Showing posts with label பயனுள்ள தகவல். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல். Show all posts

Thursday, October 23, 2014

உடலில் எந்த உறுப்புகளை தானமாக பெற முடியும்..?

கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புகளையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.


ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்),

அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.

Thursday, October 2, 2014

விஷன் தமிழ்நாடு 2023 ஆப்ஸ் அறிமுகம்..!


தமிழ்நாட்டின் வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம் “விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.

இவர் விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை “விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச் சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி யிருக்கிறேன்” என்கிறார் இவர்.

போனில் விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர் சாராசரி ஆண்டு வருமானத்தை

2023ல் 6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.

விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.

அதிக நேரம் தூங்குவது நல்லதா..? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!


அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.

இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.

அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - இதைப்படிச்சு பாருங்க..!

நான் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். தாவரவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழி பிரீத்தி செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.

உயிரோடு செம்பருத்தி:- 32 மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் காகிதப் பூக்களாக மட்டுமே இருந்தன. அவள் வரைந்ததோ கருப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. அவளுடைய செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் அவளுடையதையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் புரியவில்லை.

எங்கள் ஆசிரியர் நிச்சயம் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. எல்லாரும் ரெக்கார்ட் நோட்டுகளைச் சமர்ப்பித்தோம்.

காகிதப் பூ போதும்:- எல்லோருடைய நோட்டுகளையும் ஆசிரியர் பார்த்தார். ஒவ்வொருவராக அழைத்துத் தன் கருத்தைச் சொல்லி ரெக்கார்ட் நோட்டுகளைக் கொடுத்தார். கடைசியாகப் பிரீத்தியின் செம்பருத்தி வரைந்த பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு “பிரீத்தி…. இங்கே வா” என்றார். நானும் பிரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். பெருமிதத்தோடு பிரீத்தி அருகில் சென்றாள். “நீ வரைந்த படம் தவறு. ஆங்காங்கே தவறு குறி போட்டிருக்கிறேன். புத்தகத்தைப் பார்த்து அவற்றை எல்லாம் சரி செய்து மீண்டும் வரைந்து கொண்டு வா” எனக் கோபமாகச் சொல்லி நோட்டைக் கையில் திணித்தார்.

அப்பொழுதுதான் நாங்கள் வரைந்த செம்பருத்திக்கும் பிரீத்தியின் செம்பருத்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் எனக்குப் புரிந்தது. நாங்களோ புத்தகத்திலுள்ள மலரை அச்சு வார்த்தாற் போல வரைந்திருந்தோம். அவளோ தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியைப் பார்த்து, பார்த்து ரசித்துத் தன் பென்சிலால் ஷேடிங் எல்லாம் கொடுத்துத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

அதைக் கண்ட ஆசிரியர் பூரித்துப் போய் அவளைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஒரு வட்டத்துக்குள் மட்டும் சிந்திக்கும் மனசால் பிரீத்தியின் தனித்துவத்தை அங்கீகரிக்க முடியவில்லை. அவளுடைய அபாரத் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவில்லை. அந்த ஆசிரியர்க்குத் தன்னுடைய கற்பிதங்களுக்கு அப்பால் பரந்து விரிந்த முறையில் காணும் பார்வை இல்லை.

எது புத்திசாலித்தனம்..? - இப்படித்தான் பொதுவான அளவுகோல்களால்தான் புத்திசாலித்தனம் வரையறை செய்யப்படுகின்றது. புத்திசாலித்தனம் என்பது கற்றுக்கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவுகோல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இவை மட்டும்தான் புத்திசாலித்தனமா? சொல்லப் போனால் மனப்பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹாவர்ட் கார்னர் என்னும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்ற ஒன்று தனித்துத் தோன்றுவதோ, இயங்குவதோ கிடையாது. அது ஒருவிதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் (problem solving) ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல், இவைதான் அந்தத் திறன் என 1983- ல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்தார் ஹாவர்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் (Frames of Mind) என்னும் புத்தகம் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உலுக்கும் வல்லமை படைத்தது. ஒருவருக்குக் கல்வி பல விஷயங்களைக் கற்றுத்தருவதை விடக் கற்பனைத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலுவாகப் பேசுகிறார் இவர்.

பன்முகப் புத்திக்கூர்மை:- மனித மூளையின் செயல்பாட்டின் பல நுணுக்கங்களைத் தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹாவர்ட். அவற்றுள் நம் அனைவரையும் அசரவைக்கும், மகிழ்விக்கும் ஒரு கண்டுபிடிப்பு உள்ளது. மனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்முகப் புத்திக்கூர்மை (Multiple Intelligence) நிச்சயமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலும் எட்டு விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும் என்றார் அவர். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முகப் புத்திக்கூர்மைகள் இருக்கின்றன.

