Sunday, December 8, 2013

எது பக்குவப்பட்ட சிந்தனை?



உங்களுக்கு, ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு நாள் விடியலும் உங்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்தும் ஒன்று வயதில் ஒரு நாள் அதிகரிக்கிறது. இரண்டு ஆயுளில் ஒரு நாள் குறைகிறது.


வயதில் ஒரு நாள் அதிகரிப்பதும், ஆயுளில் ஒரு நாள் குறைவதும் மனிதனுக்கு பக்குவத்தையும், பக்குவப்பட்ட சிந்தனையையும் தந்தாக வேண்டும். பக்குவப்பட்ட சிந்தனை என்பது எது?


குடும்பத்திற்காக என்ன செய்திருக்கிaர்கள்? உங்களுக்காக என்ன செய்திருக்கிaர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். குடும்பத்திற்காக செய்ய வேண்டியதை பெரும்பாலானவர்கள் தவறாமல் செய்து விடுகிறார்கள். உழைப்பது, சம்பாதிப்பது, மனைவி, பிள்ளைகளை கவனிப்பது எல்லாமும் குடும்பத்திற்காகச் செய்வது. உங்களுக்காக என்பது உங்கள் மறுபிறப்பின் நலனுக்காக நீங்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.


புத்தர் காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். மக்கள் தன்னை பார்த்துவிட்டால் உணவு படைத்துவிடுவார்கள் என்பதற்காக காட்டுப் பாதையை தேர்ந்தெடுத்தார். உறவுகளை தவிர்த்த அவருக்கு உணவு மீதும் ஆசையில்லை. உடலை பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. மாறாக உடலை வருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.


நடந்தார்.... மாதக் கணக்கில்... வருடக் கணக்கில்...! போகிற போக்கில் சிறிய நதி ஒன்று குறுக்கிட்டது. நிரஞ்சனா என்பது அதன் பெயர். அதைக் கடக்க வேண்டும். இறங்கினார். குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் புத்தரின் சக்தியற்ற உடலால் தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. தடுமாறினார். தண்ணீர் இழுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டார்.


‘நீங்கள்தான் உயிரைப் பற்றியே கவலைப் படவில்லையே அப்படி இருக்க ஏன் இந்த கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டு தொங்குகிaர்கள்?’ என்று கேட்டது மனசாட்சி. உடனே கிளையை விட்டுவிட்டு தண்ணீரில் நின்றார். அப்போது அவர் உடலில் சக்தி அதிகரித்தது போல் இருந்தது.


தண்ணீரில் நடந்து.... கடந்து... கரையேறி நேராக போதி மரத்தடிக்குப் போனார். ‘எனக்கு ஞானம் பிறக்க வேண்டும் இல்லையேல் இந்த இடத்திலே நான் மரணமடைய வேண்டும்’ என்று பிடிவாதமக அமர்ந்தார். தன் உடலை பல வழிகளில் வருத்திக் கொண்டிருந்த இவர், மரணத்தை வா என்று அழைத்த மறுவினாடியே ஞானம் பிறந்துவிட்டது. ஆக மரணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் ஞானம் வந்துவிடுகிறது. மரணமும், ஞானமும் ஞானிகளுக்கு ஒன்றுதானே!


மரணத்தை துச்சமாக நினைக்கிறவர்கள், புதுப் புது சக்திகளைப் பெறுகிறார்கள். மரணத்தை நினைத்து பயம் கொள்கிறவர்கள், இருக்கிற சக்தியையும் இழந்து விடுகிறார்கள்.


மனிதர்கள் தங்கள் சக்திகளை செலவிட்டு இன்பம், துன்பம், சோகம், சுகம் போன்ற பலவற்றையும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களை திரும்பத் திரும்ப பல ஆயிரம் தடவை அனுபவித்தாலும், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அனுபவிக்கக் கூடிய ‘த்ரில்’ அனுபவம் மரணம் மட்டும்தான்! ஆனால் பல அனுபவங்களைப் பெற போட்டி போடக்கூடிய மனிதர்கள் இந்த ஒரு த்ரில் அனுபவத்தை மட்டும் பெற விரும்பாமல் தப்பித்து ஓட முயற்சிக்கிறார்கள்.


இந்த உலகத்தில் கோடான கோடி மக்கள் மடிந்திருக்கிறார்கள். காற்றோடு, நீரோடு, மண்ணோடு கலந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள் இறக்கிறார்கள் அது ஒரு சுழற்சி. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.


