Sunday, December 8, 2013

நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!



நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.


 'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.


ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.


இதன் சிறப்பம்சமாக இந்தப் பாடலுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்று இயக்குநர் ருஷி தெரிவித்துள்ளார்.


 இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார்.

0 comments:

Post a Comment

காப்பகம்