பன்முகப் புத்திக்கூர்மை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுத்துப் பலப்படுத்தவும் முடியும் அல்லது கவனிப்பார் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யவும் முடியும். படித்தவற்றை மனதில் நிறுத்தி அதை அப்படியே எழுதுவதோ, ஒப்பிப்பதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அதைத் தவிர மேலும் பல விதமான அறிவுத் திறன்களும் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - மொழித் திறன் (Verbal-Linguistic Intelligence), கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்(Mathematical-Logical Intelligence), இசைத் திறன் (Musical Intelligence), காட்சி மற்றும் வெளித் திறன்(Visual-Spatial Intelligence), உடல்கூறு மற்றும் விளையாட்டுத் திறன் (Bodily-Kinesthetic Intelligence), மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Interpersonal Intelligence), சிந்தனைத் திறன் (Intrapersonal Intelligence), இயற்கை சார்ந்த திறன் (Naturalistic Intelligence) என எட்டு விதமான புத்திக்கூர்மைகளைப் பற்றி அவர் பேசுகிறார்.

இவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டுதான் இருக்கின்றன. ஒருவருக்குச் சில திறன்கள் பிரகாசமாக இருக்கும். மற்றொருவருக்கு வேறு சில திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். வரும் வாரங்களில் உங்கள் திறனைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்!

Wednesday, October 1, 2014

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...

காஜூ மர்சு...

ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.

ஹாட் டாக்ஸ்...



அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.


நம்மூரு கப்பக்கிழங்கு....


அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ருபார்ப் இலைகள்...



ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.

சன்னாக்‌ஷி...


அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.

குரங்கு மூளை..




நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.


புகு மீன்...


புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கி பழம்...


ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.

விஷக் காளான்...



ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி..?

தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள்...?


1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு – பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

Thursday, September 25, 2014

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது..?

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தேகருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா..?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை  நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள். அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச்  சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை.


இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும் விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள்.  இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை  பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப்  போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும்,  மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால்  இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும்.  இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என  பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக்  குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா..? - இதைப்படிங்க..!

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.

தன்னம்பிக்கைக்கான பண்புகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.

2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.

3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள்.

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும்.

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது.

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

தொடர் முயற்சி

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண

ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.

Monday, September 22, 2014

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க..!

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்... இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும்.

இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும்.

கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு 'எம்பிரியோ’ என்று பெயர். மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் 'ஃபீட்டஸ்’ என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது.

எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது; மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க..!

அது இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ். பல வருடங்களாக அந்த ஒரே பஸ், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மார்க்கமாக சென்று கொண்டிருப்பதால், அந்த பஸ் ரொம்பவே தள்ளாடிவிட்டது. இழுத்து இழுத்து அது செல்வதால் விவரம் தெரிந்த பயணிகள் அதில் ஏறமாட்டார்கள். அநேகமாக நாலைந்து பயணிகள் ஏறுவார்கள். ஏறியதும் ஆளுக்கொரு சீட்டில் கால் நீட்டி படுத்துவிடுவார்கள்.

அன்று இரவு பத்து மணி இருக்கும். மழை இதோ இப்போதே வந்துவிடுவேன் என்பதுபோல் மிரட்டிக்கொண்டிருந்தது. 60 வயதைக் கடந்த முதியவர், அந்த பஸ்சில் ஏறினார். முன் பகுதி இருக்கைகளில் நாலைந்து பேர் இருந்தும், படுத்தும் தூங்கிக்கொண்டிருக்க இவர் பின்பகுதியில் போய் அமர்ந்துகொண்டார்.

பஸ் 10, 15 கிலோமீட்டர் கடந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை ஏற்றிவிட்டார்கள். அவளுக்கு 30 வயதிருக்கும். நாகரிக தோற்றம். அங்கும் இங்கும் பார்த்தவள் முகத்தை சுழித்தாள். அந்த முதியவரை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். பாதுகாப்பு தேடுபவள்போல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள். அவருக்கும் தூக்கம் வரும் வரை பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம்.   கண்டக்டர் வந்தார். சற்று தூரத்தில் உள்ள ஊர் ஒன்றுக்கு டிக்கெட் எடுத்தாள்.

முதியவரிடம் பேசிக்கொண்டே வந்தாள். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். தனது நண்பர் ஒருவர் கிராமத்தில் இறந்துவிட்டார். இறுதிக் காரியம் முடித்துவிட்டு திரும்பி வருகிறேன் என்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் அவர் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் தெரிவித்து விட்டார். அந்த அளவுக்கு பக்குவமாக கேள்விகளைப் போட்டு பதில்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவருக்கு தூக்கம் வருவது போலிருந்தது. அவளுக்கு ஒன்றிரண்டு முறை போன் வந்துகொண்டிருந்தது. அதை எடுத்து பேசாமல் அவள் மெசேஜ் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தாள். பஸ் அப்போதுதான் திணறி திணறி இருட்டான பகுதிக்குள் புகுந்து சற்று வேகமெடுத்திருந்தது.

திடீரென்று அவள் புடவை முந்தானையை சரிய விட்டாள். ஜாக்கெட்டின் முதல் பட்டன் பகுதியை இழுத்து கிழித்தாள். முதியவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, அவரோடு நெருக்கமாக அமர்ந்தாள். ‘உங்களை பற்றிய முழுவிவரமும் எனக்கு தெரியும். சமூகத்தில் மரியாதையான ஆள் நீங்க. என் உடை இப்படி ஆவதற்கு நீங்கதான் காரணம் என்று இப்பவே என்னால் கூச்சல்போட்டு பஸ்சை நிறுத்த முடியும். பஸ் போலீஸ் நிலையத்திற்கு போகும். உங்க மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்திடும்..’ என்று மிரட்டும் தொனியில் பேசினாள்.