கடந்த காலங்களில் மக்கள் இயற்கை விவசாய முறையில் ஈடுபட்டிருந்தார்கள். விளைச்சல் குறைவாக இருந்தது. ஆரோக்கியம் நிறைவாக இருந்தது. செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் பெருமளவு விளைச்சல் அதிகரிக்கும். பட்டினி நீங்கும். அதே நேரத்தில் அவைகளை உண்ணும் மக்களுக்கு நோயும் அதிகரிக்கும் என்ற உண்மை முன்னெடுத்து வைக்கப்பட்டது. ‘நோய் அதிகரித்தாலும் பரவாயில்லை. உணவில்லை என்று கையேந்தும் நிலை வந்துவிடக் கூடாது’ என்ற நோக்கத்தில் புகுத்தப்பட்ட செயற்கை உர விவசாயம் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று உணவே மனிதனுக்கு விஷமாகி, மனிதனை பிரமாண்ட ஆஸ்பத்திரிகள் முன்பு குவியல் குவியலாக கொண்டு போய் சேர்த்துவிட்டது.


நாம் உடலுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம்! யாரும் காணமுடியாத அளவுக்கு மூடிவைக்கிறோம். மற்றவர்கள் தொட்டால் துடித்துப் போகிறோம். தொட்டவர்களை துடிக்க வைத்து விடுகிறோம். ஆனால் நோய் என்று வந்துவிட்டால் உயிர் முக்கியம் என்று அந்த உடல் டாக்டரிடம் மனப்பூர்வமாக சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டு விடுகிறது. இறந்துவிட்டால், அந்த உடலை யார் யார் கையிலோ ஒப்படைத்து விடுகிறோம். அளவு கடந்த உரிமை உள்ளவர்கள் என்றாலும் அடுத்து நிற்க முடியாது அந்த உடலுக்கு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் முன்பின் அறிமுகமற்ற யாரோ ஒருசிலர்தான் செய்கிறார்கள். அவர்கள் கையில்தான் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதுதான் உலகம்... இது தான் உண்மை.


இந்த உண்மைகளை உணர்ந்தால் உடல்கள் மீது இருக்கும் ஆசையும் ஆர்வமும் அடங்கும், இந்த உடலுக்காக வெட்டு குத்து எத்தனை? வேதனை அவமானம் எத்தனை? ஜெயிலில் பெரும் பகுதி இடங்கள் நிரம்பி வழிவதற்கான காரணமும் இதுதானே?!


அன்று ஆலயத்தில் மிக அதிகமான கூட்டம். மக்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு கடவுளை காணச் சென்றனர். பூசாரிகள் உள்ளே இருந்தனர். உள்ளே இருந்த இரண்டு கடவுள்களும் வெளியே வந்துவிட்டார்கள்.


* இவர்களில் பலர் பெற்றோர், உறவினர்கள். குடும்பத்தினரிடம் அன்பு செலுத்துவதில்லை. அவர்களை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் நம்மைப் பார்க்க இங்கே வந்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். பெற்று வளர்த்தவர்களிடமே அன்பு காட்டாத இந்த சுயநலவாதிகள் நம்மிடம் எப்படி பக்தி வைப்பார்கள்? இவர்களை நம்பி ஆசீர்வதிக்க முடியவில்லை. அதனால்தான் வெளியே வந்துவிட்டேன்’ என்றார் முதல் கடவுள்.


* அதற்குள் சிலர் கையில் இருந்த பணத்தை வாயிலில் நிற்கிறவரிடம் கொடுத்துவிட்டு நமது அனுக்கிரகங்களைப் பெற குறுக்குவழியில் செல்கிறார்கள். அதனால் நான் உங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன் என்றார், அடுத்த கடவுள். நமது கற்பனைக்கு தக்கபடி கடவுளுக்கு உருவங்களை கொடுத்தோம். நமக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு ஆராதனைகளை செய்கிறோம். நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள திருவிழாக்களும் நடத்துகிறோம். கடவுளின் சக்தியை அறிந்துகொண்டு, அதற்கு தக்கபடி நம்மை புதுப்பித்துக் கொள்வதற்குப் பதில், கடவுளைச் சுற்றி நடக்கும் விடயங்களில் கவனத்தை செலுத்தி கடவுளோடு சேர்ந்து சக மனிதர்களையும் திண்டாடவைத்துக்கொண்டி ருக்கிறோம்.


