Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Thursday, October 2, 2014

விஷன் தமிழ்நாடு 2023 ஆப்ஸ் அறிமுகம்..!


தமிழ்நாட்டின் வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம் “விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.

இவர் விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை “விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச் சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி யிருக்கிறேன்” என்கிறார் இவர்.

போனில் விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர் சாராசரி ஆண்டு வருமானத்தை

2023ல் 6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.

விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.

Monday, September 8, 2014

'கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழித்து விடும்: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர்.

இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் கடவுள் துகளில் கவலைக்குரிய அம்சம் ஒன்று உள்ளது. அதாவது 100 பில்லியன் கிகா-எலக்ட்ரான் - வோல்ட்டிற்கும் அதிகமான ஆற்றலில் அது அதிநிலைத்தன்மை பெறலாம்.

இதன் பொருள் என்னவெனில் பிரபஞ்சம் பேரழிவு வெற்றிட சீர்கேடு என்ற நிகழ்வுக்கு ஆட்பட நேரிடலாம், காரணம் உண்மையான வெற்றிடக் குமிழ் ஒளியின் வேகத்தில் விரிவாக்கம் பெறும்.

இத்தகைய நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது வருவதை நம்மால் பார்க்க முடியாது.

இத்தகைய நிகழ்வு என்ற பேரழிவு அண்மை எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்றாலும், அதி ஆற்றலில் ஹிக்ஸ் என்ற அந்தக் கடவுள் துகள் நிலைகுலையும் தன்மை உள்ளது என்ற அபாயத்தை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விடவோ, அலட்சியம் காட்டவோ முடியாத விஷயம்.

என்று ஸ்டார்மஸ் என்ற புதிய புத்தகத்திற்கு அவர் அளித்துள்ள முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

செர்னில் விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் 2012ஆம் ஆண்டு ஹிக்ஸ் பாஸன் என்ற இந்த கடவுள் துகளைக் கண்டுபிடித்தனர்.

Tuesday, September 2, 2014

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்...!

உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" (“Invisible Text”) எனும் இந்த செயலி, பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், "இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

விரைவில் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக பேசும் வசதி..?

குறுஞ்செய்தி அனுப்புவதற்காக பயன்படும் ஆண்ட்ராய்டு செயலியான வாட்ஸாப் விரைவில் இலவச வாய்ஸ் காலிங் சேவையை தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. வாட்ஸாப்பில் சில நாட்களாக மாறிவரும் அமைப்புகள் இந்த வாய்ஸ் காலிங் சேவை விரைவில் இடம்பெறுவதற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


தற்போது இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியில், குறுஞ்செய்தி, புகைப்படங்கள், சிறிய வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், வாட்ஸ் ஆப் மூலம், தொலைபேசி அழைப்பைப் போல பேச முடியாது. இப்போது அந்த அம்சமும் சேரப்போகிறது எனத் தெரிகிறது. அடுத்து வரப்போகும் வாட்ஸ்ஆப் பதிப்பின் மாதிரி பக்கத்தில் (ஸ்க்ரீன்ஷாட்), வாட்ஸ் ஆப் வழியாக பேசுவதற்கான அழைப்பு வரும்போது, அந்த அழைப்புக்கான எழுத்துகள், மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது என thefusejoplin.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் போலவே ஃபேஸ்புக்கிலும் இலவச அழைப்புக்கான வசதி வருமா என எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் பயன்பாடு 15 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Tuesday, August 26, 2014

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி..?


அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

 ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

 ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

 பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

Wednesday, August 20, 2014

உங்கள் ஸ்மார்ட்போன் உங்களை கண்காணிக்கிறதா..? - அதிர்ச்சித் தகவல்

நீங்கள் உங்கள் துணையுடன் செலவழிக்கும் இனிமையான வார இறுதியை ரகசியமாக உங்கள் ஸ்மார்ட்போன் கண்காணிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அப்படி கண்காணிக்க வாய்ப்பிருப்பது உண்மைதான் என்கிறது கூகுள்.

