Sunday, August 17, 2014

ஆண் டாக்டரை பார்க்க போறீங்களா..? இதைப்படிச்சிட்டு போங்க..!

தற்போதுள்ள காலகட்டத்தில் மனிதனின் உடலில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை போல் மருத்துவமனைகளும் அதிகரித்துள்ளன.  பல்வேறு உடல் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் போதிய கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.  மருத்துவமனைக்கும் செல்லும் போது தனியாக செல்லாமல் உடன் துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். மேலும் நீங்கள் செல்லும்  மருத்துவமனை மற்றும் மருத்துவரை பற்றிய விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் மருத்துவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன.  தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் மருத்துவர் பரிசோதிக்கும்போது, அந்த  அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும்  அறையில் இருக்கலாம். பெண் நோயாளி தங்களுடைய பிரச்னையை சொன்ன பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை செய்ய  போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் மருத்துவர் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை மருத்துவர் செய்ய வேண்டும். வயிற்று பகுதி பிரச்னைகளுக்கு வயிற்றை  தொட்டு பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் மருத்துவர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி  பெறவேண்டும். அதன்பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும்.

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் மருத்துவர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், தமிழ்நாடு  மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். பெண் நோயாளியின் புகார் உண்மை என்று தெரிந்தால் அந்த ஆண் மருத்துவரின்  மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்களின் பொறுப்பின்மை..! - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லாமல் இருந்த வசதிகள் இப்போது இருப்பது என்னவோ உண்மை. தெரு விளக்கில் படித்ததும், பல காத தூரம் நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்குச் சென்று வந்ததும், ஒரு வேளை மட்டுமே உணவு அருந்தியதும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையினரில் பலருக்கும் நடைமுறை அனுபவமாக இருந்தன. இன்று அந்தத் தலைமுறையினர், படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் இருப்பது மட்டுமல்லாமல், கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால், அவர்களது பெற்றோர்கள் கனவில்கூடக் கண்டறியாத வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மை.

தங்களுக்குக் கிடைக்காத கல்வி வசதியோ, உணவு வசதியோ, குடியிருப்பு வசதியோ தங்களது குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் விழைவதில் குறை காண முடியாது. ஆனால், அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், வருங்காலத்திற்கும் பாதகமான வசதிகளைப் பெற்றோர்கள் செய்து கொடுத்து, அதைப் பெருமையாகக் கருதுவதுதான், "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்' என்கிற பழமொழியை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக சாக்கலேட்டுகளை வாங்கித் தருவது, கழிவு உணவுகள் (ஜங்க் ஃபுட்) எனப்படும் உணவகங்களின் துரித உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது, பொருளாதார இயலாமை காரணமாகத் தங்களுக்கு மறுக்கப்பட்ட அசைவ உணவுகளைத் தங்கள் குழந்தைகளுக்குத் தினப்படி செய்து கொடுத்துப் பழக்குவது, முறையான உடற்பயிற்சிக்கு ஊக்குவிக்காமல் கணினியின் முன்னாலும், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னாலும் குழந்தைகள் பொழுதுபோக்குவதைப் பார்த்துப் பூரித்து மகிழ்வது என்று, அவர்களை அறியாமலே அந்தக் குழந்தைகளின் வருங்காலத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

