Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்! உடற்பயிற்சி! அனுபவம்!. Show all posts
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்! உடற்பயிற்சி! அனுபவம்!. Show all posts

Tuesday, January 14, 2014

வீட்டில் செய்யக்கூடிய சிக்ஸ் பேக் பயிற்சி முறைகள்..!



ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை பின்பற்றி தான், சிக்ஸ் பேக் பெறுவது நல்லது. ஜிம்முக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமோ, உங்கள் அடிவயிற்றை கடினமாகவும், திண்மையாகவும், கட்டுடனும் வைத்திருக்க முடியும். வயிற்றிற்கு செய்யப்படும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து, தினசரி சரிவர செய்வதன் மூலம், அபூர்வமான மற்றும் அருமையான சிக்ஸ் பேக்கை பெறலாம்.

 * நேராக படுத்து முழங்காலை மடித்து, கைகளை உங்களுக்கு பின்னால் நேராக நீட்டவேண்டும். பிறகு நீட்டிய கைகளை தலைக்கு மேல் தூக்க வேண்டும். இது பாரம்பரியமான உடற்பயிற்சி. அசைவு கொடுக்கும் போது, மெதுவாகவும், கட்டுப்பாட்டோடும் செய்ய வேண்டும்.

 * உங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி, 90 டிகிரி வளைந்து வரும் வரை கொண்டு வாருங்கள். பாதம் நேராக இருந்தாலும், சாய்வாக இருந்தாலும் பரவாயில்லை.

உங்கள் வயிற்று சுருக்கத்தின் மூலம் இடையை தரையில் வலுபடுத்தி, உங்கள் காலை மேல் நோக்கி நேராக தூக்கவும். பிறகு காலை இறக்கி அதன் பழைய இடத்தில் வைக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பாதம் தரையில் படாமல் இருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவுகிறது.

 * தரையில் பாயை விரித்து, பின்னால் சாய்ந்து உங்கள் கைகளை தலைக்கு மேல் நீட்டவும். பிறகு ஒரே நேரத்தில் உங்கள் கையையும், காலையும் உயரே தூக்க வேண்டும். உங்கள் கை விரல் நுனி, கால் விரல்களை தொடும் வரை செய்ய வேண்டும். பிறகு பழைய நிலைக்கு கொண்டுவந்து விடவும்.

 *  உங்கள் கைகளை உங்கள் தோள்பட்டையை சுற்றி 10 இன்ச் தூரத்தில் வைக்கவும். ஷூவில் உள்ள பாத நுனி, தரையில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் பின்பகுதியை நேராக வைத்துக் கொண்டு,இயல்பாக மூச்சு விட முயல வேண்டும்.

 *  மிருதுவான பரப்பளவில் படுத்து கொண்டு கால்களை(யோகா விரிப்பு) சைக்கிளில் செய்வதை போல பெடலிங்கை காற்றில் செய்ய வேண்டும். மாறுதலுக்கு உங்கள் கணுக்காலை நோக்கி உங்கள் தோள் பட்டையை உயர்த்தவும். இரண்டு பக்கமும் சரிசமமாக இதை செய்ய வேண்டும். இரண்டையும் 12 முறை செய்வது நல்லது.

 *  உட்காரும் நிலையில் வைத்து டம்பெல்ஸ் அல்லது மருத்துவ பந்தை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முழங்காலை மடக்கி, பாதங்களை தரையில் வைக்க வேண்டும். அடிவயிற்றை இறுக்கிக் கொண்டு, சிறிது பின்னால் சாய வேண்டும்.

முழங்கையை மடக்கி, எடையை உங்களுக்கு உட்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின், பக்கத்திற்கு பக்கம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு சுழற்சியின் போதும், அந்தந்த நிலையில் சிறிது நேரம் நிலைத்து இருக்க வேண்டும்.

Sunday, January 5, 2014

உடல் பருமனும் உடல் வலிகளும்..



உடல் பருமன் ஆபத்தானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அதுவே அடிப்படை என்பதையும் அறிவோம். உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் வலிகளும் அதிகம் வரும் என்கிற புதிய புள்ளிவிவரம் சொல்கிறது மருத்துவம்.

உடல் பருமனால் வலிகள் அதிகரிப்பதன் பின்னணி, தீர்வுகள் மற்றும் லேட்டஸ்ட் சிகிச்சைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். ‘‘உடல் பருமனை பி.எம்.ஐ என்கிற அளவீட்டால் அறிகிறோம். பி.எம்.ஐ கணக்கீட்டின் படி, 25க்கும் மேலாக உள்ளவர்கள் அதிக எடை உள்ளவர்களாக சொல்லப்படுகிறார்கள், மருத்துவப் புள்ளிவிவரப்படி, பி.எம்.ஐ 25 முதல் 30 வரை உள்ளவர்கள் 20 சதவிகிதமும், 30 முதல் 35 வரை உள்ளவர்கள் 70 சதவிகிதமும், 35 முதல் 40 வரை உள்ளவர்கள் 136 சதவிகிதமும், பி.எம்.ஐ 40க்கும் மேல் உள்ளவர்கள் 250 சதவிகிதமும் அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு? உடல் பருமன் கூடக் கூட உடலில் ஒருவித ரசாயனம் சுரக்கும். அதுவே வலிகளை உண்டு பண்ணக் காரணம். உடல் எடை கூடினால், ஏற்கனவே உள்ள வலிகளோடு சேர்த்து, புதிய வலிகளும் அதிகமாக உணரப்படும். உடல் பருமனால் உணரப்படுகிற வலிகளில் முழங்கால் மூட்டு வலி, நரம்பு வலி, நீரிழிவு மற்றும் தைராய்டினால் உருவாகும் வலி, ஃபைப்ரோமையால்ஜியா எனப்படுகிற தசை வலி, இடுப்பு வலி போன்றவை அதிகமாக இருக்கும்.

அதிக எடையின் காரணமாக உண்டாகக் கூடிய முக்கியமான வலிகளில் மூட்டு வலியும் ஒன்று. உடல் எடை தாங்க முடியாமல் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்பட்டு, அங்கே வலியும் அதிகமாகும். எனவே உடல் பருமனும், வலிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வலி நிவாரண சிறப்பு சிகிச்சைகளின் மூலம் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். இந்த சிகிச்சைகளின் விளைவாக எடைக் குறைப்புக்கான உடல் பயிற்சிகளை வலியின்றி செய்ய முடியும்.

இந்த சிகிச்சையினால் ஏற்படுகிற வலி நிவாரணம் தற்காலிகமானது என்றாலும் வலியின்றி உடற்பயிற்சி செய்ய முடிவதானால் எடைக் குறைப்பு என்பது எளிதில் சாத்தியமாகும். எடை குறைவதால், வலிகளும் குறையும். இவை தவிர, சிறப்பு மருந்துகளும் இந்தப் பிரச்னைக்கு உதவும்.

நரம்புகளின் வலிகளை நீக்கும் மருந்துகள், ஊசிகள் மூலம் செலுத்தக் கூடிய மருந்துகள் போன்றவையும் இந்த சிகிச்சையில் அடக்கம். கால்சியம், வைட்டமின் டி 3 போன்றவற்றுக்கான மருந்துகளையும் இவர்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே உடல் பருமனையும், உடல் வலிகளையும் அலட்சியப்படுத்தாதீர்கள்...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

காப்பகம்