Thursday, October 23, 2014

உடலில் எந்த உறுப்புகளை தானமாக பெற முடியும்..?

கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புகளையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.


ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்),

அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.

Friday, October 3, 2014

மார்பு பகுதிக்கு வலிமை தரும் செஸ்ட் ஃப்ளை இயந்திரம்


ஜிம்மில் பல்வேறு உபகரணங்கள் மார்பு பகுதி விரிவடைய இருக்கின்றன. அவற்றுள் இந்த செஸ்ட் ஃப்ளை இயந்திரம் விரைவில் பலன் தரக்கூடியது. செஸ்ட் ஃப்ளை இயந்திரம் மார்பு பகுதியிலுள்ள‌ தசைகளை மட்டும் குறிவைத்து பயிற்சி செய்ய‌ உதவுகிறது.

இவ்வகை இயந்திரங்கள் மல்லாந்து படுத்து (அ) உட்கார்ந்து பயிற்சி செய்யக்கூடிய‌ இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த இயந்திரங்கள் வசதியை அதிகரிக்க‌ பட்டைகள் (பேடுகள்) கொண்டுள்ளன‌. இதில் பயிற்சி செய்யும் போது பேடுகள் இடையேயான‌ தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்..

இந்த உடற்பயிற்சி இயந்திரம் கொண்டு டிரைசெப்ஸ்கள் மற்றும் தோள்களில், கூட பயிற்சிகள் செய்ய‌ முடிந்தாலும் இவை முழுக்க‌ முழுக்க‌ மார்பு தசைகளை வலுப்படுத்தவே இந்த உபகரணம் உதவுகிறது.

அழகான, வலிமையான மார்பகங்களை வேண்டும் என நினைக்கும் ஆண், பெண் இருபாலரும் இந்த உபகரணத்தை பயன்படுத்தலாம். வீட்டில் இதை வாங்கி செய்ய விரும்புபவர்கள் முதலில் ஜிம்மில் பயிற்சி பெற்ற பின்னர் நிபுணரின் ஆலோசனையின் பேரில் இதை பயன்படுத்தலாம்.

நிர்வாணமாக நடித்த காஜல் அகர்வால்.. எதிர்ப்பு தெரிவித்த சென்சார்..!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தெலுங்கு படம் ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’.

கிருஷ்ண வம்சி இயக்கிய இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்துக்கு தணிக்கை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

காரணம் காஜல் நடித்துள்ள படுகவர்ச்சியான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர். அதற்கு இயக்குநர் சம்மதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி தள்ளினர்.

பின்னர் வெட்டப்பட்ட காட்சிகள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சி (9 நொடி), பாடல் காட்சி ஒன்றில் காஜலின் தொடைப்பகுதி ஆபாசமாக தெரிவதுபோன்ற காட்சி (7 நொடி), மார்பகம் பகுதியை கொண்டு ஹீரோவை காஜல் இடிக்கும் காட்சி ( 6 நொடி, 2 முறை), 2வது நாயகி சித்ராவை வில்லன் மானப்பங்கப்படுத்தும் காட்சி (5 நொடி). இக்காட்சிகள் நீக்கியபிறகு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார்.

இப்போதெல்லாம் நடிகைகள் நிர்வாணமாகவும், கவர்ச்சியாகவும் நடிப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது போல.. முதலில் நடிகை ஸ்ருதிஹாசன் ’டி டே’ என்ற இந்திப்படத்தில் படும் கவர்ச்சியாக நடித்து பெரும் பரபரப்பை உண்டாக்கினர்.

இதில் படுக்கையறை காட்சிகளும் அடங்கும். அவரை தொடர்ந்து நடிகை சமந்தா அஞ்சான் படத்தில் பிகினிக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்போது நடிகை காஜல் அகர்வால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

வயசுப்பெண்கள் கூடி அரட்டை அடிக்கும் போது எதைப்பற்றி பேசுவார்கள் தெரியுமா..?

பெண்கள் அதுவும் வயசுப்பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள் சாப்பாட்டில் ஆரம்பித்து செக்ஸ் வரை எங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.

நேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும். செக்ஸ் ஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள்.


பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே.

மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள். குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் கேட்ஜட்ஸ் கெட்ஜெட்ஸ் பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கணவர்கள்  சமீபத்தில் வாங்கி வந்த பொருட்கள் பற்றி பெருமை பேசுவார்கள், பரிசாக கிடைத்த ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் போன் பற்றியும் சமீபத்தில் கிடைத்த எலக்ட்ரானிக் சமையலறை பொருட்கள் பற்றியும் பேசுவார்கள்.

பேஷன் தற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள் ஷாப்பிங் ஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும் 

கவுன்டவுனுடன் நிமிடத்தோடு மரண தேதியை அறிவிக்கும் புதிய வாட்ச்..!

இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்ல வேலையயும் சிறப்பா செய்யனும்,இன்னும் நிறைய சாதிக்க தோன்றும் என்கிறார் இதன் தயாரிப்பாளர். அந்த வாட்ச்தான் டிக்கர்  என்ற பெயருடன் மார்கெட்டுக்கு வந்துள்ளது.உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.

பெட்ரிக் கோல்டிங் என்பவர் இந்த வாட்சை தயாரித்து உள்ளார். இப்படி டெரரான ஒரு வாட்ச்சை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நம்ம எலலாரும் நமக்கு இருக்குற‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியா பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்தார்.

இந்த டிக்கர் வாட்ச் மத்த ஸ்மார்ட் வாட்ச் போல உங்கள உங்க வேலைகளை கண்டு சோர்வடைய வைக்காது, அதுக்கு பதிலா இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்லா வேலையயும் சிறப்பா செய்யனும், இன்னும் நிறைய சாதிக்கனும்னு தோனும். ஒரு சிறந்த மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ்றதுக்கு இந்த வாட்ச் கண்டிப்பா உதவிகரமாக‌ இருக்கும்.

அதற்காகத் தான் இந்த வாட்ச் டிஸைன் செய்யப்பட்டு உள்ளது. நமக்கு தரபட்ட வாழ்க்கை என்பது ஒரு முறை தான் எனவே இந்த வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளின் பயனையும் இந்த வாட்சோட துணையோட முழுமையாக‌ பெற வேண்டும் என்பது தான் இந்த வாட்ச்சோட தத்துவம் என்றார்.

இந்த வாட்ச் இன்றைய சந்தை மதிப்பில் ஆன்லைனில் $79 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கிறது. சந்தை மதிப்பில் ரூபாய் 4,871.26 க்கு கிடைக்கிறது என இதன் தயாரிப்பளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இப்படியும் சில மனிதர்கள்: உணவகத்தில் மோசமான கவனிப்பிற்கு பில்லை விட அதிகமான டிப்ஸ்..!


அமெரிக்காவை சேர்ந்த மெக்சைன் என்பவர் தனது மனைவியுடன் உணவு விடுதிக்கு சென்றுள்ளார். சர்வரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்துள்ளார்கள். 20 நிமிடம் கழித்து தண்ணீர் மட்டும் சர்வர் வைத்துள்ளார். மீண்டும் 40 நிமிடங்கள் கழித்து ஆர்டர் கொடுத்ததை சர்வர் எடுத்து வந்துள்ளார்.

உணவருந்தி வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.அங்கு உணவருந்த வந்த அனைவருக்கும் இதே நிலைமைதான். இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் முடிவெடுத்த தம்பதியினர் அந்த சர்வருக்கு டிப்ஸ் அளிப்பது என முடிவெடுத்து அவருக்கு உணவுக்கான பில் 66 டாலரோடு அதற்கு மேலாக‌ 100 டாலரை டிப்ஸாக வழங்கி சர்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தாமதத்திற்கு காரணம் சர்வர் அல்ல‌ உணவகத்தில் பணியாளர் பற்றாக்குறைதான். மொத்தம் 12 டேபிள்கள் அவர் ஒரு சர்வர்தான் இத்தனை டேபிளையும் கவனிப்பது சிரமம்தான் எனவே இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று மெக்சைன் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரின் பேஸ்புக் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் ஆதரவும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது. 