நாம் வாழும் காலத்தில் குழந்தைகள் நம்மைப் போற்ற வேண்டும் என்பதிலும், அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்விக்க வேண்டும் என்பதிலும் பெற்றோர் குறியாக இருக்கிறார்களே தவிர, தமது காலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தைகள் நாற்பது வயதில் சர்க்கரை நோயாலும், இரத்தக் கொதிப்பாலும், இன்னபிற பிரச்னைகளாலும் அவதிப்படும்போது, "பெற்றோர் தங்களைச் சரியாக வளர்த்திருந்தால் இந்த அவதி வந்திருக்காதே' என்று சபிப்பார்களே என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்னைக்குக் காரணம்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 66,238 சாலை விபத்துகளில் 15,563 பேர் இறந்துள்ளனர். இதில் இரு சக்கர வாகன விபத்துகளினால் இறந்தவர்கள் 4,467 பேர். சென்னையில் மட்டும் கடந்தாண்டு ஏற்பட்ட சாலை விபத்து மரணங்கள் 1,247. இவர்களில், இரு சக்கர வாகனங்கள் மூலம் ஏற்பட்ட சாலை விபத்துகளினால் இறந்தவர்கள் 417 பேர். காயமடைந்தவர்கள் 3,403 பேர். இந்த ஆண்டு இதுவரை 236 பேர் இறந்திருக்கிறார்கள். 2,161 பேர் காயமடைந்திருக்கிறார்கள். சென்னையில் மொத்த விபத்தில், ஆண்டுக்கு 8.3% விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்களுக்குக் காரணம் இருக்கிறது. சென்னையில் மட்டும், இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்களில் 30% முதல் 40% வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்று. 16 வயது நிரம்பாதவர்கள் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களையும், 18 வயது நிரம்பாதவர்கள் கியருடன் கூடிய வாகனங்களையும் ஓட்டுவதற்கு உரிமம் பெறத் தகுதியில்லாதவர்கள். மோட்டார் வாகனச் சட்டம் 181ஆவது பிரிவின்கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். மோட்டார் வாகனச் சட்டம் இருந்தும்கூட, தங்களது 13 வயது மகனோ, மகளோ இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர் அனுமதிப்பதும், தங்கள் குழந்தை பிஞ்சிலேயே பழுத்துவிட்டதைப் பெருமையாகக் கருதுவதும்தான், இந்த உயிரிழப்பு அனைத்திற்கும் காரணம்.

சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், இந்தப் பிரச்னையை முறையாக அணுக முற்பட்டிருப்பதுடன், பள்ளிகள்தோறும் போக்குவரத்துப் போலீஸார் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த உத்தரவிட்டிருப்பதும் பாராட்டுதற்குரியது. சட்டம் போட்டோ, மிரட்டியோ இந்தப் போக்கைத் தடுத்துவிட முடியாது. பெற்றோர்களுக்குப் பொறுப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே மாற்றம் ஏற்படுவது சாத்தியம்.

பெற்றோர்களால் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தையை, சமுதாயம் தண்டித்துப் பாடம் கற்பிக்கும் என்பதை தாய், தந்தையர் உணர்ந்தாக வேண்டும்!

உஷார்.. உஷார்... உயர் ரத்த அழுத்தம் - உங்களுக்கு 40 வயசாகிடுச்சா..?

மிதமிஞ்சிய ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்க வாதம், மூளையில் ரத்தக்குழாய் வெடிப்பு, அறிவுத்திறன் குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்தாலும், கால் தசைப்பிடிப்பு, தலைசுற்றல், உறக்கமின்மை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

 அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவர்களால் தங்களுடைய ரத்த அழுத்தத்தை மருந்தில்லாமல் இயற்கையாகவே குறைக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. மருந்துகளுக்கு பதிலாக இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


ரத்த அழுத்தம் குறைக்கும் முறை குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது, 

மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற தியானப் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைக்க இந்தப் பயிற்சிகள் உதவும். மெதுவாக மூச்சு விட்டபடி மென்மையான பாரம்பரிய இசையை தினமும் அரை மணி நேரத்திற்கு கேட்டால் ரத்த அழுத்தம் குறையும். ‘காஃபின்‘ நீக்கப்பட்ட காபி, சோயா, கொழுப்பில்லாத பால் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களையோ, காய்கறிகளையோ சாப்பிடுவது ரத்த அழுத்தம் குறைய உதவும்.

ஒருநாளைக்கு 3 கப் செம்பருத்தி டீ குடித்தவர்களுக்கு இதயத்தை பாதிக்கும் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள், ஆக்ஸிஜனை அதிகத் திறனோடுப் பயன்படுத்த இதயத்துக்கு உதவுகிறது. இதனாலும் இரத்த அழுத்தம் குறைகிறது. உணவில் உப்பைக் குறைப்பது ரத்த அழுத்தத்திற்கு மிக நல்லது. மேற்சொன்ன விஷயங்களை கடைபிடித்து ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற கொடுமையான நோய்களிலிருந்து உங்களை உஷாரா பார்த்துக்கோங்க.

