Sunday, August 18, 2013

பொறியியல் பட்டதாரிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணி வாய்ப்பு!



மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Project Officer (Mechanical -12, Electrical – 06, Electronics-02, Civil-02 )

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். அத்துடன் கப்பல் கட்டும் தளம், மரைன் இன்ஜினியரிங் பயிற்சி நிலையம், கனரக பொறியியல் தொழிற்சாலையில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 பணி காலம்: 2 வருடம். ஒப்பந்த அடிப்படையிலானது.


 உதவித்தொகை: பயிற்சியின்போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.22,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 22,500 வீதம் வழங்கப்படும். பணியின் நேரத்தை விட கூடடுதலாக வேலை செய்தால் மாதம் ரூ.3,000 வரை OT சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு மையம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


மேலும் முழுமையான தகவல்களை அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2013 ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 27.08.2013

காப்பகம்