Showing posts with label தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்!. Show all posts
Showing posts with label தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்!. Show all posts

Sunday, December 22, 2013

கம்பர்



1. பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது (சோழநாட்டுத் திருவெழுந்தூர்)

2. இறந்த ஊர்: பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை

3. தந்தை: ஆதித்தன்

4. போற்றிவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்

5. காலம்: 12 ஆம் நூற்றாண்டு

6. சயங்கொண்டார், ஒட்ட்க்கூத்தர், புகழேந்தி புலவர் ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள்.

7. கம்பர் 1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.

8. நூல்கள்: ஏர் எழுபது, திருக்கை வழக்கம்(இரண்டும் உழவு பற்றியது), கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி

9. கம்பர் மகன் அம்பிகாபதி

10. அம்பிகாபதி எழுதியது அம்பிகபதிக்கோவை

11. சிறப்பு: கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், கல்வியில் பெரியர் கம்பர், வெண்பா பாடுவதில் வல்லவர், விருதப்பா பாடுவதில் வல்லவர்.

12. புகழுரைகள்:

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

 “கம்பனைப் போல் வள்ளுவனைப் போல்

 இலங்கோவடிகள் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”

 “யாமறிந்த புலவரிலே”

-பாரதி

 உழவின் சிறப்பு

 மேழி- கலப்பை, ஏர்; வேந்தர்- மன்னர்; ஆழி- மோதிரம்; சூழ்வினை-உண்டாகும் வறுமைத் துன்பம்; காராளர்- மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.

கம்பராமாயணம்

"தாதுகு சோலை தோறும் சன்பகக் காடு தோறும்
 போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்
 மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்
 ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே"

தாதுகு- மகரந்தம், போது- மலர், பொய்கை- குளம், பூகம்- கமுகம்(பாக்கு மரம்)

 "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

 நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

 அலகிலா விளையாட்டுடையார் அவர்

 தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"

உலவாக்கல்- உண்டாகுதல்( படைத்தல்); நிலைபெருத்தல்- காத்தல்; நீக்கல்-அழித்தல்; நீங்கலா- இடைவிடாது; அகிலா- அளவற்ற; அன்னவர்- அத்தகைய இறைவன்; தலைவன்- இறைவன்; சரண்- அடைக்கலம்

1. கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”

2. வழிநூல் என்றும் கூறுவர்.

3. காண்டங்கள்:

4. பாலகாண்டம்

5. அயோத்தியா காண்டம்

6. ஆரணிய காண்டம்

7. கிட்கிந்தா காண்டம்

8. சுந்தர காண்டம்

9. யுத்த கண்டாம்

 காண்டம்- பெரும் பிரிவு, படலம்- உட்பிரிவு




Sunday, October 27, 2013

புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்!



இலக்கண நூல்கள்
நூலாசிரியர்கள்
அகத்தியம்அகத்தியர்
தொல்காப்பியம்தொல்காப்பியர்
இறையனார் களவியல்இறையனார்
புறப்பொருள் வெண்பாமாலையனாரிதனார்
யாப்பருங்கலம்அமிர்தசாகரனார்
யாப்பருங்கல காரிகைஅமிர்தசாகரனார்
வீரசோழியம்புத்தமித்திரர்
நேமிநாதம்குணவீரபண்டிதர்
தண்டியலங்காரம்தண்டி
நன்னூல்பவணந்தி முனிவர்
அகப்பொருள்நம்பியகப் பொருள்
நவநீதப் பாட்டியல்நவநீதநாடான்
சிரம்பரப் பாட்டியல்மஞ்சோதியர்
மாறனலங்காரம்மஞ்சோதியர்
பிரயோக விவேகம்சுப்ரமணிய தீட்சிதர்
மாறன் அகப்பொருள்திருக்குருகைபெருமாள் கவிராயர்
இலக்கண விளக்கம்வைத்தியநாத தேசிகர்
இலக்கண விளக்க சூறாவளிசிவஞான முனிவர்
இலக்கண கொத்துசாமிநாத தேசிகர்
தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
பிரபந்த தீபிகைமுத்து வேங்கட சுப்பையர்
முத்துவீரியம்முத்துவீர உபாத்தியாயர்
சாமிநாதம்சாமிகவியரசர்
அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம்தண்டபாணி சுவாமிகள்
காக்கைபாடினியம்காக்கை பாடினியார்
வச்சனந்தி மாலைகுணவீர பண்டிதர்

காப்பகம்