அவர் கெட்ட கனவு கண்டவர்போல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெலவெலத்து போனார். அந்த இரவு நேரத்திலும் வியர்த்தது.

‘மரியாதையாக கையில் கிடக்கிற வாட்சையும், மோதிரத்தையும் கழற்றி கொடுங்க..’ என்றவள், அவரது சட்டை காலரை நீக்கி கழுத்தை பார்த்தாள். பளிச்சென்ற தங்க சங்கிலியும் கிடந்தது. ‘எல்லாத்தையும் கொடுத்திடுங்க. நான் அடுத்த பஸ் ஸ்டாப்பில் சைலண்டாக இறங்கி போயிடுறேன்..’ என்றாள்.

‘தராவிட்டால் என்ன பண்ணுவே?’ பயத்துடன் வாய் குழற கேட்டார்.

அடுத்த ஊர் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்திடும். அங்கே என்னை எதிர்பார்த்து என் ஆட்கள் நிற்கிறார்கள். இப்பவே நான் கூச்சலை ஆரம்பித்து, அந்த நிறுத்தம் வரும் வரை தொடருவேன். அங்கே பஸ்சில் ஏறும் அவர்கள், உம்மை நையப்பு டைத்துவிடுவார்கள். தட்டிக்கேட்கக்கூட நாதி இருக்காது. கிழவன் பஸ்சில் இளம் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்டான் என்றால் ஊரே நம்பும். உடம்பை புண்ணாக்க போகிறாயா?’ என்று அவள் ஒருமையில் பேசி, தான் கைதேர்ந்த திருடி என்பதை அவருக்கு புரியவைத்தாள்.

அவர் அப்படியே குத்துக்கல் போல் இருக்க, அவளே மோதிரம், தங்க சங்கிலி, வாட்ச் எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டாள்.

அமைதியாக இருந்த அவர் கூச்சல் போட்டு எல்லோரையும் எழுப்பிவிடலாமா? என்று யோசித்தபோது அவள், ‘கண்டக்டர் ஸ்டாப் வந்துடுச்சி’ என்று கத்தினாள்.

பஸ் மெல்ல மெல்ல குலுங்கி நிற்க முயற்சிக்க, தூரத்து வெளிச்சத்தில் ரோட்டில் மூன்று தடியன்கள் நின்றிருந்தனர். அவர்கள் அருகில் ஒரு காரும் நின்றிருந்தது. ‘சத்தம் போட முயற்சிக்காதே. மூன்று பேரும் பஸ்சில் ஏறி உன்னை பந்தாடிவிடுவார்கள். நீ கிழித்த ஜாக்கெட் அப்படியே இருக்கிறது பார்த்தாயா!’ என்றாள்.

பஸ் நின்றது. வேகமாக இறங்கிய அவள், அந்த தடியர்களிடம் இவரை அடையாளங்காட்டினாள். அவர்கள் சைகையால் ‘வாயை பொத்திக்கொண்டு செல்’ என்று சைகையால் மிரட்டினார்கள். அவள் தடியர்களோடு காரில் ஏறினாள். இவர் இருந்த பஸ்சும் கிளம்பியது.

அவர்கள் திட்டமிட்டு காரில் வந்து, அவளை பயன்படுத்தி வழிப்பறி செய்திருக்கிறார்கள். காரியம் முடிந்ததும், அதே காரில் முந்திச் சென்று காத்திருந்து, அவளை ஏற்றிச்சென்றுவிட்டார்கள்.

இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க!

Thursday, September 11, 2014

ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்..!

ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.

ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு நேராக முடியாது என ஆண்களால் கூற முடிவதில்லை. அதனால் அதற்கு சாமர்த்தியமான வழிகளை கையாளுகின்றனர். ஆணுறை என்பது உடலுறவு இன்பத்திற்கு தேவையற்ற இடைஞ்சல் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அதனை தவிர்க்க அவர்கள் கூறும் காரணங்கள் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது.

ஆண்கள் ஆணுறை அணியவில்லை என்றால், அவர்களிடம் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் மற்றும் கர்ப்பமாகி விட்டால், அவர்களை முதலில் குறை கூறுவதும் ஆண்களாக தான் இருக்கும். பெண்களுக்கு உண்டாகும் STD பிரச்சனைகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அதனால் பெண்களின் பாதுகாப்பும் வருங்காலமும் ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. சரி அதனை பயன்படுத்தாமல் இருக்க, அப்படி என்ன காரணங்களை தான் ஆண்கள் அடுக்குகிறார்கள் என பார்க்கலாமா?

ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும் பிளாஸ்டிக் உணர்வு உடலுறவின் சுகத்தை முழுமையாக அழித்து விடுகிறது என்பது பல ஆண்கள் கூறும் காரணமாகும். அதனால் ஆணுறை இல்லாமல் தொடர பெண்களை அவர்கள் சமாதானப்படுத்த முயல்வார்கள்.

