உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்று வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுவரை நடந்த சுற்றுக்கள் டிராவில் முடிந்த நிலையில், 6-வது மற்றும் 7-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ள ஆனந்துக்கு 5-வது சுற்றில் சவால் காத்திருக்கிறது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்ùஸன் மோதுகின்றனர். இதுவரை நடந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளனர்.
முதல் சுற்றில் ஆனந்த் சுதாரித்தார். இரண்டாவது சுற்றில் கார்ல்ùஸன் எழுச்சி பெற்றார். 3-வது சுற்றில் ஆனந்த், கார்ல்ùஸனுக்கு நெருக்கடி கொடுத்தார். 4-வது சுற்றில் மீண்டும் கார்ல்ùஸன் சுதாரித்துக் கொண்டார்.
வியாழக்கிழமை ஓய்வுக்குப் பின்,5-வது சுற்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் ஆனந்த் கறுப்பு நிறக் காய்களுடனும், கார்ல்ùஸன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆட உள்ளனர். விதிப்படி, 6-வது மற்றும் 7-வது சுற்றுக்களில் ஆனந்த் வெள்ளை நிறக்காய்களுடன் ஆட உள்ளார்.
வெள்ளை நிறுக் காய்களுடன் விளையாடியபோது இருவரும் திறமையாக செயல்பட்டனர். எனவே, 5-வது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடும் ஆனந்துக்கு நெருக்கடி ஏற்படும். 2-வது சுற்றில் காரோ கான் முறையில் அசத்திய கார்ல்ùஸன் அடுத்தடுத்த சுற்றுகளில் பெர்லின், சிசிலியன் மற்றும் ஃபிரெஞ்ச் முறைகளின் மூலம் ஆனந்துக்கு சவால் அளிக்க காத்திருக்கிறார்.
0 comments:
Post a Comment