“டீஸருக்கு வெற்றி விழா கொண்டாடும் போதே தெரியும், நீங்க பெருசா பல்பு வாங்குவீங்கன்னு”

சிங்கம்-2 படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் அஞ்சான். இந்த படம் டான் கதையில் உருவாகியுள்ளது. விஜய் நடித்த தலைவா படம் போன்று மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய பப்ளிசிட்டிகள் முடுக்கி விடப்பட்டு, தமிழகத்தின் முக்கியமான தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தியேட்டர் ரெஸ்பான்ஸை அறியும் நோக்கத்துடன் படம் வெளியான அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தேவி தியேட்டர் வளாகத்திற்கு அஞ்சான் படத்தை இயக்கியுள்ள டைரக்டர் லிங்குசாமி விசிட் அடித்தாராம்.


படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஓரமாக நின்று ரசிகர்கள் எந்த மாதிரியான காட்சிகளுக்கு எந்த மாதிரி ரியாக்சன் செய்கிறார்கள் என்பதை அறிந்தவர், படம் முடிகிற நேரத்தில் தியேட்டருக்கு வெளியே சில நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தாராம்.

ஆனால், அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட சில ரசிகர்கள், தூரத்தில் நின்றபடியே படம் ரொம்ப போர் என்று கத்திக்கொண்டே சென்றார்களாம். அதைக்கேட்ட லிங்குசாமி பலத்த அதிர்ச்சியடைந்து விட்டாராம். அதோடு, இதற்கு மேலும் இங்கு நின்றால் சரிவராது என்று உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து வெளியேறி விட்டாராம்.

கிரிகெட்டை என் உயிர்மூச்சாக நினைத்து நான் வாழ்ந்த காலம் உண்டு

கிரிகெட்டை என் உயிர்மூச்சாக நினைத்து நான் வாழ்ந்த காலம் உண்டு. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வந்தபோது ஒரு முறை என் காலில் பலத்த அடிபட்டு விட்டது. அதன்பிறகுதான் சினிமாவில் என் கவனம் திரும்பியது என்கிறார் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு.

* சினிமாவில் என்டரியாகி 5 ஆண்டுகளில் என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்..?

எதுவும் சாதித்திருப்பதாக நினைக்கவில்லை. நான் சாதிக்க வேண்டியது இனிமேல்தான் உள்ளது. இதுவரை விஷ்ணு என்றொரு நடிகன் சினிமாவில் இருப்பதை அவ்வப்போது ஒரு படம் மூலம் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் இனிமேல் எனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று இப்போது களமிறங்கியிருக்கிறேன். அதனால், இதுவரை பார்த்த விஷ்ணுவுக்கும், இனிமேல் பார்க்கப்போகிற விஷ்ணுவுக்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கும்.

* இனிமேல் விஷ்ணுவின் ரூட் என்னவாக இருக்கும்..?

இதுதான் எனது ரூட். இந்த மாதிரியான கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டம் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான கதைகள். அது லவ்வோ, ஆக்சனோ, செண்டிமென்டோ, காமெடியோ, திரில்லரோ எதுவாக இருந்தாலும் அந்த கதையில் எனக்குரிய கதாபாத்திரமாகவே மாறி நடிப்பேன். எந்த அளவுக்கு என்னால் மாறுபட்ட நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முழுசாக இன்வால்வ்மென்டோடு நடிப்பேன். படத்துக்குப் படம் எனக்குள் இருக்கும் பெஸ்ட் அவுட்புட்டை கொடுப்பேன்.

* நீர்ப்பறவையில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது..?

சதா குடிபோதையில் இருக்கும் வேடம். நிஜத்தில் நான் குடிக்க மாட்டேன். அதனால், அந்த படத்திற்கு நடிப்பதற்கு முன்பு குடிகாரர்கள் எப்படியெல்லாம் நடப்பார்கள், பேசுவார்கள் என்பதை நேரில் சென்று பார்த்து அதற்கேற்ப நடித்தேன். அதற்கு முன்பு வரை வெண்ணிலா கபடிக்குழு, பலே பாண்டியா, துரோகி, குள்ள நரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தைப்பொறுத்தவரை நான் ஓரளவு நடித்திருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

அதற்கு முன்பு நான் நடித்த படங்களில் எனது நடிப்பை யாருமே பாராட்டியதில்லை. ஆனால் நீர்ப்பறவை படத்தைப்பார்த்து விட்டுத்தான் பலர் பாராட்டினார்கள். இருப்பினும் என்னை அப்படி நடிக்க வைத்தது சீனுராமசாமி சார்தான். அதனால் அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

* முண்டாசுப்பட்டி ஹிட்டுக்கு பிறகு உங்களது மார்க்கெட் நிலை என்ன..?

