வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும். வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி. அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் அரவணைக்கும். அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் * காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது. * காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு டம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும். * காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் சாறு கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும். * காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும். * மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். * இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது பருப்பு. வயிறை மிதமாக வைத்திருக்கும். இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும். |
Saturday, August 31, 2013
உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
August
(203)
-
▼
Aug 31
(31)
- தலைவாவை முறியடித்த அஜித்தின் ஆரம்பம்!
- கறிவேப்பிலை மகிமைகள்!
- இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!
- பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உ...
- டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!
- ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய iWatch!
- பேஸ்புக் பயனர்களுக்காக Canon வடிவமைத்துள்ள அதிநவீன...
- ஸ்டெம் செல் மூலம் மனித மூளையை உருவாக்கும் முயற்சிய...
- இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்!
- குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில...
- 20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகவிருக்கும் Noki...
- சளித்தொல்லைக்கு கருந்துளசி!
- பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?
- கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்
- பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?
- PDF கோப்புக்களை சிறந்த முறையில் கையாளுவதற்கு!
- உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள்
- கருச்சிதைவை தடுக்க சில வழிகள்!
- Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம் !
- கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller தொழில்நுட்...
- சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!
- நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!
- டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!
- உலகின் மிக துல்லியமான நேரம் காட்டும் கடிகாரம் இதுத...
- டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் ...
- தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் ...
- மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..!
- இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண...
- கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!
- கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்ப...
- செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகள...
-
▼
Aug 31
(31)
-
▼
August
(203)
0 comments:
Post a Comment