ஒருவர் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்திருந்தலோ அல்லது அவரது கூகுள் கணக்கில் லாக்-இன் செய்திருந்தாலோ, அவர்களின் ஒவ்வொரு தகவல்களும் கூகுள் கணக்கில் கண்காணிக்கப்பட்டு, மாத கணக்கில் சேகரித்து வைத்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுளில் உள்ள ‘மாப்பிக்கிங் சாதனம்’ (Mapping Device) நீங்கள் சமீபத்தில் எங்கு பயணம் மேற்கொண்டிறீர்கள் என்பதை துல்லியமாக காட்டும். இந்த நடவடிக்கைகளை உங்களின் இடத்தை குறிக்கும் வரைப்படத்தில் (location history map) காணமுடியும்.

ஒருவர் கூகுள் கணக்கில் ஒருமுறை லாக்-இன் செய்துவிட்டால், அதிலுள்ள வரைபடத்தில் சிவப்பு நிற சிறிய ஒளியும், கோடுகளும் தென்பட்டு, நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதையும், எங்கு இருக்கிறீர்கள் என்பதையும் காட்டும்.

இது குறித்து கூகுள் தெரிவிக்கையில், இந்த சேவை கட்டாயம் பயன்படுத்த வேண்டியதல்ல. இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி ஆஃப் செய்வது என்ற வழிமுறைகள் அளித்துள்ளேம் என்று குறிப்பிடுக்கிறது.

மேலும், பயன்பட்டாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள பழைய தகவல்களை அழிக்கவும் கூகுள் நிறுவனம் வகை செய்து தந்திருக்கிறது.

Saturday, March 1, 2014

அன்ரோயிட் கைப்பேசிகளில் அழகான ஹோம் ஸ்கிரீனை உருவாக்க உதவும் அப்பிளிக்கேஷன்..!

myColourScreen_001


தற்போது காணப்படும் கைப்பேசி இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ் இயங்குதளத்தில் அதனை வடிவமைத்தவர்களாலும், பயனர்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
இது தவிர பல புதிய அம்சங்களையும் இந்த இயங்குதளம் கொண்டுள்ளமையையும் குறிப்பிடலாம்.

தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தினை மேலும் பயனர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் விதமாக MyColourScreen எனும் தீம் (Theme) அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் கைப்பேசியின் ஹோம் ஸ்கிரீனை அழகுபடுத்துவதற்கும், விட்ஜெட்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கும் உதவுகின்றது.



தரவிறக்கச் சுட்டி

Monday, January 20, 2014

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்..!



தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.

படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள்.

 அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.

இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி..!



கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.

அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.

இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது 110 கோடி குறைவு. மேலும் இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது “வாட்ஸ்அப்”, “டுவிட்டர்” மற்றும் “ஸ்நாப்ஷாட்” போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில் ”தங்களுடைய பெற்றோரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொள்வதால்.ஏனைய வலைதளங்களில் இதே போன்ற கணக்குகளை துவக்கி தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

டயாபட்டிக்ஸ் பிரச்சினையை நொடிக்கு நொடி அறிய உதவும் கான்டெக்ட் லென்ஸ்.!



உலகத்தில் 19 பேரில் ஒருவருக்கு இருக்கும் இலுப்பு நீர் (டயாபட்டிக்ஸ்) பிரச்சினையை நொடிக்கு நொடி அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்..ரெடியாகியுள்லது..கூகுள் கண்ணாடிக்கு பிறகு கூகுள் ஒரு புரோட்டோ டைப் கான்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளது.

இதை கண்ணில் அணிந்தால் இதனுள் இருக்கும் அப்டிக்கள் சென்ஸார் மற்றூம் சர்க்யூட் மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு நிம்ட சர்க்கரை லெவல் மாற்றத்தை கண்டு கொள்ள முடியும்.


தற்போது நிறைய பேர் மருத்துவ பர்சோதனை செய்து கொள்வது இல்லை. இன்னும் பல பேர் ரத்தம் குத்தி சோதனை செய்ய தயக்கம். இன்னும் சில பேருக்கு ரத்த மாதிரி எடுக்கும் போது சரியாக இருக்கும் அப்புறம் வேலை காட்டும். அவர்கள் அடுத்த முறை எடுக்கும் போது டயாபாட்டிக்ஸ் அதிகரித்து இருக்கும்.

