Friday, December 13, 2013

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்!




செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.


அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.


இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.


இத்தனை இலட்சததில் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு முதல்கட்டமாக தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர் என்றும் அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் என்றும் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.


மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன்..


 பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment

காப்பகம்