Friday, August 15, 2014

வாய் புண் அறிகுறிகளும் மற்றும் அதனை தவிர்க்கும் முறைகளும்...!

வாய்புண் என்பது வாய், உள் உதடு, கன்னத்தின் உட்பக்கங்களில் ஏற்படுவது. உணவு உண்ணும் போதும், ஏதாவது குடிக்கும் போதும், பல்தேய்க்கும் போதும் இது அதிக வலியினை ஏற்படுத்தும். ஐந்தில் ஒருவருக்கு அடிக்கடி வாய்புண் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வாய் புண்ணின் பிரிவு வகைகள்…

சிறிய புண் : 2-6 மில்லிமீட்டர் வரை இருக்கும். இரு வாரங்களுக்குள் தானே ஆறிவிடும்.

பெரிய புண்: அகலமாகவும், ஆழமாகவும் இருக்கும். ஆறுவதற்கு பல வாரங்கள், மாதங்கள் ஆகும்.

குண்டூசி முனை போன்ற ஹெர்பஸ் வகை சிறு சிறு புண்கள்.

அதிக வேலை பளு, சரியான தூக்கமின்மை, மன உளைச்சல், உணவு போன்றவையும், பொய்பல் சரியாக இல்லாததும் வாய் புண் ஏற்பட பொதுவான காரணங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

இரும்பு சத்து குறைவு வைட்டமின் பி12 குறைவு மற்றும் உணவுப் பாதை குடல் நோய்கள் போன்றவையும் வாய் புண்ணுக்குக் காரணமாகும். புகை பழக்கத்தை விடும் போது முதலில் சற்று அதிகமான வாய் புண் ஏற்படும். ஆனால் அது எளிதில் மறைந்து விடும். சில மருந்துகளாலும் வாய் புண் ஏற்படலாம்.

வாய் புண் அறிகுறிகள்:-உதடுகளின் உள்ளே, நாக்கு, வாயின் உள்ளே மேல் பக்கம், உள் கன்னங்களில் வலியுடன் கூடிய புண் தோன்றும். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்துடன் வட்டமாக சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் ஜுரத்துடன் நெறி கட்டி இருக்கும். இதன் தீவிரத்தினைப் பொறுத்து உங்கள் மருத்துவரோ, பல் டாக்டரோ சிகிச்சை அளிப்பார்.

வாய்புண் தவிர்க்கும் முறைகள்:-

சர்க்கரை பாகில் ஊறிய, காரம், எண்ணையில் மிதக்கும் ஆசிட் தன்மை மிக்க உணவுகளை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

வாயில் `சூயிங்கம்’ மெல்லுவதை நிறுத்துங்கள்.

புகையிலை, புகை பிடித்தல் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.

அதிக காபி, டீ வேண்டாம். புண் சற்று பெரிதாய் இருப்பின் மருத்துவ சிகிச்சை அவசியம்.

0 comments:

Post a Comment

காப்பகம்