‘திருமணத்தில் தொடங்கிய கொடுமை கொலையில் முடிந்துவிட்டதே’ - அம்மா கதறல்

‘திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை கொடுமைப்படுத்தி, இப்போது கொலையும் செய்துவிட்டனரே’ என்று தாய் புஷ்பலதா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தாய் கதறல் கொலை செய்யப்பட்ட ஜெயசுவாசினியின் தாய் புஷ்பலதா, தந்தை சண்முகம், சகோதரர் மோகன்ராம் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயசுவாசினியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். அப்போது புஷ்பலதா கூறியதாவது:– ஏராளமான நகைகளை வரதட்சணையாக கொடுத்து கடந்த 2007–ம் ஆண்டு ஒரே ஆசை மகளை திருமணம் செய்து வைத்தோம். கோவை அவினாசிரோட்டில் உள்ள பெரிய மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் இந்த திருமணத்துக்கு வந்து இருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் இருந்தே எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அனைத்து பொருட்களையும் நாங்களே வாங்கி கொடுத்தோம். இரட்டைக்குழந்தை பிறந்த பின்னர் மகளை திரும்ப அனுப்பி வைக்கலாம் என்று கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, ‘ஜாதகம் சரியில்லை. இப்போது வர வேண்டாம்’ என்று தொடர்ந்து நாள் கடத்தி வந்தனர். குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு இப்போது கொலையும் செய்துவிட்டனர். திருமணத்தில் தொடங்கிய கொடுமை, கொலையில் முடிந்து ஒரே மகளை இழந்துவிட்டேன். எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைபோல் வேறு எந்த பெண்ணுக்கும் இனி நடக்க கூடாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புஷ்பலதா கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெயசுவாசினியின் சகோதரர் மோகன்ராம் கூறியதாவது:– கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தியதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினோம். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2007–ம் ஆண்டு ரெனால்டு கம்பெனி கார் பிரசித்தி பெற்று இருப்பதாகவும், கோவையின் சாலையில் முதன்முதலில் இந்த காரை ஓட்ட விரும்புவதாகவும், அந்த காரை வாங்கி தருமாறும் சந்தோஷ்குமார் கேட்டார். எங்கள் அக்காள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் செலவில் அந்த காரையும் வாங்கி கொடுத்தோம். ஜட்டி முதல் அனைத்தையும் கணவர் வீட்டினருக்கு வாங்கி கொடுத்தும், எங்களது குடும்ப குல விளக்கை கொன்றுவிட்டனர் என்று அண்ணன் மோகன் ராம் கண்ணீர் வடித்தபடி கூறினார்.

Thursday, October 2, 2014

விஷன் தமிழ்நாடு 2023 ஆப்ஸ் அறிமுகம்..!


தமிழ்நாட்டின் வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம் “விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.

இவர் விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை “விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச் சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி யிருக்கிறேன்” என்கிறார் இவர்.

போனில் விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர் சாராசரி ஆண்டு வருமானத்தை

2023ல் 6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.

விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.

யான் (2014) - திரைவிமர்சனம்

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார் துளசி. அவளை சாதுர்யமாக காப்பாற்றுகிறார் ஜீவா. அதோடு அவளை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.

அதன்பின்னர் அவள் பின்னாலேயே சுற்றி வரும் ஜீவா, ஒருநாள் துளசி தனது அப்பா நாசருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது அவளிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் நாசர் தன்னை வந்து சந்திக்குமாறு ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

நாசரை சந்திக்கும் ஜீவாவுக்கு எந்த வேலைவெட்டியும் இல்லை என்பதை அறிந்ததும், மேலும் கோபமடைந்த நாசர் ஜீவாவை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜீவா, எப்படியாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளவேண்டும் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை.