பாதுகாப்பான நாட்கள் தான்; ஆனால் STD பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ஆண்களே? பெண்களுக்கு பாதுகாப்பான நாட்கள் இருக்கிறது என்பதை காரணம் காட்டி ஆண்கள் ஆதாயம் தேட முயல்வார்கள். இதனால் அவர்கள் அந்த நாட்களில் ஆணுறை பயன்படுத்த வேண்டியதில்லை பாருங்கள்.

ஆணுறைகள் 3% தோல்வி வீதத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆண்கள் அந்த வீதத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இதை ஒரு காரணம் காட்டி, என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும், அது கடவுள் கையில் தான் உள்ளது என தத்துவமும் பேசுவார்கள்.

ஆனால் STD-க்கு எதிராக மாத்திரைகள் பாதுகாப்பை அளிக்காது தானே? மேலும் அதில் 20% தோல்வி வீதமும் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த சூட்டில் இருக்கும் ஆணிடம் இதை கூறி பாருங்கள்; கண்டிப்பாக அவருக்கு காது கேட்காது.

இந்த அனைத்து பொய்யான சாக்குகளுக்கு பிறகு, பெண்களின் திருப்தியின் மீது அக்கறை உள்ளவரை போல் ஆண்கள் நடிப்பார்கள். ஆண்கள் ஆணுறை அணிந்து கொண்டால், பெண்களால் முழுமையான திருப்தியை அடைய முடியாது என்றும் நம்ப வைப்பார்கள்.

உங்களால் முடியலாம், ஆனால் உங்கள் கட்டுப்பாடுகளின் தரத்தின் மீது சோதனை மேற்கொள்வது நல்லதாகும். தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற பெரிய ஈகோவை ஆண்கள் கொண்டுள்ளனர். அதனால் விந்தணு வெளிப்படும் வேளையில் தங்கள் ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதாக மார்த்தட்டி கொள்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்வகையான விஷயங்களை சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்; செய்வதற்கு???

'காதல்' மற்றும் 'பாதுகாப்பான உடலுறவு' ஆகிய இரண்டும் தனித்தனி கருத்துக்கள் ஆகும். ஆனால் ஆணுறை பயன்பாட்டில் இருந்து தப்பிக்க வேண்டி வரும் போது, ஆண்கள் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்திடுவார்கள்.

என்னங்க இது; கண்டிப்பாக குழந்தையை வளர்க்கும் செலவை விட அல்லது கரு கலைப்பு செய்யும் செலவை விட ஆணுறையின் செலவு குறைவு தான்.

சில நேரங்களில் புத்தியில்லாமல் பைத்தியகாரத்தனமாக ஆண்கள் நடப்பார்கள். இயல்பாக பயன்படுத்தும் கருத்தடை தோல்வியில் முடியும் போது அவசர சூழ்நிலைகளுக்கு மட்டும், காலை நேரத்திற்கு பின் இந்த மாத்திரைகள் உண்ண வேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விரிவாக சொல்லுங்களேன். நினைத்த நேரம் இந்த மாத்திரைகளை விழுங்க முடியாது.

உங்கள் ஆணிடம் பாதுகாப்பைப் பற்றி பேச தொடங்கினால், உடனே நம்பிக்கை பற்றிய பிரச்சனையாக்கி விடுவார்கள். இந்த பிரச்சனையை இழுத்தால் அதற்காக நீங்கள் ரொம்பவும் வருத்தப்படாதீர்கள். ஆணுறையை தவிர்க்கவே இந்த சீனெல்லாம் போடுகிறார்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்..!

22 - ravi temple 2
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?
அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

22 - ravi temple 1
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.


கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Wednesday, September 10, 2014

நீங்க தூங்குற 'லட்சணத்திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்...!

இரவில் தூங்கும் போது, நாம் எப்படி தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பது தெரியாது. ஆனால் ஒருவரின் குணத்தை அவரது தூங்கும் நிலையைக் கொண்டே சொல்ல முடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையில் தூங்கினால் மிகவும் பிடிக்கும். அப்படி எந்த நிலை பிடிக்கிறதோ, பெரும்பாலும் அந்த நிலையிலேயே இரவிலும் தூங்குவார்கள்.

இப்போது எந்த நிலையில் தூங்கினால், என்ன குணம் இருக்கும் என்பதைக் கொடுத்துள்ளோம். இவைகளைப் படித்துவிட்டு, இரவில் தூங்கும் போது உங்கள் துணை அல்லது வீட்டில் உள்ளோரிடம் எந்த நிலையில் படுக்கிறீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். அதற்கு சைக்காலஜிஸ்ட் ஒருவர் சொல்வதாவது, ஒருவர் தூங்கும் போது உடலானது ஒருவரது சுபாவத்திற்கு ஏற்றவாறு மாறும் என்று சொல்கிறார். சரி, இப்போது எந்த நிலையில் படுத்தால், என்ன குணம் உள்ளவர்கள் என்று பார்ப்போமா..!

