Thursday, January 16, 2014

விஜய்யை வைத்து அவார்டுக்காகவோ, குடும்ப படமோ எடுக்க முடியாது – ஜில்லா தயாரிப்பாளர்....



நல்ல படம் எடுப்பது என்பது இப்போது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. அதிலும் டாப் ஹீரோவை வைத்து குடும்ப பாங்கான நல்ல படம் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சில தினங்களுக்கு முன்பு ‘ஜில்லா’ படம் பற்றி பேசியதாவது,‘ஜில்லா’ படம் பொங்கலுக்கு முன்னாடியே ரிலீசாகி நல்லா ஓடிக்கிட்டிருக்கு.

பொங்கலுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணினா கலெக்‌ஷன் பாதிக்குமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு. ஆனால் நாங்க எதிர்பார்த்ததை விடவும் படம் நல்லா வசூல் பண்ணிக்கிட்டிருக்கு.

அதே நேரத்துல இன்னொரு விஷயத்தையும் நான் இங்க சொல்லியாகணும். விஜய் மாதிரியான ஒரு ஹீரோவை வெச்சு ஒரு ஆர்ட் பிலிமையோ, அல்லது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரியான குடும்பப் படமோ எடுக்க முடியாது.

ஏன்னா அவரோட ரசிகர்கள் அந்த மாதிரியான படங்களை விரும்ப மாட்டாங்க. அவருக்கு இருக்கிற ரசிகர்கள் அப்படிப்பட்டவங்க. அவரோட ரசிகர்களை திருப்திபடுத்துற அளவுக்கு படம் எடுக்கலேன்னா அந்தப்படம் கண்டிப்பா ஓடாது. அது தப்பாப் போயிடும்.

அதுமட்டுமில்லாம அவரை நம்பி நெறைய டிஸ்ட்ரிபியூட்டர்கள் பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. அவங்களும் சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் படம் எடுக்க முடியுமே தவிர அவார்டுக்காகவெல்லாம் படம் எடுக்க முடியாது.

அதனால தான் ‘ஜில்லா’ படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் படமா எடுத்துருக்கோம். தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ‘ஜில்லா’ ரிலீசான எல்லா ஏரியாக்களிலும் நல்லா போய்க்கிட்டிருக்கு என்றார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

ஏற்கனவே விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’ என்ற சில்வர் ஜூப்ளி படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர் தான் இப்போது அதே மாதிரியான ஒரு குடும்பப் படத்தை விஜய்யை வைத்து எடுக்க முடியாது என்று கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

காப்பகம்