பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் தம்பி ராமய்யாவை தவிர அனைவருமே புதுமுகங்கள்தான் நடித்துள்ளனர். விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, பிரகாஷ்ராஜ், அமலாபால், டாப்சி, பரத், சாந்தனு, விமல் என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவருமே கெஸ்ட் ரோலில்தான் வந்து செல்கிறார்கள்.
மற்றபடி, முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில் பலரை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா பாதி, சுனைனா பாதி கலந்த கலவையாக இருக்கும் அகிலாவின் பர்பாமென்ஸைப் பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜாகூட, அற்புதமாக நடிச்சிருக்காளே. இந்த நடிகையை எங்கே பிடிச்சே என்று பார்த்திபனிடம் கேட்டாராம்.
இதை நேற்று அப்படத்தின் வெற்றி சந்திப்பில் தெரிவித்த பார்த்திபன். அகிலா பற்றி மேலும் கூறுகையில், இந்த அகிலா தமிழுக்கு புதியவர் என்றாலும், அவரது தாய்மொழியான கன்னடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனபோதும் தமிழில்தான் முழுக்கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். அதனால்தான் தமிழுக்கு வந்த முதல் படத்திலேயே பாரதிராஜாவிடம் பாராட்டு பெற்றிருக்கிறார் என்று கூறிய பார்த்திபன், நான் புதுமுகங்களை வைத்து இயக்கிய முதல் படமும் இதுதான்.
அதேபோல் நான் இயக்கிய படங்களில், நான் நடிக்காத முதல் படமும் இதுதான் என்றும் கூறினார்.

0 comments:
Post a Comment