Friday, November 15, 2013

அஞ்சலியை ‘ஹீரோயின்’ ஆக்கியது நான்தான்: சித்தி பாரதிதேவி பேட்டி

 

நடிகை அஞ்சலி தனது சித்தி பாரதிதேவிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், வெற்று காசோலையில் கையெழுத்து வாங்கி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.57 லட்சத்து 30 ஆயிரம் தொகை மற்றும் 50 பவுன் நகை உள்ளிட்ட உடமைகளை எடுத்துக் கொண்டதாகவும், அடுக்கடுக்கான புகார் கூறியுள்ளார்.


எனது அக்காள் பார்வதி தேவி மகள்தான் அஞ்சலி. கணவர் இல்லாமல் சிறு வயதில் அஞ்சலியை வளர்க்க கஷ்டப்பட்டார். இதனால் 2001–ல் என்னுடன் அஞ்சலியை அழைத்து வந்து விட்டேன்.

எனது கணவர் அரிபாபு பில்டர் ஆக இருக்கிறார். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அஞ்சலியை நாங்கள் மகளாக வளர்த்தோம். நடிகையாக்க டான்ஸ் கற்றுக் கொடுத்தேன். மேக்கப்புக்கும் பணம் கொடுத்தேன். எங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்து அஞ்சலியை கதாநாயகி ஆக்கினேன். நான் இல்லாமல் அஞ்சலி நடிகையாகி இருக்க முடியாது.

2006–ல் தெலுங்கு படமொன்றில் அறிமுகமானார். சரியாக ஓடவில்லை. மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடித்தார். அது ரிலீசே ஆகவில்லை. தமிழில் ‘கற்றது தமிழ்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ‘அங்காடி தெரு’ படம் வந்தது. ‘எங்கேயும் எப்போதும்’ படம் வந்த பிறகு அஞ்சலி பேசப்பட்டார். அதன்பிறகு பெரிய படங்கள் குவிந்தன.

என்மேல் அஞ்சலி இப்போது குற்றச்சாட்டு கூறுகிறார். அஞ்சலியை முறைப்படி நான் தத்து எடுத்து உள்ளேன். எங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்தோம். நாங்கள் குடியிருக்கும் வளசரவாக்கம் வீட்டை எனது கணவர்தான் கட்டினார். அதை அஞ்சலி பெயரில் எழுதி வைத்தோம். ரேசன்கார்டு, பாஸ்போர்ட்டுகளில் அஞ்சலியின் அம்மா, அப்பா பெயரில் எங்கள் பெயர்கள்தான் உள்ளன. அஞ்சலியை மகள் மாதிரிதான் வளர்த்தேன். என்மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

இவ்வாறு பாரதிதேவி கூறினார்.

அஞ்சலி உங்களை விட்டு பிரிந்து போக காரணம் என்ன என்று கேட்டபோது சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. இப்போதும் அஞ்சலியை மகளாகத்தான் நினைக்கிறேன். நான் இல்லை என்றால் அஞ்சலி இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன். டைரக்டர் களஞ்சியம் மீது புகார் சொல்லி இருப்பது தேவையற்றது. அஞ்சலியை வைத்து சில படங்களை அவர் எடுத்தார். சில காரணங்களால் அது வரவில்லை. அவரும் அஞ்சலியை நடிகையாக்க உதவினார் என்றார்.

0 comments:

Post a Comment

காப்பகம்