படுக்கும் போது, படத்தில் காட்டியவாறு சுருங்கிப் படுப்பவர்களானால், அவர்கள் தனிமையை விரும்பமாட்டார்கள். அவர்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம். மேலும் அவர்கள் வெளித்தோற்றத்தில் கரடுமுரடானவர்களாக இருந்தாலும், மன அளவில் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் அதிக வெட்கப்படும் குணம் உடையவர்கள். அதனால் தான் பெரும்பாலான பெண்கள், இந்த நிலையில் படுக்கிறார்கள்.


சிலர் தூங்கும் போது உடலை போர்வையால் போர்த்தி தூங்குவார்கள். அத்தகையவர்களிடம் ஒரு தனித்துவமான குணம் என்றால், அவர்கள் எந்த ஒரு உணர்ச்சியையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தமாட்டார்க்ள. மேலும் தனக்குள்ள கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

தூங்கும் போது கை மற்றும் கால்களை விரித்துக் கொண்டு தூங்கினால், அவர்கள் எதையும் நன்கு கவனிப்பார்கள். மேலும் நண்பர்களுடன் எப்போதும் இருக்க விரும்புவார்கள்.

குப்புறப் படுப்பவர்களானால், அவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மேலும் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பாதவர்கள்.

பக்கவாட்டில் படுப்பது பிடிக்கும் என்பவர்கள், எதற்கும் கவலைப்படாதவர்கள் மற்றும் எல்லாவற்றிலும் குற்றம் குறைகளை சொல்வார்கள்.

Tuesday, September 9, 2014

பெண்கள் ஏன் 'அந்த' விஷயத்தில் நடிக்கிறார்கள்..? - இதைப்படிங்க...!

பெண்கள் உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் அல்லது உறவின் உச்ச நிலையை அடைவதில் பொதுவாக உண்மையாக இல்லாமல் நடிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர்கள் சில சமயம் இதுப்போன்ற நாடகங்களை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக அல்லது அவர்களுடைய துணையின் விருப்பத்திற்காக செய்வதுண்டு. அவர்கள் எல்லா நேரமும் திருப்தி அடைவது இல்லை என்பது உண்மையே.

பெண்மையின் உச்சம் ஆண்களின் உச்சத்தைப் போலல்லாமல், கண்டுபிடிப்பது சற்று ஜாலம் நிறைந்த ஒன்று. பெண்களைப் பொறுத்தவரை காதலிப்பதும் உறவில் ஈடுபடுவதும் ஏறக்குறைய ஒன்று தான். அதனால் தான் அவர்கள் உறவின் போது இன்பம் அடைந்ததாக ஏன் நடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகிறது.

உறவு முறைகளைப் பலப்படுத்த ஒரு இனிமையான உறவின் முடிவு அவசியமாகிறது. ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பதோடு, விரைவில் மனமுடைபவர்களாகவும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பதால், பெண் இந்த உணர்வு பூர்வமான விஷயத்தில் பொய் சொல்ல நேரிடுகிறது. ஒரு பெண்ணை திருப்திப்படுத்த இயலாத போது, ஒரு ஆண் தன்னை முழு மனிதனாக உணர்வதில்லை.

ஆனால், பெண்கள் தங்கள் உறவின் உச்சத்தைப் பற்றி பொய்யுரைப்பதற்கு இது மட்டும் காரணமல்ல. அவர்கள் பல காரணங்களுக்காக உச்ச நிலை அடைவதில் நடிக்கிறார்கள். சில சமயம் அவர்கள் காதல் லீலைகளைத் தொடரவும், சில சமயங்களில் அந்தத் தருணங்களை விரைவுப்படுத்தவும் அவர்கள் அவ்வாறு செய்வதுண்டு. ஆனால் உண்மையான ரகசியங்கள் இப்போது வெளிவந்துவிட்டன. இப்போது ஏன் அந்த விஷயத்தில் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

சில சமயங்களில் பெண்கள் தங்கள் துணையைத் திருப்திப்படுத்த மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்வதுண்டு. ஏனென்றால் அவனுடைய உணர்வுகளை சிதைக்காமல் இருப்பதற்காக அவள் அந்த பொய்யான திருப்தியை அடைந்ததாகக் காட்டலாம்.

உறவின் போது அவள் சோர்வாகவும், உறங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்தால், கட்டில் விளையாட்டில் ஆர்வம் குறையும். இதுப்போன்ற வேளைகளில் அவள் சீக்கிரம் உறங்கச் செல்வதற்காக, தான் திருப்தியடைந்ததைப் போல காட்டிக் கொண்டு நடிப்பாள்.

ஒரு மனிதனுக்கு தன் பெண் துணையை திருப்தி செய்வது தன் பலத்தை விளக்கும் ஒரு செயலாகும். அவள் உச்சத்தை எட்டாவிட்டால், தான் சரியாக செயல்படவில்லை என நினைத்துக் கொண்டு மனமுடைந்து போவான். அதனால் தான் பெண்கள் தங்களுக்கு உச்சம் வரவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில்லை

ஒரு பெண்ணை முத்திரை குத்த ஆண்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண் கட்டிலில் சில முறை தொடர்ந்து உச்ச நிலையை அடையாவிட்டால், அவளின் துணை அவள் இதற்குச் சரிப்படமாட்டாள் என்றோ அல்லது கட்டிலில் அவள் அவ்வளவாக சுகம் தரமாட்டாள் என்றோ முடிவுகட்டி விடுவான்.

