Friday, August 15, 2014

இவைகளை பின்பற்றினால் தொப்பையை விரட்டலாம்..!

உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது ஆண்களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதில் அக்கறை கொள்ளவேண்டும். எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்.

இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் எள்ளை அதிகம் சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை வேகவைத்து தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவையாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும் போதும் பயன்படுத்தலாம்சோம்பை அவித்து தண்ணீர் குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

தினமும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கவும். ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை குறைக்கும். வாழைத்தண்டு, அருகம்பூல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறையும்.

0 comments:

Post a Comment

காப்பகம்