Tuesday, August 19, 2014

சூர்யாவுக்கு ஜோடி தீபிகா படுகோனேவா..?

சூர்யா நடித்த அஞ்சான் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி இருவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா வெங்கட் பிரபு இயக்க இருக்கும் மாஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வந்தன. 


இப்படத்திற்கு பிறகு சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்த படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார், ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஆனால் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ரகசிய திருமணம்..!

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ரகசிய திருமணம்: தம்பதிபோல் வந்ததால் பரபரப்பு:-

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

திரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. தெலுங்கில் ‘லீடர்’ படம் மூலம் ராணா நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் அஜீத்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தார்.

திரிஷா தெலுங்கு படங்களில் நடித்தபோது ராணாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். துபாயில் நடந்த திரைப்பட விழா விருந்து நிகழ்ச்சியில் அருகருகே அமர்ந்து காதலில் லயித்தனர். அந்த படங்கள் இன்டர்நெட்டில் பரவியது.

ஆனால் சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக ஆந்திர பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இருவரையும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்க முடியவில்லை. திரிஷாவுக்கு அவரது தாய் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் திரிஷாவும், ராணாவும் ஐதராபாத்தில் நடந்த பிரபல தயாரிப்பாளர் ராகேவந்திர ராவ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிபோல் ஜோடியாக வந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினர்.

ராணா கோட்சூட்டுடன் கம்பீரமாக இருந்தார். திரிஷா சேலை, ஜாக்கெட்டில் எளிமையாக வந்தார். இருவரும் ஒன்றாக காரில் வந்து இறங்கினர். ஜோடியாக மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். பரிசு பொருட்களும் கொடுத்தனர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இதர தெலுங்கு நடிகர்கள் அனைவருக்கும் மனைவிமாரை அழைத்து வந்து இருந்தனர். ராணா, திரிஷாவை எல்லோரும் திருமணமான கணவன்– மனைவி போலவே பார்த்தார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து இருக்கலாம் என்றும் கிசுகிசுத்தனர். சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு ஜோடியாகவே புறப்பட்டுச் சென்றனர்.


திரிஷா தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் விரைவில் ரிலீசாகிறது. ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட திரிஷாவை அழைத்ததாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

3 நாளில் ரூ.30 கோடி: அஞ்சான் வசூல் சாதனை

சூர்யா, சமந்தா ஜோடியாக நடித்த ‘அஞ்சான்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது.

இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படமோ மலையாள படமோ 3 நாளில் இவ்வளவு வசூல் ஈட்டியது இல்லை.


‘அஞ்சான்’ படம் ரிலீசான போது ரசிகர்கள், மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதுவே இவ்வளவு வசூல் ஈட்ட காரணம் என்கின்றனர்.

இது குறித்து டைரக்டர் லிங்குசாமி கூறும்போது ‘அஞ்சான்’ படம் 3 நாளில் ரூ.30 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவின் ‘கெட்டப்’, அஞ்சான் தலைப்பு டிரெய்லர், பாடல்கள், சூர்யாவுக்கும் எனக்குமான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. கதை கருவும், போஸ்டர்களும் படம் பார்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவே இவ்வளவு பெரிய வசூல் சாதனைக்கு காரணம் ஆகும்.

விநாயகர் சதுர்த்தியன்று அஜித்தின் 55வது பட டைட்டில்

இயக்குநர் கௌதம் மேனன் தற்போது அஜித்தின் 55வது படத்தை இயக்கிவருகிறார் என்று நமக்கு தெரியும்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். கௌதம் மேனன், அஜித் முதன் முறையாக இணைந்துள்ள படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் எதுவும் வைக்கவில்லை.


இது அஜித் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்

கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்:-

அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்.

இதற்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்..

01. தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திட வேண்டும்.

02. தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்து விடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை.

03. தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALL யை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள். ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.

04. தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP) போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும். மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்து விடவும்.

05. தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும். தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.

06. இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும் தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது. இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ், மால்வேர், டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. இவ்வாறனவற்றை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்.

07. இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை.

08. அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன.

09. தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக் கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.

10. REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.

அஜீத் பட தயாரிப்பாளரின் புதிய படத்திற்கு `ஏ` சான்றிதழ்

அஜீத் அறிமுகமான ‘அமராவதி’ மற்றும் ‘தலைவாசல்’ ஆகிய படங்களை தயாரித்த சோழ பொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்சும், மவுண்டன் மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து ‘கபடம்’ என்ற படத்தை தயாரித்துள்ளன.


இந்த படம், எதிர்மறையான எண்ணங்களை கொண்ட ஒரு இளம் ஜோடியை பற்றிய கதை. அந்த இளம்ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பிறகு இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணின் நடவடிக்கைகள் இளைஞனுக்கு பிடிக்காமல் போகிறது. அவளை திருத்திவிடலாம் என்று முயற்சிக்கிறான். முடியாததால், அவன் என்ன செய்கிறான்? என்பதே கதை.

படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கிறார் ஜோதிமுருகன். எம்.கே.மணி வசனம் எழுதியிருக்கிறார். சச்சின் அங்கனாராய் இருவரும் இளம் ஜோடிகளாக நடித்து இருக்கிறார்கள். கதாநாயகன் சச்சின் இந்த படத்துக்காக சாஷி இசையில் நா.முத்துக்குமார் எழுதிய 4 பாடல்களை பாடியுள்ளார்.

இப்படம் வருகிற 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

காப்பகம்