Sunday, September 14, 2014

விபச்சாரம்தான் குடும்பத்தைக் காக்க ஒரே வழி என்றால் என்ன தவறு அதில்..? - தீபிகா..!

விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதா பாசுவுக்கு நடிகை குஷ்பு மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை சுவேதா பாசு. இவர் தமிழில் ‘ராரா', ‘சந்தமாமா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘மக்தே' படத்திற்காக தேசிய விருது பெற்றவரான சுவேதா பண நெருக்கடியாலும், குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுவேதா பாசுவுக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் தீபிகா படுகோனேவும் சேர்ந்துள்ளார்.

தன்னையும், குடும்பத்தையும் காப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இதுதான் (விபசாரம்) ஒரே வழி என்றால், அதை செய்வதில் தப்பில்லை.

எனவே மக்கள் கூறுவதைப்போல அவரைப்பற்றி இழிவாக பேசுவது நியாயமற்றது என நான் நினைக்கிறேன்.

அப்படி பார்த்தால், அவரை இந்த செயலில் ஈடுபடுத்தியவர்கள் குறித்து நாம் ஏன் பேசவில்லை? தற்போது வரை சுவேதாவை நம் எல்லோருக்கும் தெரியும். எனினும் நாம் ஏன் அவருக்கு உதவி செய்யவில்லை?

எனவே அவரைக்குறித்து தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே?' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், ‘விபசார தொழில் குறித்த விஷயங்களில் முதலில் பெண்களை மட்டும் தான் மையப்படுத்துகின்றனர். பாலியல் தொழிலில் ஆண்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே? ஆனால் ஆண்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன.

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் போது, அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகின்றன. ஆனால் அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது.

இந்த குற்றத்தில் அந்த ஆணுக்கும் சம பங்கு இருக்கிறதுதானே? ஏன் இந்த பாரபட்சம்? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்?

பெண்களை கைது செய்யும் போது புகைப்படம் எடுக்க போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களையும் புகைப்படம் எடுக்க வேண்டியதுதானே? அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை' என இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஆர்யா-நயன், சித்து-சமந்தா: இவர்களுக்குள் காதல் இருக்கு, ஆனால் இல்லை..!

ஆர்யா-நயன்தாரா, சித்தார்த்-சமந்தா, த்ரிஷா-ராணா ஆகியோர் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. காதல் என்று வந்தால் திரை உலக பிரபலங்கள் அவ்வளவு எளிதில் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

எங்கு பார்த்தாலும் ஜோடியாகவே வருகிறீர்களே காதலா என்று கேட்டால் சீச்சீ நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பார்கள். இந்த நல்ல நண்பர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது காதல் தான் என்பது ரசிகர்களுக்கே தெரிந்துவிட்டது. அப்படி காதல் என்று கூறப்பட்டாலும் நாங்கள் எல்லாம் நண்பர்கள் என்று கூறும் சில பிரபலங்களை பார்ப்போம்,

நயன்தாரா எப்போது மீண்டும் நடிக்க வந்தாரோ அதில் இருந்து அவருக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. காதலை அவர்கள் மறுத்தாலும் நிகழ்ச்சிகளில் ஜோடியாக காணப்படுகின்றனர்.

சித்தார்த், சமந்தா காதலிப்பது ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரியும். ஆனால் அது குறித்து கேட்டால் மட்டும் நைசாக நழுவிவிடுவார்கள்.

ராணா, த்ரிஷா அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். இவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை ரகம்.

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துவிட்டனர்.

நம்ம ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலிக்கையில் நாங்கள் எல்லாம் நண்பர்கள் டயலாக்கை தான் அடிக்கடி கூறினார். இறுதியில் ரித்தேஷை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்: பாடலாசிரியர் கபிலனின் ‘ஐ’ அனுபவங்கள்

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் விரும்பும் பாடலாசியர், கபிலன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மூன்று பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வருகிறது. ‘உன் சமையல் அறையில் உப்பா? சர்க்கரையா?’, ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’, ‘கரிகாலன் காலப் போல’ ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?’ இப்படி கணக்கிட முடியாத வெற்றிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பாடலாசிரியர் கபிலன் ‘தி இந்து’ வுக்காக அளித்த கவித்துவப் பேட்டி..

‘ஐ’ படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது?

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ‘அந்நியன்’ படம் வழியே ஹாரிஸ் ஜெயராஜிடமும் என்னை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் ஷங்கர். நான் அடுத்தகட்ட உயரத்துக்குச் செல்ல காரணமாக இருந்தவரும் அவரே. ‘ஐ’ படத்துக்காக

‘‘என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே..
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத்தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர்போல
உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா?

