Friday, August 15, 2014

பவுடர் ஃபவுன்டேஷனை எப்படி உபயோகிக்க வேண்டும்..?

மேக்-கப் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் தான். மேக்-கப் போடாத, மேக்-கப் பிடிக்காத பெண்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம். அழகின் மீது கவனம் செலுத்தும் அனைத்து பெண்களும், மேக்-கப் போட அலாதி பிரியம் கொண்டிருப்பார்கள். இதில் சில ஆண்களும் அடக்கமே. அடிப்படையாக மேக்-கப் போட விரும்புபவர்கள் பவுடர், லிப்ஸ்டிக், கண் மை போன்றவைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் போதிய அளவு அழகை கொண்டு வர முடியாது.

அப்படி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால், மேம்பட்ட மேக்-கப் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இன்றைய சந்தையில் எண்ணிலடங்கா மேக்-கப் பொருட்கள் வகை வகையாக கிடைக்கிறது. பெண்களும் அவற்றை வாங்கி உபயோகித்து, தங்களின் அழகை மேம்படுத்துகிறார்கள். அப்படி ஒரு வகை மேக்-கப் சாதனம் தான், நாம் பார்க்கப் போகும் பவுடர் ஃபவுன்டேஷன். பவுடர் ஃபவுன்டேஷன் என்பது நாம் உபயோகப்படுத்தும் பவுடரை போன்றது தான். ஆனால் சற்று இறுகிய நிலையில், இன்னும் தரமுள்ள மேக்-கப் சாதனமாக விளங்குகிறது.

பவுடர் ஃபவுன்டேஷன் நான்கு வகைப்படும். க்ரீம்-பவுடர் ஃபவுன்டேஷன், லிக்விட்-பவுடர் ஃபவுன்டேஷன், மினரல் பவுடர் ஃபவுன்டேஷன் மற்றும் பிரஸ்ட் பவுடர் ஃபவுன்டேஷன் ஆகிவைகள் தான். இவை அனைத்துமே சாதாரண சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம் மற்றும் கலவையான சரும வகைகளில் நன்றாக செயல்படும். பல பெண்கள் அதை பயன்படுத்தினாலும், அதை முறையாக பயன்படுத்த பலருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு முறையாக பயன்படுத்தாமல் போனால், உரிய விளைவுகளை பெற முடியாதல்லவா? அதனால் இப்போது பவுடர் ஃபவுன்டேஷனை முறையாக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

முதலில் மிதமான க்ளின்சரைப் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அனைத்து அழுக்கையும், எண்ணெயையும் நீக்கும். பின் டோனரை பயன்படுத்தி சருமத்தை நிறம்பதப்படுத்துங்கள். ஏனெனில் கழுவி நிறம்பதப்படுத்தப்பட்ட முகத்தில் தான் ஃபவுன்டேஷன் செய்ய வேண்டும்.

பின்பு சரியான மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி சருமத்தை மேம்படுத்த வேண்டும். இதனால் மாய்ஸ்சுரைசர் சருமத்தை பாதுகாக்கும் அடுக்காக இருக்கும். அதனால் ஈரப்பதம் வெளியேறாமல் சருமத்திலேயே இருக்கும். மேலும் காய்ந்த திட்டுகள் ஏதும் இருந்தால் கூட, அவைகளையும் இது நீக்கிவிடும். முக்கியமாக அதனை சருமத்தின் மீது குறைந்தது 3 நிமிடங்களாவது ஊற விட வேண்டும்.

சருமத்தில் உள்ள எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும் சரி, கன்சீலரை பயன்படுத்தி அதை மறைத்திடவும். பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க, சற்று அடர்த்தியான கன்சீலர்களை பயன்படுத்தவும். அதிலும் பயன்படுத்தும் கன்சீலர்களானது சரும வகைக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். கன்சீலரை நேரடியாக பயன்படுத்தும் போது, மேக்-கப் போடும் சிறிய பிரஷை பயன்படுத்தி போட வேண்டும். அதற்கு பிறகு தான் ப்ளென்டிங் செய்ய வேண்டும்.

பவுடர் ஃபவுன்டேஷனை முழுமையாக செய்து முடிக்க, ஒரு மேக்-கப் ஸ்பாஞ்சை பயன்படுத்தி, பவுடர் ஃபவுன்டேஷனை தடவ வேண்டும். இதற்கு ஒரு ஃபவுன்டேஷன் ப்ரஷும் தேவைபடும். ஆனால் பவுடர் ஃபவுன்டேஷனை தடவிய பின் எக்காரணத்திற்காகவும் விரல்களை பயன்படுத்தக் கூடாது.

முதலில் ஸ்பாஞ்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஃபவுன்டேஷனில் வைத்து ஒத்தி எடுக்கவும். ஒத்திய ஸ்பாஞ்சை முகம் முழுவதும் தடவ வேண்டும். அதிலும் நெற்றி, மூக்கு மற்றும் நாடியிலும் தடவலாம்.

ஒருவேளை பிரஷ் பயன்படுத்துவதாக இருந்தால், பிரஷை பவுடர் ஃபவுன்டேஷனில் நன்றாக சுழற்ற வேண்டும். பின் பிரஷில் இருக்கும் அதிகப்படியான பவுடரை உதறி விட வேண்டும். பின்பு முகத்தின் மீது வட்ட வடிவ இயக்கத்தில் மெதுவாக தடவ வேண்டும். பிறகு ஆங்கில எழுத்து 'S'-ஐ போல், கீழ்நோக்கி ஃபவுன்டேஷனை தடவ வேண்டும்.

பவுடர் ஃபவுன்டேஷன் செய்யும் போது, கவனமான முறையில் கலவை இருக்க வேண்டும். பின் நெற்றியில் ஆரம்பித்து முகம் முழுவதும் தடவியிருக்க வேண்டும். ப்ளென்டிங் செய்யும் போதும் வட்ட வடிவில் இயக்க வேண்டும். முக்கியமாக தடங்களோ, கோடுகளோ தெரியாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தும் ஃபவுன்டேஷன், சருமத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக பவுடர் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் முகம் பார்ப்பதற்கு செயற்கையாக காட்சி அளிக்கும்.

0 comments:

Post a Comment

காப்பகம்