Friday, November 15, 2013

டி ரெக்ஸ் டைனசோரின் மூதாதை விலங்கு கண்டுபிடிப்பு

 

சுமார் 70 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொடூரமான விலங்கான, திரன்னோசோரஸ் ரெக்ஸ் (டி.ரெக்ஸ்) என்ற டைனசோரின் முன்பு வந்த , அதன் உறவு என்று கருதப்படும் மற்றொரு விலங்கை , அமெரிக்காவின் யுட்டா மாகாண விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யுட்டா மாகாண பல்கலைக்கழகத்தின் , டைனசோர் ஆராய்ச்சியாளர்கள் , இந்த ஜந்து, பரிணாம வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால், டி-ரெக்ஸின் மாமா-கொள்ளுத்தாத்தாவாக இருக்கவேண்டும் என்றும் அது , பிரபலமாக அறியப்படும் டி.ரெக்ஸ் வாழ்ந்த காலத்துக்கு சுமார் 10 அல்லது 12 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது என்று கூறுகிறார்கள்.

லித்ரொனக்ஸ் ஆர்கெஸ்டெஸ் அல்லது கோர் அரசன் என்று அறியப்படும் இந்த விலங்கு, இரண்டு கால்களில் நின்று, பெரும் வாட்களைப் போன்ற பற்களைக் கொண்டிருந்தது என்றும், வேட்டைக்காக நேரடியாக முன்னோக்குப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சுமார் ஏழரை மீட்டர் நீளம் கொண்ட இந்த விலங்கு அது வாழ்ந்த சூழலில், மிகவும் சக்தி வாய்ந்த ,வேட்டை மிருகமாக இருந்திருக்கும் என்றும் இந்த ஆராய்ச்சிக்குழு கூறுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால சுற்றுச்சூழல்கள் குறித்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


0 comments:

Post a Comment

காப்பகம்