இப்படியான வரிகளோடு பயணிக்கும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலை பெண் பாத்திரத்துக்கான சிறு மாற்று வரிகள் சேர்த்தும் மற்றொரு பாடலாக எழுதி யிருப்பேன்.

இன்னொரு பாடல் சென்னை பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்த அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பாடல், வடசென்னையைச் சேர்ந்த காதலன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அவர்கள் மொழியிலேயே பாடலை எழுதினேன். கொடக்கானல் மலை உச்சியில் ஷங்கருடன் அமர்ந்து இப்பாடலை எழுதினேன். பாடல் முழுவதும் தயாரானதும் இயக்குநர் ஷங்கர், ‘‘உங்களை உச்சத்துக்குக் கொண்டு போகப்போகிற பாடல் இது’’ என்றார். அந்த வரிகள்தான்..

‘‘நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா மூட்டை
ஒரு மாட்டுக்கொம்பு மேல
பட்டாம்பூச்சிபோல..’’ இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கரோடு நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி?

எளிமையான வரிகளைப் பெறுவதில் இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருடன் அமர்ந்து பாடலுக்கான பல்லவியைப் பிடிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். என்னைக் கேட்டால் பல்லவி என்பது உயிருக்குத் தலை மாதிரி; ரயிலுக்கு இன்ஜின் மாதிரி. அது பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் அடுத்தடுத்து வரிகளைப் பிடிப்பது எளிது. ‘ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டாங்களா!’ என்று ஒரு குழந்தைக்கு கதை சொல்வதைப்போல எளிமையாகப் பாடலுக்கான சூழலை விளக்குபவர், ஷங்கர். ஒரு பாடலை எப்படி படமாக்கத் திட்டம் என்பதில் தொடங்கி பென்சில் பிடித்து படம் வரைந்து விவரிப்பார். பாடலில் நாயகன், நாயகியின் அணிகலன், ஆடைகளின் வண்ணங்கள் இவற்றையெல்லாம் பகிர்வார். அந்த சூழலே நம்மை அற்புதமான மனநிலைக்குக் கொண்டுபோய்விடும்.

‘தெகிடி’ படத்தின் பாடலில் ஓர் இடத்தில் காதல் இரண்டெழுத்து என்று எழுதியிருக்கிறீர்களே?

‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என்று தொடங்கும் பாடல் அது.

மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு…

மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு

இனி நீயும், நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால் காதல் இரண்டெழுத்து…’

இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் நகரும். பலர் என்னிடம் அது எப்படி காதல் இரண்டெழுத்து? என நேரடியாகவும், சமூக வலைதளங்களின் வழியாகவும் கேட்கிறார்கள். சங்க இலக்கியத்தில் ‘கா’ என்பதற்கு சோலை என்ற ஒரு பொருள் உள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் காதலர்கள் சோலையில்தான் சந்திப்பார்கள். அடுத்து ‘த’ என்றால் தந்து பெறுதல். காதலர்கள் அன்பைத் தந்து பெறுபவர்களாச்சே. ‘ல்’ என்பது இல்லறம், இல்வாழ்க்கை, குடும்பம். இந்தப்படப்பாடலின் சூழலில் நாயகன், நாயகி இருவரும் காதலர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்காமல்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் ‘காதல்’ இரண்டெழுத்து என்பது சரிதானே.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் போன்ற கவிஞர்கள் இருந்த சூழலைப் போல இப்போதும் பாடலாசிரியர்கள் மீது அதே மதிப்பு உள்ளதா?

இப்போது பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக வருபவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இசை தெரியாதவர்கள் இசையமைப்பாளராக முடியாது. இன்றைக்கு வேறு துறையில் இருப்பவர்கள் பலர் பொழுதுபோக்காகப் பாடல் எழுதுகிறார்கள். அதற்குப் பெரிதாகத் தொகை எதுவும்கூட வாங்குவதில்லை. ஒரு கவிஞனிடம் அந்தப் பாடலைக் கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பெரியும். இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே இன்று நல்ல பாடல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

அடுத்த உங்களது புதிய படைப்புகள்?

‘குறில் நெடில்’, ‘நகர்ப்பறை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற கட்டுரைத் தொகுப்பும். எழுதி முடித்துத் தயாராக உள்ளன. இன்னும் வடிவமைப்பு உட்பட சில பணிகள் மட்டும் மீதமுள்ளது.

கவிஞர் வாலியின் பிரிவு தமிழ்த் திரைத்துறை யில் எந்தமாதிரியான வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது?