உறவு என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல. இந்த மொத்த விளையாட்டிலும் உள்ள லீலைகளையும் அடக்கியது. உச்சம் எட்டாத போது லீலைகளை ரசிக்க இயலாமல் போய்விடும் என்பதால், உச்சம் வந்ததைப் போல் நடித்து லீலைகளைத் தொடர முயல்வார்கள்.

பெண்கள் தங்களுக்குப் பிடித்த அல்லது வேண்டியவற்றை கேட்டுப் பெறத் தயக்கம் காட்டுவார்கள். அவர்கள் தங்கள் ஆண்மகன் தன்னுடைய வழியிலேயே இருக்கவும், தடம் மாறாமல் இருக்கவும் விரும்பி, இதுப்போன்று சில சமயங்களில் நடிப்பதுண்டு.

அவளுடனான அவன் உறவு முதல் முறையாக இருந்து, அவன் "அதைத்" தவிர அனைத்தையும் சரியாகச் செய்திருந்தால், அவள் உச்சத்தை எட்டியதாகக் காட்டி அவனை மகிழச்செய்வாள்.

பெண்கள் ஆண்களை விட அந்த விஷயத்தில் இயல்முறையானவர்கள். உறவின் முடிவு இனிதாக இருக்க விரும்புவார்கள். இதற்காகவே அவர்கள் "அதை" அடைந்து விட்டதாக நடிப்பை வெளிப்படுத்துவார்கள்.

மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்..!

நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்பதால் தான். ஆனால் இப்படி மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

ஆம், இக்காலங்களில் உடலுறவில் ஈடுபட்டால், அவை சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். அதிலும் உங்கள் துணை சுத்தமாக இல்லாவிட்டால், பாலியல் நோய்களான பிறப்புறுப்பு படர்தாமரை மற்றும் மேக வெட்டை நோய் போன்றவை வரக்கூடும். எனவே எப்போது உடலுறவில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்னரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

அதிலும் மாதவிடாய் முடிந்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அதிக அளவில் சோர்வு இருப்பதுடன், இக்காலத்தில் தான் விரைவில் நோய்த்தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் மாதவிடாயின் இறுதி நாளில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாவானது, துணையில் விந்தணுவுடன் சேர்வதால், அவை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும்.

இங்கு மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால் சந்திக்கக்கூடிய விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா..!

மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். அதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் தான் காரணம். எனவே மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடாமல், 2-3 நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

மற்றொரு முக்கியமான விளைவு, மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபட்டால், பால்வினை நோய்களான பிறப்புறுப்பு படர்தாமரை மற்றும் மருக்கள் போன்றவை தொற்றும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், மாதவிடாய்க்கு 2 நாட்கள் கழித்து ஈடுபடுவதுடன், எப்போதும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டும்.

நிபுணர்களின் கருத்துப்படி மாதவிடாய் காலத்திற்கு முன்போ அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கவே முடியாது. எனவே கருத்தரிக்க நினைப்பவர்கள், இக்காலத்தில் முயற்சிப்பது வீண். வேண்டுமானால் மாதவிடாய் முடிந்து இரண்டு வாரம் கழித்து முயற்சித்தால், கருத்தரிக்கலாம்.

மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபட்டால், அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தம் வெளியேறியிருப்பதால், அப்போது அதிகமாக உடலியக்கம் ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான சோர்வை ஏற்படுத்தும்.

மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாய் காலத்தில் வித்தியாசமான உணர்ச்சிகள், குழப்பமான மனநிலை மற்றும் அதிகமான வயிற்று வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், சில நேரங்களில் அவை மாதவிடாய் சுழற்சியை பாதித்து, உடலை பெருமளவில் பாதிக்கும். எனவே இக்காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.

Monday, September 8, 2014

சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12 வழிகள்..!

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆய்வுகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால் இந்த கணக்கு அதிகரிக்கையில் தான் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும். பல சூழ்நிலையில், அடிமையானது கட்டுக்கடங்காமல் போய் விட்டால், ஆண்களுக்கு விந்தணு சுரப்பது கடினமாகி விடும். அதற்கு காரணம் சீரான முறையில் சுய இன்பம் காண்கையில் விந்தணு எண்ணிக்கை குறையத் தொடங்கி விடும்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கும் போது விரைவுக்கலிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்கலாம். சுய இன்பம் அனுபவிப்பதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பல வகையான வழிகளும் இருக்கவே செய்கிறது.

சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்த, அதனை தூண்டும் சில விஷயங்கள நீங்கள் தவிர்க்கலாம் அல்லது நிராகரித்தே விடலாம். அளவுக்கு அதிகமான சுய இன்பத்தை தவிர்க்க சில புதிய பழக்கங்களை பின்பற்ற தொடங்கலாம்.

சுலபமான முறையில் சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதற்கு, இதோ சில வழிகள். இந்த எளிய வழிகள், ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, பாதுகாப்பானதாக இருக்கும்!