இன்னிலையில் இனிமேல் இதெல்லாம் இல்லாமல் லென்ஸை போட்டா தனக்கே தெரியும். இதில் எல் ஈ டி லைட் பொருத்தி சுகர் லெவலுக்கு ஏற்ற மாதிரி ஏற்ற லைட் எரியும்படி செய்ய போகிறார்கள். இனிப்பான செய்தி தானே.

Saturday, January 18, 2014

பெண்களே உஷார் உஷார்...

பெண்களே உஷார் உஷார்...
 

வெளி இடங்களில் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்...!

துபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டின் பெண்கள் பயன் படுத்தும் டாய்லெட்க்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண் ஒருவர், உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி அடிப்பதை கேட்டு திடுக்கிட்டார்.

செல்போனை எடுத்து பார்த்த அந்த பெண் , அதில் டாய்லெட்டை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாண படபதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து, சூப்பர் மார்கெட்டின் நிவாகியிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணிபுரியும் ஒரு இந்தியருக்கு சொந்தமானது என்று தெரியவந்து,

அவர் கைது செய்யப்பட்டு 3 மாதம் ஜெயில் என்றும் தீர்ப்பாகியது, அதுக்குபிறகு துபாயை விட்டும் வெளியேற்ற படுவார்.

வெளியே எந்த இடங்களிலும் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்.

பட்டன் சைஸ் கேமராக்கள் எல்லாம் உலா வரும் காலம் இது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் கூட வெளி ஆட்களை கொண்டு ரிப்பேர் போன்ற வேலைகள் (குறிப்பாக டாய்லெட், பெட்ரூம் போன்ற இடங்களில்) முடிந்தபின்பு அந்த இடங்களை சோதனை செய்து பார்த்துகொள்ளுங்கள்.
நன்றி:முக்கியசெய்திகள்

‘ சிப் ' - ஐ வைத்து சீப்பா நடக்கும் நாடுகள்...!



இனிமேல் ஒரு பயல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பான்? ஓலைச்சுவடியில் கோட் வேர்ட்ஸில் கடுதாசி எழுதி மஞ்சள் பொடி போட்டு, மெழுகு தேய்த்து டீகோட் செய்து வாசித்துக்கொள்ள வேண்டியதுதான். கணக்கு வழக்குகள் இதர விவரங்கள் அனைத்தையும் கையாலெழுதும் காலம் திரும்பி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள். கோப்புகளை டிஜிடல் வடிவில் சேமித்து வைத்தால் சாவு கிடையாது என்று எண்ணியிருந்தால் நீங்கள் செத்தீர்கள். மானசீக மர்ம தேசத்தில் பட்டுத்துணி சுற்றி ஏதாவது பாதாள அறைக்குள்தான் புதைத்து வைக்கவேண்டியிருக்கும்.

எல்லாம் கலியின் சதி. மீண்டும் அமெரிக்கா ஓர் அக்கப்போரில் சிக்கியிருக்கிறது. அயோக்கியத்தனத்தின் அடுத்த நீட்டல் விகாரம் ஒரு பெரும் விவகாரமாக வெடித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து பரதேசங்களுக்கு சப்ளையான சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலா ஒரு ரகசிய 'சிப்' சொருகி அனுப்பியிருக்கும் சங்கதி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இணையத் தொடர்பே இல்லாதிருக்கும் கம்ப்யூட்டர்களையும் இந்த திருட்டு வசதியின்மூலம் ஹேக் செய்ய இயலும். உள்ளே இருக்கிற சங்கதிகளை எடுத்துப் படித்துக் கள்ளத்தனம் செய்யலாம்.

மேற்படி ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் இடங்களைப் பாருங்கள். பிரதானமாக சீன ராணுவம். அடுத்தபடியாக ரஷ்ய ராணுவம். மூன்றாவதாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள். கட்டக்கடைசியாக சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற தேசங்களைச் சேர்ந்த உளவுத்துறை அலுவலகங்கள். இதில் இந்தியாவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர்களுக்கு முன்னதாகவே தாலி கட்டி அனுப்பிவைக்கிற சங்கதி. எந்தெந்தக் களவாணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இதில் உடந்தை என்று இனிமேல்தான் தெரியவரும். இது இவ்வாறிருக்க, இந்தத் திருப்பணியை அமெரிக்காவுக்கு முன்பாகவே சீனா ஆரம்பித்துவிட்டது என்றும், அமெரிக்காவுக்கே அவர்கள் பலமுறை இவ்வித இனிய அல்வா கொடுத்ததன் விளைவாகவே அமெரிக்கா இந்த ரகசிய சிப் சொருகல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது என்றும் சொல்கிறார்கள்.

