Thursday, October 3, 2013

ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!



அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது.




யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு இரண்டுமே பரஸ்பரம் பிடிவாதமாக தங்கள் நிலையில் இருப்பது மட்டுமின்றி, இனி சமரசத்துக்கு இடமே இல்லை என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக இருப்பதால், 1995ல் இருந்தது போன்று இல்லாமல், ஒரு வாரத்துக்கும் மேலாக கதவடைப்பு நீடிக்கும் என்று தெரிகிறது.




3 - america


அண்மையில் அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் ஒபாமா தனி சுகாதார காப் பீட்டு திட்டத்தை கொண்டு வர உள்ளார். ஜனவரி மாதம் 1ம் தேதி அமலாகிறது. மிதவாத எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள், ‘இப்படி அரசு பணத்தை வீணடிக்கக் கூடாது; அவரவர் வேண்டிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கட்டும்’ என்று கூறி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.


கடந்த திங்கள் அன்று அமெரிக்காவில் நிதி ஆண்டின் கடைசி நாள். அன்று அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. பட்ஜெட்டில் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கும் ஒப்புதல் தர வலியுறுத்தியது. திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரி அதை ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறி 228 ,221 என்ற ஓட்டு கணக்கில் குடியரசு கட்சி வெற்றிபெறச் செய்தது.


அதே திருத்தங்களை செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி 54 ,46 கணக்கில் தோற்கடித்தது. இந்த இழுபறி காரணமாக மீண்டும் பிரதிநிதிகள் சபையில் நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது. ஆனால், எந்த சமரசமும் ஏற்படவில்லை. செனட் சபையின் ஜனநாயக கட்சியும் பிடிவாதமாக இருந்தது.இதையடுத்து நள்ளிரவில் பேசிய ஒபாமா, நாளை அமெரிக்காவுக்கு பெரும் அவமானம் ஏற்படப்போகிறது. அரசு கஜானா முடங்கும். அந்த செயலை செய்த உங்களை மக்கள் மன்னிக்க மாட்டர்’ என்று கோபத்துடன் பேசினார்.


நள்ளிரவை தாண்டிய நிலையில், அவசர நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிதி தொடர்பாக அவசர முடிவுகளை ஒபாமா எடுத்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், திட்டப்பணிகள், தேசிய இடங்கள் பராமரிப்பு, வெப்சைட்கள் பராமரிப்பு போன்றவற்றை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.


இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் நாள் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதுபோல, வாஷிங்டன், நியூயார்க் உட்பட பல மாநிலங்களில் உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் காலவரையற்ற விடுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியத்துக்கு மேல் பலரும் தங்கள் லேப்டாப்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினர். முதியோர் காப்பகங்களும் மூடப்பட்டன. அவர்களுக்கு மாநில அரசு நிதி மட்டும் கிடைத்தது. மருத்துவ வசதிகளும் குறைக்கபப்ட்டன. பல இடங்களில் குப்பை அள்ளுவதும் பாதிக்கப் பட்டது.


எல்லை பாதுகாப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உணவு துறை போன்ற பணிகளில் பாதிப்பில்லை. அந்த பணிகளில் உள்ள ஊழியர்கள் வேலை க்கு வந்தனர். பாஸ்போர்ட், விசா பணிகளும் கூட பெரிய அளவில் பாதிக்கவில்லை. மத்திய அரசின் ஊழியர்கள் எண்ணிக்கை 24 லட்சம். அதில் மூன்றில் ஒரு பங்கான 8 லட்சம் பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைக்கு வரவில்லை. எனினும், ஒபாமாவின் சுகாதார காப்பீடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வாங்கும் பணிகள் 1 ம் தேதியில் இருந்து திட்டமிட்டபடி தொடங்கின.


200 கோடி ரூபாய் இழப்பு: கடந்த 2 நாளில் மட்டும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் முடக்கம், தேசிய பொது இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்காததால் மட்டும் 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கதவடை ப்பை முடிவுக்கு கொண்டு வர எந்த தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரஸ்பரம் இரு கட்சிகளும் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளன. ‘நாங்கள் கதவடைப்பை விரும்பவில்லை. திட்டமிட்டு அரசு தான் செய்துள்ளது’ என்று குடியரசு கட்சி சொன்னது. ‘மக்களை பாதிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறுத்திய செயலுக்கு குடியரசு கட்சி பதில் சொல்லியாக வேண்டும்’ என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது.


பல வனவிலங்கு பூங்காவில் குவிந்த பெண்கள், குழந்தைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோல, அவசர தேவையற்ற நிர்வாக பணிகள் கவனிக்கும் பல அலுவலகங்கள், அரசு ஏஜன்சிகள் ஆகியவையும் சம்பளம், பராமரிப்பு நிதி ஒதுக்காததால் மூட அறிவுறுத்தப்பட்டன. இது போன்ற அரசு பணிகள் முடங்கின. ஊழியர்கள் எல்லாரும் பிரச்னை தீரும் வரை ஆபீஸ் வர வேண்டாம் என்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


வெள்ளை மாளிகை: பெடரல் அரசு என்பது தான் மத்திய அரசு. அந்த அரசு பணிகள் தான் முடங்கின. வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபீஸ் பணிகளும் கூட முடங்கின. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வெறும் 1,200 பேர் மட்டும் முக்கிய பணிகளை கவனித்தனர். பாஸ்போர்ட், விசா பணிகள், தூதகர பணிகள் போன்றவை பாதிக்கவில்லை. மேலும், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றில் கட்டண வருவாய் இருப்பதால் அந்த பணிகளை கவனிக்கும் பணியாட்கள் வழக்கம் போல பணிக்கு வந்தனர் என்று என்பிசி செய்தி கூறியுள்ளது.


In first day of U.S. shutdown, no sign how it will end

******************************** 


President Barack Obama and congressional Republicans came no closer to ending a standoff on Tuesday that has forced the first government shutdown in 17 years and thrown hundreds of thousands of federal employees out of work.

0 comments:

Post a Comment

காப்பகம்