Monday, September 8, 2014

ஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்றோர்..!

நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, அவளை திருவிழாவிற்கு அழைத்துப் போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி, திருவிழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். இவளும் அமர்ந்தாள். இவள் அருகில் ஒருவர் வந்தார். கன்னத்தைக் கிள்ளினார். தலையை வருடினார். பாப்பா உன் பெயர் என்ன என்று கேட்டார். தீபா அகர்வால் என்றாள், அந்த சிறுமி.

அந்த மனிதர், அவளது பெற்றோரை நிமிர்ந்துப் பார்த்து என்ன விலை என்று கேட்டார். ‘ஏழாயிரம்தான் சாமி..!’ என்றார், அவளது தந்தை. அதிக விலை சொல்றீங்களே.. என்றார். ‘இல்லைங்க...! இதைவிட குறைக்க முடியாது!’ என்றனர், அவளது பெற்றோர்.

சரி விடுங்க! நீங்க கேட்கிற பணத்தை கொடுத்திடுறேன் என்ற அவர் பணத்தை எடுத்து, அவளது பெற்றோரிடம் நீட்ட, அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு சிறுமியை அவர்களிடம் தள்ளுகிறார்கள். அவள் அழுகிறாள். திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள்.

பாப்பா பயப்படாதே. நான் உன்னை நல்லா பாத்துக்கறேன். சாக்லெட் வாங்கித் தர்றேன் வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்கிறார் அந்த மனிதர். சிறுமி மிரண்டு போய் பெருங்குரலெடுத்து அழுகிறாள். சிறிது நேரத்தில் நான்கைந்து பேர் வந்து தூக்கி  வண்டியில் போட்டு, அவளை கொண்டு சென்றுவிடுகிறார்கள்.  அவளது அழுகுரல் காற்றோடு கலந்து காணாமல் போய்விடுகிறது.

இது சினிமா காட்சி அல்ல. ராஜஸ்தான் மாநிலத்து கிராமங்களில் இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடூரம். பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். அதுவும் ஆடு, மாடுகளைவிட குறைவான விலைக்கு!

மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள். சிறுமி,    வயதுக்கு வந்த பெண், இளம் பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள்.

இந்த விற்பனை நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது. வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால்கூட சிலர் விற்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘‘இங்கு வறுமையில் வாடுகிறார்கள். அங்கு போயாவது நன்றாக சாப்பிட்டு வசதியாக வாழட்டும்’’ என்கிறார்கள்.

இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக் காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் தர தேவையில்லை. மனைவி இல்லாதவர்கள் மனைவியாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. சமூக அந்தஸ்தும் கிடையாது.

இப்படி வாங்கி பயன்படுத்தப்படும் பெண்களை ‘பாரோ’ என்றழைக்கிறார்கள். இந்தப் பாரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாகிவிடுகிறார்கள். முதலாளி என்ன வேலை சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாத பாரோக்கள் சவுக்கடி வாங்குவதும் சகஜம்.

ஒருவர் தனது செல்வ நிலைக்கேற்ப எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி, வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். தன்னிடம் வேலை இல்லாதபோது மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.

இந்த பாரோக்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான். தாயிடம் இருந்து பிரித்து வேறுயாருக்காவது விற்றுவிடுவார்கள்.

முன்பு தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு சோகமாக இருந்தாலும், அவர்கள் ஆடை, ஆபரணங்கள் அணிந்து ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்க்கை அதைவிட மகாமோசம்.

பாரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும், பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர்கூட 18 வயது பாரோவை வாங்கிச் சென்று திருமணம் செய்துகொள்கிறார். வீட்டு வேலைக்கும், தனது தேவைக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்.

சிலர் பாரோக்களை  வாங்கி, அதைவிட அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல, மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அவர்களை பல மாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கிறார்கள்.

பாரோக்களின் மனக்குமுறல்:

கொல்கத்தாவில் வசிக்கும் மெகரம் சொல்கிறார்..

“ஆடு, மாடுகளைவிட கேவலமான வாழ்க்கை எங்களுடையது. பலமுறை வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சித்தேன். தேடி கண்டுபிடிக்கப்பட்டு கால் எலும்பு முறியும் வரை அடித்து தீர்த்துவிட்டார்கள். அந்த அடிக்கு பயந்து மறுபடியும் ஓட முயற்சிக்கவில்லை.