புதிய விஷயங்களில் உங்கள் நாட்டத்தை செலுத்தினால், அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிப்பதை சுலபமாக நிறுத்தலாம். புதிய பொழுது போக்கில் ஈட்டுபட்டால், உங்கள் மனது அதனை நோக்கி திசை திரும்பும். இதனால் நீங்களும் அதில் பிசியாக இருப்பீர்கள். அதனால் நீச்சல், உடற்பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வளர்த்தல் போன்ற புதிய பொழுது போக்கில் ஈடுபடுங்கள்.

சுய இன்பம் அனுபவிப்பதை காட்டிலும் விளையாட்டில் ஈடுபட்டால் அதே அளவிலான, ஏன் கூடுதலாக கூட சுகம் கிடைக்கும். கால் பந்து, எறிபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற சில விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இந்த விளையாட்டுக்கள் உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவும்.

தனிமையை தவிர்க்கவும்! சுய இன்பம் காண்பதை நிறுத்துவதற்கான எளிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லும்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதை நிறுத்த மற்றொரு வழி - சீகிராமாக தூங்குவது. ஆராய்ச்சிகளின் படி, நேரம் கழித்து தூங்க செல்பவர்களுக்கு நீல படம் பார்ப்பதிலும் காம புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு செல்லுமாம். இதனால் சுய இன்பம் காண்பது அதிகரிக்கும் தானே.

பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வைத்திருக்கும் ஆபாச டிவிடிக்களை தூக்கி எறியுங்கள். ஆபாசமானவைகளை தூக்கி எறிந்தாலே, செய இன்பம் காண்பதில் உள்ள ஆர்வமும் மெல்ல குறையும். சுய இன்பத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

ஆன்மீகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.

சுய இன்பம் காண்பதை நிறுத்த, உங்களுக்கு வேண்டியது மன உறுதி தான். இந்த பழக்கம் பிறப்பது மனதில் இருந்து தான். அதனால் சுய இன்பம் காண்பதை நிறுத்த வேண்டுமானால் உங்கள் மனதுடன் பேசுங்கள். இந்த பழக்கத்தை சுலபமாக நிறுத்தி விடலாம்.

கைகளை பிறப்புறுப்பு பகுதிக்கு கொண்டு போகாமால், எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். அந்த உணர்வு வந்து விட்டால், உடனே கைகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வேளைகளில் ஈடுபடுங்கள்.

சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அந்த உணர்வை தூண்டும் பொம்மைகளை முதலில் தூக்கி எறியுங்கள். சில விலையுர்ந்த பொம்மைகளை தூக்கிஎரிய மனசு வராது தான். ஆனால் அது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதாச்சே.

குளியல் தொட்டி அல்லது ஷவரில் குளிக்கும் போது அந்த உணர்வை தூண்டுகிறதா? அப்படியானால் குளியலறையில் நீண்ட நேரம் செலவிடாதீர்கள்.

சுய இன்பம் காணும் பழக்கத்தை கை விட உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதும் கூட எளிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்ற நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட, அதற்கு தேவையான ஆற்றல்களை பெறுவதற்கு அதற்கான உணவுகளை உண்ணுங்கள்.

தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத்தில் ஈடுபடும் போது, சுய இன்பம் அனுபவிப்பதை மறந்து பிற விஷயங்களை பற்றி சிந்திக்க, மனதும் உடலும் ஒத்துழைக்கும்.

Thursday, September 4, 2014

நீங்கள் தூங்கு முறையை வைத்து உறவின் வலிமையை கணிப்பிடலாம்..!

திருமணம் முடித்த தம்பதிகள், உங்கள் துணையுடன் தூங்கும் நிலையைக் கொண்டே உங்களுக்கும் துணைக்கும் இடையிலான உறவின் வலிமையை அறியலாம் என்கிறது ஓர் சுவாரஷ்யமான ஆய்வு.

 1100 தம்பதிகள் எப்படி வீட்டில் உறங்குகின்றார்கள் என்பதனை அவர்களிடம் கேட்டு அறிந்துஇ கட்டிலில் அவர்கள் இருவருக்குமிடையிலான தூரத்தை வைத்து உறவின் வலிமையை கணிப்பிட்டு இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 பிரிட்டன் இணையம் ஒன்றே இக்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

 எங்கே நீங்களும் விளக்கப் படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


பெற்றோர்களே உஷார்... சீரியல்கள் உங்கள் வீட்டு ‘சிறுசுகளுக்கு’ என்ன சொல்லித் தருகின்றன..?

சினிமாவைப் போல் சீரியல்களுக்கும் சென்சார் தரச் சான்றிதழ் கொண்டு வரலாம் போல் இருக்கிறது. காரணம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் தாய்மார்களோடு சேர்ந்து குழந்தைகளும் சமயங்களில் சீரியல் ரசிகர்களாகி விடுகிறார்கள்.