முண்டாசுப்பட்டி எனது கேரியரில் எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்த படம். கதை கேட்கும்போது அது ஒரு புதுமையான கதைக்களமாக இருந்தது. அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்த அப்படம் அதிரடியான வெற்றியை எட்டியது. இந்த படத்திற்கு பிறகுதான் விஷ்ணுவை வித்தியாசமான கதைகளுக்கும் யூஸ் பண்ணலாம் போலிருக்கே என்று டைரக்டர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அதோடு, எனக்கும், இனிமேல் நார்மலாக இல்லாமல், வித்தியாசமான கற்பனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதனால் இப்போது வித்தியாசமான கதைகளாக தேடிக்கொண்டிருக்கிறேன்.

* சுசீந்திரன், சீனுராமசாமி படங்களில் மீண்டும் நடிப்பது பற்றி..?

என்னை நடிகனாக்கியவர் சுசீந்திரன் சார்தான். அதையடுத்து இப்போது அவரது ஜீவா படத்திலும் நடிக்கிறேன். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதை. ஏற்கனவே நான் கிரிக்கெட் பிளேயர்தான். சினிமாவில் நடிகனாவதற்கு முன்பு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தேன். அப்போது பலதடவை காயம்பட்டிருக்கிறேன். ஒரு போட்டியின்போது எனது காலில் பலத்த அடிபட்டு, பல மாதங்களாக நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றேன். அதன் பிறகுதான் வீட்டில் நான் கிரிக்கெட் விளையாட தடை போட்டு விட்டனர்.

அதன் காரணமாகத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். அந்த வகையில் இந்த ஜீவா படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்வதை விட ஒரு காலத்தில் எனது உயிர்மூச்சாக இருந்த கிரிக்கெட் விளையாட்டு கதையில் மறுபடியும் நடிக்கிறேன் என்பது எனக்கு சொல்ல முடியாத சந்தோசத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது. அதனால் இந்த படத்தில் ஒருநிஜ கிரிக்கெட் வீரனாகவே வாழ்ந்திருக்கிறேன்.


* விஜயசேதுபதியுடன் நடித்த அனுபவம் எப்படி..?

நான் ஏற்கனவே துரோகி என்ற படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜயசேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்கிறேன். எந்தவித ஈகோவும் இல்லாமல் நல்ல நண்பனாக பழகும் அவர், இயல்பாக நடிக்கிறார். நாங்கள் இணைந்து நடிக்கும் காட்சிகளில் முன்கூட்டியே ஒருமுறை ரிகர்சல் பார்த்து விட்டே நடிக்கிறோம்.

அந்த வகையில், ஸ்ரீகாந்த்துடன் நடித்தபோது அவர் என்னைவிட சீனியர் என்பதால் ஒருவித பயம் இருந்தது. ஆனால் விஜயசேதுபதியுடன் அப்படியில்லை. நல்ல நண்பனாக இருப்பதால், ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறோம்.

* சில மேடைகளில் விஷாலை ரொம்ப கலாய்க்கிறீர்களே..?

சினிமாவில் உள்ள எனது நண்பர்களில் விஷால் ரொம்ப நெருக்கமானவர். அதோடு ரொம்ப அந்நியோன்யமாக பழகுவார். அதனால்தான் அவர் விசயத்தில் நான் அதிக உரிமை எடுத்துக் கொள்வேன். பாண்டிய நாடு படத்தின் ஆடியோ விழாவில் கூட, லட்சுமிமேனனை ஒருமுறை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவரை கலாய்த்தேன்.

ஆனால், அதற்கு பதிலாக, முண்டாசுப்பட்டி படத்தின் வானொலி ப்ரமோஷனில் நானும், நந்திதாவும இருந்தபோது, ரசிகர் போன்று போனில் பேசிய விஷால், நீங்களும், நந்திதாவும் ஸ்பாட்டில் ரொம்ப நெருக்கமாக பழகினதா கேள்விப்பட்டேனே என்று கேட்டு என்னை கலாய்த்து விட்டார். இதெல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காகத்தான். நண்பர்களுக்குள் இதுகூட இல்லைன்னா எப்படி.