இறுதியில், டிராவல் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். வெங்கட் போஸ் மூலம் கஜகஸ்தான் செல்கிறார் ஜீவா. அங்கு ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கஜகஸ்தான் ஏர்ப்போட்டில் ஜீவாவின் உடமைகளை பரிசோதிக்கும் அந்நாட்டு போலீசார், அவரது சூட்கேசில் போதை மருந்து இருப்பதை கண்டறிகின்றனர். இதனால் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கஜகஸ்தானில் போதை மருந்து கடத்தினால் தலையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதனால் ஜீவாவுக்கும் தலையை துண்டிக்குமாறு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது ஜீவாவுக்கு. சக கைதியான தம்பிராமையா இவர் சென்ற சில நாட்களுக்குள் விடுதலையாகி வெளியே வருகிறார். அவரிடம் தனது நிலைமையை மும்பையில் உள்ள தனது குடும்பத்தாரிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறார் ஜீவா.

தம்பி ராமையாவும் மும்பைக்கு சென்று ஜீவாவின் குடும்பத்தாரிடம் அவரது நிலைமையை எடுத்துக் கூறுகிறார். இதையறிந்த துளசி, தன்னால்தான் ஜீவாவுக்கு இந்த நிலைமை ஆனது என்று மனமுடைந்து போகிறார். தானே அங்கு சென்று அவனை மீட்டு வருவேன் என்று சபதமேற்று கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறாள்.

இறுதியில், துளசி, ஜீவாவை மீட்டு இந்தியா திரும்பினாளா? அவனுடன் ஒன்று சேர்ந்தாளா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இப்படத்தில் கூடுதல் மெருகேறியிருக்கிறார். பார்க்க அழகாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் கடினமான உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்காக இவர் இவ்வளவு காலம் காத்திருந்தது வீண் போகவில்லை. சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

துளசி திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். படத்தில் கதையின் தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி, நடிப்பிலும் மிளிர்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

துளசியின் அப்பாவாக வரும் நாசர் பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிகிறார். ஜெயப்பிரகாஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம் கண்ணில் நிற்கிறார். தீவிரவாதியாக வரும் நவாப் ஷாவின் நடிப்பும் பலே. தம்பி ராமையா, கருணாகரன், வெங்கட் போஸ் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும், அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.

புதுமையான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ரவி.கே.சந்திரனுக்கு பாராட்டுக்கள். படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் வென்றிருக்கிறார். கதையோட்டத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பலவீனம்தான். அவற்றை பின்வரும் படங்களில் ரவி.கே.சந்திரன் பின்பற்றுவார் என நம்புவோம். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு அபாரம். பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கிறார். அது திரையில் அழகாக பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலம் கூட்டியிருக்கலாம். ஏனோ, இவரது பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடல்களை தவிர, வேறு பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்காதது சற்று வருத்தமே.

மொத்தத்தில் ‘யான்’ சுறுசுறுப்பில்லை

அதிக நேரம் தூங்குவது நல்லதா..? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!


அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.

இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.

அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்குகிறதா 'ஐ'..?

தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து 'ஐ' படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை தயாரித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு அக்டோபர் 2-ஆம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக 'ஐ' தெலுங்கு பதிப்பினை வாங்கியிருக்கும் பிரசாத், "ஜாக்கிசான் வருகை குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு தெரிந்து விடும். பிரம்மாண்டமான விழாவாக விரைவில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

மேலும், 'ஐ' இந்தி பதிப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டலோன் வரவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 22ம் தேதி தீபாவளி வரவிருக்கும் பட்சத்தில், அம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தெலுங்கு இசை வெளியீடு, அதனைத் தொடர்ந்து இந்தி இசை வெளியீடு என்று இருக்கும் போது தீபாவளிக்கு 'ஐ' வெளிவர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், திரையரங்க விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடம் தீபாவளி படங்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்து, நவம்பர் 14ம் தேதி 'ஐ' வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்ட போது, "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்" என்று கூறினார்.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - இதைப்படிச்சு பாருங்க..!

நான் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். தாவரவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழி பிரீத்தி செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.

உயிரோடு செம்பருத்தி:- 32 மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் காகிதப் பூக்களாக மட்டுமே இருந்தன. அவள் வரைந்ததோ கருப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. அவளுடைய செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் அவளுடையதையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் புரியவில்லை.

எங்கள் ஆசிரியர் நிச்சயம் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. எல்லாரும் ரெக்கார்ட் நோட்டுகளைச் சமர்ப்பித்தோம்.