அவ்வாறு குழந்தைகளும் பார்க்கும் சீரியல்கள் அவர்களுக்கு நல்லறிவைப் போதிக்கிறதா எனக் கேட்டால் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். தங்கள் முடிவு சரியானது தான், தாங்கள் நினைப்பது தான் சரி பெற்றோர்க்கு நம்மை விட அதிகமாக ஒன்றும் தெரியாது என்ற மனநிலையில் உள்ள வளரும் இளம்பருவத்தினர் இத்தகைய சீரியல்களால் வழி தவறிப் போகிறார்கள் என்றால் மறுப்பதற்கில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மாணவி ஒருத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் தனது தந்தை இரண்டாவது மணம் முடித்தது தான் எனக் கூறப்படுகிறது. தந்தையின் மறுமணத்தால் மனமுடைந்த சிறுமிக்கு தற்கொலை முடிவைக் கற்றுத் தந்தது தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் தான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் மனோதத்துவ மருத்துவர்கள்.

அவர்கள் கூற்றை இல்லையென புறந்தள்ள முடியாது. இதோ குழந்தைகளின் உலகம் என சில தொலைக்காட்சி சீரியல்கள் காட்டும் மோசமான காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

பிள்ளைநிலா...
பெரும்பாலான சீரியல்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறியவர்களாக பேச்சில் காணப்படுகின்றனர். அதிலும், மாலையில் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பிய நேரத்தில் ஒளிபரப்பப் படும் ‘பிள்ளை நிலா' சீரியலைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கேள்விப்பட்டவரை சமீபகாலமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சீரியலைப் பார்க்க விடுவதில்லை. காரணம் அதில் வரும் சிறுவர்களின் கதாபாத்திர அமைப்பு.

தனக்கு நோய் எனத் தெரிந்த சிறுவன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனைத் தேடிச் செல்கிறாள் அவனது இளவயது. சிறுவன் அடைக்கலமாகும் இடத்தில் உள்ள சிறுமி, சிறுவனை புதை குழியில் தள்ளிக் கொல்ல முயற்சிக்கிறாள் என இப்படியாக செல்கிறது கதை.

இந்தச் சீரியல்களில் வரும் பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் போல, குழந்தைகள் சொல்வதைக் கேட்டுத் தான் நடக்கிறார்கள். இந்தச் சீரியலைப் பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு இதைப் போலவே தங்களது பெற்றோரும் தங்கள் சொல்பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.

கல்யாணப்பரிசு...
இதேபோல், மதியம் ஒளிபரப்பாகும் கல்யாணப்பரிசு சீரியலில் நாயகன் தனது குழந்தைப் பருவக் கதையை எடுத்துக் கூறுகிறார். அதில், சித்தி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தனது நண்பனுக்கு பெற்றோரை விட்டுப் பிரிகிறார் நாயகன்.

பெற்றோரைக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தான் அனாதை இல்லத்தில் சேர்ந்து, மூட்டைத் தூக்கி பிழைத்து கல்வி கற்று முன்னேறியதாக கூறுகிறார் நாயகன்.

இதன்மூலம் வீட்டை விட்டு வெளியேறினால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என தன்னைக் கொண்டு நாயகன் முன்னுதாரணம் கூறுவது போல் உள்ளது. இதற்குப் பதிலாக இவ்வாறு அவசரப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என நாயகன் வருத்தப் படுவது போல் அக்காட்சியை அமைத்திருந்தால் சிறுவர்களுக்கு நிச்சய்ம் பாடமாக அமைந்திருக்கும்.

வாணிராணி...
இந்த வரிசையில் நிச்சயம் வாணிராணி சீரியலையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பிள்ளை நிலாவில் நடித்து வரும் சிறுமி தான் இதிலும் நடிக்கிறார். எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றைப் பார்க்க நேரிடும் இச்சிறுமிக்கு கதைப்படி பேசும் திறன் தற்காலிகமாக நின்று விடுகிறது.

மனவருத்தத்தோடு பள்ளி செல்லும் சிறுமியை, சக மாணவி ஒருவர் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறார். இது பாதிக்கப்பட்ட மாணவி பற்றி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தைக் கூட்டுவதற்காக வைக்கப்படும் காட்சி எனத் தெரிந்தாலும், அவரைக் கிண்டல் செய்யும் சகமாணவியும் அதே வயதுக்காரர் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

வில்லியாகக் காட்டப்படும் மாணவி வாய் பேச முடியாமல் தவிக்கும் மாணவியிடம் சென்று சகட்டு மேனிக்கு டயலாக் பேசுகிறார். அவரது தோரணையே ‘நாங்கெல்லாம் ரவுடியாக்கும்' என்பது போல் தான் உள்ளது.

நிஜ வாழ்க்கையில் இருப்பதைத் தான் படத்தில் காட்டுகிறார்கள் எனக் கூறிய காலங்கள் போய், இன்று படங்களைப் பார்த்துத் தான் சில பிஞ்சுகள் பழுத்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி, கடத்தல் நாடகம் ஆடிய சிறுவர்கள், தனியாக பட்டணம் கிளம்பும் சிறுமிகள் ஆகியோரை மனதில் கொண்டாவது இது போன்ற காட்சிகளை வைக்கும் இயக்குநர்கள் இனி வரும் காலங்களில் மாறினால் வருங்கால சந்ததிக்கு நலம் பயக்கும்.

காப்பகம்