* உங்களுடன் இதுவரை ஜோடி சேர்ந்த நடிகைகளில் எந்த நடிகை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..?

எல்லோரையும் எனக்கு பிடிக்கும். சரண்யா மோகன்தான் எனது முதல் பட நாயகி. எனக்கு முன்பே அவர் சில படங்களில் நடித்தவர். ஆனால் எனக்கு அதுதான் முதல் படம். அந்த வகையில் அந்த படத்தில் நடித்தபோது எனக்கு நிறைய உதவிகரமாக இருந்தார் அவர். அதேபோல், அதன்பிறகு நடித்த பியா, ரம்யாநம்பீசன், சுனைனா, நந்திதா என பலர் நடித்தனர். என்னுடன் நடித்த நேரத்தில் எல்லோருமே என்னுடன் நல்லபடியாகத்தான் பழகினார்கள் அதனால் அனைவரையுமே எனக்கு பிடிக்கும் என்கிறார் விஷ்ணு.

விஷால் படத்தில் மாஜி ஹீரோயின்கள்..!

நட்புக்காக நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். என்றாலும், பார்த்திபன் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்திருக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், பரத், விமல், சாந்தனு, அமலாபால், டாப்சி என ஒரு நட்சத்திர பட்டாளமே நட்புக்காக நடித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புதுமுகங்களை வைத்தே கம்பு சுற்ற போகிறேன் என்று களமிறங்கிய பார்த்திபனுக்கு கமர்சியல் பயம் ஏற்பட்டதையடுத்து, நட்புக்காக இந்த பட்டாளத்தை தனது கதைக்குள் களமிறக்கினார். இதுவே இப்போது அப்படத்திற்கு பெரிய விளம்பரமாகியிருக்கிறது.


இந்த நிலையில், அப்படத்தில்,. சுனாமியில் சிக்கிக்கொள்வது போன்று படமாக்கப்பட்ட முதல் காட்சியில் நடித்திருந்த விஷால் இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் ஆம்பள படத்திலும் பல பிரபலங்களை உள்ளே இழுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் நிலையில், பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அவரைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன், சிம்ரன், நதியா, கிரண் உள்ளிட்ட சில மாஜி ஹீரோயின்களையும் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஆம்பள என்ற டைட்டீல் ஆக்சன் ஸ்டோரி போல் தெரிந்தாலும், சுந்தர்.சியின் பிராண்ட் காமெடி கலாட்டாவும் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம்.

வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை..!

வீட்டுக்கடன் கொடுப்பதற்கு அனைத்து தரப்பு வங்கிகளும், வீட்டுவசதி நிறுவனங்களும் தாராளமய கொள்கையை கடைபிடிப்பதால் கடன் பெறுவதற்கான வழிமுறை எளிதாகி இருக்கிறது. கடனை திருப்பி செலுத்தும் தகுதி படைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது.

வட்டிவிகித முறை:- வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது கடனை சுலபமாக திருப்பி செலுத்த உதவும். பிற்காலத்தில் ஆதாயம் தருவதாகவும் அமையும். அந்த வகையில் வீட்டுக்கடன் விஷயத்தில் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது வட்டிவிகிதம் பற்றியது தான். ஏனெனில் வட்டிவிகிதமே வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் தொகையை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருக்கிறது.

 மற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை விட வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவுதான் என்றாலும் அதை சரியாக தேர்ந்தெடுத்தால் கூடுதல் ஆதாயத்தையும் பெற முடியும். பொதுவாக வீட்டுக்கடனுக்கு இரண்டு வகையான வட்டிவிகிதங்களே நடைமுறையில் இருக்கின்றன.

அவை:– நிலையான வட்டி விகிதம் (பிக்ஸட்), மாறுபடும் வட்டி விகிதம் (பிளோட்ட்டிங்). இவைகளில் நிலையான வட்டி வகிதம் அதிக மாறுதலுக்கு உட்படாதது. குறிப்பாக சுமார் மூன்று ஆண்டுகள் வரை நிலையாக இருக்கும். அதனால் மாதத்தவணை தொகையில் எந்த மாறுதலும் இருக்காது.