குழந்தை பிறந்ததும் இருக்கும் மவுசையும் இழந்துவிடுவோம். குழந்தையையும் விற்றுவிடுவார்கள்”

அசாமில் வசிக்கும் மரியம்:

“என்னை மூன்று முறை விற்றுவிட்டார்கள். கடைசியாக ஒரு கண்ணில்லாத 70 வயது கிழவனுக்கு என்னை விற்றார்கள். அந்தக் கிழவர் என்னை திருமணம் செய்துகொண்டார். வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு, வெளியே வேலைக்கும் போகிறேன். கிழவரையும் கவனித்துக் கொள்கிறேன். அவருடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். சில சமயம் மகள் வீட்டிற்கும் என்னை வேலைக்கு அனுப்பிவைப்பார்.

அவருடைய மகளைவிட என் வயது குறைவு. அதைப் பற்றியெல்லாம் அந்த கிழவர் கவலைப்   படுவதில்லை”

ஐதராபாத்தில் வசிக்கும் கவுசியா:

“35 ஆண்டுகளில் இரண்டு முறை விற்கப்பட்டேன். என் மகளை திருமணம்          செய்துகொடுத்தேன். பாரோவின் பெண் என்பதால் இரண்டாம் தார வாழ்க்கைதான் அவளுக்கு கிடைத்திருக்கிறது. பாரோவின் பெண் என்று மாமியார் அவளை கேவலமாக பேசுகிறார்.

அவளது கணவன் கையாலாகாதவன். யாரும் பெண் கொடுக்காத காரணத்தால் என் பெண்ணை கேட்டு வந்தார்கள். மனைவி என்ற அந்தஸ்து என் மகளுக்காவது கிடைக்கட்டும் என்றெண்ணி திருமணம் செய்து வைத்தேன். இந்த சமூகம் திருந்தாது. என்னை ஒரு மாமியாராகவும் மதிப்பதில்லை. சம்பந்தி என்ற அந்தஸ்தும் தரவில்லை. ‘‘உன் மகளை கண்டித்துவை. சொந்த பந்தங்கள் நடுவே உட்கார்ந்து பேசுகிறாள்” என்கிறார்கள். எங்கே என் மகளை விரட்டி விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது”

கொல்கத்தாவில் வசிக்கும் முஸ்கான்:

“நான் கொல்கத்தாவிலிருந்து பீகாருக்கு விற்கப்பட்டேன். எனக்கு மீன் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் வந்து சேர்ந்த இடத்தில் சுத்த சைவம். மீனை கண்ணால்கூட பார்க்க மாட்டார்கள். மீன் சாப்பிட நாக்கு தவியாய் தவிக்கும். ஆனால் அனுமதி கிடையாது. ஒருமுறை அவர்களுக்குத் தெரியாமல் மீன் சாப்பிட்டுவிட்டேன் என்பதற்காக ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறி என்னை உயிரோடு எரித்துவிட முயற்சி செய்தார்கள்.

நான் இருமுறை விற்கப்பட்டவள். மூன்றாவது முறையும் விற்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயதாகிவிட்டால் வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள். எங்காவது போய் பிச்சை எடுத்துதான் பிழைக்கவேண்டும்”

பீகாரில் வசிக்கும் ரேஷ்மா:

“நான் வித்தை காட்டும் ஒரு குடும்பத்தினரால் திருமணம் என்ற பெயரில் வாங்கப்பட்டேன். அவர்களுக்காக நிறைய சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன். என் கணவரோடு பிறந்தவர்கள் ஏழு ஆண்கள். சொன்னால் வெட்கக்கேடு. எனக்கு பிறந்த குழந்தைகளில் எது என் கணவருடையது என்று எனக்குத் தெரியாது” என்று விரக்தியுடன் கூறுகிறார்.

பெண்களை விற்பனை பொருளாக்கும் நிலை எப்போது மாறும்?

Thursday, September 4, 2014

நீங்கள் தூங்கு முறையை வைத்து உறவின் வலிமையை கணிப்பிடலாம்..!

திருமணம் முடித்த தம்பதிகள், உங்கள் துணையுடன் தூங்கும் நிலையைக் கொண்டே உங்களுக்கும் துணைக்கும் இடையிலான உறவின் வலிமையை அறியலாம் என்கிறது ஓர் சுவாரஷ்யமான ஆய்வு.

 1100 தம்பதிகள் எப்படி வீட்டில் உறங்குகின்றார்கள் என்பதனை அவர்களிடம் கேட்டு அறிந்துஇ கட்டிலில் அவர்கள் இருவருக்குமிடையிலான தூரத்தை வைத்து உறவின் வலிமையை கணிப்பிட்டு இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 பிரிட்டன் இணையம் ஒன்றே இக்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

 எங்கே நீங்களும் விளக்கப் படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா... ராகவா லாரன்சின் புதிய முயற்சி..!

