Sunday, December 8, 2013

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

டிப்ஸ் -1:

மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்


இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.


டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.


மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!


கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.


டிப்ஸ் -3:

பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.

ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!


டிப்ஸ் -4:

 மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால், முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!


டிப்ஸ் -5:

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.


டிப்ஸ் -6:

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

0 comments:

Post a Comment

காப்பகம்