எப்படியானாலும் இந்த அருவருக்கத்தக்க, அபாயகரமான அத்துமீறல் நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருப்பதை மறுக்க முடியாது. டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடங்கி கம்ப்யூட்டர் ஹேக்கிங் வரை சகலமான சாத்தியங்களிலும் அமெரிக்கா தனது அழுகிய உளவுக் கரங்களை உலகெங்கும் நீட்டுவது தாங்க இயலாத அபாய எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதைக் கேட்டாலும், என்ன கேட்டாலும் தேசியப் பாதுகாப்பு என்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஒரே பாட்டை ஒரே சுருதியில் பாடிவிடுவார்கள். இல்லாவிட்டால் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று ஆத்ம சுத்தியுடன் பொய் சொல்லவும் ரெட்டை ரெடியாக நிற்பார்கள். இந்த விவகாரத்திலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதைத்தான் செய்திருக்கிறது. விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த மறுகணமே, அதெல்லாம் இல்லை; சுத்தப் பொய் என்று மறுத்துவிட்டார்கள். காசா பணமா? ஒரு மறுப்பு. தீர்ந்தது விஷயம்.

ஆனால் அமெரிக்க அச்சு மீடியாவே இந்தா இந்தா என்று ஆதாரங்களை எடுத்து வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் NSA வின் மறுப்பு அர்த்தமற்றதாகவே உள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் அமெரிக்காவின் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்கு எதிராக உடனடியாகத் திரண்டு எழாத பட்சத்தில், நாளைக்குக் கூடி உட்கார்ந்து ஒப்பாரி வைக்க நேர்ந்தால் அதுதான் கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும்.

Friday, January 17, 2014

IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க..!



உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்

உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :

  •     பெயர்(NAME)
  •     முகவரி(ADDRESS)
  •     போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  •  அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  •     கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  •     உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  •     எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  •     போனின் அடையாள எண் (IMEI)

ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.

Thursday, January 16, 2014

கம்பியில்லாமல் மின் இணைப்பு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!



கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

 இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Tuesday, January 14, 2014

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி..

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி..


கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாத மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒன்றாகவே இருக்கும். மாட மாளிகை, செல்வ செழிப்பு, என்று மானுட உலகில் சகல செல்வங்களும் பெற்றிருந்தாலும் மழலை செல்வம் இல்லாதவர்களின் வாழ்க்கை என்பது கானல் நீருக்கு சமமானதாகும்.

பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கையில் குழந்தை பேறை தள்ளி போடும் தம்பதிகளும் இன்றைய நவ நாகரீக உலகில் உள்ளனர். ஐ.டி. நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளில் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்ட லட்சியங்களை மனதில் கொண்டு கர்ப்பம் தரிப்பதை விரும்புவதில்லை.

பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது லட்சியங்கள் பூர்த்தியான பின்பே குழந்தையை பெற்றெடுக்க விரும்புகின்றனர். 27 வயதில் திருமணம் செய்த ஒரு பெண் தனது நிறுவனத்தில் பதவி உயர்வை பெற்றபின் 35, 37 வயதுக்குப்பின் கருத்தரிப்பது என்பது மருத்துவ உலகில் 100-க்கு 20 சதவீதம்தான் சாத்தியமாகும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கணிப்பாகும்.

27 வயதில் பெண்ணின் கரு முட்டையானது அதிக எண்ணிக்கையுடன் வீரிய மிக்கதாக இருக்கும். ஆனால் 35 வயதை கடந்த பெண்ணின் கரு முட்டை வளர்ச்சி என்பது குறைந்த எண்ணிக்கையில் வீரிய மற்று இருக்கும். இதனால் அவர்கள் கருவுரும் வாய்ப்பு 100-க்கு 20 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பேறை தள்ளி வைக்கும் பெண்களுக்கு வரப் பிரசாதமாக தற்போது கரு முட்டை சேமிப்பு வங்கி வந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரில் கரு முட்டை சேமிப்பு வங்கி உருவாக்கப்பட்டு உள்ளது.