மாறுதலுக்கு உட்பட்டது:- தொடர்ந்து ஒரே தொகையையே செலுத்த வேண்டியிருக்கும். இது பட்ஜெட் போட்டு செலவு செய்பவர்களுக்கு பொருத்தமான வட்டிவிகிதமாக  இருக்கும். ஏனெனில் வீட்டுக்கடனுக்கு என்று மாதம் தோறும் ஒரு தொகையை நிரந்தரமாக ஒதுக்கிவைத்து விடலாம்.

மீதி தொகையில் திட்டமிட்டு குடும்ப செலவுகளை மேற்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளை கடந்த பிறகு பொருளாதார சந்தை நிலையை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும். அந்த வட்டிவிகிதமும் அடுத்த  மூன்று ஆண்டுகளுக்கு மேல் மாறுபடாமல் மாதத்தவணை தொகையை நிர்ணயிக்கும்.

 ஆனால் மாறுபடும் வட்டி விகிதம் அடிக்கடி மாறுதலுக்கு உட்பட்டது. அப்போதைய சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். இதன் தாக்கம் மாதத்தவணை தொகையில் வெளிப்படும். அதனால் மாதத்தவணை தொகை நிலையாக இருக்காது. சில மாதம் அதிகரிக்கும். சில மாதம் குறையவும் செய்யும். அதற்கு ஏற்ப மாதத்தவணை தொகையை செலுத்த வேண்டிவரும்.

தேர்வு செய்யும் முறை:- இந்த இரண்டு வட்டி விகிதங்களில் எது ஆதாயம் தருவதாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டுக்கடனை தேர்வு செய்ய வேண்டும்.

பொதுவாக நிலையான வட்டி விகிதத்துக்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும். அது மாறுபடும் வட்டி விகிதத்தை விட 1 முதல் 2 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். இதன் சதவிகித புள்ளி விவரம் வங்கிக்கு வங்கி மாறுபடவும் செய்யலாம்.

 கடனுக்கு ஒரு சதவீதம் அதிகமாக வட்டி செலுத்துவதாக இருந்தாலும் அது திருப்பிசெலுத்தும் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது வாங்கிய கடன் தொகையை விட வட்டிக்கு அதிகமாக பணம் செலுத்துவதாக இருக்கும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிலையான வட்டி விகித முறையில் மாதத்தவணை தொகை நிலையாக இருக்கும்  என்றாலும் செலுத்தும் தொகை  அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் தற்போதுள்ள சூழ்நிலையில் மாறுபடும் வட்டி விகிதமே லாபகரமாக  இருப்பதாக நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வட்டிவிகித குறைப்பு:- ஏனெனில் வட்டி விகிதம் பெரிய அளவில் மாறுபடாத நிலையில் இருக்கும் சமயத்தில் நிலையான வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுப்பது 2 சதவீதம் வரை கூடுதல் வட்டித்தொகையை செலுத்துவது ஆதாயத்தை குறைப்பதாகவே மாறுகிறது.  இதுதவிர வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் பெரிய அளவில் உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. வட்டி விகிதம் இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில் மாறுபடும் வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுக்கும்போது வட்டி விகிதம் குறைந்தால் அதன் பலனை உடனே அனுபவிக்கலாம்.

மாதத்தவணை தொகையை குறைவாகத்தான் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் நிலையான வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுத்தால் வட்டிவிகிதம் குறைந்தாலும் குறிப்பிட்ட 3 ஆண்டு வரையில் என்ன வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதோ அதுவே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

அதனால் வட்டி விகித குறைப்பு பலனை அனுபவிக்க முடியாமல் போய்விடும். எனினும் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். வட்டி விகிதத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப இறுதி முடிவு எடுப்பது ஆதாயம் தருவதாக அமையும்.

உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்

வேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பெங்களூர் ஜாலஹள்ளி, சிக்கபானவரா அப்பிகெரே பகுதியை சேர்ந்தவர் திலீப் (வயது 27). இவருடைய மனைவி ஆஷா (25). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப் அந்த பகுதியில் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இவர்களின் வீட்டிற்கு அருகே 26 வயதான பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மீனாவும், ஆஷாவும் பக்கத்து வீட்டில் வசித்து வருவதால் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

இதனால் ஆஷாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மீனா நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியது. இதுபற்றி கணவர் திலீப்பிடம் ஆஷா தெரிவித்துள்ளார்.

