Friday, December 27, 2013

பணத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்




சேமிப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், வீட்டில் எழும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்துவிடும். உங்கள் உழைப்பை சேமிப்பாக மாற்ற சில டிப்ஸ்…

* தினமும் நீங்கள் செலவழித்ததை, இரவில் எழுதிப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவு எனத் தோன்றுவதை அடுத்த முறை தவிர்த்துவிடுங்கள்.

* மணிக்கு ஒரு முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், வீட்டிலிருந்தே ஒரு பிளாஸ்கில் டீ எடுத்துப் போய்விடுங்கள்.

* புத்தகங்கள் குறித்து முன்பின் அறியாமலேயே வாங்கிக் குவிக்கிறீர்களா? வாடகை புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களில் அதனை வாங்கிப் படித்துவிட்டு, அந்த புத்தகத்தை சேர்க்க விரும்பினால் மட்டும் வாங்கிக் கொள்ளலாமே.

* வீட்டில் தேவைக்கு அதிகமான அலங்காரப் பொருள்கள் அல்லது ஃபர்னிச்சர் பொருள்களை வாங்க நினைத்தால், அந்த திட்டத்தை பத்து நாள் தள்ளிப்போட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னும் தேவையென்று தோன்றினால் வாங்குங்கள்.

* நீங்கள் வாங்கவிருக்கும் அல்லது செலவழிக்கப்போகும் பொருளை மூன்று விதமாகப் பிரியுங்கள். அவசியம், அத்தியாவசியம், அனாவசியம். “அத்தியாவசியம்’ என்று தோன்றுவதை மட்டும் செய்யுங்கள்.

* தபால் நிலையம், வங்கி, அலுவலக சேமிப்பு என நம்பகமான இடங்களில் சிறு சிறு தொகையை சேமியுங்கள். அவசரத் தேவைக்கு அது உதவும்.

*கிரெடிட் கார்டு உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வட்டியையும், முதலையும் சேர்த்து செலுத்த வேண்டாமே!

0 comments:

Post a Comment

காப்பகம்