ஐந்து தலைமுறைக்குப் பாடல் எழுதிய கவிஞர். எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியவர். நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாக வைத்திருந்தவர். கார்கில் யுத்தம், மின்வெட்டு, நிலக்கரி ஊழல் இப்படி எதையும் பாடல் வழியே பேசியவர். இறுதி நாட்கள் வரைக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடியே போனது. அவரது மறைவின்போது நான் எழுதிய வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..

கடவுள் இருந்திருந்தால்
ஒரு விபூதி சாம்பலாகியிருக்காது.

உங்கள் பாடல் வரிகள் படத்தின் தலைப்பாக வரும்போது எப்படி உணர்வீர்கள்?

மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். சமீபத்தில்கூட ‘உன் சமையல் அறையில்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வந்தது. என்ன ஒரே ஒரு வருத்தம் மட்டும் உண்டு. ஒரு கவிஞன் எழுதிய பாடல் வரிகளைப் பயன்படுத்தும்போது அந்தக் கவிஞனை அழைத்து அந்தப்படத்தில் பாடல் எழுதச் சொல்லலாமே என்பதுதான் அது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் - வரலாறு, சாதனைகள்..!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அதே பாணியில் கிரிக்கெட்டில் உள்நாட்டில் 20 ஓவர் போட்டியில் சாதித்த அணிகள் வெளிநாடுகளில் வலுவாக உள்ள அணிகளுடன் மோதுவதே சாம்பியன்ஸ் லீக் போட்டி.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டி அறிமுகப்படுத் தப்பட்டது. 2008-ம் ஆண்டில் முதல்முறை யாக சாம்பியன்ஸ் லீக் நடத்த திட்டமிடப் பட்டது. எனினும் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து 2009-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்பட்டது. இப்போது 6-வது ஆண்டாக போட்டி நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற 5 சாம்பியன் லீக் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள் ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், நியூசவுத் வேல்ஸ் புளு, சிட்னி சிக்ஸர் ஆகிய அணிகள் தலா ஒருமுறை சாம்பியனா கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அணிகள் தவிர பிற அணிகள் சாம்பியன் ஆனதில்லை. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகள் இந்தியாவிலும், 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலும் சாம்பியன்ஸ் லீக் நடைபெற்றது. இப்போது தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் போட்டி நடைபெறவுள்ளது.

ரெய்னா முதலிடம்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர் 608 ரன்கள் குவித்துள்ளார். 94 ரன்கள் அடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன் ஆகும். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 33.77

மும்பை இண்டியன்ஸ், ட்ரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள போல்லார்ட் இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் 25 ஆட்டங்களில் 592 ரன்கள் எடுத்துள்ளார்.

டெல்லி டேர் டெவில்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் 556 ரன்களுடன் (13 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் 497 ரன்களுடன் (19 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

வெற்றிகளை குவித்த சூப்பர் கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுவரை 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சூப்பர் கிங்ஸ் 11 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மும்பை இண்டியன்ஸ் உள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் பங்கேற்று 10 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. இரு ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை. மூன்றாவது இடத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணி 7 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஹைவேல்ட் லயன்ஸ், வாரியர்ஸ் ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளை பெற்றுள்ளன.

அதிக விக்கெட் எடுத்தவர்கள்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளில் விளையாடிய டேயன் பிராவோ முதலிடத்தில் உள்ளார். அவர் 18 போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடரஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள சுனில் நரைன் 15 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்திய 2-வது இடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வின் 25 விக்கெட்டுகளுடன் (19 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், மும்பை இண்டியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 24 விக்கெட்டுகளுடன் (14 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணி வீரர் ரவி ராம்பால் 23 விக்கெட்டுகளுடன் (18 ஆட்டங்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

குழந்தை-பாட்டி உள்பட 8 பேரை கொன்ற காமக்கொடூரன் சிக்கியது எப்படி..? - பரபரப்பு தகவல்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேறிப்பட்டி கிராமத்தில் பீடா கடைக்காரர் செல்வத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கொள்ளையன் சுப்பராயன் (25) போலீசில் சிக்கினான். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்திரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவன் லாரி கிளீனராக வேலை செய்து வந்தான்.

அவனிடம் போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காமக் கொடூரனான அவன் கொடூர கொலையாளி என்பதும், தனது சொந்த பாட்டி உள்பட 8 பேரை கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதில் 3 பெண்களை கொடூரமாக கற்பழித்து கொன்றுள்ளான்.

