Sunday, December 22, 2013

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்!




தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் ஹீரோவாக அறிமுகமானவர்கள் மட்டும் 68 பேர். இவர்களில் கார்த்திக் மகன் கவுதம் (கடல்), சேது (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆகியோர் மட்டுமே அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கவுதம் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமான இளம் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் தவிர மலையாளத்திலிருந்து வந்த நிவின் (நேரம்), சந்தோஷ் (ஆதலினால் காதல் செய்வீர்), ராம் (தங்க மீன்கள்), விக்ரம் ஆனந்த் (நிர்ணயம்), அசோக் ஷெல்வன் (பீட்சா-2) ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார்கள்.

2013ம் ஆண்டு 80 ஹீரோயின்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இது எந்த ஆண்டிலும் எந்த மொழியிலும் இல்லாத சாதனை அளவாகும். இவர்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நஸ்ரியா நாசிம் (நேரம்), ராதா மகள் துளசி (கடல்), நிவேதா தாமஸ் (நவீன சரஸ்வதி சபதம்), மிருத்திகா (555), சுரபி (இவன் வேற மாதிரி) ஆகியோர் கவனிக்கப்பட்டவர்கள். இவர்கள் தவிர, விபா (மதில்மேல் பூனை), அஷ்ரிதா ஷெட்டி (உதயம் என்.எச்-4), சுர்வின் (மூன்று பேர் மூன்று காதல்), ஸ்ரீரம்யா (யமுனா), இஷா தல்வார் (தில்லுமுல்லு) ஆகியோர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சிறிய பட்ஜெட்டில் கூட படம் எடுத்துவிட முடிகிற சூழ்நிலை இருப்பதால் புதியவர்கள் சினிமா நோக்கி வருகிறார்கள். நான்கு பேர் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து விடுகிறார்கள்.

நடிக்கும் ஆசையுடன் இருக்கிறவர்களுக்கு கொஞ்சம் முயற்சி செய்தால் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அதனால்தான் புது ஹீரோ, ஹீரோயின்களின் வருகை அதிகமாகி இருக்கிறது. அப்படி அதிகமானாலும் நிலைத்து நின்றவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. காரணம் இப்போது சினிமாவில் அறிமுகமாவது எளிது. திறமையால் மக்களை சென்றடைவதும், சென்றடைந்து புகழ் பெற்றால் அதை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நிறைய புதுமுகங்கள் வருவது ஆரோக்கியமான விஷம்யம்தான். அப்போதுதான் திறமையாளர்கள் கிடைப்பார்கள் என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

0 comments:

Post a Comment

காப்பகம்