காகிதப் பூ போதும்:- எல்லோருடைய நோட்டுகளையும் ஆசிரியர் பார்த்தார். ஒவ்வொருவராக அழைத்துத் தன் கருத்தைச் சொல்லி ரெக்கார்ட் நோட்டுகளைக் கொடுத்தார். கடைசியாகப் பிரீத்தியின் செம்பருத்தி வரைந்த பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு “பிரீத்தி…. இங்கே வா” என்றார். நானும் பிரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். பெருமிதத்தோடு பிரீத்தி அருகில் சென்றாள். “நீ வரைந்த படம் தவறு. ஆங்காங்கே தவறு குறி போட்டிருக்கிறேன். புத்தகத்தைப் பார்த்து அவற்றை எல்லாம் சரி செய்து மீண்டும் வரைந்து கொண்டு வா” எனக் கோபமாகச் சொல்லி நோட்டைக் கையில் திணித்தார்.

அப்பொழுதுதான் நாங்கள் வரைந்த செம்பருத்திக்கும் பிரீத்தியின் செம்பருத்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் எனக்குப் புரிந்தது. நாங்களோ புத்தகத்திலுள்ள மலரை அச்சு வார்த்தாற் போல வரைந்திருந்தோம். அவளோ தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியைப் பார்த்து, பார்த்து ரசித்துத் தன் பென்சிலால் ஷேடிங் எல்லாம் கொடுத்துத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

அதைக் கண்ட ஆசிரியர் பூரித்துப் போய் அவளைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஒரு வட்டத்துக்குள் மட்டும் சிந்திக்கும் மனசால் பிரீத்தியின் தனித்துவத்தை அங்கீகரிக்க முடியவில்லை. அவளுடைய அபாரத் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவில்லை. அந்த ஆசிரியர்க்குத் தன்னுடைய கற்பிதங்களுக்கு அப்பால் பரந்து விரிந்த முறையில் காணும் பார்வை இல்லை.

எது புத்திசாலித்தனம்..? - இப்படித்தான் பொதுவான அளவுகோல்களால்தான் புத்திசாலித்தனம் வரையறை செய்யப்படுகின்றது. புத்திசாலித்தனம் என்பது கற்றுக்கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவுகோல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இவை மட்டும்தான் புத்திசாலித்தனமா? சொல்லப் போனால் மனப்பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹாவர்ட் கார்னர் என்னும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்ற ஒன்று தனித்துத் தோன்றுவதோ, இயங்குவதோ கிடையாது. அது ஒருவிதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் (problem solving) ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல், இவைதான் அந்தத் திறன் என 1983- ல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்தார் ஹாவர்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் (Frames of Mind) என்னும் புத்தகம் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உலுக்கும் வல்லமை படைத்தது. ஒருவருக்குக் கல்வி பல விஷயங்களைக் கற்றுத்தருவதை விடக் கற்பனைத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலுவாகப் பேசுகிறார் இவர்.

பன்முகப் புத்திக்கூர்மை:- மனித மூளையின் செயல்பாட்டின் பல நுணுக்கங்களைத் தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹாவர்ட். அவற்றுள் நம் அனைவரையும் அசரவைக்கும், மகிழ்விக்கும் ஒரு கண்டுபிடிப்பு உள்ளது. மனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்முகப் புத்திக்கூர்மை (Multiple Intelligence) நிச்சயமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலும் எட்டு விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும் என்றார் அவர். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முகப் புத்திக்கூர்மைகள் இருக்கின்றன.

பன்முகப் புத்திக்கூர்மை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுத்துப் பலப்படுத்தவும் முடியும் அல்லது கவனிப்பார் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யவும் முடியும். படித்தவற்றை மனதில் நிறுத்தி அதை அப்படியே எழுதுவதோ, ஒப்பிப்பதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அதைத் தவிர மேலும் பல விதமான அறிவுத் திறன்களும் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - மொழித் திறன் (Verbal-Linguistic Intelligence), கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்(Mathematical-Logical Intelligence), இசைத் திறன் (Musical Intelligence), காட்சி மற்றும் வெளித் திறன்(Visual-Spatial Intelligence), உடல்கூறு மற்றும் விளையாட்டுத் திறன் (Bodily-Kinesthetic Intelligence), மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Interpersonal Intelligence), சிந்தனைத் திறன் (Intrapersonal Intelligence), இயற்கை சார்ந்த திறன் (Naturalistic Intelligence) என எட்டு விதமான புத்திக்கூர்மைகளைப் பற்றி அவர் பேசுகிறார்.

இவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டுதான் இருக்கின்றன. ஒருவருக்குச் சில திறன்கள் பிரகாசமாக இருக்கும். மற்றொருவருக்கு வேறு சில திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். வரும் வாரங்களில் உங்கள் திறனைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்!

Wednesday, October 1, 2014

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...

காஜூ மர்சு...

ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.

ஹாட் டாக்ஸ்...



அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.


நம்மூரு கப்பக்கிழங்கு....


அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ருபார்ப் இலைகள்...



ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.

சன்னாக்‌ஷி...


அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.

குரங்கு மூளை..




நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.


புகு மீன்...


புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கி பழம்...


ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.

விஷக் காளான்...



ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி..?

தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள்...?


1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு – பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

ஆசிய விளையாட்டில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய வீராங்கனை அதிகாரிகள் மீது சரமாரியாக சாடல்

சர்ச்சைக்குரிய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மிகவும் வேதனை அடைந்து தனக்கு அளித்த வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின்

எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சரிதாதேவி ஆக்ரோஷம் காட்டினார். எதிராளி நிலைகுலையும் அளவுக்கு சரமாரி குத்துகளை விட்டார். சரிதாதேவியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை காண முடிந்தது. ஆனால் 3 பேர் கொண்ட நடுவர்கள் குழு 2-வது ரவுண்டில் மட்டுமே சரிதாதேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

மற்ற மூன்று ரவுண்டுகளிலும் நடுவர்களின் அதிகபட்ச கருணை என்னவோ ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா  தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. சரிதாதேவி தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், ஜினா பார்க்கின் கையை நடுவர் பிடித்து உயர்த்தியதை கண்டு வியப்படைந்தனர். நடுவர்களுக்கு எதிராக அங்கிருந்த நமது நாட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினார்கள். சிலர் தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி எறிந்தனர். ‘நீங்கள்  குத்துச்சண்டையை கொன்று விட்டீர்கள்’ என்று சரிதாவின் கணவர் கோஷமிட்டார்.

இந்திய குத்துச்சண்டை குழுவினரும் கடும் அதிருப்திக்குள்ளானர்கள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதாதேவி கண்ணீர் விட்டு அழுதார். முன்னாள் ஆசிய சாம்பியனான 32 வயதான சரிதாதேவி மணிப்பூரைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளும் நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய செய்வதில் தோல்வி அடைந்துவிட்டனர். என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தொடந்து மனம் கலங்கிய நிலையிலே சரிதா தேவி காணப்பட்டார். போட்டி முடிந்த பின்னர் பரிசு அளிக்கப்பட்டது. பரிசு அளிக்கப்பட்ட இருந்த அரங்கிற்கு வந்த சரிதா தேவிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கத்தை கழுத்தில் அணியவும் மறுத்துவிட்டார். பின்னர் பதக்கத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். இது அங்கு இருந்தவர்கள் மனதை கலங்க செய்தது.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்கால குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் போட்டியிட போகிறேன். இது ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சரிதா கூறினார். மேலும் அவர் இந்திய அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார். "இச்சம்பவம் நடந்து 24 மணிநேரம் நடந்தும் எந்த ஒரு அதிகாரியும் என்னுடன் பேசவரவில்லை. நன்றாக இருக்கிறேனா என்று கூட கேட்கவில்லை. இந்திய அதிகாரிகள் பதக்கம் பெறுபவர்களுடன் போட்டோ எடுக்க மட்டும் அருகே வருகிறார்கள். வேறு எதுவும் செய்வது இல்லை." என்று சரமாரியாக தனது குற்றச்சாட்டை சரிதா தேவி முன்வைத்துள்ளார்.

காப்பகம்