சில ஆண்டுகளுக்கு முன்பு கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு வீடு இரு வாசல் என்ற படம் வெளியானது நினைவிருக்கலாம். ஒரே படத்துக்குள் இரு கதைகள் என்ற பாணியில் உருவாக்கப்பட்ட படம் அது.

அன்றைக்கு அது புதுமையான முயற்சியாக பார்க்கப்பட்டது. இப்போது அதைவிடப் புதுமையாக, ஒரு படத்துக்குள் இரு முழுமையான படங்களைக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘முனி' படத்தின் 3-ம் பாகமான ‘கங்கா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் களமிறங்கியுள்ள இவர், இப்படத்தை தொடர்ந்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.

தன் படத்துக்கு 'ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா... ஒண்ணு கிழவன், ஒண்ணு கருப்பு துரை' என்று தலைப்பிட்டுள்ளார். அதாவது, இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்கு பிறகு இன்னொரு படமாகவும் இதை எடுக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களிலும் இவரே கதாநாயகனாக நடிக்கிறார். ‘கருப்புதுரை' படத்திற்கு ராய் லட்சுமி கதாநாயகியாக தேர்வாகியுள்ளார். ‘கிழவன்' படத்தில் நடிக்க ஆண்ட்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்படங்களின் பாடல்களையும், வசனத்தையும் கவிஞர் விவேகா எழுதுகிறார். இசையை லியோன் மற்றும் புதியவர் ஒருவரும் அமைக்கவிருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பை நேற்று செய்தியாளர்களை அழைத்து அறிவித்தார் ராகவா லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் நாயகி ராய் லட்சுமியும் பங்கேற்றார்.
இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு சினிமாவை ஒரு டிக்கெட் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஒரே டிக்கெட்டில் ரெண்டு சினிமாவை பார்க்கக்கூடிய நிலையை உருவாக்கித் தரப் போகிறார் ராகவா லாரன்ஸ்.

பெற்றோர்களே உஷார்... சீரியல்கள் உங்கள் வீட்டு ‘சிறுசுகளுக்கு’ என்ன சொல்லித் தருகின்றன..?

சினிமாவைப் போல் சீரியல்களுக்கும் சென்சார் தரச் சான்றிதழ் கொண்டு வரலாம் போல் இருக்கிறது. காரணம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் தாய்மார்களோடு சேர்ந்து குழந்தைகளும் சமயங்களில் சீரியல் ரசிகர்களாகி விடுகிறார்கள்.

அவ்வாறு குழந்தைகளும் பார்க்கும் சீரியல்கள் அவர்களுக்கு நல்லறிவைப் போதிக்கிறதா எனக் கேட்டால் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். தங்கள் முடிவு சரியானது தான், தாங்கள் நினைப்பது தான் சரி பெற்றோர்க்கு நம்மை விட அதிகமாக ஒன்றும் தெரியாது என்ற மனநிலையில் உள்ள வளரும் இளம்பருவத்தினர் இத்தகைய சீரியல்களால் வழி தவறிப் போகிறார்கள் என்றால் மறுப்பதற்கில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மாணவி ஒருத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் தனது தந்தை இரண்டாவது மணம் முடித்தது தான் எனக் கூறப்படுகிறது. தந்தையின் மறுமணத்தால் மனமுடைந்த சிறுமிக்கு தற்கொலை முடிவைக் கற்றுத் தந்தது தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் தான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் மனோதத்துவ மருத்துவர்கள்.

அவர்கள் கூற்றை இல்லையென புறந்தள்ள முடியாது. இதோ குழந்தைகளின் உலகம் என சில தொலைக்காட்சி சீரியல்கள் காட்டும் மோசமான காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

பிள்ளைநிலா...
பெரும்பாலான சீரியல்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறியவர்களாக பேச்சில் காணப்படுகின்றனர். அதிலும், மாலையில் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பிய நேரத்தில் ஒளிபரப்பப் படும் ‘பிள்ளை நிலா' சீரியலைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கேள்விப்பட்டவரை சமீபகாலமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சீரியலைப் பார்க்க விடுவதில்லை. காரணம் அதில் வரும் சிறுவர்களின் கதாபாத்திர அமைப்பு.

தனக்கு நோய் எனத் தெரிந்த சிறுவன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனைத் தேடிச் செல்கிறாள் அவனது இளவயது. சிறுவன் அடைக்கலமாகும் இடத்தில் உள்ள சிறுமி, சிறுவனை புதை குழியில் தள்ளிக் கொல்ல முயற்சிக்கிறாள் என இப்படியாக செல்கிறது கதை.