கர்ப்பம் தரிப்பதை தள்ளி போடும் பெண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பெண்கள் ஆகியோரின் கரு முட்டைகள் இங்கு உறைய வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் இயக்குனர் டாக்டர் பம்மி எஸ்.ஆர். மூர்த்தி கூறும் போது, நான் இங்கிலாந்து நாட்டில் கருவியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளேன். 25 ஆண்டுகள் இந்த துறையில் பணிபுரிகிறேன்.







வெளிநாடுகளில் உள்ளது போன்று கருத்தரித்தல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறையை நமது நாட்டு மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் 2008-ம் ஆண்டு கரு முட்டை சேமிப்பு மையம் தொடங்கப்பட்டது.

கரு முட்டை சேமிப்பு, சோதனை குழாய் குழந்தை, கரு முட்டைகள் முழு வளர்ச்சி ஆய்வகம் வசதி எங்களிடம் உள்ளது. கரு முட்டை சேமிப்பு வங்கி என்பது தமிழ்நாட்டில் எங்களிடம் மட்டுமே உள்ளது. திருமணத்துக்கு பின் 4, 5 வருடத்துக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களின் கரு முட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்படும்.

மேலும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்கள், பெண்களின் கரு முட்டைகள் அல்லது சினை திசுவின் (ஓவரி) ஒரு சிறிய பகுதி சிகிச்சைக்கு முன்பாக எடுக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது. ரேடியேசன் சிகிச்சைக்கு பின் உடல் ஆரோக்கிய மடைந்த கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற விரும்பினால் உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் அவரது சினைத்திசுவில் (ஓவரி) வைக்கப்பட்டு கருத்தரிப்பு சிகிச்சை நடைபெறும்.

இது போல் 4, 5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு கரு முட்டை வங்கியில் சேமித்து வைத்துள்ள அவர்களது கரு முட்டை மூலம் கருத்தரிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படும். மேலும் வளர்ந்த கரு முட்டையில் உள்ள திசு பாய்மம் (சைட்டோபிளாசம்) வளர்ச்சியடையாத முட்டையில் செலுத்தி வீரிய மிக்கதாக மாற்றும் சிகிச்சை வசதியும் எங்களிடம் உள்ளது. இத்தகைய சிகிச்சை முறையில் 80 சதவீதம் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்புக்கு: 044-26610809, 25321767, 9841772853

Monday, January 13, 2014

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய...?

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள்.

 உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி :  http://www.tineye.com/

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!!



இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.


இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.


இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.


தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு  Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.


நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.


அழைக்க வேண்டிய எண் - 155223

உஷாரய்யா உஷாரு..! ஆன்லைன் ஷாப்பிங் டிப்ஸ்..!

ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்..!


எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா

”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.


  • கவர்ச்சி விளம்பரங்கள்..!

கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


  • இரண்டு நிமிட நிபந்தனை..!

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.


  • மறைமுக கட்டணங்கள்..!


இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.


  • ஷிப்பிங் கட்டண மோசடி..!

உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.


  • நோ ரிட்டர்ன், ப்ளீஸ்..!

பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.


  • விதிமுறைகளில் மோசடி..!

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.


  • கூரியர் மோசடி..!

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.


  • வாரன்டி இருக்கிறதா..?


பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.


  • உஷாரய்யா உஷாரு..!


ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.

* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..

*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.

* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.”

Thursday, January 9, 2014

சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்..!



திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது.

மேலும் “யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் சோலார் பைக்கை சோதனை செய்து ஆராய்சிக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜேஷின் எதிர்கால லட்சியம் இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து நிறையக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவிற்கு சேவை செய்வதுதானாம்.

Wednesday, January 8, 2014

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!


இன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது.அந்த வகையில்

அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.


எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.

1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கிறது எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்த புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பகம்