Sunday, August 17, 2014

ஆண் டாக்டரை பார்க்க போறீங்களா..? இதைப்படிச்சிட்டு போங்க..!

தற்போதுள்ள காலகட்டத்தில் மனிதனின் உடலில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை போல் மருத்துவமனைகளும் அதிகரித்துள்ளன.  பல்வேறு உடல் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் போதிய கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.  மருத்துவமனைக்கும் செல்லும் போது தனியாக செல்லாமல் உடன் துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். மேலும் நீங்கள் செல்லும்  மருத்துவமனை மற்றும் மருத்துவரை பற்றிய விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் மருத்துவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன.  தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் மருத்துவர் பரிசோதிக்கும்போது, அந்த  அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும்  அறையில் இருக்கலாம். பெண் நோயாளி தங்களுடைய பிரச்னையை சொன்ன பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை செய்ய  போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் மருத்துவர் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை மருத்துவர் செய்ய வேண்டும். வயிற்று பகுதி பிரச்னைகளுக்கு வயிற்றை  தொட்டு பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் மருத்துவர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி  பெறவேண்டும். அதன்பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும்.

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் மருத்துவர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், தமிழ்நாடு  மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். பெண் நோயாளியின் புகார் உண்மை என்று தெரிந்தால் அந்த ஆண் மருத்துவரின்  மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

0 comments:

Post a Comment

காப்பகம்