இதுபற்றிய திடுக்கடும் தகவல்கள் வருமாறு:–

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த கல்லக்குடியில் ஜெயமேலு (வயது 82) என்ற மூதாட்டியை பணத்துக்காக கொலை செய்துள்ளான்.

கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சரகத்தில் முத்துலட்சுமி (25), அவரது தாயார் சாவித்திரி ( 50) ஆகியோரை கொன்றான்.

முத்துலட்சுமியை கற்பழித்தபோது அதை அவரது தாயார் சாவித்திரி பார்த்து விட்டார். இதனால் இருவரையும் தீர்த்து கட்டினான்.

கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் 2–ந் தேதி சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தனது பாட்டி அய்யம்மாளிடம் பணம் கேட்டான். அவர் தர மறுக்கவே அவரையும் கொன்று விட்டு காதில் கிடந்த அரை பவுன் தோடை திருடி சென்றான்.

அப்போது ஏத்தாப்பூர் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த அவன் மீண்டும் கொலைகளை செய்து உள்ளான்.

கடந்த ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளைக்கல் குவாரியில் லாரி கிளீனராக வேலை பார்த்த சுப்பராயன், வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றான். அவரிடமிருந்து ரூ 6 ஆயிரத்து 500–யையும் பறித்தான்.

கடந்த 5–ந் தேதி அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் வேல்முருகன் (33), அவரது மனைவி பார்வதி (25), அவர்களது ஒன்றரை வயது குழந்தை கீர்த்தனா ஆகிய 3 பேரை கொன்று உள்ளான்.

வேல்முருகனின் வீட்டுக்குள் புகுந்த சுப்பராயன் முதலில் பார்வதியை தாக்கி கற்பழித்து கொன்றுள்ளான். இப்படி அடுத்தடுத்து 8 கொலைகளை செய்த நிலையிலும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துள்ளான். இதுவே இவனுக்கு வசதியாக போய்விட்டது.

தம்மம்பட்டி போலீசில் சிக்கிய பின்னர்தான் இவன் 8 கொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டான்.

இன்று ஆத்தூர் மாஜிஸ் திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைக்கோ கொலையாளி சுப்பராயன் சிறையில் அடைக்கப்பட உள்ளான்.

அரியலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்ட போலீசார் கொலையாளி சுப்பராயனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பல கொலைகளை செய்து தமிழகத்தை கலக்கிய ஆட்டோ சங்கர். சேலம், கிருஷ்ணகிரி மற்றம் கர்நாடக மாநிலத்தில் பல பெண்களை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன் ஜெய்சங்கர் ஆகியோர் போன்று சுப்பராயன் பல கொலைகளை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவன் தமிழகம் முழுவதும் மேலும் பல கொலைகளை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் துப்பு துலங்காமல் உள்ள பல கொலைகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து சுப்பராயனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

சுப்பராயன் சைக்கோ கொலையாளியாக மாறியது எப்படி என்பது பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:–

எனது தந்தைக்கு 4 மனைவிகள். இதில் 3–வது மனைவியின் மகன்தான் நான். என் தந்தை அவரது மனைவிகளிடம் சந்தோஷமாக இருப்பார். இதை பார்த்த எனக்கும் அது போல இருக்க ஆசை வந்தது.

அவர் சந்தோஷமாக இருக்க என்னை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பிவிட்டார். வேலை பார்த்து விட்டு நான் வாங்கி வரும் பணத்தை எனது சித்தியும், தந்தையும் என்னிடம் இருந்து வாங்கி கொள்வார்கள். அடிக்கடி அவர்கள் என்னிடம் பணம் கேட்பார்கள். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நான் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். ஈரோட்டில் முதலில் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். தமிழகம் முழுவதும் லாரியில் சென்று வந்தேன்.

யாராவது பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அதை பிடுங்க வேண்டும் என்று நினைப்பேன். முதலில் அவர்களிடம் பணத்தை கேட்பேன். அவர்கள் தர மறுத்தால் கொன்று விடுவேன். பணம் பறிக்கும் போது பெண்ணை கற்பழித்து கொல்வேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

'ஐ' எதைப் பற்றியது..? - விக்ரம் சூசகம்

'ஐ' படத்தின் கதை எதைப் பற்றியது என்று நடிகர் விக்ரம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசையினை அர்னால்ட் வெளியிட இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ் திரையுலக பிரபலங்கள் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.15ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது.

இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'.

இது ழுழுக்க முழுக்க ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான். ஒரு நடிகனாக, நடிப்பதற்கு எனக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். மூன்று முறை இப்படத்திற்காக எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

காப்பகம்