கொண்டாட்டங்கள் இல்லாத இடத்தில் கடவுளே இல்லை என்பதுபோல் காட்டிவிட்டார்கள். பக்தியின் அர்த்தம் பாதை மாறிப் போய்விட்டது. அதுபோல்தான் மரணத்தின் அர்த்தமும் மனிதர்களுக்கு தெரியாமலே இருக்கிறது. மரணத்தின் போது மற்றவர்கள் அழும் அழுகையே மனக்கண் முன் நின்று அதை மற்றவர் களுக்கு கொடூரமானதாக உணர்த்திக் கொண்டி ருக்கிறது.


இன்று காலாவதியான மருந்து உணவுப் பொருட் களை எல்லாம் அழிக் கிறார்கள். அவைகளை அழிக்கும்போது மகிழ்கிறோம். ஆனால் காலாவதியாகும் மனிதனை இயற்கையே அழிக்கும்போது அழுகிறோம்... அந்த ஆன்மா மீண்டும் துளிர்க்கும் என்பதை அறியாமலே...!


மறுபிறப்பு ஏன் எப்படி நிகழ்கிறது?



ஒருவர் மரணமடைந்ததும் அவரது ஆன்மா, கண்களுக்கு புலப்படாத சிறிய ஒளிவட்டமாக உடலில் இருந்து வெளியேறுகிறது. பின்பு அது இன்னொரு பெரிய ஒளிவட்டத்திற்குள் ஐக்கியமாகிறது.


ஐக்கியமாகிவிட்ட இந்த ஒளிவட்ட ஆன்மா, இந்த உலகத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை சுயமாகவே மதிப்பீடு செய்யும். தான் பிறப்பெடுத்து வாழ்ந்த நோக்கம் என்ன? அந்த நோக்கம் கடந்த கால வாழ்க்கையில் எந்த அளவிற்கு நிறைவேறி இருக்கிறது? தனது கர்மாக்கள் அனைத்தும் தீர்ந்திருக்கிறது? மேலும் தொடர்கிறதா? என்றெல்லாம் ஆராயும்.


இங்கே நாம் வாழும்போது எடுக்கும் முடிவுகளுக்கும் - இறந்து ஆன்மாவான பின்பு எடுக்கும் நிலைப்பாட்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.


இங்கே வாழும் வாழ்க்கையில் தவறு செய்தாலும் சூழ்நிலைகளால், தேவைகளால் ‘தான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று வாதிடும் நிலை ஏற்படலாம். தனது தவறை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும் செய்யலாம். அதே மனிதன் இறந்து ஆன்மாவான பிறகு சுத்தமாகி விடுகிறது. ஆன்மாவிற்கு பொய் இல்லை. அதற்கு உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. அதனால் மண்ணுலக வாழ்க்கையில் செய்த எல்லா தவறுகளையும் ஆன்மாக்கள் ஒத்துக்கொள்ளும். அதற்கான தண்டனைகளையும் அதுவே தீர்மானித்து, கர்மாக்களாக மாற்றும்.


அந்த கர்மாக்களைத் தீர்க்க மறுபிறப்பெடுக்க வேண்டியதாகிறது. ஏன் என்றால், பூமியில் மனிதரோடு மனிதராக வாழ்ந்துதான் கர்மாக்களை தீர்க்க முடியும்.


கர்மாக்களை தீர்க்க மறுபிறப்பு எடுக்க தீர்மானித்த பிறகு அதற்கு உடல் தேவை. உறவுகள் தேவை. அதனால் அடுத்தகட்ட நிலைக்கு ஆன்மா செல்கிறது. அப்போது அது பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது.


மறுபிறப்பு ஏன் எடுக்க வேண்டும்?



மறுபிறப்பில் எப்படிப்பட்ட உட லைப் பெற வேண்டும். ஆணா? பெண்ணா? குண்டு உடலா? ஒல்லி உடலா? எப்படிப்பட்ட நிறம்? (மறுபிறப்பின் நோக்கம் என்னவோ அதற்கு தகுந்த உடல் எடுக்க வேண்டியதாகிறது)


தனக்கான இணை யார் என்று அடையாளம் காண வேண்டியுள்ளது. கர்மாக்களை நிறைவேற்ற கணவனோ, மனைவியோ துணைபுரிய வேண்டும் அல்லவா? அந்த ஜோடி யார்? அவர்கள் எங்கே எப்படி சந்திப்பார்கள்? இன்னும் பல நூறு கேள்விகளுக் கெல்லாம் அந்த ஆன்மா விடைதேடி முடிவெடுக்கிறது.

0 comments:

Post a Comment

காப்பகம்