இந்தச் சீரியல்களில் வரும் பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் போல, குழந்தைகள் சொல்வதைக் கேட்டுத் தான் நடக்கிறார்கள். இந்தச் சீரியலைப் பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு இதைப் போலவே தங்களது பெற்றோரும் தங்கள் சொல்பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.

கல்யாணப்பரிசு...
இதேபோல், மதியம் ஒளிபரப்பாகும் கல்யாணப்பரிசு சீரியலில் நாயகன் தனது குழந்தைப் பருவக் கதையை எடுத்துக் கூறுகிறார். அதில், சித்தி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தனது நண்பனுக்கு பெற்றோரை விட்டுப் பிரிகிறார் நாயகன்.

பெற்றோரைக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தான் அனாதை இல்லத்தில் சேர்ந்து, மூட்டைத் தூக்கி பிழைத்து கல்வி கற்று முன்னேறியதாக கூறுகிறார் நாயகன்.

இதன்மூலம் வீட்டை விட்டு வெளியேறினால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என தன்னைக் கொண்டு நாயகன் முன்னுதாரணம் கூறுவது போல் உள்ளது. இதற்குப் பதிலாக இவ்வாறு அவசரப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என நாயகன் வருத்தப் படுவது போல் அக்காட்சியை அமைத்திருந்தால் சிறுவர்களுக்கு நிச்சய்ம் பாடமாக அமைந்திருக்கும்.

வாணிராணி...
இந்த வரிசையில் நிச்சயம் வாணிராணி சீரியலையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பிள்ளை நிலாவில் நடித்து வரும் சிறுமி தான் இதிலும் நடிக்கிறார். எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றைப் பார்க்க நேரிடும் இச்சிறுமிக்கு கதைப்படி பேசும் திறன் தற்காலிகமாக நின்று விடுகிறது.

மனவருத்தத்தோடு பள்ளி செல்லும் சிறுமியை, சக மாணவி ஒருவர் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறார். இது பாதிக்கப்பட்ட மாணவி பற்றி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தைக் கூட்டுவதற்காக வைக்கப்படும் காட்சி எனத் தெரிந்தாலும், அவரைக் கிண்டல் செய்யும் சகமாணவியும் அதே வயதுக்காரர் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

வில்லியாகக் காட்டப்படும் மாணவி வாய் பேச முடியாமல் தவிக்கும் மாணவியிடம் சென்று சகட்டு மேனிக்கு டயலாக் பேசுகிறார். அவரது தோரணையே ‘நாங்கெல்லாம் ரவுடியாக்கும்' என்பது போல் தான் உள்ளது.

நிஜ வாழ்க்கையில் இருப்பதைத் தான் படத்தில் காட்டுகிறார்கள் எனக் கூறிய காலங்கள் போய், இன்று படங்களைப் பார்த்துத் தான் சில பிஞ்சுகள் பழுத்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி, கடத்தல் நாடகம் ஆடிய சிறுவர்கள், தனியாக பட்டணம் கிளம்பும் சிறுமிகள் ஆகியோரை மனதில் கொண்டாவது இது போன்ற காட்சிகளை வைக்கும் இயக்குநர்கள் இனி வரும் காலங்களில் மாறினால் வருங்கால சந்ததிக்கு நலம் பயக்கும்.

நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல...!

இணையத்தில் 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதற்கு தங்களை குற்றம்சாட்ட முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐ - கிளவுட் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் ஹேக்கர்களால் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹாலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து அமெரிக்க புலனாய்வு மையத்தின் சைபர் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட மாடலான ஐபோஃன் 6-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஐ-கிளவுட் கணக்குகளிலிருந்து வெளியான ஹாலிவுட் நடிகைகளின் தனிப்பட்ட படங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடி தருவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் நடிகைகளின் தனிப்பட்ட படங்கள் வெளியானதற்கு தங்களை குற்றம்சாட்ட முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறிப்பிட்ட சில பிரபலங்களின் கணக்குகளின் பெயர், கடவுச்சொற்கள் மற்றும் பாதுகாப்பு கேள்விகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, தனிப்பட்ட விஷயங்களை இணையத்தில் வெளியானது உண்மைதான்.

ஆனால் இவை இணைய உலகில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இந்த விதி மீறல்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-கிளவுட்' அல்லது 'பைஃன்ட் மை ஐ-போஃன்' அப்ளிகேஷன்கள் பொறுப்பாகாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பகம்