித்துக் கொண்டு தூங்கினால், அவர்கள் எதையும் நன்கு கவனிப்பார்கள். மேலும் நண்பர்களுடன் எப்போதும் இருக்க விரும்புவார்கள்.

குப்புறப் படுப்பவர்களானால், அவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மேலும் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பாதவர்கள்.

பக்கவாட்டில் படுப்பது பிடிக்கும் என்பவர்கள், எதற்கும் கவலைப்படாதவர்கள் மற்றும் எல்லாவற்றிலும் குற்றம் குறைகளை சொல்வார்கள்.

காப்பகம்