Showing posts with label உடல்நலம்! அனுபவம். Show all posts
Showing posts with label உடல்நலம்! அனுபவம். Show all posts

Friday, January 17, 2014

அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் - அதிர்ச்சி தகவல்..!!!



தற்போது சந்தைகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன.

எனவே அதை பெண்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

இம்மையம் நடத்திய ஆய்வில் உலக அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான முக அழகு க்ரீமில் அதிக அளவு பாதரசமும், சில வகை லிப்ஸ்டிக்கில் எஃகும் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த அதிகளவு பாதரசம் சிறுநீரகத்தை பாதிக்கவும், தோலின் நிறம் மாறும் வகையிலும், அதில் வடுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகு சாதனப்பொருட்களில் பாதரசம் பயன்படுத்தப்படுவதற்கு தடை உள்ள போதிலும், ஆய்வு செய்யப்பட்ட 32 முக அழகு க்ரீம்களில் 44 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் பாதரசம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதே போல் 30 லிப்ஸ்டிக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் 50 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் எஃகு கலந்திருப்பது தெரியவந்தள்ளது.

எனவே பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என இம்மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் இக்குற்றச்சாட்டை பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 15, 2014

எந்த திசையில் படுத்தால் தூக்கம் வரும்...?


 
உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம்.

சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.

விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் 'அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும்.

 தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.

வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது,மேற்கு.

பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது தெற்கு.

எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம், வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது. பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும.

உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள். குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.


கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர். நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம். தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.

தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 'இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும். இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.

எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.

Tuesday, January 14, 2014

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி..

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி..


கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாத மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒன்றாகவே இருக்கும். மாட மாளிகை, செல்வ செழிப்பு, என்று மானுட உலகில் சகல செல்வங்களும் பெற்றிருந்தாலும் மழலை செல்வம் இல்லாதவர்களின் வாழ்க்கை என்பது கானல் நீருக்கு சமமானதாகும்.

பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கையில் குழந்தை பேறை தள்ளி போடும் தம்பதிகளும் இன்றைய நவ நாகரீக உலகில் உள்ளனர். ஐ.டி. நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளில் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்ட லட்சியங்களை மனதில் கொண்டு கர்ப்பம் தரிப்பதை விரும்புவதில்லை.

பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது லட்சியங்கள் பூர்த்தியான பின்பே குழந்தையை பெற்றெடுக்க விரும்புகின்றனர். 27 வயதில் திருமணம் செய்த ஒரு பெண் தனது நிறுவனத்தில் பதவி உயர்வை பெற்றபின் 35, 37 வயதுக்குப்பின் கருத்தரிப்பது என்பது மருத்துவ உலகில் 100-க்கு 20 சதவீதம்தான் சாத்தியமாகும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கணிப்பாகும்.

27 வயதில் பெண்ணின் கரு முட்டையானது அதிக எண்ணிக்கையுடன் வீரிய மிக்கதாக இருக்கும். ஆனால் 35 வயதை கடந்த பெண்ணின் கரு முட்டை வளர்ச்சி என்பது குறைந்த எண்ணிக்கையில் வீரிய மற்று இருக்கும். இதனால் அவர்கள் கருவுரும் வாய்ப்பு 100-க்கு 20 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பேறை தள்ளி வைக்கும் பெண்களுக்கு வரப் பிரசாதமாக தற்போது கரு முட்டை சேமிப்பு வங்கி வந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரில் கரு முட்டை சேமிப்பு வங்கி உருவாக்கப்பட்டு உள்ளது.

கர்ப்பம் தரிப்பதை தள்ளி போடும் பெண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பெண்கள் ஆகியோரின் கரு முட்டைகள் இங்கு உறைய வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் இயக்குனர் டாக்டர் பம்மி எஸ்.ஆர். மூர்த்தி கூறும் போது, நான் இங்கிலாந்து நாட்டில் கருவியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளேன். 25 ஆண்டுகள் இந்த துறையில் பணிபுரிகிறேன்.







வெளிநாடுகளில் உள்ளது போன்று கருத்தரித்தல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறையை நமது நாட்டு மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் 2008-ம் ஆண்டு கரு முட்டை சேமிப்பு மையம் தொடங்கப்பட்டது.

கரு முட்டை சேமிப்பு, சோதனை குழாய் குழந்தை, கரு முட்டைகள் முழு வளர்ச்சி ஆய்வகம் வசதி எங்களிடம் உள்ளது. கரு முட்டை சேமிப்பு வங்கி என்பது தமிழ்நாட்டில் எங்களிடம் மட்டுமே உள்ளது. திருமணத்துக்கு பின் 4, 5 வருடத்துக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களின் கரு முட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்படும்.

மேலும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்கள், பெண்களின் கரு முட்டைகள் அல்லது சினை திசுவின் (ஓவரி) ஒரு சிறிய பகுதி சிகிச்சைக்கு முன்பாக எடுக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது. ரேடியேசன் சிகிச்சைக்கு பின் உடல் ஆரோக்கிய மடைந்த கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற விரும்பினால் உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் அவரது சினைத்திசுவில் (ஓவரி) வைக்கப்பட்டு கருத்தரிப்பு சிகிச்சை நடைபெறும்.

இது போல் 4, 5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு கரு முட்டை வங்கியில் சேமித்து வைத்துள்ள அவர்களது கரு முட்டை மூலம் கருத்தரிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படும். மேலும் வளர்ந்த கரு முட்டையில் உள்ள திசு பாய்மம் (சைட்டோபிளாசம்) வளர்ச்சியடையாத முட்டையில் செலுத்தி வீரிய மிக்கதாக மாற்றும் சிகிச்சை வசதியும் எங்களிடம் உள்ளது. இத்தகைய சிகிச்சை முறையில் 80 சதவீதம் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்புக்கு: 044-26610809, 25321767, 9841772853

உடல் எடையை குறைக்கும் பாதாம் சூப்....!




பாதாமைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவும்.
அதுமட்டுமின்றி இந்த சூப் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது அந்த பாதாம் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்...


தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/4 கப்

 வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்

 தண்ணீர் - 4 கப்

 பால் - 1 கப்

 உப்பு - தேவையான அளவு

 மிளகு தூள் - 1/8 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 குங்குமப்பூ - 1 சிட்டிகை


 செய்முறை:


முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ளதை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பொன்னறிமாக வறுக்க வேண்டும்.


பின்பு அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி, பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.


கலவையான நன்கு கொதித்ததும், அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து, உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே குங்குமப்பூவை தூவினால், சுவையான பாதாம் சூப் ரெடி

காப்பகம்