இதற்கு திலீப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நிறைவேற்ற கணவன், மனைவி இருவரும் ஒரு சதி திட்டம் தீட்டினார்கள். அப்போது தனது கணவருடன், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது தோழியான மீனாவை உல்லாசம் அனுபவிக்க வைத்து, அதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆஷா முடிவு செய்தார். இதுபற்றி திலீப்பிடம் ஆஷா தெரிவித்தார். இதற்கு திலிப்பும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி மீனாவை தனது வீட்டிற்கு ஆஷா அழைத்து சென்றார். அப்போது தன்னுடைய கணவருடன் உல்லாசம் அனுபவிக்கும்படியும், அதை தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் மீனாவிடம் ஆஷா கூறியுள்ளார். இதனை கேட்ட மீனா அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆத்திரமடைந்த மீனா, ஆஷாவுடன் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார்.

அப்போது ஆஷா திடீரென்று மீனாவை தனது கணவர் இருந்த அறைக்குள் தள்ளி, வெளிப்புறமாக கதவை பூட்டிக் கொண்டார். உடனே திலீப் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மீனாவை பலவந்தமாக 2 முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது. தனது தோழியுடன் கணவர் சல்லாபத்தில் ஈடுபட்டதை ஆஷா, அறையின் ஜன்னல் வழியாக பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் திலீப்பும், ஆஷாவும், நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால், உனது குழந்தை, கணவர் மற்றும் உன்னையும் கொலை செய்து விடுவதாக மீனாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மீனா வெளியில் யாரிடமும் கூறவில்லை.

பின்னர் மீனா தனது குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று சில நாட்கள் இருந்து விட்டு, மீண்டும் பெங்களூருக்கு திரும்பி வந்தார். இதற்கிடையில், கடந்த 10–ந் தேதி திலீப்பும், அவரது மனைவி ஆஷாவும் மீனாவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு மீனா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில், மீனாவிடம் தனது கணவருடன் மீண்டும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆஷா சொன்னதாக தெரிகிறது.

இதனை கேட்ட மீனா கடும் ஆத்திரம் அடைந்ததுடன், ஆஷாவிடமும், திலீப்பிடமும் சண்டை போட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து மீனா தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதன் பின்னர் கடந்த 11–ந் தேதி கங்கமனகுடி போலீஸ் நிலையத்தில் மீனாவின் கணவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பையும், அவரது மனைவி ஆஷாவையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களுர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்ற வினோத ஆசையில் தனது தோழியை கணவனுக்கு மனைவியே விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

125 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், ஹெராத்

* கொழும்பில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 33.1 ஓவர்களில் 127 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் இடக்கை பவுலர்களில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர் என்ற அபூர்வமான சிறப்புக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 1889–ம் ஆண்டு இங்கிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜானி பிரிக்ஸ் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் உலக சாதனையாக இருந்தது. 125 ஆண்டு காலமாக ஜானி பிரிக்ஸ் வசம் இருந்த இச்சாதனையை நேற்று 36 வயதான ஹெராத் முறியடித்தார்.

* 137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தப்படுவது இது 18–வது நிகழ்வாகும். இதில் இங்கிலாந்தின் ஜிம் லாகெர், இந்தியாவின் அனில் கும்பிளே ஆகியோர் இன்னிங்சில் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.

* சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரனுக்கு பிறகு (2 முறை 1998–ம் ஆண்டு மற்றும் 2002–ம் ஆண்டுகளில்) இன்னிங்சில் 9 விக்கெட் கைப்பற்றிய 2–வது இலங்கை பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் ஹெராத் பெற்றார்.

* பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை பவுலர் என்ற பெருமையை முரளிதரனிடம் (16 டெஸ்டில் 80 விக்கெட்) ஹெராத் தட்டிப்பறித்துள்ளார். அவர் அந்த அணிக்கு எதிராக இதுவரை 17 டெஸ்டில் விளையாடி 83 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் எடுத்தவர்களின் வரிசையில் இந்தியாவின் கபில்தேவ் (29 டெஸ்டில் 99 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (15 டெஸ்டில் 90 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஹெராத் இருக்கிறார்.

காப்பகம்